From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/3/4
Subject: (TMP) கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, tamilmuslimbrothers@gmail.com, tamil-islam@yahoogroups.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, contact@koothanallurmuslims.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, afnaasmohamed@gmail.com, abeeba.sheriff@gmail.com, babarmasjid@gmail.com, basheer_ngl@yahoo.co.in, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, mdaman07@gmail.com, muslimmails@googlegroups.com
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.
தனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!.
இது போன்று அந்தத் தாய் செய்வதற்கு மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால்தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதி, குழந்தையை நரக படுகுழியில் தள்ள முற்பட்டுள்ளார்.
சமுதாய மக்களே!, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று நாவால் மொழிந்த இக்குழந்தை, அல்லாஹ்விற்கு இனையுண்டு என கடவுளின் அவதாரம் பூண்டிருக்கின்றது இக்குழந்தையின் உடல்!. கொஞ்சம்கூட மனம் கூசவில்லையா?. பாரதி, வள்ளுவன், புலி, கரடி என வேஷம் போட்டதின் பரிணாம வளர்ச்சிதான் இப்படி நிறுத்தியிருக்கின்றது தற்போது!
மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் ஒரு கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்!. எந்தக்குழந்தையும் அல்லது எந்த ஒரு முஸ்லிமும் இந்த வேஷம் பூண்ட நிலையிலேயே எதோ ஒரு காரணத்தினால் மரணித்துவிட்டால் மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் வரும்போது இதே வேஷத்துடன்தானே எழுப்பப்படுவீர்கள்! அப்போது உங்களின் நிலை என்ன?.
இப்படி வேஷமிடுவதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத்தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும், அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை!. பெற்றோரின் இத்தகைய உற்சாகக் கோளாறு பின்னாளில், எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்து விடுகின்றது.
எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது. வெறும் தொழுகையை மட்டும் அவசரகதியில் நிறைவேற்றிவிட்டு, மார்க்கத்தின் மகத்துவத்தை தானும் அறிந்து, தன் குழந்தைக்கும் எத்திவைக்காமல் இருப்பதின் விளைவே, இதுபோன்ற அவலநிலைக்கு முக்கியகாரணம்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டென போட்டு உடைத்துவிட்டார்கள். நரகத்திற்கு செல்ல அல்லாஹ் இல்லை என கூறவேண்டிய அவசியம் கூட இல்லை. மாறாக இதுபோன்று வேடமிடுவதினாலேக்கூட சென்றுவிடலாம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.
அடுத்ததாக கல்வி நிலையம் என்பது அறிவை வளர்த்து பயிற்சியையும் வழங்கும் இடமாகத்தானே இருக்க வேண்டுமே ஒழிய, மாணவனின் மெமரி பவரை சோதிக்கும் இடமாக இருக்கக் கூடாது. அதற்கு மருத்துவமனையும் மருத்துவர்களும் மருந்துகளும் இருக்கின்றன!.
இன்று கல்வி நிலையம் கல்வியை விட கலவியை (காதலை/காமத்தை) போதிக்கும் இடமாக ஆகி வருகின்றது. இதன் பாதிப்புதான் பத்தாம்வகுப்பு மாணவி பள்ளியிலேயே குழந்தை பெற்ற நிகழ்வு நம் தமிழ்நாட்டில் நடந்தது!.
ஆண்டுவிழா என்பது வருடம் முழுவதும் கற்றுக்கொடுத்த கல்வியை ஊர் அளவிலோ, மாவட்ட அளவிலோ வெளிக்கொணரும் (விளையாட்டுப் போட்டி போலவே ஒரு போட்டியாக) விழாவாகவே இருக்க வேண்டுமே ஒழிய, அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடும் விழாவாக இருக்ககூடாது. இதற்காகவே சில நடனக்கலைஞரிடம் கெமிஸ்ட்ரி என்ற போர்வையில், குத்தாட்டங்கள் (மானாட மயிலாட என) குமரிகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் சேர்த்தே ஓடிவிளையாடு என்ற பெயரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை அவர் பார்த்துக்கொள்வார். இதுபோன்ற பள்ளி ஆண்டுவிழாவிற்கு விருந்தினராக அழைக்கப்படும் எவருமே இதை கண்டிக்காமல் கலந்துகொண்டு செல்வதையே வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.
மேலும் நம் இஸ்லாமிய இயக்கங்கள் முப்பது ஆண்டுகாலம் வீரியத்துடன் நடத்திய தவ்கீது பிரச்சாரம் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டதாகவே நமக்கு அறியமுடிகின்றது! ஏனெனில் இன்று இவர்களிடம் உள்ள சி.டி.களும், டி.வி நிகழ்ச்சிகளும், மற்றும் வாரப் பத்திரிக்கைகளும் ஒருவரை மாற்றி ஒருவர் வசை பாடுவதற்கே நேரம் போதவில்லை!. மேலும் இவர்களுக்குள் வசை பாடுவதை நாம் காசுகொடுத்து வேறு வாங்கிப்படிக்க, பார்க்க வேண்டும்!.
எனவே இனி சாட்டை மக்களாகிய உங்களின் கையில்தான் உள்ளது!. முடிவெடுக்கும் நிலையில் நீங்கள் உள்ளீர்கள்!!. உங்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை இதுபோல் செய்யவேண்டாம் என எச்சரியுங்கள். மீறினால் குழந்தையை வேறுபள்ளிகளுக்கு மாற்றலாம் என முடிவெடுக்காதீர்கள்! ஏனெனில் அநியாயம் நடந்தால் அதை கரத்தால், நாவால், மனதால் தடுக்கவேண்டும் என்பது நபிமொழி. இந்த விஷயத்திற்கு மூன்றும் ஒருசேர பொருந்தும் என்றாலும் முதல்நிலையே சாலச்சிறந்தது!.
ஏதோ என்னால் முடிந்த வரை சங்கை சத்தமாக ஊதிவிட்டேன்! இனி அவர்களின் சங்கை பிடிப்பது இனி உங்கள் கையில்தான்!!
source: http://adiraimujeeb.blogspot.com/2010/10/blog-post_26.html
--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.
நீங்கள் கூறியதில் ஒரு சில உண்மையாக ஏற்றுக்கொள்ள கூடியது தான் ...ஆநலம் ஏன் இப்படி மதம் மதம் என்று மதம் பிடித்து ஆடுகிறீர்கள் என்று தான் தெரியவில்லை ...மதம் எப்படி உருவானது என்று விளக்க முடியுமா ? யார் உருவாகினார்கள் ? உருவாக்க காரணம் என்ன ? ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளின் மனதில் இப்படியே நஞ்சை கலந்து விடுங்கள் .......... மதங்கள் மக்களை நல் வழி படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர இப்படி என் மதம் தான் பெரியது என்று அடித்து கொண்டு சாவதற்கு அல்ல .......
சகோதர்களே ,எங்களுக்கு ஒரே இறைவன் அல்லா தவிர வேறு எதுவும் இல்லை