ஷார்ஜாவில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்!



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 Date: Thu, 23 Dec 2010 15:06:23 +0400
Subject: ஷார்ஜாவில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்!
From: iac.sharjah@gmail.com
To: yusufbinali@gmail.com




---------- Forwarded message ----------
From: Abu Ajmal ayfa5346@gmail.com


ஷார்ஜாவில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நாம் முன்பு அறிவித்தது போல் கடந்த 10-12-2010 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜாவில் சமூக நீதி அறக்கட்டளையின் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. இதில் பெண்களுக்கு என்று தனி இடம் வசதி செய்யப்பட்டு இருந்தது. இதில் சிறப்பு சொற்பொழிவாற்ற சகோதரர் CMN.சலீம் அவர்கள் தமிழகத்தில் இருந்து வருகை தந்து, முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்தும்,எதிர்காலத்தில் நாம் கல்விக்காக செய்யவேண்டிய பணிகள் குறித்தும், எந்தெந்த துறைகளில் முஸ்லிம்கள் தங்களின் கல்வியை இனி கற்கவேண்டும் என்றும் மிக ஆணித்தரமாக தனது உரையை ஆற்றினார்கள்.

வெறும் உலகக்கல்வியை மட்டும் கற்ற பட்டதாரிகளாக முஸ்லிம்கள் வெளியாவதில் இந்த சமூகத்திற்கு எந்தப்பயனும் இல்லை என்றும், உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியும் அதனூடே கற்று வெளிவரும் முஸ்லிம்களினால் மட்டுமே, இறைவனுக்கு பயந்தவர்களாகவும், முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர்களாகவும் இருக்க முடியும் என்றும், மிக அழகாக உலக மற்றும் மார்க்க கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்கள். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தக்க பதிலை வழங்கியதுடன் மேற்கல்வி குறித்த தக்க ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் பெண்களும் வருகை தந்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல!என்று நிருபிக்கும் வகையில் அவர்களும் கேள்வியை கேட்டு தக்க ஆலோசனைகளையும் பெற்றனர்.

மேலும் சவுதியில் இருந்தும் இதற்காகவே ஒரு குடும்பம் வருகைதந்து கலந்துகொண்டது மட்டுமின்றி, புஜைரா, துபாய் போன்ற எமிரேட்ஸில் இருந்தும் வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இயக்கபாகுபாடு இன்றி அணைத்து சகோதர்களும் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பும் வழங்கியதை எண்ணித்தான் முஜீப்.காம் இணையம் பெருமைபடுகின்றது!. இதைத்தானே வலியுறுத்தி நாமும் குரல் கொடுக்கின்றோம். கல்வி போன்ற பொதுவான ஒரு தளத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமை சேர்க்க அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக!. 

மேலும் இக்கல்வி கருத்தரங்கிற்கு முழு ஒத்துழைப்பையும் தக்க ஆலோசனைகளையும் வழங்கிய சகோதர்கள் சென்னை சிராஜ் மற்றும் திருச்சி யூசுப் மற்றும் அனைத்து நண்பர்களுடனும் இணைந்து செயலாற்றிய முஜீப்.காம் தன் நன்றியையும் துவாவையும் உங்களுக்கு சமர்பிக்கின்றது.

குறிப்பு: இன்ஷாஅல்லாஹ் வரும் 16 மற்றும் 17-12-2010 (வியாழன் மற்றும் வெள்ளி) அன்று சகோதரர் CMN சலீம் அவர்கள் பங்குபெறும் கல்வி கருத்தரங்கு குவைத்தில் நடைபெற உள்ளது. இதை குவைத் நண்பர்கள் வெற்றியுடன் நடத்த முஜீப்.காம் சார்பில்  வாழ்த்துக்கள்!.
 
Recomended Edcuation line studies are follows:
1. Law  (Islamic Studies, international trade law  etc...)
    Especialy  Exim Law  =  Documentation preparation   Which can results to claim hourly basis)
2. Para law (Diploma in law studies)
3..Journalisam
4. Islamic Banking
5. Humanity Studies  (Indian Institute of Technology)
6. Internation Studies   (Available with Madras University and Queen Maris college only)
7. Teaching Sector
8.Agriculture
9.Medicine     Not alopathy      Indian Medicine, Unani, Sidda, Ayudvedic
10.Petrolium  Engineering
11Mining     (Especially  lot of jobs to be raising in Saudi on coming years)
12Solor Energy
13. Nuclear Energy
 
He strictly recomended to avoid the computer science that too ladies must avoid this line

                                                                      நிகழ்ச்சியின்  புகைப்படங்கள்!

போலிஸ் துறையில் கல்வி கற்பவருக்கு ஆலோசனை.



--
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment. 
 Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)


Trichy - Yusuf.  Dubai
+971 50 6374929



--
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்களுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Islamic Awakening Centre.( IAC ) Sharjah.
email : IAC.sharjah@gmail.com
President: S.Sirajudeen +971-50-5867219
Secretary: Akbar  +971-50-6975927
IT            : Yusuf +971-50-6374929 / +919443867887
Indian Rep.AbuAaisha +91-9629133380
May Almighty ALLAH  (SWT) give good health & guide all of us to the Right Path and give us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all other things, which r in contradiction to the Holy Qur'an and Sunnah,
0 Responses

கருத்துரையிடுக