சுவிற்சர்லாந்தில், வெளித்தோற்றத்திற்கு தெரியுமாறு இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கான கோபுரங்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பில் திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சுவிற்சர்லாந்தின் 54 சதவீதமான மக்கள், கோபுரங்கள் கட்ட தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த போதும், ஆளும் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும், நேற்று மாலை அந்நாட்டின் ஆளுமைக்கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியினால் (SVP), வாக்கெடுப்பின் இறுதிச்செயற்படுகள் நடத்தப்பட்டன. இதில் 60 சதவீத வாக்குகள் பெற்று, இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு கோபுரங்கள் கட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிவாசல்களுக்கு கோபுரங்கள் அமைக்கப்படுமாயின், ஒரு கொள்கையை பின்பற்றும் செயற்பாடு மேலும் வளர்ச்சி பெறும் எனவும், அது சுவிற்சர்லாந்தின் ஜனாநாயகத்திற்கு முரண்பாடாக அமையும் எனவும், தடைக்கு ஆதரவு கோரியவர்கள் தமது வாதத்தினை முன்வைத்து வெற்றிபெற்றனர்.
இத்தீர்மானம் குறித்து சுவிற்சர்லாந்து அதிபர் ஹன்ஸ் ருடோல்ப் மேர்ஸ், தெரிவிக்கையில் 'இஸ்லாமியர்கள், தமது மதத்தினை கடைப்பிடிக்கவும், அதனை வளர்ச்சிபெறச்செய்யவும் அனுமதிக்கப்படுவர். இதற்கேதும் தடையில்லை என்றார்.
சுவிற்சர்லாந்தில் 40,000 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் இருப்பதுடன், இதுவரை 4 இஸ்லாமிய பள்ளிவாசல்களே அங்கு சட்டபூர்வமாக கட்டப்பட்டுள்ளன.
கோபுரங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட தடையுடன், புதிய பள்ளிவாசல்கள் அமைக்கப்படுதல், சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத வழிபாட்டு அறைகள் அமைத்தல் என்பனவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை, இச்செயற்பாடானது, சுவிற்சர்லாந்துடன் இஸ்லாமிய நாடுகள் கொண்டிருக்கும் தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

கருத்துரையிடுக