Fwd: |TMB| பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!
From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
Date: 2012/2/10
Subject: |TMB| பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!
To: tamilmuslimbrothers@googlegroups.com, unitedtamilmuslims@yahoogroups.com, tmpolitics@googlegroups.com
Cc: sengiskhan online <sengiskhanonline@gmail.com>, Keelakarai Anjal <keelaianjal@gmail.com>
நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 374 சிறைகளில், 3 லட்சம் பேரைத் தான் வைக்க முடியும். ஆனால், தற்போது 4 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய சிறையான திகார் சிறையில், 6 ஆயிரத்து 500 பேருக்குத் தான் இடம் உண்டு. தற்போது, இந்த சிறையில், 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆயிரம் கைதிகளுக்கு மேல் உள்ள சிறையில், நெரிசலைக் குறைப்பதற்கான ஆய்வை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
சிறைச்சாலைகளில் இந்த இடநெருக்கடி எதனால் ஏற்பட்டது? ஒற்றை வரியில் சொல்வதானால் குற்றங்களுக்கான நமது நாட்டு சட்டங்களும் போதுமானதல்ல. அதை அமுல்படுத்தும் விதமும் சரியானதல்ல என்பதுதான். சிறையில் அடைந்து கிடக்கும் கைதிகள் யாவரும் தண்டனை வழங்கப்பட்டவர்களா? என்றால் இல்லை. சிறைவாசிகளில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, விசாரணைக் கைதிகள், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கைதிகள், தண்டனை நிறைவேற்றப்படாமல் காத்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள், தண்டனையை தள்ளுபடி செய்ய கருணை மனு போட்டு விட்டு 'ஹாயாக' அமர்ந்திருக்கும் கைதிகள், அரசியல் கைதிகள் இவ்வாறு பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர். அதனால்தான் சிறைச்சாலை நிரம்பி வழிகின்றது. குற்றம் செய்ததாக கைது செய்யப்படுபவன் அவனது குற்றத்திற்கான தண்டனை வழங்கப்பட்டால் கூட சில ஆண்டுகளில் விடுதலை ஆகிவிடுவான். ஆனால் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பின்னால் அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். உதாரணத்திற்கு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகாலம் கழித்து மதானி குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்ததை கூறலாம். இவ்வாறான நீதிமன்றத் தீர்ப்புகள் தாமதம் ஒருபுறம், வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்காக சில காவலர்கள் அப்பாவிகளை கைது செய்து சிறையை நிரப்புவது ஒருபுறம் என சிறை நிரம்பும் பட்டியல் நீள்கிறது.
இதுபோக ஒரு ஜேப்படி திருடனை பிடித்து அவனுக்கு சில ஆண்டுகள் தண்டனை விதித்து, அவனுக்கு அதே மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யப்படுகிறது. அவன் மீண்டும் வெளியே வந்து திருடுகிறான். அதே போல் கற்பழிப்பில் ஈடுபட்டவன், கொலை செய்தவன், வன்முறையில் ஈடுபட்டவன், பயங்கரவாத செயலில் ஈடுபட்டவன் என அனைவருக்கும் சிறை எனும் அறையில் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்படுகிறது. இதுபோக, நமது நாட்டின் சட்டம் ஒருவனுக்கு மரணதண்டனை வழங்குவது என்பதே குதிரைக் கொம்பு. அப்படி மரணதண்டனை வழங்கப்பட்ட சில கைதிகளுக்கு அதை உடனடியாக நிறைவேற்றாமல் காலம் கடத்திவருவதையும் காண்கிறோம். உதாரணமாக முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கபட்ட மூவர், கீழ்கோர்ட்டில் பெற்ற தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் போய், அங்கு தள்ளுபடி,பின்பு உச்சநீதிமன்றம் போய் அங்கும் தள்ளுபடி, பிறகு ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து அங்கும் தள்ளுபடியான பின்பாவது தண்டனை நிறைவேற்றப் பட்டதா? என்றால் இல்லை. இப்போது வடிவேலு பாணியில், 'மறுபடியும் மொதல்ல இருந்தா' எனக் கேட்கும் வண்ணம், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தனடனைக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. அப்படியானால் ஏற்கனவே இதே கைதிகளின் மேல்முறையீட்டு மனுவை இதே நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. ஆக, இவ்வாறான காவலர்கள்-நீதிமன்றம்- சட்டத்தின் ஓட்டைகள் இவையாவும் கைதிகளால் சிறைச்சாலை நிரம்பி வழிய காரணமாக அமைக்கின்றது என்பது ஆணித்தரமான உண்மையாகும்.
சரி., இந்த சிறைச்சாலை நிரம்பி வழிவதை தடுக்க என்ன வழி? அனைத்திற்கும் வழிகாட்டும் இஸ்லாம் இதற்கும் ஒரு எளிய வழியை காட்டுகிறது. மிகப்பெரிய பரப்பளவை ஆட்சி செய்த இறைவனின் தூதர் முஹம்மது[ஸல்] அவர்களின் ஆட்சியில் சிறைச்சாலைகள் இல்லை. கைதிகளுக்கு அரசு பொதுநிதி செலவிடப்படவில்லை. அப்படியானால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப் பட்டார்கள்? குற்றம் நடந்து அவை விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் உடனடி தீர்ப்பு; உடனடி தண்டனை. திருடினால் கை வெட்டப்பட்டு அவன் விடுவிக்கப்படுவான். கொலை செய்தால் கொலையுண்டவனின் குடும்பத்தார் மன்னித்தாலே தவிர கொலையாளி கொல்லப்படுவான். விபச்சாரம் திருமணமானவன் செய்தால் கல்லால் எறிந்து கொல்லப்படுவான், திருமணம் ஆகாதவன் செய்தால் நூறு கசையடிகள், வழிப்பறி செய்தால் மாறுகால்-மாறு கை வாங்கப்படும். இதுபோக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என காயங்களுக்கு ஏற்ப குற்றவாளிக்கு காயத்தை ஏற்படுத்துதால். இவ்வாறாக இந்த தண்டனைகள் யாவும் ஏக காலத்தில் நிறைவேற்றப் பட்டதால் குற்றங்கள் குறைந்தன., அல்ல. குற்றங்கள் மறைந்தே போயின என்றே சொல்லமுடியும். இஸ்லாம் காட்டும் இந்த நீதியான விசாரணை; கடுமையான தண்டனை; கால தாமதமில்லாத தண்டனை என்ற இந்த வழிமுறை இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டால் சிறைச்சாலையும் தேவையில்லை. சிறையை பாதுகாக்க காவலர்களும் தேவையில்லை. பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரையமாக்கவும் தேவையில்லை. செயல்படுத்த முன் வருமா அரசு?
--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக