முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கை திரும்புகிறதா?


முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கை திரும்புகிறதா?

donald_perera slஃபாலஸ்தீனத்திற்க்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான "டொனால்ட் பெரேரா" தெரிவித்தார்.
வைநெட் என்னும் ஒரு செய்தி தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "ஃபால்ஸ்தீனர்கள் நிபந்தனை எதுவுமின்றி இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இலங்கையில் நடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது. மேலும் எங்களது வான்படையில் 17 கிபீர் யுத்த விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன இதற்க்கான சிறப்பு பயிற்ச்சியை எங்கள் விமானிகளுக்கு இஸ்ரேல் வழங்கியது.
கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான நிதி உதவிகளும் இஸ்ரேல் எங்களுக்கு வழங்கின. எங்கள் நன்றியை வெளிபடுத்தும் விதமாக தான் நாங்கள் இஸ்ரேலுக்கு உதவி செய்கிறோம்" இவ்வாரு அவர் தெரிவித்தார்.
டொனால்ட் பெரேராவின் இந்த பேட்டி இலங்கை முஸ்லிம்களிடம் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது என  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




0 Responses

கருத்துரையிடுக