From: அலாவுதீன் <alavudeen.mkh@gmail.com>
Date: 2012/3/9
Subject: [TMMKGULF] அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்
To:
From: Ansarullah <wisekaj@yahoo.co.uk>
Date: 2012/3/7
Subject: [TAFAREG] Fwd: அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்
To:
அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்
லண்டன்: பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.
சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ்.
ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை இன்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அதில் பர்ட்டன் எழுதியுள்ளதாவது:
பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.
மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது.
இதனால் முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் அந்த உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார்.
அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அதை தீவிரவாதிகள் னைவுச் சின்னமாக்கிவிடுவர் என்பதாலும், ஒசாமா இறந்தாலும் அவரது கொள்கைகளைப் பரப்ப அது ஒரு மையமாகமும் அடையாளமாகவும் ஆகிவிடும் என்பதாலும் ஒசாமாவை கடலில் புதைத்ததாக அமெரிக்கா சொல்லி வருவதாகத் தெரிகிறது.
SOURCE: www.thatstamil.com
கருத்துரையிடுக