தற்கொலை பற்றி இஸ்லாம்..,
From: Sulthan sea port <seaportdawa@gmail.com>
Date: Wed, Apr 11, 2012 at 10:51 AM
Subject: |TMB| தற்கொலை பற்றி இஸ்லாம்..,
To: தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் <tamilmuslimbrothers@googlegroups.com>, தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் <tamilmuslimbrothers@gmail.com>
தற்கொலை பற்றி இஸ்லாம்..,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்)என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். (புகாரி 6047, 6105, 6652)
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.(முஸ்லிம் 1779)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகக் குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.(புகாரி 5778-1365-முஸ்லிம் 175)
மேலும் தற்கொலைப் பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டியை சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?v=0TOO0QRtROk&feature=relmfu
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
--
கருத்துரையிடுக