மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/3/27
Subject: (TMP) மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tamil-islam@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, tamilmuslimbrothers@gmail.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, ervadidargah@gmail.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, alamanmail@gmail.com, afnaasmohamed@gmail.com, abeeba.sheriff@gmail.com, bilal.bbh@gmail.com, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, mdaman07@gmail.com, muslimmails@googlegroups.com, shafiq.aym@gmail.com, saheed.civil@gmail.com, syed.amba@gmail.com, shathesmart@yahoo.com


 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!

Posted by PUTHIYATHENRAL
மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

DSC00220.JPG


 
 
இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தது.

இவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து மாட்டின் தோலும், கத்தியும், பயன்படுத்திய வாகனமும் கண்டெடுத்ததாக போலீஸ் கூறியிருந்தது.

ஆனால், தங்கள் மீது பொய் குற்றம் சுமத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிவேலைக்கு போலீஸ் துணை போவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அ.மார்க்ஸ், பீப்பிள் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ரஜனி, ஃபெடரேசன் ஃபார் பீப்பிள்ஸ் ரைட்ஸ் செயலாளர் ஜி.சுகுமாரன், வழக்கறிஞர்களான முஹம்மது அப்பாஸ், பாதுஷா(என்.சி.ஹெச்.ஆர்.ஒ) ஆகியோர் உண்மைக் கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆகியோரை சந்தித்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் சித்திரவதைச் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் உண்மைக் கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டமாக இருக்கலாம். ஏனெனில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன என என்.சி.ஹெச்.ஆர்.ஓ குற்றஞ்சாட்டியுள்ளது.
 
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம்.
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

கோவையில் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு குர்ஆன் தமிழாக்கம்


கோவையில் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு குர்ஆன் தமிழாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 12.02.2011 அன்று இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லாஹ், மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில் குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.

அதிமுகவின் துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் TNTJ திமுக விற்கு ஆதரவு!


அதிமுகவின் துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் TNTJ திமுக விற்கு ஆதரவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு தொடர்பான மாநில பொதுக்குழு இன்று (26.03.2011) எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் P. ஜைனுல் ஆபிதீன் , மாநில பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பிற மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கும்படி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான பன்னீர் செல்வம், செங்கோட்டையன், அன்வர் பாஷா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நம் மாநில நிர்வாகிகளை சந்தித்து பல முறை பேசினர்.

நம் ஜமாஅத்தின் சார்பாக ஒரே கோரிக்கையாக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக அதிகபடுத்துவது தொடர்பாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று கூறினோம். ஆனால் இறுதிவரை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்று கூறி தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு என்ற வார்த்தையை கூட அதிமுக தெரிவிக்கவில்லை.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பி அடித்து வெளியிட்ட அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ”இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பரிலீசிப்போம்“ என்ற வார்த்தையை மட்டும் காப்பியடிக்க மறந்து விட்டது அல்லது மறுத்துவிட்டது……….

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

எனவே அதிமுகவின் இந்த துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழுவின் முடிவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். மேலும் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து செயல்படுவோம், என்றார்.

பனைக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கவிதா


பனைக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கவிதா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 11-3-11 அன்று தாமரை ஊரணியை சேர்ந்த கவிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார். உடன் அவரது தயார் இருந்தார்கள்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இஸ்லாத்தின் ஓரிரைக் கொள்கையை அவருக்கு விளக்கிக் கூறினார்கள்.

உடனடியாக மாவட்டப் பறிந்துரையுடன் சேலம் தஃவா சென்டரில் சேர்க்க வேண்டும் என்றும் அந்தப் பெணிமணியின் சம்மதத்துடன் அவரது தாயார் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.

பெண்ணின் தாயர் அவர்களுக்கும் ஓரிரைக் கொள்கை விளக்கிக் கூறப்பட்ட பின்னர் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் தான் இஸ்லாத்தை ஏற்பதாக ஆயிஷா அவர்களின் தாயார் கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்


கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்


கடந்த 24-02-2011 அன்று கத்தர் மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது பட்டுகோட்டையை சேர்ந்த கலைவாணன் , தஞ்சை சேர்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். கலைவாணன் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் , நாகராஜ் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல் காதிர் என்றும் மாற்றிக்கொண்டனர்.

அச்சகோதரர்களுக்கு துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கக் கூறினார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே !

அவ்விருவருக்கும் மர்கஸ் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வழங்கினார்கள்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும்

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]


வறிய நிலையில் உள்ள பெண்களும், கணவனை இழந்த விதவைகளும், கணவன் இருந்தும் உபயோகமில்லாத பெண்களும், கவுரமாக தங்களின் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக வீட்டு வேலைகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நல்லவர்களாக உள்ளநிலையிலும், சில கெட்ட பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. அதோடு, வேலைக்காரிகளையும்- வீட்டு எஜமானர்களையும் இணைத்து வராத கவிதைகளும், காமெடிகளும், கதைகளும் மிகக்குறைவு. மேலும், ஒரு வீட்டின் ரகசியம் வேலைக்காரப் பெண்களால்தான் வெளியேறும் என்ற கருத்து பரவலாக உண்டு. இது உண்மையோ பொய்யோ, ஆனால் 'ரகசியநோய்' இவர்களில் சிலர் மூலம் உள்ளேவர வாய்ப்புண்டு என்பதற்கு சமீபத்தில் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி சான்றாகத் திகழ்கிறது.

மும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.

அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார். இவருக்கு “எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே “எய்ட்ஸ்” பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.

இத்தகைய அதிர்ச்சியான செய்தி,சபலப்புத்தியுள்ள ஆண்களின் மண்டையில் ஓங்கி ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இதற்கு பின்னும், பனிப்பெண் தானே என்று பார்வையை செலுத்தினால், அதற்கான 'பனிஷ்மென்ட்[punishment ] பயங்கரமானது என்பதையும், வீட்டு ரகசியம் வெளியே போகிறதோ இல்லையோ, இது போன்ற சாந்திகளால் ரகசியநோய் உள்ளேவேரும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/3/4
Subject: (TMP) கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, tamilmuslimbrothers@gmail.com, tamil-islam@yahoogroups.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, contact@koothanallurmuslims.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, afnaasmohamed@gmail.com, abeeba.sheriff@gmail.com, babarmasjid@gmail.com, basheer_ngl@yahoo.co.in, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, mdaman07@gmail.com, muslimmails@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
 
-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%2001%20%207%20%20-%20%201%20%20796.jpg

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.

தனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!.

இது போன்று அந்தத் தாய் செய்வதற்கு மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால்தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதி, குழந்தையை நரக படுகுழியில் தள்ள முற்பட்டுள்ளார்.

சமுதாய மக்களே!, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று நாவால் மொழிந்த இக்குழந்தை, அல்லாஹ்விற்கு இனையுண்டு என கடவுளின் அவதாரம் பூண்டிருக்கின்றது இக்குழந்தையின் உடல்!. கொஞ்சம்கூட மனம் கூசவில்லையா?. பாரதி, வள்ளுவன், புலி, கரடி என வேஷம் போட்டதின் பரிணாம வளர்ச்சிதான் இப்படி நிறுத்தியிருக்கின்றது தற்போது!

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் ஒரு கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்!. எந்தக்குழந்தையும் அல்லது எந்த ஒரு முஸ்லிமும் இந்த வேஷம் பூண்ட நிலையிலேயே எதோ ஒரு காரணத்தினால் மரணித்துவிட்டால் மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் வரும்போது இதே வேஷத்துடன்தானே எழுப்பப்படுவீர்கள்! அப்போது உங்களின் நிலை என்ன?.

இப்படி வேஷமிடுவதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத்தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும், அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை!. பெற்றோரின் இத்தகைய உற்சாகக் கோளாறு பின்னாளில், எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்து விடுகின்றது.

எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது. வெறும் தொழுகையை மட்டும் அவசரகதியில் நிறைவேற்றிவிட்டு, மார்க்கத்தின் மகத்துவத்தை தானும் அறிந்து, தன் குழந்தைக்கும் எத்திவைக்காமல் இருப்பதின் விளைவே, இதுபோன்ற அவலநிலைக்கு முக்கியகாரணம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டென போட்டு உடைத்துவிட்டார்கள். நரகத்திற்கு செல்ல அல்லாஹ் இல்லை என கூறவேண்டிய அவசியம் கூட இல்லை. மாறாக இதுபோன்று வேடமிடுவதினாலேக்கூட சென்றுவிடலாம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.

அடுத்ததாக கல்வி நிலையம் என்பது அறிவை வளர்த்து பயிற்சியையும் வழங்கும் இடமாகத்தானே இருக்க வேண்டுமே ஒழிய, மாணவனின் மெமரி பவரை சோதிக்கும் இடமாக இருக்கக் கூடாது. அதற்கு மருத்துவமனையும் மருத்துவர்களும் மருந்துகளும் இருக்கின்றன!.

இன்று கல்வி நிலையம் கல்வியை விட கலவியை (காதலை/காமத்தை) போதிக்கும் இடமாக ஆகி வருகின்றது. இதன் பாதிப்புதான் பத்தாம்வகுப்பு மாணவி பள்ளியிலேயே குழந்தை பெற்ற நிகழ்வு நம் தமிழ்நாட்டில் நடந்தது!.

ஆண்டுவிழா என்பது வருடம் முழுவதும் கற்றுக்கொடுத்த கல்வியை ஊர் அளவிலோ, மாவட்ட அளவிலோ வெளிக்கொணரும் (விளையாட்டுப் போட்டி போலவே ஒரு போட்டியாக) விழாவாகவே இருக்க வேண்டுமே ஒழிய, அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடும் விழாவாக இருக்ககூடாது. இதற்காகவே சில நடனக்கலைஞரிடம் கெமிஸ்ட்ரி என்ற போர்வையில், குத்தாட்டங்கள் (மானாட மயிலாட என) குமரிகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் சேர்த்தே ஓடிவிளையாடு என்ற பெயரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை அவர் பார்த்துக்கொள்வார். இதுபோன்ற பள்ளி ஆண்டுவிழாவிற்கு விருந்தினராக அழைக்கப்படும் எவருமே இதை கண்டிக்காமல் கலந்துகொண்டு செல்வதையே வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

மேலும் நம் இஸ்லாமிய இயக்கங்கள் முப்பது ஆண்டுகாலம் வீரியத்துடன் நடத்திய தவ்கீது பிரச்சாரம் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டதாகவே நமக்கு அறியமுடிகின்றது! ஏனெனில் இன்று இவர்களிடம் உள்ள சி.டி.களும், டி.வி நிகழ்ச்சிகளும், மற்றும் வாரப் பத்திரிக்கைகளும் ஒருவரை மாற்றி ஒருவர் வசை பாடுவதற்கே நேரம் போதவில்லை!. மேலும் இவர்களுக்குள் வசை பாடுவதை நாம் காசுகொடுத்து வேறு வாங்கிப்படிக்க, பார்க்க வேண்டும்!.

எனவே இனி சாட்டை மக்களாகிய உங்களின் கையில்தான் உள்ளது!. முடிவெடுக்கும் நிலையில் நீங்கள் உள்ளீர்கள்!!. உங்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை இதுபோல் செய்யவேண்டாம் என எச்சரியுங்கள். மீறினால் குழந்தையை வேறுபள்ளிகளுக்கு மாற்றலாம் என முடிவெடுக்காதீர்கள்! ஏனெனில் அநியாயம் நடந்தால் அதை கரத்தால், நாவால், மனதால் தடுக்கவேண்டும் என்பது நபிமொழி. இந்த விஷயத்திற்கு மூன்றும் ஒருசேர பொருந்தும் என்றாலும் முதல்நிலையே சாலச்சிறந்தது!.

ஏதோ என்னால் முடிந்த வரை சங்கை சத்தமாக ஊதிவிட்டேன்! இனி அவர்களின் சங்கை பிடிப்பது இனி உங்கள் கையில்தான்!!

source: http://adiraimujeeb.blogspot.com/2010/10/blog-post_26.html

 
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

Fwd: (TMP) நேதாஜி நகர் பகுதியில் பள்ளிவாசல் கட்ட உதவிடுவீர்



---------- Forwarded message ----------
From: Islamic Service <service.islam@gmail.com>
Date: 2011/3/8
Subject: (TMP) நேதாஜி நகர் பகுதியில் பள்ளிவாசல் கட்ட உதவிடுவீர்
To:


அஸ்ஸலாமு அலைக்கும்,

வட சென்னை பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நபி (ஸல்) வழி முறையில் தொழுகை நடத்திட, பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமான பணிகளின் புகைபடங்கள், பொறியாளரின் பிளான், TNTJ மாநில தலைமையகத்தின் பரிந்துறை கடிந்தம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த பரப்பளவு 743 சதுர அடிகள். மொத்த செலவு ரூ.10,75,000. வேலை துவங்கிய நிலையில் இன்னும் ரூ.8,75,000 தேவைபடுகின்றது.
 
 இந்த பகுதியில் உள்ள சகோதரர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதால் கட்டிட பணி நிறைவேராத நிலையில் உள்ளது. பள்ளிவாசல் கட்டி முடிக்க  தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு TNTJ நேதாஜி கிளை சார்பாக அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
 
வங்கி கணக்கு எண் :
 
STATE BANK OF INDIA
Tamilnadu Thowheed Jamaath Nethaji Nagar Branch

A/C no: 31361993610
TONDIARPET Branch, CHENNAI - 81
IFSC-SBIN0003306
 
 மேலும் விபரங்களுக்கு TNTJ நேதாஜி நகர் கிளை தலைவர் சகோ. இஸ்மாயில் (9941884845) அவர்களை தொடர்புகொள்ளவும் 
 
இப்படிக்கு
TNTJ நேதாஜி நகர் கிளை நிர்வாகிகள்
 
Regards
Sithiqu



--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

 

சென்னையில் இயங்கி வரும்  "இக்ராமுல் முஸ்லிமீன் சாரிடபுல் டிரஸ்ட்" என்ற அமைப்பின்  சார்பாக "அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் - இன்ஷா அல்லாஹ். (கருத்தரங்கம் நடைப்பெறும் இடத்தின் முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)  

 

நிகழ்ச்சியில்:-

1. சகோதரர் முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு - சுவாமி ஆனந்தாஜி), 

2. சகோதரர்  M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் - கிருஸ்து ராஜா),  .

3. சகோதரர் அஹமது சுஃபியான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்

4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &

5. முஃப்தி உமர் ஷெரிஃப்   ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

 

சகோதர, சகோதரிகளே! சென்னையை சேர்ந்த,  தங்களுக்கு தெரிந்த, அறிமுகமான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள நினைக்கும் மாற்று மத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை.

 

எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.  மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தாஃவா செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு இதாயத் தருவது இறைவனின் உரிமை.

 

இத்துடன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: +91-91766 33023 - என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

 

அன்புடன் சகோதரன்

ஹைதர் ஹுசேன் சென்னை

முஸ்லிம்மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல்வேண்டும்!



---------- Forwarded message ----------
From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
Date: 2011/3/6
Subject: (TMP) முஸ்லிம்மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல்வேண்டும்!
To: tamilmuslimbrothers@googlegroups.com, tmpolitics@googlegroups.com, unitedtamilmuslims@yahoogroups.com
Cc: sengiskhanonline@gmail.com, Keelakarai Anjal <keelaianjal@gmail.com>, abusajidha@gmail.com


முஸ்லிம்மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல்வேண்டும்!

லக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்8.ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே நடைபெறும். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம்குறித்த தெளிவான பார்வையின்மைதான்.

பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை மட்டும்தான் பெண்களின் முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றதுதான். இதையும்தாண்டி பெண்கள் சோபிக்கவேண்டிய முக்கியமான குடும்பக்கட்டமைப்பு இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சிதைந்துள்ளது.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது அரிதான ஒன்றாக இருந்தது. இன்று என்ன நிலை? ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கணவனுக்கு முன்பாக குடும்பநல நீதிமன்றத்தின் படியேறுவது பெண்தான். இதை பெருகிவரும் விவாகரத்து வழக்குகள் உறுதிப்படுத்துகிறது. சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டுமே இவ்வளவு எனில், ஏனைய மாவட்டங்கள்- மாநிலங்களின் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த அளவுக்கு விவாகரத்து மலிந்ததற்கு ஆண்கள் ஒரு காரணம். ஆனால் ஆண்கள் மட்டுமே காரணமில்லை. சுதந்திரம் என்ற பெயரில் கணவன் திட்டினாலே, அவனை கம்பி எண்ண வைக்கும் மனைவிகள் உண்டு. 'அடிமைத்தளையை அறுக்கிறேன் என்றபெயரில் அன்பான குடும்பத்தின் குரல்வளையை அறுக்கவைத்ததும் இந்த போலிபெண் சுதந்திரமே! அதுபோன்று சரிநிகர்சமானம் என்ற பெயரில், குடும்பப்பொறுப்புகளையும், குழந்தைகள் பராமரிப்பையும் புறந்தள்ளி பணிக்கு செல்லும் பெண்களில் சிலர் தாமும் சம்பாதிப்பதால் கணவனுக்கும், ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் மரியாதை தரமறுப்பதும்அதனால் பிரச்சினைகள் எழுவதையும் முடிவில் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆட்கள் அணிந்து வலம்வரும் சில பெண்களால் நாட்டில் கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாவதையும் நாம் மறுக்கமுடியாது. கற்பழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு செயல்படுபவரைவிட, சில பெண்கள் அணியும் ஆடைகளால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நடக்கும் கற்பழிப்புகளே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நம்நாட்டில் சுமார் இருபதாயிரம் கற்பழிப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சுதந்திரம் என்ற பெயரில், ஆண்களுடன் பணியாற்றுவதாலும், ஆண்களுடன் சுற்றுவதாலும் காதல்வயப்பட்டு கற்பிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்கா. இப்படி சுதந்திரம் என்றபெயரில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெண்ணினத்திற்கு, இஸ்லாம் உண்மையான சுதந்திரத்தையும்- பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறது.

பிறப்பதற்கு உரிமை;
கணினி உலகிலும் கருவிலேயே பெண்குழந்தையை அழிக்கும் நிலையில், அன்றே பெண் குழந்தைகளை சிறப்பித்து வரவேற்ற மார்க்கம் இஸ்லாம்;இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.
நூல்;புஹாரி,எண் 2408

கல்வி கற்பதில் சுதந்திரம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நூல்;புஹாரி,எண் 101;

மணமகனை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்;

கன்சா(ரழி)அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)


விவாகரத்தில் உரிமை;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 5273

இது போக கணவனின் சொத்தில் உரிமை, தந்தையின் சொத்தில் உரிமை இப்படி ஏராளமான உரிமைகளையும், உண்மையான சுதந்திரத்தையும் வழங்கியதோடு, இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போன்று ஒரு பெண்ணைத்தான் முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லிக்காட்டி பெண்ணினத்தை உச்சத்தில் வைத்து பாராட்டுகிறான்;

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (66:11)

இப்ப மறுபடியும் தலைப்பை படியுங்கள்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.