நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும்

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]


வறிய நிலையில் உள்ள பெண்களும், கணவனை இழந்த விதவைகளும், கணவன் இருந்தும் உபயோகமில்லாத பெண்களும், கவுரமாக தங்களின் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக வீட்டு வேலைகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நல்லவர்களாக உள்ளநிலையிலும், சில கெட்ட பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. அதோடு, வேலைக்காரிகளையும்- வீட்டு எஜமானர்களையும் இணைத்து வராத கவிதைகளும், காமெடிகளும், கதைகளும் மிகக்குறைவு. மேலும், ஒரு வீட்டின் ரகசியம் வேலைக்காரப் பெண்களால்தான் வெளியேறும் என்ற கருத்து பரவலாக உண்டு. இது உண்மையோ பொய்யோ, ஆனால் 'ரகசியநோய்' இவர்களில் சிலர் மூலம் உள்ளேவர வாய்ப்புண்டு என்பதற்கு சமீபத்தில் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி சான்றாகத் திகழ்கிறது.

மும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.

அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார். இவருக்கு “எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே “எய்ட்ஸ்” பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.

இத்தகைய அதிர்ச்சியான செய்தி,சபலப்புத்தியுள்ள ஆண்களின் மண்டையில் ஓங்கி ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இதற்கு பின்னும், பனிப்பெண் தானே என்று பார்வையை செலுத்தினால், அதற்கான 'பனிஷ்மென்ட்[punishment ] பயங்கரமானது என்பதையும், வீட்டு ரகசியம் வெளியே போகிறதோ இல்லையோ, இது போன்ற சாந்திகளால் ரகசியநோய் உள்ளேவேரும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]
0 Responses

கருத்துரையிடுக