யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்






அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்


அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று தவ்ஹீத் சகோதரர்களும், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று இணைவைப்பாளர்களும் விவாதிக்கின்றனர்.

இந்த இரு அணியினரில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுபவர்கள் குர்ஆன் மற்றும் நபிமொழி ஹதீஸ் ஆதாரங்களை முன்வைத்து உண்மை பேசுகிறார்கள் மாறாக உருவம் இல்லை என்று கூறும் இணைவைப்பாளர்களும் அவர்களது தலைவருமான உஸ்தாத் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை மறுத்துப் பேசி அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் அவ்வாறு இருந்தால் அவன் ஒற்றைக் கையனா, ஒரு கால் மட்டும்தான் உள்ளதா? அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா? என்றெல்லாம் பேசி இஸ்லாத்தின் ஆணிவேரான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மறுத்து பேசுகிறார்.

இந்த ஜமாலி கூட்டத்தாரின் செயல்கள் எப்படிப்பட்டவை என்பதை அலசிப்பபார்ப்பதற்கு முன் படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது ஒரு முஸ்லிம் பேண வேண்டிய ஒழுங்குகளை இங்கு முதலில் காண்போம்.


அல்லாஹ்வின் பெயர்களை கூட திரிக்க்கக்கூடாது

அல்லாஹ்வை பற்றி அருள்மறை குர்ஆனில் 99 திருநாமங்கள் இடம்பெற்றுள்ளன இவற்றை அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அழகிய பெயரால் அழைக்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துரைக்கிறது. உதாரணமாக ரஹ்மான் (அருளாளன்) ரஹீம் (அன்பாளன்) என்பனவாகும் இதையே அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்" அல்குர்ஆன் (7:180)

மேற்கண்ட இந்த வசனத்தில் அல்லாஹ்வின் உருவம் பற்றி பேச்சு இடம்பெறவில்லை அவனது பெயர்களைப் பற்றித்தான் முழுக்க முழுக்க பேசப்படுகிறது. இந்த வசனத்தில் அல்லாஹ் தனது பெயர்களை திரித்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய செயல்களுக்கான தக்க கூலி கொடுப்பான் என்ற பிரகடப்படுத்தி யுள்ளதன் மூலமாக அல்லாஹ் தன் பெயர்களை திரித்து பேசுபவர்கள் மீது எந்த அளவுக்கு கோபப்படுகிறான் என்பது தெளிவாக புரிகிறது. அல்லாஹ்வின் பெயர்களை திரிப்பதன் மூலமாகவே இந்த பயங்கரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்த நாம் அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிக்கலாமா? அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிப்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை நீங்களே உங்கள் உள்மனதில் சற்று சிந்தித்துப்பாருங்கள்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)


அல்லாஹ்வின் வார்த்தைகளை பரிகசிக்கக்கூடாது

சகோதரர்களே அல்லாஹ் ஒரு கட்டளையை பிறப்பித்துவிட்டால் அந்த கட்டளைக்கு மாற்றமாக நடப்பது அவனை பரிகசிப்பதற்கு சமமாகும். உதாரணமாக ஒரு ஆசிரியர் கல்வியை போதிக்கும் போது இந்த பாடத்தை நினைவில் நிறுத்துங்கள் என்று கூறினால் அந்த நேரத்தில் மாணவர்கள் எங்களுக்கு இது தேவையா? என்று எதிர் கேள்வி எழுப்பினால் அங்கு மாணவர்களால் ஆசிரியர் பரிகசிக்கப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட செயல்தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கு நேர்ந்தது அதைப்பற்றி அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்

"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டுமென்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகிறீரா?' என்று கூறினர். (அப்பொழுது) அவர் '(அப்படி பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்" (அல்குர்ஆன்: 2:6)

சகோதரர்களே இங்கு பசுமாட்டை அறுக்க அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியை மூஸா நபி தம் சமுதாயத்தவர்களிடம் கூறுகிறார் ஆனால் அவருடைய சமூகத்தாரோ எங்களை பரிகசிச்கிறாயா (கிண்டலடிக்கிறாயா) என்று கூற அந்த மூஸா நபியோ பரிகசிப்பது அறிவீனம் என்றும் அப்படிப்பட்ட செயலிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதாகவும் பிரார்த்திக்கிறார்.

இங்கு மூஸா நபியின் சமூகத்திற்கு சாதாரணமான ஒரு பசுமாட்டை அறுக்க கட்டளையிடப்பட்டு அதை மீறுவதை பற்றி பேச்சு எழுகிறது ஆனால் நபிகள் (ஸல்) அவர்களுடைய சமூகத்தாராகிய நமக்கு அல்லாஹ்வின் பெயர்களை திரிக்கக்கூடாது என்று அல்குர்ஆன் (7:180) வசனம் கூறுகிறது. இப்போது சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று பேசி அவன் ஆடை அணிகிறானா, ஒற்றைக் கால் கொண்டவனா? அவனுக்கு கண் உள்ளதா? என்று ஏளனமாக பேசி பரிகசித்து கிண்டலடிப்பது கூடுமா? இது ஜமாலி கூட்டத்திற்கு அறிவீனமில்லையா? பரிகசித்தல் தொடர்பாக மூஸா நபியின் பிரார்த்தனை எங்கே ஜமாலி கூட்டத்தாரின் நிலைமை எங்கே! சிந்தியுங்கள் சகோதரர்களே!


அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது

படைத்த ரப்புல் ஆலமீனுக்கு உருவம் உள்ளது ஆனால் அந்த உருவத்தை நம்மால் உருவகப்படுத்த இயலாது ஏனென்றால் அல்லாஹ்வின் உருவத்தை மனிதனால் கற்பனை செய்துகூட காண இயலாது இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது!

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன்: 6:103)

அல்லாஹ்வை நாம் பார்க்கவில்லை பிறகு எப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதை நம்மால் நம்ப இயலும் என்று நமக்குள் ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனால் இந்த சலசலப்பு உண்மையான இறைவிசுவாசிக்கு ஏற்படாது ஏனென்றால் அவன் இப்படிப்பட்ட சலசலப்புகள் தோன்றினால் அருள்மறை குர்ஆனையும் ஹதீஸ்கள் வைத்து இறைவனுடைய ஆற்றல்களை உணர்ந்துக் கொள்வான்.

அல்லாஹ்வுக்கு முகம் உண்டு, கைகள் உண்டு, கால்கள் உண்டு, கண்கள் உண்டு, கேட்கும் சக்தியும், பார்க்கும் பார்வையும், மதி நுட்பமும் உண்டு இவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தான வகையில் அமைந்திருக்கும் மாறாக மனிதனுக்கு உள்ளது போன்று அமைந்திருக்காது என்றுதான் நாம் உணர வேண்டும்.


ஜமாலி கூட்டத்தாரின் அறிவீனம்

நபிகளார் (ஸல்) காலத்தில் ஒரு மனிதரை அறிவீனத்தின் தந்தை என்ற அழைக்கப்பட்டது நினைவிருக்கட்டும் இப்படிப்பட்ட அறிவீனத்தைத்தான் ஜமாலி கூட்டத்தார் பின்பற்றுகின்றனர். இவர்களின் அறிவீனத்தை சற்று அலசிப்பார்ப்போம் வாருங்கள்.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனை மனிதனுக்கு கொடுத்து அந்த குர்ஆனில் தனது முகம், கை, கால்கள், கெண்டைக்கால் போன்ற அடையாளங்களை விவரித்து பேசுகிறான். மேலும் மஹ்ஷரில் திரைவிலக்கப்பட்டு அல்லாஹ்வின் கெண்டைக்கால் காட்சிதரும்போது அதனைக் காணும் மூமின்கள் சிரம்பணிவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறான். ஜமாலி கூட்டத்தார் இங்குதான் பிரச்சினையை ஆரம்பிக்கிறார்கள் அதாவது அல்லாஹ்வுக்கு கால் இருந்தால் அது மனிதனின் காலை போன்று இருக்கும் அப்படி எத்தனை கால்கள், கைகள் உள்ளன அவ்வாறு மனிதனைப் போன்று கால்கள் இருந்தால் அல்லாஹ்வைப் போல் எதுவுமில்லை என்ற வசனம் தடைபடுகிறது என்பதுவே. இந்த எதிர்வாதம் உஸ்தாத் ஜமாலி கூட்டத்தாரின் மூடத்தனத்திற்கு சாட்சியாகும்.

ஒரு மனிதன் அல்லாஹ்வை தன்னைப் போன்ற மனிதனாக கற்பனை செய்து பார்த்தால் அது முழுக்க முழுக்க முட்டாள்தனமாகும். இதற்கு பின்வரும் ஒரு உதாரணம் மூலம் விளங்க இயலும் இந்த உதாரணத்தை கண்டு யாரும் சிரிக்காதீர்கள் மாறாக சிந்தியுங்கள்.

மனிதன் என்ற இடத்தில் ஜின்கள் என்ற இனத்தை வைத்துப் பார்ப்போம் இந்த இடத்தில் ஜின்களுக்கு நேர்வழி புகட்ட ஒரு வேதமும் அந்த வேதத்திற்கு ஜின்களின் இனத்திலிருந்து ஒரு தூதரும் அனுப்பப்பட்டிருந்தால் அந்த ஜின்களின் இனம் அவர்களின் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் முகம், கை, கால்கள் ஆகியவற்றை படித்து அல்லாஹ்வின் உருவத்தை தங்களது ஜின் உருவத்திற்கு ஒத்ததாக கருதினால் தங்கள் கைகளைப் போன்று இறைவனுக்கு கைகள் இருக்கும், தங்கள் முகத்தை போன்று இறைவனுக்கு முகம் இருக்கும் தங்கள் கால்களைப் போன்று இறைவனுக்கு கால்கள் இருக்கும் என்று நம்பினால் அது ஜின்களின் முட்டாள்தனமாகும். மேலும் அல்லாஹ்வுக்கு கைகளே இல்லை என்று கூறுவதும் முட்டாள்தனமாகும்.

எனவே மனிதர்களும் முஸ்லிம்களுமாகிய நாம் அல்லாஹ்வின் கைகள் என்று குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்தவுடன் அது மனிதனின் கைகளைப் போன்ற அமைப்பில் அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும்.  அல்லாஹ்வின் முகம் மனிதனின் முகத்தைப் போன்று அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும். இப்படிப்பட்ட இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை காண நாம் அனைவரும் மஹ்ஷர் நாள் வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அங்க அவையங்களை இப்போது உணருவோம் வாருங்கள்!


அல்லாஹ்வுக்கு முகம் உள்ளது

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன் (அல்குர்‍ஆன் 2:115)

இங்கு அல்லாஹ்வின் முகம் என்று கூறப்பட்டுள்ளது இந்த முகம் அவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களில் அமைந்திருக்கும் என்று கருதுங்கள். மாறாக அல்லாஹ்வின் முகம் வட்டமானதா? நீளமானதா? அகலமானதா என்று கற்பனை செய்யாதீர்கள் அவ்வாறு கற்பனை செய்வது பாவமான காரியத்தில் நம்மை தள்ளிவிடும் ஏனென்றால் அல்லாஹ் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்!


அல்லாஹ்வுக்கு கேட்கும் சக்தி உண்டு

"அல்லது அவர்களின் இரகசியத்தையும் அவர்கள் இரகசியம் பேசுவதையும் திண்ணமாக நாம் செவிமடுப்பதில்லை என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனரா? ஆம். அவர்களிடமுள்ள (மலக்குகளான) எமது தூதர்கள் எழுதிக்கொண்டுள்ளனர்." (43:80)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் இரகசியத்தை கூட கேட்பதாக அறிவிப்பு செய்கிறான் இங்கு அறிவிப்பு செய்பவன் யார் அல்லாஹ்! இந்த அறிவிப்பை நம்பக்கூடியவன் மனிதன் ஆனால் இந்த மனிதன் அல்லாஹ்வின் இந்த அறிவிப்பை கேளி செய்து அவனுக்கு காது இருந்தால் எவ்வளவு நீளமானதாக இருக்கும் என்று பேசுபவன் அகந்தை பிடித்தவனான் இப்படிப்பட்ட அகந்தைதான் ஜமாலி கூட்டத்தாரிடம் காணப்படுகிறது. மேலும் இதோ ஒரு நபிமொழியை படியுங்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(
புனித கஅபா) ஆலயத்தின் அருகே 'ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்' அல்லது 'குறைஷியர்' இருவரும் ஸகஃபீ ஒருவரும்' ஒன்று கூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப் போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களின் உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?' என்று கேட்க, மற்றொருவர், 'நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்' என்றார். இன்னொருவர், 'நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும அவன் நிச்சயம் கேட்பான்' என்றார். அப்போதுதான் உயர்ந்தோனான அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்குகெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 41:22 வது) வசனத்தை அருளினான். (புகாரி 7521)


அல்லாஹ்வுக்கு பார்வைகள் உண்டு

அல்லாஹ் நூஹ் நபிக்கு கப்பலை கட்ட ஆணை பிறப்பித்தபோது அந்த கப்பல் அல்லாஹ்வின் பார்வையில் வஹீ அறிவிப்பில் எவ்வாறு அறிவுறுத்தப்பட்டதோ அதுபோன்று நேர்த்தியாக கட்ட வலியுறுத்துகிறான் இங்கு வஹிக்கு மாற்றமாக கப்பலை கட்டக்கூடாது என்பது மறைமுகமான கட்டளையாக உள்ளது எனவே அல்லாஹ்வின் பார்வையில் கப்பல் வடிவமைக்கப் படுகிறது என்று நூஹ் நபி இந்த இடத்தில் அஞ்சியிருக்க வேண்டும் இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 11:37)

மேலும் மக்கா வெற்றியைப் பற்றி கூறும் போது ஒவ்வொருவருடைய செயலையும் அல்லாஹ் பார்ப்பதாக நபிகளாருக்கு அவனே அறிவுறுத்துகிறான் இங்கு நபிகளார் (ஸல்) அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அஞ்சியிருக்கிறார்கள்

இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

எனவே சகோதரர்களே அல்லாஹ்வுக்கு கண்கள் இருந்தால் அது எப்படியிருக்கும் என்று நாமாக கற்பனை செய்ய இயலாது மாறாக அல்லாஹ் பார்ப்பதாக கூறும்போது அதற்கு தேவையான சில அமைப்புகள் இருக்கும் என்று நாம் நம்ப வேண்டும் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது அல்லாஹ்வின் பண்பு என்று கூறுகிறது பார்வைக்கும் பண்புக்கும் வித்தியாசம் தெரியாத இந்த கூட்டத்தாருக்கு ஏதாவது வஹி வந்துள்ளதா? இவர்களின் வரட்டு வாதம் ஆச்சரியத்ததை ஏற்படுத்துகிறது.


அல்லாஹ்வுக்கு மதி நுட்பம் உண்டு

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன்31:34)

இங்கு அல்லாஹ் தனக்கு மதி நுட்பம் உள்ளதை தாமாக முன்வந்து அறிவிக்கிறான் இது அல்லாஹ்வின் வல்லமைக்கு மற்றுமோர் உதாரணமாகும் எனவே இந்த ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வின் மதி நுட்பத்திற்கு கேளி செய்து அதற்கான மூளை எங்கே என்று கேட்டுவிடுவார்களோ?


அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டு ஆடையும் உண்டு

ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டா? என்று கேட்கிறார்கள் அதுவும் ஒற்றைக்காலா? இரண்டு கால்களா? என்று ஏளனம் செய்து அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று நா கூசாமல் பேசுகிறார்கள். இவர்கள் மூடர்கள் இவர்களுக்கு கீழ்கண்ட இறைவசனம் விளங்கவில்லையோ?

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். (அல்குர்ஆன் 68:42.)

ஒரே வசனத்தில் ஜமாலிக்கு போன்றோருக்கு அல்லாஹ் நுட்பமாக பதில் கொடுக்கிறான் அதாவது திரை அகற்றப்படும் பிறகு கெண்டைக்கால் திறக்கப்படும். இங்கு கால் என்பதை பண்பு என்று ஜமாலி கூறுவது அர்த்தமற்றது. பண்பை திரையிட்டு மூட இயலாது அதாவது ரஹ்மான் என்ற ஒரு பண்பை திரையிட்டு மூடியிருந்தால் இந்த ஜமாலி உலகில் வாழ முடியுமா? இப்படி கெண்டைக்காலை பண்பு என்று கருதினால் நிலைமை தலைகீழாகிவிடும் அதாவது அல்லாஹ் தன் பண்புகளை யாரிடமும் காட்டாமல் ஒழித்து வைத்துள்ளான் என்று குழப்பமும் ஏற்படும். எனவே இங்கு கெண்டகைகால் என்று அல்லாஹ் கூறுவதை அப்படியே ஏற்கத்தான் வேண்டுமே தவிர அதற்கு மாற்றமாக பேசுவது அல்லாஹ்வை கிண்டலடிப்பதற்கு சமமமாகும்.


அல்லாஹ்வுக்கு ஆடை உண்டு

அல்லாஹ் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று கேள்வி எழுப்பிய ஜமாலிக்கு இதோ அல்லாஹ்வின் ஆடை பற்றிய ஓர் அழகான ஹதீஸ் காணப்பபடுகிறது.

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் '(மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?' என்று வினவியதற்கு இப்னு உமர்(ரலி) கூறினார்: உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். இறைவன் தன்னுடைய திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன் 'நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அவர் 'ஆம்' என்பார். இறைவன் (மறுபடியும்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அப்போதும் அவர் 'ஆம்' என்று கூறி தம் குற்றத்தை ஒப்புக் கொள்வார். பிறகு 'நான் (உன் குற்றங்களை) உலகில் மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்' என்று சொல்வான். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது (புகாரி 7514)

மேற்கண்ட ஹதீஸை ஜமாலி படித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது எனவே அல்லாஹ்வை இழிவாக பேசிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தன் அகந்தையால் இந்த இடத்தில் அறிவு குறைந்த அரை நிர்வாணியாகிவிட்டார்.


அல்லாஹ் அமர்ந்திருக்கவும் செய்வான்

''நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்' (அல்குர்ஆன் 13:02)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தாம் அர்ஷின் மீது அமர்ந்திருப்பதாக கூறுகிறான் இங்கு இந்த அறிவிப்பை கூறுவது யார் அல்லாஹ், கூறப்படுவது யாரை அல்லாஹை எனவே நாம் எவ்வாறு இதை நம்பாமல் இருக்க இயலும். ஒரு வேலை இதை அல்லாஹ்வின் பண்பு என்று கருதினால் அது எவ்வாறு அர்ஷில் அமர்ந்திருக்கும்?

  • அல்லாஹ் தான் அர்ஷில் அமர்ந்திருப்பதாக கூறுகிறான்
  • பின்னர் காரியத்தை அவனே நிர்வகிக்கிறதாக கூறுகிறான்
  • இறுதியாக சூரியன் சந்திரனை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறி தன்னை சந்திப்பதற்கு இது சாட்சி என்று பிரகடனப்படுத்துகிறான்

இங்கு அமர்ந்துள்ளான் என்பதை ஜமாலி பண்பு என்று கூறினால் அந்த பண்பை நாம் சந்திக்க இயலுமா? இங்கு பண்பு என்று கூறுவதால் அல்லாஹ்வின் வார்த்தையை மறுத்துப் பேசிய குற்றத்திற்க ஜமாலி உட்பட்டுள்ளார். (அல்லாஹ் காப்பாத்தனும்)


அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.   'எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ்வின் கைகளில் அதிகாரம் உள்ளதாக அல்லாஹ்வே கூறுவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது கைகள் அல்ல மாறாக அல்லாஹ்வின் பண்பு என்று கூறுவதன் மூலம் காஃபிர்களை மிஞ்சிவிட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் '(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?' என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம் 'நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவிர்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். எனவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்டுக்கொள்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று அவர்களிடம் சொல்லி, தம் செய்ததவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அறிவித்தார் (புகாரி 7516)

மேற்கண்ட நபிமொழியில் ஆதம் நபியைப் குறிப்பிடும்போது அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான் என்று கூறப்படுகிறது இதை இந்த ஜமாலி மறுத்தால் அது அவரது அறிவீனமாகும்!


ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் மற்றுமொரு அறிவீனம்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்ற படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் 'நானே அரசன்; நானே அரசன்' என்று சொல்வான்' எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை கண்டேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி அவர்கள் மதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். புகாரி 7513.

மேற்கண்ட நபிமொழியை சகோதரர் பி.ஜே அவர்கள் முன்வைத்த போது இதை மறுத்துப் பேசிய ஜமாலி அல்லாஹ் பூமியை ஒரு விரலில் வைத்துக் கொள்கிறான் அப்படியெனில் அதில் உள்ள தண்ணீரையும், ஈர மண்ணையும் எவ்வாறு மற்றொரு விரலில் வைக்க முடியும் எல்லாமே பூமியில் அடங்கிவிடுகிறதே என்பதுதான். இந்த வாதம் ஜமாலி மூடத்தனத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. இதோ இந்த நபிமொழியின் விளக்கத்தை சற்று கவனமாக சிந்தித்து படியுங்கள்!

வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும்

இங்கு வானங்கள் பூமிகளை என்று பண்மையாக வந்துள்ளது இதன் மூலம் பல்வேறு வானங்களையும் பூமிகளையும் அல்லாஹ் தன் விரலில் வைக்க இயலும் என்று அறியவேண்டும்.

தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் என்று கூறப்பட்டுள்ளது இது பூமியில் உள்ள தண்ணீரா? அல்லது ஈர மண்ணா? என்று சிந்திக்க வேண்டும் மேலும் மேற்கண்ட ஹதீஸில் பூமியில் உள்ள மண் தண்ணீர் என்று கூறப்படவில்லை அப்படியே கூறப்பட்டிருந்தாலும் படைத்த இறைவன் பூமியிலிருந்து தணியாக மண்ணையும், தண்ணீரையும் பிறிக்க சக்தியில்லாதவனா? அப்படியெனில் இந்த ஜமாலி அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவில்லை காஃபிர்களைப் எவ்வாறு தங்கள் தெய்வங்களை நம்புகிறார்களோ அவ்வாறே இந்த ஜமாலியும் அவரது கூட்டத்தாரும் அல்லாஹ்வை நம்புகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமாககும் காரணம் மனிதன் மண்ணோடு மக்கி போனாலும் அவனுடைய விரல் நுனிகளை கூட உருவாக்குவோம் என்று அல்லாஹ் கூறும்போது அவன் தனியாக பூமியிலிருந்து நீரையும் ஈர மண்ணையும் பிறிக்க ஆற்றல் அல்லாதவனா?

  • சுவர்க்கத்தில் கூட மரமுண்டு (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
  • சுவர்க்கத்தில் கடை வீதி (ஆதாரம் - முஸ்லிம்)
  • சுவர்கத்தில் ஆறுகள் உண்டு (ஆதாரம் குர்ஆன்)
  • அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும் (ஆதாரம் திர்மிதி)
  • சுவனத்தின் மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது

அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும். முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது. அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


யூதர்களை மிஞ்சிய ஜமாலி கூட்டத்தார்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறியதன் மூலம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் அவரை பின்பற்றும் ஜமாலி கூட்டத்தாரும் யூதர்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார்கள் அதற்கான ஆதாரம் இதோ

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 5:64)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் யூதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வை கீழ்த்தனமாக சித்தரித்தார்கள் என்றும் அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று கிண்டலடித்தார்கள் என்றும் கூறுகிறான் ஆனால் அல்லாஹ்வோ யூதர்களை சபித்துவிட்டு தன்னுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு அல்லாஹ் நாடியிருந்தால் அந்த வசனத்தில் தனக்கு கைகள் இல்லை என்று கூறி யூதர்களை பொய்யர்களாக்கி யிருக்கலாம் ஆனால் அல்லாஹ் உண்மை பேசக்கூடியவன் என்பதால் தனது இரு கைகளுமே விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்த வசனத்தை மறுத்துப் பேசுவதோடு அவர் யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார் என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே இவறை அறிவீனத்தின் தந்தை என்று கூறுவதா? அறிவீனத்தின் பாட்டன் என்று கூறுவதா?


முடிவுரை

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:103)

அல்லாஹ்வை இந்த கண்களால் நம்மால் காண இயலாது எனவே அல்லாஹ்வை கற்பனையாக உருவகப்படுத்த இயலாது மாறாக அல்லாஹ் கூறும் கைகள், கால்கள், ஆகியவற்றை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறானோ அவ்வாறே இருப்பதாக நம்ப வேண்டும் இவைகளை பண்புகள் என்று வர்ணிக்க இயலாது பண்பு என்று வர்ணிக்க முற்பட்டால் அல்லாஹ்வையே பண்பு என்று கூறவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)

அல்லாஹ் தனது கைகள், கால்கள், முகம் ஆகியவற்றை ஆதாரமாக கூற அதை மறுத்து அவைகள் அனைத்தும் பண்புகள் என்று உளறுவது மேற்கண்ட அருள்மறை வசனத்தை நினைவு படுத்துகிறது. அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்.

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 3:106)

மறுமையில் அல்லாஹ்வை காணத் துடிக்கும் கண்களுக்கு அல்லாஹ் உருவமற்றவன் என்ற எண்ணம் ஏற்படாது அப்படி ஏற்பட்டால் அவர்கள் கருத்த முகங்களையுடையோராவர். எனவே நீங்கள் மறுமையில் மகிழ்ச்சியால் மலர்ந்த பிரகாசமான வெண்மையான முகங்களையுடையவர்களாக அல்லாஹ்வை காண துடித்தால் அல்லாஹ்வின் கைகளையும், கால்களையும், திரையையும், முகத்தையும் நம்புகள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் குறிப்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கும் அவரது கூட்டத்தாருக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிராத்திப்போமாக!

அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)

இப்பதிவிற்கு ஒரு மறுமொழி இட

http://islamicparadise.wordpress.com/



--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

0 Responses

கருத்துரையிடுக