Re: [K-Tic] இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பு நிலை

 

From: vavarfakirmohamed athavullah <vfathavullah@gmail.com>
To: K-Tic-group-owner@yahoogroups.com
Sent: Sunday, March 11, 2012 7:46 AM
Subject: Re: [K-Tic] இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பு நிலை
 
 
Islam means  full of peace - easyness and flexibility.
 
atha
2012/3/4 noornisha kadear <noornishakader@yahoo.co.in>
 
இப்னு மஸாஹிரா
இஸ்லாம் வாழ்வதற்கான வழிகாட்டியாக இருக்கிறது. அதன்படி வாழ்கின்ற போதுதான் எமக்கு ஈருலக வெற்றி இருக்கின்றது. இஸ்லாத்தின் இயல்பான போக்கை அதன் ஷரீஆவைப் பார்க்கின்றபோது விளங்கிக் கொள்ள முடியும்.
இஸ்லாமிய ஷரீஆ, மனித சமூகம் நிலைத்திருப்பதற்கான வழிமுறையாக குடும்ப வாழ்வைக் கருதுகின்றது. குடும்பத்திற்கான தலைமைப்பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கே வழங்கியுள்ளது.
"(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்து வருவதனாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்." (4: 34)
கணவன் தனது மனைவிக்கு செலவழிப்பது இங்கு கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி எதிர்கால பரம்பரையை சீர்படுத்தி, எதிர்காலத்திற்கு சிறந்ததொரு தலைமுறையை வழங்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இவ்வாறிருக்கும் நிலையே இயல்பான நிலையாகும்.
திருமணம் முடித்தபின் கணவனின் பேச்சை மனைவி கேட்காவிட்டால் அவளை திருத்துவதற்கான படிமுறைகளை இஸ்லாம் எமக்கு கற்றுத்தந்துள்ளது.
"எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்." (4: 34)
முதற்கட்டமாக தனது மனைவிக்கு நல்லுபதேசம் செய்யுமாறே சொல்கிறது. இறுதித் தீர்வே இலேசாக அடித்தல் அமைகிறது. எம்மில் பலர் விடுகின்ற ஒரு பிழைதான் மனைவியை திருத்தும் ஏக வழியாக அவளுக்கு அடிப்பதைப் பாவிக்கின்றனர். இது மிகவும் ஒரு பிழையான வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் மனைவிமாருக்கு உபதேசித்துள்ளார்கள். ஆனால், யாருக்கும் அடித்தது கிடையாது. கணவன் தனது மனைவிக்கு நல்லுபதேசம் செய்து அவளை திருத்த முயற்சிக்க வேண்டும். இதுவே இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பான நிலையாகும்.
கணவன், மனைவியரிடையே பிரச்சினையொன்று ஏற்பட்டால் அவர்கள் இருவரும் முதலில் பேசித்தீர்த்துக் கொள்ளுமாறே இஸ்லாம் எம்மிடம் வேண்டுகிறது.
"ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது." (4: 128)      
கணவன், மனைவியரிடையே பிரச்சினை முற்றிவிடும் எனக் கண்டால் மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு இஸ்லாமிய ஷரீஆ கூறுகின்றது. அவர்களில் ஒருவர் கணவனின் உறவினர்களிலிருந்தும் மற்றவர் மனைவியின் உறவினர்களிலிருந்தும் காணப்பட வேண்டும் என நிபந்தனையிடுகிறது. கணவன், மனைவியின் பிரச்சினை முற்றி கொலையில் போய் முடிவதற்கு முன்னர் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் எம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
"(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண் டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால், கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள் அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கின்றவனாகவும் இருக்கின்றான்." (4: 35) 
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைப் பாருங்கள்:
"எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நான் அவளின் கையைத் துண்டித்திருப்பேன்."
இஸ்லாம் களவு விடயத்தில் மிகக்கடுமையாக நிற்பதன் காரணம்; மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஒருவன் இலகுவாக தட்டிக்கொண்டு செல்வது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல. இஸ்லாம் உழைக்குமாறே ஊக்குவிப்பு வழங்குகிறது. அந்தக் கரங்களையே பாராட்டுகிறது. உமர் (றழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இவ்வேளையில் ஒருவன் திருடி விட்டான். அவனது வழக்கு வந்த போது பஞ்ச காலத்தில் திருடியதனால் அவனது கை வெட்டப்பட முடியாது என தீர்ப்பு வந்தது. இதுதான் இஸ்லாமிய ஷரீஆவாகும்.
இன்று கொலைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொலையைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகளை மனித சட்டம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கொலை குறைவதாக இல்லை. ஒரு உயிரைக் கொலை செய்தால், தான் கொல்லப்படுவேன் என்ற அச்சம் வேண்டும். அப்போதுதான் இவ்வகை கொலைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். எனவேதான், இஸ்லாம் உயிருக்கு உயிர் என்ற சட்டத்தை விதித்துள்ளது. அதிலும் கொலை செய்யப்பட்டவரின் உறவினருக்கு ஒரு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. அந்த உறவினர்கள் விரும்பினால் அந்த கொலைக்கான தண்டப்பணத்தை பெற்றுவிட்டு, அவனை மன்னித்து விடலாம். இது அவர்களின் சுய விருப்பின் பேரில் இடம் பெறவேண்டும்.
"உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு (ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்க வில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!" (05: 45)
இவை உண்மையில் இஸ்லாமிய ஷரீஆவின் சில பகுதிகளே. அதன் பல பகுதிகளை நாம் விளங்க வேண்டும். அதனை எமது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் வாழ்வதற்கான மார்க்கம். அதனைப் பின்பற்றினால் உலகு எமக்கு பின்னால் வரும். உலகையே ஆளும் சக்தியாக நாம் மாறலாம். நாம் எமக்குள் இருக்கும் பழமைவாத எண்ணங்களை முதலில் களையவேண்டும். மற்றவர்களையும் மதிக்கத்தெரிய வேண்டும். சிலர் மற்றவர்களை மதிப்பது கிடையாது. தமது பழமைவாத சிந்தனையில் வளர்க்கப்பட்டவர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களையே தமது சபைகளுக்கு அழைக்கிறார்கள். இவ்வாறான பழமைவாத சிந்தனைகளும் நாம் பின்னடைவதற்கு காரணமாகும். எனவே, நாம் எமது சரியான ஷரீஆவை தேடுவோம், கற்போம், நடைமுறைப் படுத்துவோம்.
இன்ஷா அல்லாஹ்.
shaik
 

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக