உங்களுக்குத் தொழ வைக்கமுன்
நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
இப்ராகிம் கலிபுல்லா உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .
மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும். அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக கடந்த 2000-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டு பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதிகளாக அல்டமாஸ் கபீர், அப்தாப் ஆலம் ஆகிய இரு முஸ்லிம்கள் பணியாற்றி வருகிறார்கள். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா உடன் அந்த எண்ணிக்கை 3 ஆக அதிகரிக்கிறது.
தமிழகத்தின் காரைக்குடியை சொந்த ஊராக கொண்ட நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மறைந்த எம்.பக்கீர் முகமதுவின் மகன் ஆவார். அவரது தாத்தா கான்பகதூர் பி.கலிபுல்லா சாகிப் திருச்சியில் புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்தவர்.
தமிழ்நாட்டில் இருந்து நீதிபதி பி.சதாசிவம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதியாக உள்ளார். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா நியமனத்தை சேர்த்து அந்த எண்ணிக்கை 2 ஆக அதிகரிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. ஆனால், தற்போது 25 நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். 6 நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-இந்நேரம்.காம்
உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்
------------------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait
__._,_.___
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.
__,_._,___
கருத்துரையிடுக