அல்லாஹ்விடம் கையேந்துங்கள் இறைவன் இறைக்கின்றான் என்று அல்லாஹ்வினை நம்புகிறவர்களும்- இறைவன் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்களும் உலகில் உண்டு. ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. அது என்னவெனில் இறைவனை நம்பி அவனிடம் கையேந்துவதால் உங்களுக்கு எந்த இழப்புமில்லை.
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்து இன்னல் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் என்பது மட்டும் உறுதியானது. சமீபத்தில் இந்தியாவின் மங்க@ர் ஏர்போர்டில் துபாயிலிருந்து 158 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் ஓடுகிற தளத்தினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி பயணம் செய்த எட்டு பேர்களை தவிர்த்து அனைவரும் மரணம் அடைந்தது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அதில் அதிர்ஸ்டவசமாக தப்பித்த கிருஷ்ணன் என்ற பயணி சொல்லும் போது, 'விமானம் எரிந்து துண்டு, துண்டாக சிதறியபோது விமானப்பகுதியில் ஒரு ஓட்டை தெரிந்தது. அதனைக் கடவுளின் கருணையாகக் கருதி அதன் வழியாக தப்பித்தேன்' என்று சொல்லியுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக இறவா அல்லாஹ்வினை நம்பாது இறந்த மனிதர்கள் அடக்கஸ்தலத்தலமான இராமநாதபுரம் ஏர்வாடி மட்டும் மதுரை கோரிப்பாளையம் தர்காக்களை நம்பி படையெடுத்து தன் ஒன்ரறை வயது ஒரே ஆண் மகனான காதர் யூசுப்பினை இழந்த சிரின் பாத்துமாவின் பரிதாபமும் அவனை மூட நம்பிக்கையினம் மொத்த உருவிற்கு நரபலி கொடுத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அப்துல் கப+ரின் கதையினையும் 27.7.2010 அனைத்துப் பத்திரிக்கைகளும் விலா வாரியாக எழுதியிருந்து மூட நம்பிக்கை இஸ்லாமியர்களிடையே எவ்வாறு வேரூன்றியிருக்கிறது என்று பறைசாற்றகின்றன. தப்லீக் ஜமாத்தும், தவ்ஹீத் ஜமாத்துக்களும், சமுதாய தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ மக்களிடம் விழிப்புணர்ச்சிகள் மேற்கொண்டாலும் எங்கே அவைகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துவிட்டது இயற்கையே.. ஆனால் அவர்கள் தங்களின் முயற்சிகளில் இன்னும் தீவிரம் காட்டி எல.;லாம் வல்ல அல்லாஹ்வினைத் தவிர யாரிடமும் நீங்கள் உங்கள் தேவைக்கு கையேந்தாதீர்கள் என்று பறை சாற்ற வேண்டும் என்பதிற்காக உருவானதே இந்த மடல். துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் நாம் இன்பத்தில் திளைக்கும்போது மட்டும் இறைவனை மறந்து விடுகிறோம். சில சமயங்களில் இறைவன் இருப்பது சிலருக்கு சந்தேகம் எழுவதுண்டு. இறை மறுப்பாளர்கள் வைக்கும் வாதமெல்லாம், 'இறைவன் இருக்கிறானென்றால் உலகில் ஏழை பணக்காரனென்ற ஏற்றத்தாழ்வு ஏனிருக்க வேண்டும், சிலருக்கு கிடைக்கும் நல்லருள் பலருக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தால் இறைவன் இருப்பதினையே சந்தேகப்படுகின்றனர். அது அவர்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும். இறைவனின் அருள் எல்லோருக்கும் சமமாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவனுடைய உள்ளம் அமைதியாகவும், சந்தோசமாகவும், கோபமடையாமலும், தீய எண்ணங்கள் அவன் உள்ளத்தில் இருள் கவ்வாமலும் இருந்து இறைவனிடம் தன் குறைகளைச் சொல்லிவிட்டு வாளாதிருக்காமல் தன் முயற்சியில் ஈடுபட்டால் இறைவன் தன் அடியாருக்கு பக்க துணையாக இருக்கிறான். இறைவனுக்கும் அடியாருக்கும் இடையில் மூன்றாமவருக்கு எந்த வேளையுமல்ல. ஆகவே சிலர் அந்த மூன்றாவரை தேடி தர்காக்களுக்கும், சாமியார்களிடமும், போலி மந்திரவாதிகளிடமும், குறி சொல்வர்களிடமும் சோரம் போகிற படியால் தான் மேலேக் குறிப்பிட்ட 27.7.2010 முஸ்லிம் சிறுவன் நரபலி போன்ற உலகில் விரும்பத்தகதாக அனாட்சரமான சம்பவங்கள் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்லாது அனைத்து மதத்தினரிடமும் ஏற்படுகிறது. நாம் கம்புயூட்டரின் செயல்பாட்டினை எடுத்துக் கொள்வோம். கனினியில் ஒரு செய்தியினை அனுப்புகிறோம். அதனை அனுப்புகிறவர் அடியான் என்று வைத்துக் கொள்வோம். அதனை ஏற்றுக் கொள்ளும் ரிஸீவரை இறைவன் என எடுத்துக் கொள்வோம். அனுப்பிய மெசேஜ் குழப்பம் இல்லாததாகவும், அதனை அனுப்புகிறவர் நல்லொழுக்கம் கொண்டவராகவும், தீய எண்ணங்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போது தான் அவர் இறைவனிடம் விடுக்கும் வேண்டுகோள்(மெசேஜ்) இறைவனிடம் முறையாக சேர்ந்து அவனுடைய கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுகிறான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை பசியால் கதறுகிறது. அந்தக் குழந்தையின் கதறல் சப்தம் தாயினால் தான் உணர முடியும். அந்தக் குழந்தையின் குரலைக் கேட்டு தாய் தன் உதிரத்தில் உதிர்த்த அமுதத்தினை குழந்தைக்கு தாரைவார்க்கிறாள். அதுபோல் தான் அல்லாஹ்வும் தன் அடியார்கள் ஓர்மையுடன் விடும் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவான். அதனை விட்டு விட்டு தர்காக்களுக்கும், கபர்ஸ்தானுக்கும் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற கையேந்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல் மதுரை கோரிப்பாளைத்தில் ஒரு அப்பாவி தாயினுக்கு தன் பாலகனை பலிகொடுத்த கதையாகவும், தர்காக்களில் தங்கும் பெண்களின் கற்புக்கு பாதகம் வரும் நிலையும், மனநிலை பாதித்தவர் மேலும் நோய் அதிகமாகி பராரியாக அலையும் பரிதாபமும் ஏற்படும். சில சமயங்களில் நாம் தொழும் போது நமது மனம் பல விசங்களில் அலைமோதி எத்தனை ரக்காத்துகள் தொழுதோம் என்றே நமக்கு மட்டுமல்ல ஏன் சில தொழுகை நடத்தும் இமாம்களுக்கே மறந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து விலகி மனதினை ஓர் முகப்படுத்தி இறையட்சத்தில் ஈடுபடும்போது நாம் விரும்பும் காரியம் நிச்கயம் நடக்கும். அதற்கு நாம் எண்ண செய்யவேண்டும்:
1) பள்ளிக்குச் செல்லும் போது சுத்தமான ஆடைகள் அணியப் பழகவேண்டும். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சுத்தமான ஆடையணிந்துவிட்டு பள்ளிக்கு வரும் போது வெறும் படம், எழுத்துகள் பொறித்த சட்டை பணியன்களை அணிந்து வருகின்றனர். அதனால் தொழுபவர் அவர்கள் மேலங்கிகளை பார்வையிட்டு அதில் என்ன படம் போட்டிருக்கிறது அல்லது எழுதியிருக்கிறது என்ற கவனத்தினை செலுத்துகின்றனர். ஆகவே தொழச்செல்லும் போது இறை பயத்துடனும,; சுத்தமான ஆடையுடனும் செல்லவேண்டும். 2) மனதில் மகிழ்ச்சியான விசயங்களை நிலை நிறுத்த வேண்டும். நமது வாழ்வில் தினந்தோறும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றோம், இன்ப துன்பங்களுக்கு ஆளாகின்றோம்.. அப்படிப்பட்ட சூழலில் வாழ்வின் தாழ்வுகளையும், துன்புங்களையும் பிரதானமாக எடுத்துக் கொள்ளலாமா? ஒரு சமயம் நண்பர் ஒருவருடன் விமானப்பயணத்தில் ஈடுபட்டேன். அந்த நண்பர் தன்னுடைய வாழ்வில் நடந்த சோக சம்பவங்களையே பிரதானமாக பேசிக் கொண்டு வந்தார். ஆனால் அந்த சோக சம்பவங்களிடையே அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதினை அவருக்கு ஞாபகமூட்டி உங்கள் வாழ்வில் நீங்கள் பலருக்குக் கிடைக்காத விமானப்பயணத்தினை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதினை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று தேற்றினேன. ஆகவே துன்பங்களை நினைத்துப்பார்த்து இறைவனை குறை கூறுவதினை விட கிடைத்த இன்பத்தினை நினைத்து மகிழ்ச்சியடைய பழக வேண்டும்.
3) நாம் நல்லவைகளையே பார்க்க வேண்டும்-பேச வேண்டும். நல்ல போதனைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். சிலர் சொல்வர் 'களவையும் கற்று மற'வென்று. ஆனால் விஷம் எப்படியிருக்கிறது என்று சுவைத்துப்பார்த்தால்தான் தெரிய முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இனிய சொற்களிருக்க கடும் சொற்களை பேசக்கூடாது. அதனால் பல குடும்ப வாழ்வில்-நட்புகளில் குழப்பங்கள் வரக் காரணமாக அமைந்து விடுகிறது. 4) அடுத்தவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களை வெளியேற்ற உதவ வேண்டும். மனிதன் ஆறறிவுள்ளவன் அவனுக்கு தீயது எது நல்லது எது என்று பகுத்துப் பார்க்கும் சக்தியிருக்கிறது. அனால் மது, மாது , சூது போன்ற தீய செயல்களில் மூழ்கி இறைவனிடமிருந்து விலகும் நிலையினைத் தவிர்க்க வேண்டும்.. சிலர் சுயநலவாதிகளாக இருப்பதினை காணலாம். அவர்கள் பணம் படைத்து நிம்மதியிழந்து வாழ்வதினையும் காணலாம். தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியினை, உடல் உழைப்பின் ஒரு பகுதியினை ஏழை, எளியவர்களுக்காக, மாற்றுத்திரனாளிகளுக்காக, விதவைப்பெண்கள், முதியோர் மறுவாழ்விற்காக செலவிடுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதினைக் காணலாம். • தினந்தோறும் சிலநேரம் தொழுகைக்காக ஒருக்குவதின் மூலம் நீங்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் மன வலிமையினைக் கொடுக்கும். சமீபகால பெரிய எழுத்தாளர், நார்மன் டீலே, 'நீங்கள் மனதினை ஓர்நிலைப்படுத்தி இறையச்சத்துடன் தொழுது வந்தால் உங்கள் அனேகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்' என்று சொல்லியுள்ளார். நான் எழுதுவதிற்கு மறந்த சில விசயங்கள், செய்வதிற்கு விடுபட்ட முக்கிய வேலைகள் கூட மனதினை ஓர்முகப்படுத்தி தொழும்போது நினைவிற்கு வந்ததுண்டு. மனிதர்களால் கைவிடப்பட்டு இறைவனிடம் வேண்டுகோள் வைத்து வெற்றிபெற்ற மனிதரின் கதையினை உங்களுக்கு உதாரணமாக சொல்ல ஆசைப்படுகிறேன். நான் சில சதித்திட்டங்களால் சென்னை மத்திய சிறையிலிருந்தபோது நண்பர் குணங்குடி ஹனிபா அவர்களும் இருந்தார்கள. நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக 1991-1994 வரை இருந்த போது ஒருநாள் அலுவலகத்தில் அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தான் ஒரு ஆட்டோ டிரைவராக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்ததாகவும், சமுதாய சேவை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விட்டதாகச்சொன்னார். ஆனால் துரதிஸ்டவசமாக அவரை மத்திய ஜெயிலில் பார்வையாளர் நேரத்தில் சந்திக்கும் வாய்பு;பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவரை அவருடைய துணைவியார் சந்திக்க வந்திருந்தார். அவரிடம் ஹனிபா சொல்லும்போது, 'அல்லாஹ்விடம் துவா செய், ஏழு வருடமாக சிறையில் வாடுகிறேன், இறைவன் கண்திறக்கவில்லை' என்றார். இதனை 2007 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய, 'காக்கிச்சட்டை பேசுகிறது' என்ற புத்தகத்தில் எழுதியதினை ஆசிரியர் இன்குலாப் அவர்கள் வெளியிட்டார். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் மைனாரிட்டி முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையினைத்தான் நாடவேண்டும். அப்படி நாடியதால் தான் நண்பர் குனங்குடி ஹனிபா இன்று சுததந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டுள்ளார் என்பதினை நாம் மறக்கக் கூடாது. தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு பத்து வழிவகைளைக் கூறலாம் என நினைக்கிறேன். 1) கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுது கொள்ளுங்கள்.
2) தொழ முடியாத நேரத்தில் இறைவனை நினைத்து தஸ்பி எண்ணிக் கொள்ளுங்கள்.
3) அல்லாஹ்வினை நினைத்து உங்கள் மொழியில், தெளிவான வேண்டுகோளை வையுங்கள்.
4) உங்கள் தேவைகளை நிறைவேற்றவே தொழவேண்டும் என நினைத்துத் தொழவேண்டாம். உங்களைப்படைத்து தொழ வாய்ப்புக்கொடுத்து உயிரோடு இருக்கச்செய்ததிற்காகவாது தொழுங்கள். சிறு உதவிகளைச் செய்யும் மானிடருக்கு விழுந்து, விழுந்து நன்றி சொல்லும் போது அழகான மனித உயிரினை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.
5) உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்று நாற்காலியில் இருந்து தொழவேண்டாம். கூடுமானவரை குனிந்து, நிமிர்ந்து, இறைவனுக்கு ஸஜ்தா செய்து தொழுக முயற்சி செய்யுங்கள்.
6) நீங்கள் தொழும் போது இறைவனின் குறை தீர்க்கும் சக்தி மீது அவ நம்பிக்கை கொள்ளாது, அல்லாஹ்தான் எல்லாக் குறைகளையும் களையும் வல்லமை மிக்கவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.
7) சாதாரணமாக இறைவன் நாம் கேட்கும் பலனுக்கு மேலாக பன் மடங்கு பலன் கொடுப்பவன். அவன் கொடுக்கும் பலன் எதுவானாலும் அது அருட்கொடை என ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.
8) நமது குடும்ப தேவைகளை புறக்கணித்து இறைதளமே கதியென வாளாதிருக்கக்கூடாது. எந்த மதமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆகவே நீங்கள் தேவைகளைப் ப+ர்த்தி செய்யும் நல்ல கணவராக மனைவிக்கும், சிறந்த தந்தையாக பிள்ளைகளுக்கும், பேணிக்காக்கும் மகனாக உங்கள் வயதான பெற்றோர்களுக்கும் காட்சி தரவேண்டும்.
9) உடன் பிறந்தோர்-உற்றார் உறவினர் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்றும்., உங்களுக்குத் தீங்கிளைத்தவருக்கும் நன்மை செய்ததின் மூலம் நீங்கள் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பது நிச்சயமாகிறது.
10) தீர்வுகாண முடியாத செயல்களுக்கு அல்லாஹ்வினிடம் கையேந்தி நாடவேண்டும். அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நான் 18.6.2010 அன்று என் துணைவியார் என் மகன் சதக்கத்துல்லாஹ் ஆகியோருடன் அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு விட்டு போர் நினைவுச்சின்னம் அணிவகுப்பு(சேன்ச் ஆப் கார்டு) நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு ஜூம்மாத்தொழுவதிற்காக அங்குள்ள பெரிய இஸ்லாமிக் கம்யூனிட்டி பள்ளிவாசலுக்கு ஒரு டாக்ஸியில் ஏறினோம். அதனை ஒரு கறுப்பினத்தின எபி என்ற டிரைவர்; ஓட்டி வந்தார். நாங்கள் போகுமிடம் குறிப்பிட்டு சொன்னோம். அந்த டிரைவர் எங்களிடம் நீங்கள் டூரிஸ்டா எனக் கேட்டார். ஆம் என்றோம். அவர் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்தது அவர், 'நீங்கள் தொழும்போது உலக அமைதிக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்' என்று கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் வல்லரசு என்று தம்பட்டம் அடித்து அனைத்து இஸ்லாமிய நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற வளரும் நாடுகளையும் பயமுறுத்தும் அமெரிக்காவின் சாதாரண குடிமகன் அமைதியினை விரும்புகிறானே என்றுதான். அதுவும் உலக அமைதிக்காக யாரிடம் வேண்டச் சொல்கிறானென்றால் இறைவனிடம் தான். ஆகவேதான் மைனாரிட்டி இஸ்லாமிய சமுதாயம் நமது தனிப்பட்ட, இல்லத்துப் பிரச்னைகள், சமுதாயப் பிரச்னைகள்; ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துங்கள் என்று சொன்னது சரிதானே சொந்தங்களே!
இதழியல் புதிய தொழில் நுட்பங்கள்
From: Mohamed Ali <mdaliips@yahoo. com> Subject: Allah's bounties To: "gazzalie rajagiri" <gazzalie@yahoo. com> Date: Saturday, July 31, 2010, 5:57 AM
Assalamu allaikum Mr.Gazzalie, I was away on tour to USA . I returned on 24th. Hence I could not contribute and converse with you through my writings. I am sending an article insisting undisputed and unflinching faith on Allah for all our needs. I hope it will be useful to our community. You may circulate. Good day AP,Mohamed Ali
|
கருத்துரையிடுக