ஈரான் விஞ்ஞானிகள் கொலை - பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை?

 

ஈரானின் விஞ்ஞானிகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷொஹ்ரா பிரானி என்பவர்  ஈரானின் அணு விஞ்ஞானி தாரிவுஷ் ரெஷானிஜத்தின் (வயது 35) மனைவி ஆவார். கடந்த வருடம் ஜூலை 23 அன்று தாரிவுஷ் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக ஷொஹ்ரா ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "ஈரானின் விஞ்ஞானிகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஐ.நா.சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை" என கேட்டுள்ளார்.

"இந்தக் கொலைகள் அமெரிக்கா,இங்கிலாந்து உளவுத்துறைகள் மற்றும் இஸ்ரேலியக் கூலிப்படைகளின் கூட்டுச் சதி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்தக் கொலைகளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏதும் கண்டனம் தெரிவிக்காதது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும்" ஷொஹ்ரா இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "தீவிரவாதத்தை மிகப்பெரிய அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஐ.நா.சபை ஈரானின் விஞ்ஞானிகளை குறிவைக்கும் இந்த தீவிரவாதங்களைத் தடுக்க முயற்சிக்காதது ஏன்?" என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக 11.01.2011 அன்று முஸ்தபா அஹ்மதி ரோஸன் என்ற விஞ்ஞானி ஈரானில் கொலை செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மஜீத் ஷஹ்ரியாரி என்ற விஞ்ஞானியும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிஞர் மசூத் அல் முஹம்மதியும் கொலை செய்யப்பட்டனர்.


Read more about ஈரான் விஞ்ஞானிகள் கொலை - பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை? [2792] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com

0 Responses

கருத்துரையிடுக