Fwd: |TMB| முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்



---------- Forwarded message ----------
From: AbuFaaiz <shanawas.a@gmail.com>
Date: 2012/2/23
Subject: |TMB| முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்
To: tamilmuslimbrothers <tamilmuslimbrothers@googlegroups.com>, Tmmk <tmmk_thonderanie@yahoogroups.com>, tmmkgulf <tmmkgulf@googlegroups.com>, TMPOLITICS <tmpolitics@gmail.com>


அஸ்ஸலாமு அலைக்கும்,
அண்மையில் திருச்சி மாநகரில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இழப்பதற்கு
ஏதுமில்லை என்ற இந்திய முஸ்லிம்களைப் பற்றிய நூல் வெளியிட்டு விழா
நடந்தது. அந்த புத்தகத்தின் முன்னுரை இங்கே தரப் பட்டுள்ளது.நூல் ஒன்றின்
விலை ரூ100/-. வேண்டுபவர்கள் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப் படும்.
சவுதி ஜுபைல் நகரத்தில் கிடைக்கும். குவைத்திலும் கிடைக்கும். சென்னை,
திருச்சியிலும் கிடைக்கும்.
முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்


[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில
கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து
வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட நாள் வாசகர் லால்குடி ஷேக் அப்துல்லா.
"இழப்பதற்கு ஏதுமில்லை" என்கிற அந்நூல் சென்ற ஜனவரி 22, 2012 அன்று
திருச்சியில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது ]


நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர்
பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்
பட்டுள்ளன. உலக அளவில் செப்டம்பெர் 11 (2011)க்குப் பின், முஸ்லிம்கள்
மற்றும் இஸ்லாம் குறித்துப் புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் வேண்டிய
தேவை  பன்மைத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்பட்டது என்றால்,
இந்தியாவைப்
 பொருத்தமட்டில் ஒரு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்நிலை உருவானது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதென்பது ஒரு தொழுகைத் தலம் இடிக்கப்பட்ட
நிகழ்வோடு முடிந்துவிடவில்லை. அதை ஒட்டி இங்குள்ள 15 கோடி முஸ்லிம்கள்
மீதும் ஒரு வெறுப்பு அரசியலும் கட்டமைக்கப்பட்டது. உலகில் மிக அதிக
அளவில் முஸ்லிம்கள் வசிப்பதில் இரண்டாவது நிலையிலுள்ள நாடு நம்முடையது.
இஸ்லாம் குறித்து
 மக்கள் மத்தியிலிருந்த புரியாமைகளைப் பயன்படுத்தி, இது வாளோடு வந்த மதம்
எனவும், முஸ்லிம்கள் எல்லோரும் ஜிகாதிகள் எனவும், இங்குள்ள மதரசாக்கள்
அனைத்தும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் களங்களாக உள்ளன எனவும் பெரிய
அளவில் இங்கே கருத்துப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில்
இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரு 'சந்தேகத்திற்குரிய சமூகமாக'
 கட்டமைக்கப்பட்டனர். ஊடகங்கள் இக்கட்டமைப்புக்குத் தூபமிட்டன.
திரைப்படங்களில் முஸ்லிம்களைக் கருணை உள்ளவர்களாகவும்'
நட்புக்குரியவர்களாகவும் சித்திரிக்கும் நிலை (எ.டு: 'பாவமன்னிப்பு')
மாறி அவர்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கும்
சூழல் உருவானது, இது முஸ்லிம்களின் மனநிலையில் மிகப் பெரிய பாதிப்புகளை
ஏற்படுத்தின.


செப்டெம்பர் 11க்குப்பின் உலக அளவில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும்
எதிராகப் பல சொல்லாடல்கள் உருவாக்கிப் பரப்பப்பட்ட கதையையும், அதில்
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பங்கையும் நாம் அறிவோம். 'இஸ்லாமியப்
பயங்கரவாதம்', 'பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' 'தீமைகளின் அச்சு'
'இஸ்லாமிய வெறி' முதலியன இவற்றில் சில. சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர்,
"இனி
 கலாச்சாரங்களுக்கு  இடையேதான் யுத்தங்கள்" என்று எழுத ஆரம்பித்தனர்.


முஸ்லிம்கள் எல்லோரும் 'கலாச்சாரத்தின் கைதிகளாகச்' (prisoners of
culture) சித்திரிக்கப்பட்டனர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய
கலாச்சாரத்தையும், அரசியலையும் மாற்றமின்றிச் சுமந்து கொண்டிருப்பவர்கள்,
அதற்குள் முடங்கிப் போனவர்கள், அவர்களுக்கு வரலாறு கிடையாது, அரசியல்
கிடையாது, விவாதங்கள் கிடையாது என்பதான ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டு
முஸ்லிம்கள் எல்லோரையும் ஏதோ
 'அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மக்களாக' (museumized people)
அணுகப்படும் நிலை ஏற்பட்டது.


இது எப்படிச் சரியாகும்? எந்த ஒரு மனிதரின் அரசியல் செயல்பாட்டையும்
(political behaviour) அவரது மதத்தை வைத்து அடையாளப்படுத்துவதும்
விளக்குவதும் சாத்தியமா? இன்றைய அரசியல் என்பது ஏதோ ஒரு பழமையின் எச்ச
சொச்சமாக (cultural residue) இருக்க முடியுமா? இன்றைய அரசியலாகட்டும்,
கலாச்சாரமாகட்டும் அவை பழமையின் எச்சங்களாக இருக்க முடியாது. அவற்றிற்கு
ஒரு சமகால இருப்பு உண்டு. அவை வரலாற்றினூடாக
 மாறி வந்துள்ளன. சமகால நிர்ணயிப்பே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வரலாற்றையும், இன்றைய அரசியலையும் தூக்கிக் கடாசிவிட்டு எல்லாவற்றையும்
கலாச்சாரத்தின் எச்சமாகப் பார்ப்பதைக் காட்டிலும், கலாச்சாரத்தையே நாம்
வரலாறு மற்றும் அரசியல் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்களாக
உள்ளோம். இன்றைய தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவெல்லாம் கலாச்சாரத்தின்
 விளைபொருள்கள் அல்ல. மாறாக அவை முழுக்க முழுக்க சமகால அரசியலால்
கட்டமைக்கப் பட்டவை. அவை கலாச்சாரத்தின் சில கூறுகளைப் பயன்படுத்தலாம்.
ஆனால் அவை இன்றைய அரசியல் திட்டத்தின் கைப்பிள்ளைகளாகவே (servants of
contemporary political project) உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.


இத்தகைய சிந்தனை ஓட்டங்களின் ஊடாகத்தான் இஸ்லாம் குறித்தும் இந்திய
முஸ்லிம்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் எங்களைப்
போன்றோர் சிந்திக்கத் தொடங்கினோம். வரலாற்றில் இஸ்லாமின் பாத்திரம்
குறித்து அறிந்துகொள்ள  எங்களுக்குச் சில அற்புதமான முன்மாதிரிகள்
இருந்தன. இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு மாக்ஸிம்
ரோடின்சன், எம்.என்.ராய்
 முதலான மார்க்சீயர்கள், பெரியார் ஈ.வெ.ரா போன்ற பகுத்தறிவாளர்களின்
ஆக்கங்கள்  பெரிதும் கைகொடுத்தன. இவற்றில் தொடங்கி முஸ்லிம் அறிஞர்
பெருமக்கள் எழுதிய நூற்களையும், இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து
எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்தோம். படித்ததோடு நிற்காமல்,
படித்தவற்றை சிறு நூல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதவும் தொடங்கினோம்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு எழுதப்பட்டதுதான் 'இஸ்லாமியருக்கு
எதிரான கட்டுக்கதைகள்'. தொடர்ந்து உலகளவிலும், இந்தியாவிலும்,
தமிழகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் இத்தகைய எழுத்துக்களின் தேவைகளை
அதிகப்படுத்தின. என்னைப் பொருத்தமட்டில் இலக்கிய ஆய்வுகள், மனித உரிமைப்
பணிகள், எனது ஆசிரியப் பணி ஆகியவற்றின் ஓரங்கமாக இதுவும் ஆகியது.


இவ்வாறு எழுதப்பட்டவற்றுள் தேர்வுசெய்யப்பட்டவையே இக்கட்டுரைகள். இவை
மூன்று தலைப்பிற்குள் அடக்கப்பட்டுள்ளன. 1947க்குப் பிந்திய இந்தியாவில்
முஸ்லிம்களின் நிலை என்னவாக இருந்தது, இது குறித்து அறிக்கை அளிக்க
அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் என்ன கூறின, எத்தகைய பரிந்துரைகளை
முன்வைத்தன, இந்த அடிப்படையில் எத்தகைய கோரிக்கைகளை முஸ்லிம்கள்
முன்வைக்கத் தொடங்கினர்,
 அவற்றின் இன்றைய நிலை என்ன என்பவற்றை முதல் கட்டுரை விளக்குகிறது.
தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
மிக முக்கியமான ஒன்று. அதுபோல மதக் கலவரங்களுக்கு எதிராக ஒரு சட்டம் தேவை
என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
அப்படியான ஒரு சட்ட வரைவு இன்று உருவாக்கப்பட்டுள்ள போதிலும்'
எதிர்பார்த்ததுபோல
 இந்துத்துவ சக்திகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை அது சந்தித்துக்
கொண்டுள்ளது. இத்தகைய சட்டம் ஒன்றின் தேவையை இரண்டாம் கட்டுரை
வலியுறுத்துகிறது.


முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பாசிசக் கதையாடல்களை
ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது இரண்டாம் தொகுதி. மூன்று கட்டுரைகள் இதில்
உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் கட்டுக்கதைகளை கேள்வி
பதில் வடிவில் கட்டுடைக்கிறது முதல் கட்டுரை. இஸ்லாம் வாளோடு வந்த மதம்
என்பது இத்தகைய கட்டுக்கதைகளில் ஒன்று. அதாவது கட்டாய மதமாற்றத்தின்
மூலமாகவே
 இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டனர் என்பது இதன் பொருள்.
பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் மேற்கு பஞ்சாப் (இன்றைய பாகிஸ்தான்),
கிழக்கு வங்கம் (இன்றைய வங்க தேசம்) ஆகிய பகுதிகளில்தான் அதிக
முஸ்லிம்கள் இருந்தனர். அந்த இரு பகுதிகளிலுமே எக்காலத்திலும் வலுவான
முஸ்லிம் ஆட்சி இருந்ததில்லை என்கிற உண்மை ஒன்றே இக்கட்டுக்கதையை
உடைக்கப் போதுமானது.
 இப்படியான தகவல்கள் அப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.


முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதை உருவாக்கத்தில் வரலாற்றுத் திரிபுகள்
பெரும் பங்கு வகிகின்றன. பா.ஜ.க தலமையிலான கூட்டணி அரசு மத்தியில்
ஆண்டபோது பாடநூல்கள் திருத்தப்பட்டு விஷக் கருத்துக்கள் புகுத்தப்பட்டன.
மத்திய கால வரலாற்றுப் பாடநூலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைச்
சுட்டிக் காட்டுகிறது அடுத்த கட்டுரை.


இந்துத்துவத்திர்கும் பாசிசத்திற்குமான தொடர்பு ஒரு நூற்றாண்டுகாலப்
பழமையுடையது. சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் ஆர்.எஸ்.எஸ்.எஸ், இந்து
மகா சபை முதலான இந்துத்துவ அமைப்புகளுக்கும் அன்றைய இட்லர் மற்றும்
முசொலினியின் பாசிசக் கட்சிகளுக்கும் இருந்த நேரடித் தொடர்பை
ஆதாரபூர்வமாக நிறுவுகிறது இப்பகுதியின் இறுதிக் கட்டுரை. ஜெர்மானிய,
இத்தாலிய பாசிசங்களை முன்
 மாதிரிகளாகக் கொண்டே இங்கு இந்துத்துவப் பாசிசம் இன்றுவரை செயல்பட்டு
வருவது குறிப்பிடத் தக்கது. மலேகான் முதலான இடங்களில் குண்டு வெடிப்பு
நடத்தி, இன்று கைதாகிச் சிறையிலுள்ள சாத்வி பிரக்யா தாக்குர் மற்றும்
லெப். கர்னல் பிரசாத் புரொகித். ரமேஷ் உபாத்யாயா முதலான இந்திய
இராணுவத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் ஆகியோருக்கும் 'அபிநவ
பாரத்'
 அமைப்பிற்கும் நாசிக்கிலுள்ள சாவர்கரின் உறவினர் உள்ளிட்ட
இந்துத்துவவாதிகளால் நடத்தப்படுகிற போன்சாலே இராணுவப் பள்ளிகளுக்கும்
உள்ள தொடர்புகள் இன்று நிரூபணமாகியுள்ளன. அபிநவ பாரதம், போன்சாலே
இராணுவப் பள்ளி முதலியன கட்டுரையில் சுட்டிக்காட்டப் படுகிற 'பலில்லா'
முதலான  பாசிச அமைப்புகளின் மாதிரியில் உருவாக்காப் பட்டவை.


இந்துத்துவ சக்திகளை இராணுவத்திற்குள் ஊடுருவச் செய்யும் பணியை இவை
செய்து வருகின்றன. சென்ற பத்தாண்டுகளில் நடைபெற்ற பல தீவிரவாதத்
தாக்குதல்களை இவர்களும் இவர்களோடு தொடர்புடையவர்களுமே செய்து
வந்துள்ளனர். பலர் இப்போது கைதாகி வழக்குகள் நடக்கின்றன, இந்த உண்மை
வெளிப்படுவதற்கு முன்னதாக இவற்றில் பல 'முஸ்லிம் தீவிரவாதிகளால்'
நடத்தப்பட்டவையாகப் பிரச்சாரம்
 செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் இவ்வாறு
கைதும் செய்யப் பட்டனர். இவ்வாறு கைதாகிச் சிறையில் வாடும் அப்பாவி
முஸ்லிம் இளைஞன் ஒருவனைச் சிறையில் சந்திக்க நேர்ந்த சுவாமி அஸீமானந்த்
மனம் திருந்தி தாங்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகள் பற்றி தானாகவே
முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சென்ற ஜூலையில் நார்வே தலைநகரம் ஆஸ்லோவில் ஒரு கட்டிடத்தில் குண்டு
வைத்துத் தகர்த்தும்   அருகில் ஒரு தீவில் கூடியிருந்த இடதுசாரி அணிகள்
மீது துப்பாகியால் சுட்டும்  93 பேர்களைக் கொன்ற கிறிஸ்தவ அடிப்படைவாதி
ஆண்டர்ஸ் பெஹ்ரிக் தனது அறிக்கையில் சுமார் 102 பக்கங்களில் இந்திய
இந்துத்துவவாதிகளைப் புகழ்ந்துள்ளான். மேற்கத்திய பாசிஸ்டுகள் நமது
 இந்துத்துவவாதிகளுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோக இன்று அவர்களுக்கு
நமது இந்துத்துவவாதிகள் முன்மாதிரியாக உள்ளனர்.


மூன்றாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் நாங்கள் இஸ்லாமைப் புரிந்துகொள்ள
மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சாட்சியம் பகர்பவை. முதற் கட்டுரை, "இன இழிவு
நீங்க இஸ்லாமே நன்மருந்து" என முழங்கிய பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இஸ்லாம்
குறித்தும் நபிகள் குறித்தும் பேசியவற்றின் தொகுப்பு.  மதங்களை ஒழிக்கப்
புறப்பட்டுள்ளதாகச் சொல்லும் நீங்கள் இஸ்லத்திற்கு மாறச் சொல்வதன்
 பொருளென்ன, இஸ்லாமே நன்மருந்து என்றால் நீங்கள் ஏன் மதம் மாறவில்லை,
கடவுளை மறுக்கும் நீங்கள் ஹஜ் யாத்திரை, இறுதி இறைத் தூதர் முதலான
கருத்துக்களை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள் முதலான கேள்விகளுக்கு
பெரியார் அளிக்கும் பதில்கள் அழகு.


நூலின் இறுதிக் கட்டுரை நபிகளின் மறைவை ஒட்டிய நிகழ்வுகள் இஸ்லாமிய
ஆளுகையின் உண்மையான பொருள் ஆகியவற்றைத் தொட்டுக்காட்டுகிறது.
இந்நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுபான்மையோர் முன்னுள்ள
கடமைகள் குறித்த பிரக்ஞை ஒருவருக்கு உருவாகுமாயின் அதுவே இந்நூலின்
வெற்றி என நம்புகிறேன்.


--

மன்னிக்கப்படாத பாவம்



---------- Forwarded message ----------
From: mohammed mohammed <mohammedshj@gmail.com>
Date: 2012/2/27
Subject: மன்னிக்கப்படாத பாவம்
To: Tamil Muslims IDS <unitedtamilmuslims@yahoogroups.com>, tamilmuslimbrothers <tamilmuslimbrothers@googlegroups.com>, tamil-muslim@yahoogroups.com, tamilsaral@googlegroups.com, Darul Quran Tamil Bahrain <darulqurantamil@gmail.com>, sahara tamil groups <saharatamil@yahoogroups.com>, TMN Group <tmngroup@hotmail.com>, tmmk_thonderanie@yahoogroups.com, tamil-islam@yahoogroups.com


மன்னிக்கப்படாத பாவம்

 
 
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

1) இணைவைத்தலின் தீமைகள்: -

1.ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்

2.இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்

3.இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது

4.இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், 'நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்' (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65-66)

இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )

இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

"…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை." (அல்குர்ஆன் 5:72 )

இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.

இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் 'சிலைகளை வணங்குவது' என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.


2) ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.

அதாவது ஷிர்க் என்பது,

- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது

- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.

ஷிர்கின் வகைகள்: -

ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -

1.பெரிய ஷிர்க்

2.சிறிய ஷிர்க்

3.மறைமுக ஷிர்க்

பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது

பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது

இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -

இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.

■துஆ (பிரார்த்தனை) செய்தல்

■ருகூவு / சஜ்தா செய்தல்

■அழைத்து உதவி தேடுதல்

■பாதுகாவல் தேடுதல்

■நேர்ச்சை செய்தல்

■தவாபு செய்தல்

■சத்தியம் செய்தல்

■குர்பானி கொடுத்தல்

■ஆதரவு / தவக்குல் வைத்தல்

■அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்

ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு சில உதாரணங்களின் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதாரணம்-1: -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -

1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்

அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.

சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.

துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)

உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)

மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■துஆ ஒரு வணக்கமாகும்.

■அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.

■பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.

■அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்

எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -

ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.

அல்லாஹ் கூறுகிறான்: -

"எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." (அல் குர்ஆன் 4:134)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)

நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)

வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -

■உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,

■இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,

■மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை 'இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே' என்ற தலைப்பில் பார்க்கவும்.

பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)

'உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்' என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)


'எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்' என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.' (அல் குர்ஆன் 18:52)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே

■அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்

■அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.

■கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது

■கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.

■அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.

இன்ஷா அல்லாஹ் வளரும்…


பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2012/2/24
Subject: |TMB| பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!
To:



பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

 

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

இதைப் பற்றி "The Bible, The Quran and Science" என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The quran and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம். 

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21) 

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர். 

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டர் மாரிஸ் புகைல் கூறினார்.

இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டர் மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். "நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை".

"நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

நன்றி: சுவனத்தென்றல்
Engr.Sulthan

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

சூரியன் மேற்கு திசையில் இருந்து உதயம் ஆகதவரை



---------- Forwarded message ----------
From: Tharjuma Daily <tharjumadaily@yahoo.com>
Date: Mon, Feb 27, 2012 at 9:14 PM
Subject: [Tharjuma Daily] ....::: Hadeeth of the Month :::... - Tamil and English (Feb-2012)
To: Google Group <tharjumadaily@googlegroups.com>



 
                                                                                                                                              


--
You received this message because you are subscribed to the Google Groups "Tharjumadaily" group.
To post to this group, send email to tharjumadaily@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tharjumadaily+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tharjumadaily?hl=en.

Fwd: [TMMKGULF] Mobile: காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு எப்படி?



---------- Forwarded message ----------
From: Muhammad shahjahan <md_shahjahan2001@yahoo.com>
Date: 2012/2/27
Subject: [TMMKGULF] Mobile: காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு எப்படி?
To: mohamed shahjahan <md.shahjahan2001@gmail.com>



காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு எப்படி?

 

 

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக் கொண்டிருக்கிறது.

இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு,

1. தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந் கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.


3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.

6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.

7. கைபேசி மிகக்குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம், முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.
 
 
.

__,_._,___


--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Fwd: |TMB| சுய தொழில்கள்-10 ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2012/2/27
Subject: |TMB| சுய தொழில்கள்-10 ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு
To: unitedindianmuslims@yahoogroups.com


pdf attached
ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு



கல் தயாரிப்பில் கலக்கல் வருமானம்! 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை நல்லாம்பாளையத்தில் குட்டியப்பா ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வரும் நடராஜன். அவர் கூறியதாவது: 22 ஆண்டுகள் மில்லில் பணிபுரிந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். ரூ.5 லட்சம் கிடைத்தது. ஹாலோபிளாக் நிறுவனம் நடத்திவரும் உறவினரிடம் பயிற்சி பெற்றேன். கோவை சிறுதொழில் சேவை மையத்தினர் வழிகாட்டினர்.























வீட்டு முன்பு இருந்த சொந்த இடத்திலேயே தொழில் துவங்கினேன். வீட்டில் இருந்த போர்வெல் மூலம் தேவையான தண்ணீர் கிடைத்தது. அதிகளவில் விற்பனையாக கூடிய ஹாலோபிளாக், சாலிட் பிளாக் அச்சுகளை மட்டும் வாங்கி, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கினேன். தொழில் நல்லபடியாக விரிவடைந்த பின்னர் மற்ற அச்சுகளை வாங்கி னேன்.  8 சட்டி ஜல்லி, 4 சட்டி கிரஷர், 1 சட்டி சிமென்ட் கொண்டு தயாரித்தால் தரமான ஹாலோபிளாக், சாலிட்பிளாக் கற்கள் கிடைக்கும். லாரியில் ஏற்றும்போது தவறி விழுந்தாலும் உடையாது. இதனால் கட்டப்படும் கட்டிடம் உறுதியாக இருக்கும்.

ஹாலோபிளாக்குகளின் தரம், தொழிலில் நேர்மை காரணமாக எனது நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுத்து குடும்பத்துடன் இங்கேயே தங்க வைத்துள்ளேன். இதனால், உற்பத்தி தங்கு தடையின்றி நடக்கிறது. தொழிலை கற்றுக்கொள்ள ஒருநாள் போதும். இலவசமாக தொழில் கற்று கொடுத்து சிலரை தொழில் முனைவோராக்கியுள்ளேன். யார் வேண்டுமானாலும் இத்தொழிலை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிக்கும் முறை!

தேவைப்படும் பொருள்கள்: ஜல்லி (கால் இஞ்ச் அளவுள்ளது), கிரஷர் மண்(பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்.) சிமென்ட் (ஓபிசி ரகம்). இதை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். சிமென்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும். மிக்ஸர் மெஷினை இயக்கி, அதில் சிமென்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும்.  மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.  

அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் மெஷினுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ராலிக் மெஷின் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும். 

ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும். ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.

கட்டமைப்பு!

15 சென்ட் இடம் (அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம்), போர்வெல் தண்ணீர் வசதி (ரூ.1 லட்சம்), மிக்ஸர் மெஷின் (ரூ.58 ஆயிரம்), ஹைட்ராலிக் பிரசிங் மெஷின்(ரூ.1.45 லட்சம்), டிராலி 2 (ரூ.12 ஆயிரம்), இரும்பு சட்டி 15 (ரூ.1050), 3 அடி அகலம், 45 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் ஷீட் 5 (ரூ.800), 4, 6, 8 ஆகிய இஞ்ச் ஹாலோபிளாக், சாலிட் பிளாக் தயாரிக்க 6 அச்சுகள் (தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.1.08 லட்சம்). மொத்த முதலீட்டு செலவு ரூ.4.75 லட்சம்.

எங்கு வாங்கலாம்?

ஜல்லி கற்கள், கிரஷர் மண், சிமென்ட் ஆகியவை எளிதில் கிடைக்கும். குறைந்த தூரத்துக்குள் உள்ள இடங்களில் இருந்து வாங்கினால் லாரி போக்குவரத்து செலவு குறையும்.

உற்பத்தி செலவு

இட வாடகை ரூ.5 ஆயிரம்,  சிறு தொழில் சான்றிதழ் இருந்தால் மின் கட்டணம் குறைவு; அதன்படி மாதத்திற்கு ரூ.500, (வணிக கட்டணப்படி என்றால் ரூ.1000). 4  ஊழியர்களுக்கு கூலி 25 நாளுக்கு ரூ.40 ஆயிரம். 4 பேர் மூலம் மாதம் 20 ஆயிரம் கற்கள் உற்பத்தி செய்யலாம். இதில் 4 இஞ்ச் கற்கள் (13 கிலோ எடை) 10 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க உற்பத்தி செலவு தலா ரூ.14 வீதம் ரூ.1.4 லட்சம், 6 இஞ்ச் கற்கள் (19 கிலோ எடை) 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க தலா ரூ.19 வீதம் ரூ.95 ஆயிரம், 8 இஞ்ச் கற்கள் (25 கிலோ எடை) தலா ரூ.23 வீதம் 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க ரூ.1.15 லட்சம் செலவாகும். மொத்த உற்பத்தி செலவு மாதத்துக்கு ரூ.3.91 லட்சம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை நிலவரத்துக்கு ஏற்ப உற்பத்தி செலவு கூடும் அல்லது குறையும். ஓட்டையில்லாமல் முழு கட்டியாக உள்ளவை சாலிட்பிளாக் கற்கள். ஹாலோபிளாக் கற்களை விட எடை அதிகமானவை. அதை தயாரிக்க கூடுதலாக கல் ஒன்றுக்கு ரூ.5 வரை செலவாகும்.

வருவாய்

4 இஞ்ச் ஹாலோபிளாக் கல் (13 கிலோ கொண்டது) குறைந்தபட்சம் ரூ.18க்கும், 6 இஞ்ச் கல் (19 கிலோ) ரூ.23க்கும், 8 இஞ்ச் கல் (25 கிலோ) ரூ.27க்கும் விற்கப்படுகிறது. வருவாய் ரூ.4.3 லட்சம். லாபம் ரூ.39 ஆயிரம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை ஏற்றத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். சிமென்ட் காலி சாக்குகள் மூலம் வருவாய் தலா ரூ.2 வீதம் 325க்கு ரூ.650. மாதம் சராசரியாக ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

கிராக்கி அதிகம்!

ஹாலோ பிளாக் மூலம் குறைந்த செலவில் வெளிப்புற டாய்லெட், காம்பவுண்ட் சுவர், குறைந்த செலவிலான வீடுகள், ஷெட் ஆகியவற்றை கட்டலாம். சாலிட் பிளாக் கற்கள் மூலம், தரமான, உறுதியான வீடுகள் கட்டலாம். விலை குறைவு, கட்டுமானப்பணி  எளிது என்பதால், ஹாலோபிளாக்குக்கு கிராக்கி உள்ளது. சுவர் தேவை இல்லை என்று இடித்தால் ஹாலோபிளாக்கை திரும்ப பயன்படுத்த முடிகிறது. இதனால் ஹாலோபிளாக்குக்கு நல்ல கிராக்கி உள்ளது.

Concrete Block
Concrete Block
Hollow Block Making Machine (Archer-400)
ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு பற்றி இவர் சொல்வதையும் படியுங்கள்...
ஹாலோ பிளாக்



வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால் வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள். இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த ஹாலோ பிளாக்'. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக். 

ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது. 

ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும் ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான். 

தயாரிக்கும் முறை கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி! அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும். 

ஃபைனான்ஸ் 

சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும். 

மூலதனம் 

இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். 

மானியம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

ஆட்கள்

முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.

இயந்திரம் 

இந்த ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

வார்ப்பு அளவுகள் 

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச், 8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம் 

சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல் தயாரிக்க முடியாது. காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால், ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது. 

ரிஸ்க் 

தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான். குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம் காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள உமையாம்பிகை ஹாலோ பிளாக் தயாரிப்பு யூனிட்' உரிமையாளரான பார்வதி தன்னுடைய தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

கட்டட கான்ட்ராக்டர்களே இடம் தேடிவந்து ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப சப்ளை செய்வோம். சில நேரங்களில் அவர்களே வாங்கிச் செல்வதும் உண்டு. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்துவிடுவதும் இதன் கூடுதல் சிறப்பு. அச்சு வார்ப்புகளுக்கு ஏற்பதான் கற்கள் வரும். கவனமாக எடுத்துச் சென்று வெயிலில் காய வைக்க வேண்டியதுதான் நமது முக்கியமான வேலையே. விற்பனையைத் தனியாக கவனித்துக் கொள்கிறோம். 

சாதாரணமாக 4,000 கற்கள் தயாரிக்க தேவைப்படும் தொகை: 

அவல் ஜல்லி ஒரு லோடு (3 யூனிட்) - 6,500 ரூபாய் 

50 மூட்டை சிமென்ட் - (மூட்டைக்கு 280 வீதம்) - 14,000 ரூபாய். 

கிரஷர் மண் ஒரு லோடு- (3 யூனிட்) - 3,500 ரூபாய். 

மொத்தம் 24,000 ரூபாய்வரை செலவாகிறது. 

ஒரு ஹாலோ பிளாக் 9.50 முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இயந்திரம் மூலம் மட்டுமின்றி சாதாரணமாக கைகளாலும் தயாரிக்க முடியும். இருந்தாலும் இயந்திரத்தை உபயோகித்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், நேரம் குறையும், நமக்கும் நல்ல லாபம்தான். 80,000 ரூபாய் விலையில் இந்த இயந்திரம் கிடைக்கிறது. 

இந்த தொழிலுக்கே உள்ள சிரமம் என்னவென்றால் கற்கள் மேடைக்கு வந்தவுடன் அதனை இழுப்பதுதான். கொஞ்சம் கடினமாக இருக்கும் அதை இழுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு பேராவது தேவைப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இதை குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம், அதனால் அதிக லாபம் பார்க்கிறோம். சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்த்தால் இவ்வளவு லாபம் பார்க்க முடியாது என்றார் பார்வதி. 
இணைய தளங்களிலிருந்து
Engr.Sulthan


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை! - பழ. கருப்பையா - தினமணி - 22/02/2012 கட்டுரை.



---------- Forwarded message ----------
From: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
Date: 2012/2/25
Subject: அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை! - பழ. கருப்பையா - தினமணி - 22/02/2012 கட்டுரை.
To:



From: T.K.T.Sheik Abdullah <tktsheik@gmail.com>


In the name of Allah...

Dear brothers/sisters,

Assalamu Alaikum Wr Wbr

Please see the attached article from Dinamani dt. 22/02/2012 about Prophet (pbuh), 'அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!' - பழ. கருப்பையா. Writer & ADMK MLA.

Please write your opinion/comments to Dinamani online & print edition.

Vassalam.

TKT.Sheik Abdullah.
Malaysia.




--

--
You received this message because you are subscribed to the Google
Groups "imantimes" group.
To post to this group, send email to imantimes@googlegroups.com
To unsubscribe from this group, send email to
imantimes+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/imantimes?hl=en?hl=en
 
Pl. VISIT www.imandubai.org

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2012/2/23
Subject: [saharatamil] இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்
To:


 

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். 

பெருமளவில் இஸ்லாமை தழுவும் 

பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link

தகவல்:http://naharvu.blogspot.in

Engr.Sulthan

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___