Re: [K-Tic] அசினா பர்வீன்...

From: mastan shaikh <vittukkattimastan@yahoo.co.uk>
To: "K-Tic-group-owner@yahoogroups.com" <K-Tic-group-owner@yahoogroups.com>
Sent: Saturday, March 10, 2012 5:48 PM
Subject: Re: [K-Tic] அசினா பர்வீன்...

தானே புயல் தானா வந்தது 
ஏனோ தெரியவில்லை? இப்படி நடந்துக் கொண்டது !
எப்படியோ போகட்டுமென்று, எத்தனையோ பேர் தூங்கையிலே, 
உற்சாகமாய் ஒரு சின்ன புயல் உண்டியலை உடைத்தது ....
கல கல கல கலவென காசுகள் உருண்டோடியது ......
மிரண்டு போன மனிதர்களின்  வறண்டு போன 
இதயங்களை அது  வருடியது ..... 
சில்லென்ற அந்த புயல் தென்றல் !
கொடுத்து கொடுக்க வைக்கும் கொடையோன் இறைவன் 
 அசினா பர்வீனுக்கு ஆயுளை நீடிக்கச் செய்யட்டும்.
விட்டுக்கட்டி-மஸ்தான்.


From: T.K.T.Sheik Abdullah <tktsheik@gmail.com>
To: aimantimes@yahoogroups.com; k-tic-group@yahoogroups.com
Sent: Friday, 2 March 2012, 11:39
Subject: [K-Tic] அசினா பர்வீன்...
 
'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

ஜூனியர் விகடன், 26.02.2012
'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!''

 நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை.அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

அசினா பர்வீன்...
ஆனந்த விகடன் 07 மார்ச் 2012.
ந.வினோத்குமார், படம் : பொன்.காசிராஜன்


 
''னக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துவெச்சிருந்தேன்.ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்ன தும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசைஅவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த Description: http://www.vikatan.com/images/rupee_symbol.png 3,052, சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே' துயர் துடைப்புப்பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!)

 அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழவைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே' நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றிஇருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா' (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!
அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள்தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார்.

பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்த வள், பிங்க் நிற 'லேடி பேர்டு' சைக்கிள் மீது கைவைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின.

''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந் ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக் குள் சர்சர் என சைக்கிள் விட்டுக்கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து.

''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே' துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர்கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார்.'எதுக்கு'ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா.  இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!''
 
Top of Form
Bottom of Form
 விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அசோகன், சிங்கப்பூர்14 Hours ago
பெருமையான விஷயம்... வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ்க...
usha8 Hours ago
இந்த குழந்தைக்கு சேமிப்பை கற்று கொடுத்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்,எல்லா நலங்களும் பெற்று அசினா வாழ்க வளமுடன்...
Kannan Chockalingam15 Hours ago
பால் காந்தி, தமிழ் தாத்தா (?) அகராதியில் தமிழ் மக்கள் என்றால் தம் மக்கள் என்று பொருள். அதற்கு அன்புடன் ஏற்கனவே பரிசு கொடுத்து விட்டார்கள்.
Suresh Kumar18 Hours ago
அந்த பிஞ்சு மனதின் ஆசயை நிறைவேட்றிய திரு.கனஹராஜ்...Hats off to you
Rajaram18 Hours ago
God Bless you my child.
srudhiprabudas22 Hours ago
வாழ்க வளமுடன்
Pal Gandhi1 Days ago
இந்த பொண்ணு நம்ம கருணானிதியை விட அதிகாமாக நன்கொடை செய்துள்ளது.
Pal Gandhi1 Days ago
இது மாதிரி நம்ம கருணனிதி தமிழ் மக்களுக்கு செய்த கடமைக்கு யாராவது அவருக்கு ஏதாவது அன்பளியுங்களேன்.
Pal Gandhi1 Days ago
நான் என் மகனுக்கு ஒரு $200 டால்லருக்கு கிருஸ்மஸ் புத்தாண்டு நேரத்தில் ஒரு ரோபோ(Mindstroms) வாங்கலாம் என பட்ஜெட் வைத்திருந்தேன். கடந்த இரண்டு வருட கணவு. இந்த தானே வந்து அந்த பட்ஜெட்டை உடைத்து விட்டது. இந்த தானே எத்தனை குழ்ந்தைகளின் பட்ஜேட்டை உடைத்ததோ?
Sheik1 Days ago
சிறு வயதிலேயே தனது மகளுக்கு சேமிக்கும் பழக்கத்தையும், சேவையுள்ளத்தையும் உருவாக்கிய அசினாவின் தந்தை ஒரு நல்ல முன் மாதிரி. அவரது பெயரையும், புகைப்படத்தையும் விகடன் வெளியிட்டிருக்கலாம். நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் விகடன் பணி பாராட்டுக்குரியது.

- T.K.T.
ஷேக் அப்துல்லாஹ், மலேசியா.
rajesh1 Days ago
God Bless you...........
Kalaiselvan1 Days ago
this is india. long live!
Sheik24 Hours ago
சிறுமியின் கனவை உடன் நனவாக்கிய டி.ஐ. நிறுவனமும், அதன் அதிகாரி திரு.கனகராஜ் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

- T.K.T.
ஷேக் அப்துல்லாஹ், மலேசியா.

0 Responses

கருத்துரையிடுக