அதிமுகவின் துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் TNTJ திமுக விற்கு ஆதரவு!


அதிமுகவின் துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் TNTJ திமுக விற்கு ஆதரவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு தொடர்பான மாநில பொதுக்குழு இன்று (26.03.2011) எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் P. ஜைனுல் ஆபிதீன் , மாநில பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பிற மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கும்படி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான பன்னீர் செல்வம், செங்கோட்டையன், அன்வர் பாஷா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நம் மாநில நிர்வாகிகளை சந்தித்து பல முறை பேசினர்.

நம் ஜமாஅத்தின் சார்பாக ஒரே கோரிக்கையாக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக அதிகபடுத்துவது தொடர்பாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று கூறினோம். ஆனால் இறுதிவரை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்று கூறி தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு என்ற வார்த்தையை கூட அதிமுக தெரிவிக்கவில்லை.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பி அடித்து வெளியிட்ட அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ”இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பரிலீசிப்போம்“ என்ற வார்த்தையை மட்டும் காப்பியடிக்க மறந்து விட்டது அல்லது மறுத்துவிட்டது……….

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

எனவே அதிமுகவின் இந்த துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழுவின் முடிவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். மேலும் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து செயல்படுவோம், என்றார்.
0 Responses

கருத்துரையிடுக