கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

 

Date: Tue, 28 Dec 2010 08:44:26 +0400
Subject: கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!
From: iac.sharjah@gmail.com
To: yusufbinali@gmail.com
CC: ssathikbb@gmail.com



---------- Forwarded message ----------
From: sahubar sathik <ssathikbb@gmail.com>


Assalamualaikkum

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?

யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?

நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?

அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?

அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி

வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.


பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?

பிஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...

22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?

(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி

பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?

பிஸ்மில்லாஹி

24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ

பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.

25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

27. பாங்கின் போது கூறப்படுபவை?

ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு

கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.

28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?

அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?

லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?

ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

34. நோன்பு திறந்தபின் ...

தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.

பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.

35. உணவுக்கு முன்னர் துஆ?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.

பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.

36. உணவை உண்டு முடித்தபின் துஆ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.

பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ

அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?

இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

39. கோபம் நீங்கதுஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,

வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.


பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?

வ ஃபீக பாரகல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?

நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?

லாயிலாஹ இல்லல்லாஹூ

பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.

45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.

பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.

----------------




اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!"






--
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்களுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Islamic Awakening Centre.( IAC ) Sharjah.
email : IAC.sharjah@gmail.com
President: S.Sirajudeen +971-50-5867219
Secretary: Akbar  +971-50-6975927
IT            : Yusuf +971-50-6374929 / +919443867887
Indian Rep.AbuAaisha +91-9629133380
May Almighty ALLAH  (SWT) give good health & guide all of us to the Right Path and give us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all other things, which r in contradiction to the Holy Qur'an and Sunnah,

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!


 

Date: Mon, 27 Dec 2010 20:09:16 +0400
Subject: வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!
From: iac.sharjah@gmail.com
To: yusufbinali@gmail.com








---------- Forwarded message ----------
From: கலீல் பாகவீ <abkaleel@gmail.com>


 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

 

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.
 
ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.
  
சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்;  குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.                   

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

 இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!
 
மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்!  சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் "செய்" என்றும் மற்றதில் "செய்யாதே" என்றும் மற்றொன்றில்  "ஒன்றும் இருக்காது"! இவற்றில் "செய்"என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். "செய்யாதே" என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

"ஒன்றும் இல்லாத" சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்" (அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, "அல்லாஹ்வின்   மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்."

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்"

இஸ்திகாரா  தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

     عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة  ثم  ليقل : اللهم إني أستخيرك  بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك  من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به.   (أخرجه البخاري. )

"அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்"

இதன் பொருள்:

"யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!" (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம்,  மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம்.  உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக  பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான  முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய "அனைத்து விஷயங்களிலும்" என்ற சொல் இதற்கு  ஆதாரமாக  இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா  தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன்  உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்!  உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது.  இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான்.  யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்" (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்!  பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள்.  விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

"அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்"  (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான்.  ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்;  குறித்த அப்பெண்னை மணப்பான்;  காலப்போக்கில்  அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று  விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார்.    அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன;  அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300  பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம்  சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம்.  குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை"  (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

"உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்"  (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால்  இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த  வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ  வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது  மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி 

வெற்றியின் இரகசியம்! தமிழில்:மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி,
 


 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 
--
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ


__,_._,___



--
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment. 
 Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)


Trichy - Yusuf.  Dubai
+971 50 6374929



--
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்களுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Islamic Awakening Centre.( IAC ) Sharjah.
email : IAC.sharjah@gmail.com
President: S.Sirajudeen +971-50-5867219
Secretary: Akbar  +971-50-6975927
IT            : Yusuf +971-50-6374929 / +919443867887
Indian Rep.AbuAaisha +91-9629133380
May Almighty ALLAH  (SWT) give good health & guide all of us to the Right Path and give us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all other things, which r in contradiction to the Holy Qur'an and Sunnah,

FW: பொய் (LIE)

 

Date: Mon, 27 Dec 2010 20:12:58 +0400
Subject: பொய் (LIE)
From: iac.sharjah@gmail.com
To: yusufbinali@gmail.com



---------- Forwarded message ----------
From: Abu Ajmal <ayfa5346@gmail.com>






 



பொய் in நபிமொழி

 

பொய் 

 
அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஅத்தா  

  

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் உமைஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
 
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் 'எனக்கு விருப்பமில்லை' என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், 'நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!' என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்) 

  

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ

நபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: 'நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.' (அபூதாவூத்) 

  

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, 'இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், 'நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், 'நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், 'நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள். (அபூதாவூத்) 

  

அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் رَضِيَ اللَّهُ عَنْهُ

நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: 'மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.' (திர்மிதி) 

  

அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 'தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.' (அபூதாவூத்) 

  

அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது رَضِيَ اللَّهُ ஆதாரம்: திர்மிதீ

'மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 

  அறிவிப்பவர்: இப்னு உமர்رَضِيَ اللَّهُ ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ"


நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்."
 

 
Jazakkallah khair,
Syed Ibrahim. A
Doha-Qatar
+974 3316 5728




















 




















.

__,_._,___



--
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment. 
 Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)


Trichy - Yusuf.  Dubai
+971 50 6374929



--
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்களுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Islamic Awakening Centre.( IAC ) Sharjah.
email : IAC.sharjah@gmail.com
President: S.Sirajudeen +971-50-5867219
Secretary: Akbar  +971-50-6975927
IT            : Yusuf +971-50-6374929 / +919443867887
Indian Rep.AbuAaisha +91-9629133380
May Almighty ALLAH  (SWT) give good health & guide all of us to the Right Path and give us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all other things, which r in contradiction to the Holy Qur'an and Sunnah,

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!!






---------- Forwarded message ----------
From: கலீல் பாகவீ <abkaleel@gmail.com>
Date: 2010/12/26
Subject: [K-Tic] படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!!
To: k-tic-group@yahoogroups.com


 

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்
 
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
 
சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும்.
 
அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.
 
மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!
 
மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம்.
 
தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.
 
எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?
சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது!
 
படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.
 
"ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)" (அல்குர்ஆன் 88: 17-20) 
 
பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்!
கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது! கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது.
 
இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது.
 
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்
 
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
 
மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.
 
இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம்.
 
இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச் சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன?
 
கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான்.
 
அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.
 
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
 
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)
 
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)
 
இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன.

- Aalima Masuda Meguam

--
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___



--
Shajahan.S
Hash10 telecom pvt ltd,
shajahanhash10@gmail.com,
Cell No : 9790134301.

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!


உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)


உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)



முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)


எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!


நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)

பராக் ஒபாமா - புதைந்து கிடக்கும் மர்மங்கள்

பராக் ஒபாமா - புதைந்து கிடக்கும் மர்மங்கள்


பராக் ஹூஸைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961) 2008 ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராவார்.
தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


Obama Praises Islam as 'Great Religion' : "The contribution of Muslims to the United States are too long to catalog because Muslims are so interwoven into the fabric of our communities and our country,"

ஒரு கட்டத்தில் இவர் இஸ்லாம் ஒரு மாபெரும் மார்க்கம். அமெரிக்காவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு மிகவும் அபரிமிதமானது. அமெரிக்க சமூகத்தில் முஸ்லிம்கள் பின்னிப் பிணைந்தவர்கள் என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புகழ்ந்து தள்ளினார்.

வந்ததே வினை! கென்யா சமூகத்தைச் சார்ந்த இவரது தந்தை இஸ்லாமிய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதால் ஒபாமாவும் முஸ்லிம்தான், ஒரு முஸ்லிம் அமெரிக்காவை எவ்வாறு ஆளமுடியும்? ஓபாமாவின் பெயரிலேயே ஹூஸைன் என்ற முஸ்லிம் பெயர் இல்லையா என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. உடனே யூதர்கள் பிடியிலுள்ள மீடியாக்கள் ஒபாமாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததோ என்று எண்ணி விடாதீர்கள். ஒபாமா ஆட்சி கட்டிலில் அமரும் முன்னர் அவரது பெயரை செய்தி ஊடகங்களில் முழுவீச்சில் பிரபலமடையச் செய்யும் ஒரு ஜியோனிஸத் தந்திரமே அது.

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே பல சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிகளின் முடிவுகளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான். மேலும், மறுமையில் எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள். (13:42)





Click here to download this video


காரணம் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவோ, மெக்கெய்னோ, யார் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவை ஆளவிருப்பது illuminati என்று அழைக்கபடுகிற லூசிஃபரை வணங்கும் ஷைத்தானிய கூட்டத்தைச் சார்தவர்தானே! என்ற நிலைதான் இருந்தது. மெக்கெய்னை பற்றி தெரியும், என்ன ஒபாமாவுமா அப்படி என்று அச்சரியப்படுகிறீர்களா? இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஒபாமாவும் ஜார்ஜ் புஷ்ஸூம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே!. இந்த இரகசியத்தை கீழுள்ள வீடியோ பதிவு மூலம் அறிந்து கொள்ளுங்கள்.





Click here to download this video


ஆம் கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஸூடைய குடியரசு கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான சிந்தனையும், கொள்கையும் உடையவர் என்ற மாயையை இல்லுமினாட்டிகள் ஏற்படுத்தினர். அதன் பின்னனியில் சில சூழ்ச்சிகள் இருந்தன.

1) இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிம்களின் மீது ஜார்ஜ் புஷ் அடுத்தடுத்து நடத்திய கொலை வெறித் தாக்குதல்களால் இஸ்லாமிய சமூகம் மற்றும் அரபுநாடுகள் உட்பட நடுநிலையான பெருங்கொண்ட கிருஸ்தவ மக்களும், பெரும்பாலான அமெரிக்கர்களும் ஜார்ஜ் புஷ்ஸின் மீது பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சற்று அமைதி படுத்துவதற்கும்,

2) ஈராக் மற்றும் ஆப்கானில் முஸ்லிம்கள் தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவத்தின் மீது நடத்திய சில தற்காப்பு நடவடிக்கையில் அமெரிக்கா பல திறமைமிக்க இராணுவ வீரர்களை இழந்தது. அவர்களின் குடும்பத்தினரோடு, அமெரிக்காவின் அமைதியை விரும்பும் பெரும்பாலான மக்கள் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிராக வீதியில் இறங்கினர். ஜார்ஜ் புஷ்ஸை விடுங்கள் இதோ ஒபாமா என்ற சமாதானப் புறா வந்துவிட்டார் என்று அறிவித்து அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடிக்கச் செய்யவும்,

3) ஜார்ஜ் புஷ்ஸின் தவரான பொருளாதாரக் கொள்கையினால் அதளபாதாளத்திற்கு சென்ற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை பற்றிய உண்மை நிலையை உலகம் அறிவதைவிட்டும் திசைதிருப்பவும் ஒரு பிரச்சாரம் தேவைப்பட்டது. அதை கனகச்சிதமாக செய்து முடித்தனர் மிரோவிஞ்சியன் இலுமினாட்டிகள்.

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான் ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது. (16:26)

இதில் வேடிக்கை என்ன வென்றால் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான கருத்துள்ளவர் ஒபாமா என்ற பிரச்சாரத்தால் ஒரளவு ஒபாமாவின் புகழ் உயரத்துவங்கினாலும், இவர் ஒரு முஸ்லிமோ என்ற சந்தேகம் அமெரிக்கர்களில் பலபேருக்கும் இருந்தது. அதன் உச்ச கட்டமாக செப்டம்பர் 11 தாக்குதல்களில் ஒபாமாவுக்கும் தொடர்பு உண்டு என்றும், ஒபாமாதான் அந்தி கிருஸ்து என்றும் பிரச்சாரம் செய்தனர்.








Click here to download this video


இந்த பிரச்சாரங்களை ஒபாமா எப்படி முறியடித்தார் தெரியுமா? தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கையில் பைபிளை தூக்கிபிடித்துக் கொண்டு தான் ஒரு கிருஸ்தவன்தான் என்றும் இதை தனது வேதாமான பைபிளின் மீதும், அமரிக்காவின் கொடியின் மீதும் சத்தியம் செய்து கூறிகிறேன் என்று கதறினார்.

"Let's make clear what the facts are: I am a Christian. I have been sworn in with a Bible. I pledge allegiance [to the American flag] and lead the pledge of allegiance sometimes in the United States Senate when I'm presiding." : Barak Obama.

அதிபரான கையுடன் மறக்காமல் ஆப்கான் முஸ்லிம்களை கொல்வதற்காக 30,000 இராணுவ வீரர்களை கூடுதலாக அனுப்பி வைத்தார். இதன் மூலம் (சமாதானப் புறாவாது மண்ணாங்கட்டியாவது) முஸ்லிம்களைக் கொல்வதில் புஷ்ஸூக்கு நிகராக தான் சளைத்தவனல்ல என்று நிரூபித்தார். ஜார்ஜ் புஷ் இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்று சொல்லிவிட்டுதான் ஈராக் மற்றும் ஆப்கான் முஸ்லிம்கள் மீது திரள்குண்டுகளை கொத்துகொத்தாக கொட்டினார் என்பதை கவனத்தில் கொள்க.

கடந்த அக்டோபர் 2009 ல் ஒபாமாவின் சர்வதேச இராஜிய உறவுகளுக்காவும், மக்களிடையே அவர் ஏற்படுத்திய பரஸ்பர உறவுகளைப் பாராட்டியும் (?) அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.









மக்களே! அமெரிக்காவை யார் ஆண்டால் என்ன? ஜார்ஜ் புஷ், கிளிண்டன், ஒபாமா, ஜோ பைடன், மென்கெய்ன் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான், அனைவரும் லூசிஃபரை வணங்கும் ஷைத்தானியக் கூட்டம்தான் என்பது உண்மையிலும் உண்மை.
ஓபாமா எப்படிபட்டவர்? இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இனி என்னவெல்லாம் அவர் செய்ய இருக்கிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும், பொறுத்திருந்து பார்ப்போம்.



உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து இறை வசனங்களைப் பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். (3:137)

''பூமியில் நீங்கள் சுற்றி வந்து, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (6:11)

இஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்.


அவதார் - 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பேரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக்,ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குனரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட படமே இந்த அவதார்.
THE TERMINATOR - 1984 , ALIENS -1986 , TERMINATOR 2 : JUDGEMENT DAY -1991, TITANIC -1997 போன்ற ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து ஜேம்ஸ் கமரூனின் இந்த அவதார் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஹாலிவுட் வாயிலாக இஸ்லாம் பெரிய அளவில் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் ஒற்றுமை இணைய வாசகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பிரம்மாண்ட தொழில்நுட்பம், பிரமிக்கவைக்கும் காட்சிகள் என்றுதான் அனைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவ்வரிசையில் மட்டும் இந்த அவதார் திரைப்படம் இருந்திருந்தால் நாமும் சும்மா இருந்திருப்போம். ஆனால் இப்படத்தின் மூலம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல 3D அனிமேஷனின் பிரமிப்பிற்கிடையே இஸ்லாத்தின் போதனைகளை திரித்தும், மூடநம்பிக்கைகளை விதைத்தும் இருப்பதால் இந்த அவதார் திரைப்படத்தின் உண்மை நிலையை விளக்குவதற்கு நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் வரலாற்றில் பெரும் வெற்றிப்படமாக கருதப்படும் இந்த அவதார் திரைப்படத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இப்படத்தில் இஸ்லாமிய கோட்பாடு எங்கே தாக்கப்பட்டுள்ளது என்கிறீர்களா? ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள். முதலில் அவதார் திரைப்படம் மூலம் விதைக்கப்பட்ட மூடநம்பிக்கைகளில் சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு பின்னர் அவதார் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இஸ்லாமிய கோட்பாட்டில் எவ்வாறெல்லாம் மோதுகிறது என்பதை காண்போம்.



மூடநம்பிக்கை 1 - பண்டோரா கிரகம் : சூரியனைச் சுற்றிவரும் பல்லாயிரக்கணக்கான முரண்கோள்களுள் (Asteroids) பண்டோரா என்பதுவும் ஒன்று. முரண்கோள்கள் என்பது சூரியக்குடும்பத்திலுள்ள பூமி, புதன், செவ்வாய், வியாழன் போன்றதோர் துணைக்கோள் அல்ல. இந்நிலையில் பண்டோரா என்ற இந்த முரண்கோளை பெரும் சுவர்க்க பூலோகமாக சித்தரித்து, அதில் கண்ணைக் கவரும் அருவிகள், மரம் செடி கொடிகள் மற்றும் மிருகங்கள் வாழ்வதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஓர் உயிரினம் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான நிலம் நீர் காற்று போன்றவைகள் இல்லாத ஒரு முரண்கோளில் இத்தனை விஷயங்களும் இருப்பதாக கற்பனை செய்திருப்பது மூடநம்பிக்கை மட்டுமல்லாது அறிவியலுக்கு எதிரான கருத்துமாகும்.

மூடநம்பிக்கை 2 - பண்டோரா கிரகத்தில் நவி மனிதர்கள் : இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால் வெளிகளில், நாம் வாழுகின்ற சூரிய குடும்பத்திலுள்ள இப்பூமிதான் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்பது அறிவியல் கூறும் உண்மை. படைத்த இறைவனும் தன் திருமறையில் பூமியைத்தான் நாம் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கூறுகிறான் (பார்க்க திருக்குர்ஆன் 67:15, 55:10, 40:64). இந்நிலையில் தோற்றத்தில் மனிதர்களுக்கு ஒப்பானதாகவும், பேச்சாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட நவி என்கிற கற்பனை படைப்பு பண்டோரா கிரகத்தில் வாழ்கிறது என்ற கருத்து இப்படத்தின் வாயிலாக பதியவைக்கப்படுகிறது. இது (Aliens) வேற்றுக் கிரகமனிதர்கள் என்ற அமெரிக்க பெண்டகனின் பழைய மூடகற்பனையை அவதார் படத்தின்மூலம் தூசிதட்டப்பட்டு சற்று 3D மயமாக்கப்பட்டுள்ளது. எனவே பண்டோரா கிரகத்தில் நவி மனிதர்கள் இருப்பதாக நம்புவது மூடத்தனத்தின் உச்சகட்டம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை 3 - நவிகளின் DNA வை மனிதனுக்கு செலுத்துதல் : இப்படத்தின் கதாநாயகனை பண்டோரா என்ற ஜேம்ஸ் கமரூனின் கற்பனை உலகத்திற்கு கற்பனையில் அனுப்புவதற்காக அவனது DNA வை நவிகளின் DNA யுடன் கலப்பினம் செய்து ஒரு புதிய நவி-கதாநாயகனை உருவாக்குவதுபோல் காட்டப்படுகிறது. DNA தொழில்நுட்பம் மற்றும் Cloning எனப்படும் படியெடுத்தல் போன்ற உயிரியல் கோட்பாடுகளை நமதூர் பள்ளிமாணவர்கள்கூட தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினைமுட்டையும் சேர்ந்தால்தான் கரு உருவாகும் என்ற அறிவியல் கூறும் கருவியல் தத்துவங்கள் இந்த 21 ம் நூற்றாண்டின் LKG பாடம் எனலாம். ஆணில் துணையில்லாமல் Cloning முறையில் உருவாக்கப்பட்ட Dolly என்ற செம்மறியாடு பல குறைகளோடும், நோய்களோடும் இறந்ததின் மூலம் விஞ்ஞானிகள் இதைத் தெளிவாக ஒப்புக் கொண்டனர்.

ஆக DNA என்னும் ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்தை கலப்பினம் செய்து மாற்று செல்லை உருவாக்க வேண்டுமென்றால் DNA வின் அந்த இரு மூலக்கூறுகளும் ஒரே இனத்தை சார்ந்தவைகளாக இருத்தல் வேண்டும். அதாவது யானையின் DNA வையும் எறும்பின் DNA வையும் கலப்பினம் செய்து (எறும்பானை?) வேறுஒரு உயிரணுவை உற்பத்தியாக்குவது சாத்தியமற்றது. இந்த பேருண்மை 12 வருட உழைப்பில், 300 மில்லியன் டாலர்களை கொட்டிக்குவிக்கக் காரணமாக இருந்த மகாராஜன் ஜேம்ஸ் காமரூனுக்கு தெரியாமல் போய்விட்டது ஏனோ? அல்லது குரங்கைப்போல வால் முளைத்த நவி என்ற கற்பனை பாத்திரத்தையும் மனிதன் என்கிறாரா? – அவருக்கே வெளிச்சம்.






Click here to download this video


மூடநம்பிக்கை 4 - பண்டோரா கிரகத்தினுள் மனிதன் தன் சுய உருவத்தில் புகுதல் : நவிகளின் உருவம் பெற்றால்தான் பண்டோரா கிரகத்தைப் பற்றியும், அதிலுள்ள நவிகளைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள இயலும் என்று கதை சென்று கொண்டிருக்கையில், பண்டோரா கிரகத்தை அழிக்கும் வில்லன்களாக காட்டப்படும் அமெரிக்க இராணுவத்தினரோ தங்கள் பூத உடலோடு அங்கு செல்வதைப்போல படமாக்கியுள்ளனர்.(அழிவுசக்தியான அமெரிக்க இராணுவத்திற்கு எதையும் அழிக்க மட்டுமே தெரியும் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்களோ என்னவோ?) ஒரு கட்டத்தில் தனது உயிர்வாயுக் கவசத்தை இழந்த வில்லன் நவிகளோடு பேசுவது போன்றும் காட்டப்படுகிறது. நாம் வாழுகின்ற பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு செல்வதற்கே ஆக்ஸிஜன் அதுஇதுவென்று கடும் தயாரிப்புகளோடு செல்லும் நிலையிலுள்ள மனிதன் பண்டோரா என்ற முரண்கோளுக்கு படைபலத்துடன் எந்த தயாரிப்புகளும் இல்லாமல் படுபந்தாவாக செல்லமுடிகிறதென்றால் இதைவிட மூடநம்பிக்கை வேறேதும் உண்டோ?. இதற்கு ஒருபடி மேலாக திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் நவிப்பெண் (கதாநாயகி) தன் நவி உடலமைப்போடு விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடத்திற்கே வந்துவிடுவாள். இவ்வாறு அவதார் திரைப்படம் மூலம் ஏராளமாகவும் தாராளமாகவும் விதைக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக்கத்தின் நீளம் கருதி இத்தோடு நிறுத்திட்டு அவதார் மூலம் விதைக்கப்பட்டுள்ள இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களுக்குச் செல்வோம்.

பண்டோரா கிரகம் என்னும் கற்பனை சுவர்க்கம்.

இந்த அவதார் திரைப்படமானது பண்டோரா கிரகம், நவி மனிதர்கள் என்ற கற்பனை கதாபாத்திரத்தில் அமைக்கப்பட்டிருப்பது போல தோன்றினாலும் இயக்குனர்களின் கற்பனைகளுக்குப் பின்னால் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வான சுவனத்தையும் அதன் கட்டமைப்புகளையும் காப்பியடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆம் பண்டோரா கிரகம் என்பது அவதார் திரைப்பட தயாரிப்பாளர்களின் கற்பனை சுவர்க்கம் என்று கூறினாலும் மிகையில்லை.







சுவனத்தில், எந்தக் கண்களும் பார்த்திராத, காதுகள் கேட்டிருக்க முடியாத, எந்த மனிதரின் உள்ளத்திலும் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் செய்த நற் கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (32:17). என்று திருமறை குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இத்திரைப்படத்தில் பண்டோரா கிரகம் சம்பந்தமாக வரும் ஒவ்வொரு காட்சிகளும் இறைமறை குர்ஆன் வர்ணிக்கும் சுவர்க்கப் பூஞ்சோலை, மற்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட சுவர்க்கத்தின் காட்சிகள் என்று ஒவ்வொன்றும் கற்பனை செய்யப்பட்டு, அவ்வொவ்வொன்றின் பின்னால் இஸ்லாத்திற்கு எதிர்மறையான சித்தனைகள் புகுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பண்டோரா கிரகம் சுவர்க்கத்தைப் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் இதோ.

காதாநாயகனின் முதல் உணவு: இத்திரைப்படத்தின் கதாநாயகன் நவி உருமேற்று சுவனத்தில்(?) முதலாவதாக பிரவேசிக்கும் போது மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடித்திரிவான். இறுதியில் கிரிஸ் என்ற நவிபெண்ணாக உருவெடுத்தவள் ஆப்பிள் நிறத்தில் ரோஜா இதழ்கள்போன்ற தோல்கள் உடைய ஒரு கனியை புசிப்பதற்கு கதாநாயகனுக்குக் கொடுப்பாள். அதை உண்ட கதாநாயகனோ கனியின் சுவையால் பெரும் புலங்காகிதம் அடைவான். என்ன! சுவக்கத்தில் நம் ஆதிபிதா ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களை தடைசெய்யப்பட்ட கனியை புசிக்கும்படி செய்து ஏமாற்றிய ஷைத்தானின் செயல் நினைவிற்கு வருகிறதா? மிகச்சரிதான் என்றாலும் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆதம் ஹவ்வா இருவரும் இறைவனால் சுவனத்திலிருந்து கீழிறக்கப்பட்டார்கள். ஆனால் அவதார் படத்தில் கனியை சுவைத்த பின்னர்தான் கதாநாயகன் பண்டோரா என்ற கற்பனை சுவனத்தை கலக்கோ கலக்கென்று கலக்குகிறார்.

பண்டோராவின் கஸ்தூரி மணல்: பண்டோரா சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு முரண்கோள் அல்லது துணைக்கோள் என்று வைத்துக்கொண்டாலும் மற்ற கிரகங்களிலுள்ளதுபோல பாறைகளும், மணல் மேடுகளும்தான் இருக்கவேண்டும். ஆனால் எங்கும் வாசனை வீசும் பூஞ்சோலையாகக் காட்சியளிக்கும் பண்டோரா கிரகத்தின் மணல் கஸ்தூரிபோன்ற தோற்றத்தில் காட்டப்படுகிறது. ஆம் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றுப்படி சுவனத்தின் மணல் கஸ்தூரிதானே!. அந்த முன்னரிவிப்பை அப்படியே காப்பியடித்துள்ளனர்.

சுவர்க்கத்தின் ஒரு கல் தங்கமும் மற்றொரு கல் வெள்ளியுமாகும், அதனின் சாந்து கஸ்தூரியாகும், அங்கு கிடக்கும் சிறு கற்கள் மருகதமும் பவளமுமாகும், அதன் மண் குங்குமமாகும், அதனுள் நுழைபவர் சந்தோசமடைவார் துற்பாக்கியமுடையவராகமாட்டார். நிரந்தரமாக அங்கிருப்பார் மரணிக்கமாட்டார். அவரின் ஆடைகள் இத்துப்போகாது, அவர் வாலிபத்தை இழக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

நான் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டேன், அங்கே முத்தினாலுள்ள கோபுரம் இருந்தது. அதன் மண் கஸ்தூரியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பாண்டோராவின் பிரம்மாண்ட மரம்: இத்திரைப்படத்தில் நவிகளுடைய அரசவையாகவும், நவிகள் தலைவனின் இருப்பிடமாகவும் ஒரு பிரம்மாண்ட மரம் சித்தரிக்கப்படுகிறது. திரைப்படத்தின் முடிவுவரை முக்கியத்துவம் பெரும் அந்த மரம், நாம் இதுவரை கண்டிராத வேரும் விழுதுகளும் நிறைந்திருக்கிறது. படர்ந்திருக்கும் அதன் மெகாசைஸ் விழுதுகளில் நவிகளின் குதிரைகள் சவாரிசெய்யுமளவிற்கு மிகப்பிரம்மாண்டமான மரம் என்பதை அவதார் சனியத்தை பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒருகட்டத்தில் அம்மரம் வில்லன்களின் குண்டுவீச்சிற்கு இறையாகி வேறோடு சாய்கிறது, அப்போது நவிகளின் சாம்ராஜ்யமும் வீழ்த்தப்படுவதுபோல காட்சி அமைகிறது. அதுசரி அந்த மரத்திற்கும் சுவர்க்கத்திற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? சற்று கீழே படியுங்களேன்.

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் அருகில் (அதன் நிழலில்) நல்ல வலிமையான, விரைவாகச் செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும், அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது. அத்தகு மாபெரும் மரமாகும் அது (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி அதன் நிழலை கடக்க முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அழகிய ஓடைகளும் அதிசயச் செடிகளும்: நீரோடைகளின் சலசலப்பில் ரம்மியமாக காட்சிதரும் பண்டோராவின் காடுகள் முழுவதும் பூக்கள் நிறைந்த அழகிய நந்தவனம்போல காட்டப்பட்டுள்ளன. ஒருகாட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு பெரும் பள்ளத்தாக்கில் குதிக்க, மேலிருந்து கீழ்வரை இடையிடையே முளைத்திருக்கும் அழகிய செடிகளின் ராட்ஷச இழைகள் அவ்விருவரையும் வருடிக் கொண்டு எந்தவித உராய்வும் இன்றி அவர்கள் கீழேவர உதவுகிறது. நமதூர் சிற்றுண்டிகளின் மெகாசைஸ் வாழை இலையில் வைக்கப்படும் ஒரு மெதுவடை எந்த அளவிற்கு அந்த இழையின் இடத்தை நிறைக்குமோ அதுபோல சற்றொப்ப 20 அடிகள் கொண்ட நவியின் உடலை அவ்விழைகள் தாங்குவதுகண்டு அதன் அளவை கணித்துக்கொள்ள இயலும்.

இதைப்படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த ஒருஅறிவிப்பு நினைவிற்கு வரலாம். அதாவது
மிஃராஜின் போது ஏழாவது வானத்திலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனக்கு உயர்த்தி காட்டப்பட்டது. அதனுடைய பழங்கள் ஹஜர் என்ற ஊரிலுள்ள குடம் போன்றதாகும். அதனுடைய இலைகள் யானையின் காது போன்றதாகும். அதனுடைய தண்டிலிருந்து வெளிப்படையான இரு ஆறுகளும் மறைமுகமான இரு ஆறுகளும் ஓடுகின்றது. ஜிப்ரீலே இது என்னவென்று? நான் கேட்டேன். மறைமுகமான இரு ஆறுகளும் சுவர்க்கத்தில் ஓடுகின்றது, வெளிப்படையான இரு ஆறுகளும் நைலும் ஃபுறாத்துமாகும் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் அறிவித்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)






முத்துக்களாலான கூடாரம்: கதாநாயகனும் கதாநாயகியும் வழக்கம்போல காதல் வயப்படும்போது(?) ஒரு முத்துக்களான கூடாரத்தில் சல்லாபிப்பதுபோல ஒரு காட்சியும் உண்டு. கதாநாயகி அந்த முத்துமாலைகளை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அம்மாலைகள் மூலம் அவர்களின் முன்னோர்களின் பேச்சுக்களை கேட்பதாக விஷயம் திசைதிருப்பப்படும். இந்த முத்துக்கூடாரக் கற்பனை எங்கிருந்து வந்தது என்ற கேட்கிறீர்களா? இதோ படியுங்கள்.

நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் குடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு, அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத இன்பங்களும் அருட்கொடைகளும் அங்கிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)

பச்சை கிளியில் உள்ளாசப்பயணம்: திரைப்படத்தின் இறுதிவரை கதாநாயகனும் காதாநாயகியும் பச்சைவர்ண கிளிபோன்ற ராட்சத பறவை மூலம் பண்டோரா முழுவதும் சுற்றித்திரிவதைக் காணலாம். பச்சைநிறப் பறவை என்றாலே ஷஹீதுகள் பற்றிய நபிமொழிதானே நம் நினைவுக்கு வரும்.

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன” என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது (ரழி))

நவிகள் சுவனக் கன்னியர்களோ?: முத்துக்கள் மின்னும் முகத்தோரனையும், நீண்ட நெடிய கண்களையும், பவளத்தை போன்ற கவர்ச்சிமிகு கருவிழிகளையும் கொண்டதாக நவிகளை வடிவமைத்துள்ளனர். இந்த நவிகளின் உடலமைப்பின் கற்பனைக்கு பின்னால் சுவனத்து அமரகன்னியர்கள் இருந்துள்ளனர் என்பதே உண்மை. இதோ அந்த இறைவசனங்கள்

அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள் (55:56-58).

அங்கு இவர்களுக்கு ஹூருல் ஈன் என்னும் நெடிய கண்களுடைய கன்னியர் இருப்பர் (56:22).

இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட அமர கன்னியரும் இருப்பார்கள். தூய்மையில் அவர்கள் சிப்பிகளில் மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (37:48-49)

இவ்வாறு பண்டோரா கிரகம் என்று ஜேம்ஸ் கமரூன் அறிமுகப்படுத்தியிருப்பது அவர் கற்பனை செய்த சுவர்க்கம்தான் என்பதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பண்டோரா கிரகத்தை சுவர்க்கம் என்று இவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே அதனால் இஸ்லாத்திற்கு என்ன இழுக்கு? என்ற கேள்வி பிறக்கலாம். இதுபோன்ற சிந்தனையில்தான் நம்மில் பெரும்பலானோர் இஸ்லாத்தின் மீதான ஜியோனிஸத் தாக்குதல்களை அடையாளம் கண்டுகொள்வதில் ஏமாந்துவிடுகின்றனர்.

மக்களே! யூத கிருஸ்தவ சக்திகள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை (மீடியாக்களின் அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தி ) தொடர்ந்து விதைப்பதின் நோக்கம், அதன் பலனை நாளையோ அல்லது நாளைமறுநாளோ அறுவடை செய்வதற்காக அல்ல. மாறாக இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதுபோல இஸ்லாத்திற்கெதிரான இவர்கள் தொடர்ந்து பதிந்துவரும் பொய்கள் மூலம் நாளைய முஸ்லிம் சமூகத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்ற நோக்கமே!. எனவேதான் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், ஹாலிவுட் திரைப்படம் என்று மீடியாக்களில் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்படும்போது அவைகளை உடனுக்குடன் கலைந்து கலையெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று அவதார் திரைப்படம் பரப்பியிருக்கும் அவதூறுகள் அடயாளப் படுத்தப்படாவிட்டால் நாளைய தலைமுறையினர் இஸ்லாம் போதிக்கும் சுவர்க்கம் அவதார் திரைப்படத்திலுள்ளது போன்று இருக்குமோ என்று எண்ணிவிடக் கூடாது. நல்லடியார்களுக்கு இறைவனின் பரிசு என்று குர்ஆனும், சுன்னாவும் வாக்களிக்கும் அந்த சாந்திமிக்க சுவனத்திலும் கூட மரணம், சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் ஏற்படத்தானே செய்கிறது என்று அவதார் படத்தை பார்த்துவிட்டு குழம்பிவிடக் கூடாது. அதற்கான வாசற்படிகளை அடைக்கும் நோக்குடனேயே இந்த அவதார் திரைப்படத்தின் பின்னால் இருக்கும் இஸ்லாமிய விரோத சூழ்ச்சியை விளக்கிக்கொண்டிருக்கிறோம்.

அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்

சுவர்க்கத்தை பற்றி எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத அதன் இன்பங்களை, எந்த ஆன்மாவும் கற்பனை செய்ய இயலாது என்கிறது இஸ்லாம். ஆனால் கற்பனையாக ஒரு மாதிரி சுவனத்தை உருவாக்க முயன்றுள்ளது இந்த அவதார் திரைப்படம். இவ்வாறு அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள் பல இருந்தாலும், பண்டோரா எனும் கற்பனை சுவர்க்கம் சம்மந்தப்பட்டவைகளில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1) சுவர்க்கம் என்பது இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களுக்கு உரியதாகும். அங்கு அச்சமோ, துன்பமோ, துயரங்களோ, பிரச்சனைகளோ, கொடிய மிருகங்களோ இருக்காது. சுவனத்தில் 'ஸலாம்,ஸலாம்' என்னும் சொல்லையே செவியுறுவார்கள் (56:26) என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் அவதார் திரைப்படம் அறிமுகப்படுத்தும் பண்டோரா சுவர்க்கத்திலோ கொடூரகுண்டுவீச்சுகள், போர்கள், சண்டை சச்சரவுகள், இரத்தம் சிந்துதல், நிம்மதியின்மை போன்ற சுவர்க்கத்தின் தன்மைகளுக்கு எதிரான விஷயங்கள் பதியவைக்கப்பட்டுள்ளன. மேலும் கொடிய மிருகங்கள் வாழ்வதாகவும், அது நவிகளை தாக்க முற்படுவதுபோன்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இஸ்லாம் கூறுவதுபோன்று சுவர்க்கத்தை (தவறாக) கற்பனை செய்துவிட்டு அதில் இல்லாத விஷயங்களை புகுத்தும் யூத ஜியோனிஸ தந்திரமே இது.

2) குர்ஆன் சுவர்க்கவாசிகளின் உடையை பற்றி சொல்லும் போது ஸூன்துஸூ, இஸ்தபரக் என்ற பச்சைநிற அழகிய பட்டாடைகளும், கடகங்களும் அணிவிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது (18:21, 44:53, 76:12, 76:21). அவதாரின் கற்பனை சுவர்க்கத்தில் நவிகளுக்கு கடகங்களைப்போல கைகைளில் அணிவிக்கப்பட்டிருந்தாலும், ஆடை விஷயத்தில் மேற்கத்திய நாகரிக ரசனைக்கொப்ப நவிகளை அரைநிர்வாணமாக அழைய விட்டுவிட்டார்கள். இஸ்லாம் ஆடை அணிவித்து உங்களை கௌரவிக்கும் முகமாக போதித்தால் நாங்கள் அதை நிர்வாணமாகக் காட்டுவோம் என்ற கயமைத்தனம் தெரிகிறது.

3) இஸ்லாம் சுவர்க்கவாசிகளை பற்றி கூறும் போது அவர்கள் மகிழ்ச்சியில் திழைத்தவர்களாக, தனக்கு இறைவன் அளித்த பரிசுகளை எண்ணி இறைவனைப் புகழ்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. சுவர்க்கம் ஒரு மாபெரும் அரசாங்கம் என்கிறது (பார்க்க 76 ம் அத்தியாயம் ஸூரா அத்தஹ்ர்). மேலும் சுவனத்தை அடைந்த ஒருவர் தான் சுவனத்தில்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவாரே அல்லாமல் அதைவிட்டுவிட்டு வெளியேறுதல் என்ற ஒரு நிலையை விரும்பமாட்டார். இவ்வவுலகம் அழிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின்னர் இறைவன் தன் நல்லடியார்களுக்கு வழங்கும் பரிசுதான் சுவர்க்கம் என்னும் அழிவில்லா வாழ்க்கை. அந்நாளில் வானம் சுருட்டப்பட்டு பூமி அழிக்கப்பட்டு விடும் என்பதையும் கவனத்தில் கொள்க. ஆனால் அவதார் காட்டும் பண்டோரா சுவர்க்கத்திலோ கதாநாயகன் பூமியிலிருந்து சுவர்க்கத்திற்கும் பின்னர் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கும் வருவதுபோன்ற கட்சிகளை பார்க்கிறோம். இதிலிருந்து சுவர்க்கவாசிகள் மனம்போன போக்கில் சுவனத்திலிருந்து வெளியேறி வேற்றுகிரகங்களுக்கு செல்லலாம் என்றும், பூமி போன்ற மற்ற கோள்கள் அழியாமல் இருக்கும் என்றும் நச்சுப் போதனை செய்யப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

4) சுவர்க்க வாழ்க்கையை நித்திய ஜூவனுள்ள வாழ்க்கையாக இறைவன் ஆக்கியுள்ளான். சுவர்க்கவாசிகளுக்கு மரணம் என்பதே இல்லை என்கிறது இஸ்லாம். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள் (44:56) என்ற குர்ஆன் கூறுகிறது. இதற்கு எதிராக ஜேம்ஸ் கமரூனின் கற்பனை சுவர்க்கமான பண்டோராவில் நவிகள் மரணிக்கின்றனர், கொலை செய்யப்படுகிறார்கள்.

5) இறுதியாக பண்டோரா சுவர்க்கத்தில் மரணமடைந்த கிரிஸ் என்ற மனித நவிபெண்ணை உயிராக்கும் முயற்சியும் நடக்கிறது. நவிகள் அனைவரும் அந்த பிரமாண்டமரத்தில் ஒன்று கூடி தங்களின் கைகளை கோர்த்துக்கொண்டு புரியாத பாஷையில் பாடல் ஒன்றை படிப்பார்கள். பின்னர் அந்த நவிப்பெண்ணின் பிடரியில் ஓர் ஒளிவெள்ளம் பாய்ந்து மயக்க நிலையை விட்டு அந்தப் பெண் சற்று விலகுவாள். இங்கு நாம் சொல்ல வருவது மரணித்தவர்களை உயிர்த்தெழுப்புவது யார்? மனிதனின் பிடரி நரம்பின் முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் அல்ல. அவைகள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இங்கு நாம் சொல்லவருவது புரியாத பாஷையில் பாடப்பட்ட அந்த பாடல் பற்றிதான். இதுபோன்ற புரியாத பாஷையில் பாடல் ஒன்று Jay-Z The Black Album என்ற பாப் ஆல்பத்தில் வரும். அதாவது Susej Redrum Redrum. இப்படி ஒரு ஆங்கிலச் சொல்லை நாம் படித்ததில்லையே என்று நீங்கள் என்னலாம். இதை கொஞ்சம் வலமிருந்து இடமாக படித்துப்பாருங்கள் Murder Murder Jesus என்று வரும். முஸ்லிம்கள் கண்ணியத்துக்குரிய இறைத்தூதரர்களில் ஒருவராக மதிக்கும் நபி ஈஸா (அலை) அவர்களுக்தெதிராக பாடப்பட்ட பாப் பாடலை நேர்மாறாக பதிவு செய்து கேட்டு கண்டுபிடித்தனர். அதுபோல அவதார் கண்டுபிடித்துள்ள புரியாத நவிப்பாஷையையும், அவர்கள் படிக்கும் பாடலையும் இவ்வாறு ஆய்வு செய்தால் அதில் புதைந்திருக்கும் புரட்டுகள் வெளிவரலாம்.

எனவே அவதார் போன்ற ஹாலிவுட் திரைபடங்களின் விஷமத்தனத்திலிருந்து உங்களையும் உங்களின் குடும்பத்தையும் பாதுகாப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். மறைவான இணைவைப்பான ரியாவின் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துச்சென்று, பின்னர் பகிரங்க இணைவைப்பில் இட்டுச் செல்லும் ஹாலிவுட் - பாலிவுட் - கோலிவுட் சூழ்ச்சிகளை விட்டும் முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.