அமெ. இரட்டை கோபுரம் அருகில் பள்ளிவாசல் கட்ட ஒபாமா இணக்கம்
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க நியூயோக்கில் வாழும் முஸ்லிம்களின் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இணக்கம் வெளியிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை நிலவினாலும் தற்பொழுது பரக் ஒபாமா இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் பண்டிகையினை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதியினால், வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருந்து உபசாரத்தில் உரையாற்றும் பொழுதே அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தமது ஆதரவினை வழங்கியுள்ளார்.
கருத்துரையிடுக