"இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்"

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.


கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.




----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்".

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார்.

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,

Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.
One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.
The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்.

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.

My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link
3. Federation of Student Islamic Societies. link

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு.


இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும்.


இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.


அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்?


பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம்,
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்
மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார்.


வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,


Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.
Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை.
Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள்.


இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது.


தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார்.


மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.


இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது.


அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.


பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".

நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது,


இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது,
சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது,
இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,
குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது,
பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது,
எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,


மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.


உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு:

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


MY PEACE official website:
1. mypeace.com.au. link.

காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!!



---------- Forwarded message ----------
From: அலாவுதீன் <alavudeen.mkh@gmail.com>
Date: 2011/8/28
Subject: [TMMKGULF] காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!!
To:




---------- Forwarded message ----------
From: Ahmed Sahib <ibnukuraish@yahoo.com>
Date: 2011/8/28
Subject: காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!!
To: tafareg@yahoogroups.com



காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!! அச்சிடுக மின்-அஞ்சல்
28 ஆகஸ்ட் 2011 காலை 02:36

காயல்பட்டினத்தில் காவல்துறையின் காட்டு தர்பார். ஆம் கடந்த 1993 ம் ஆண்டு நமதூர் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் போது காவல்துறையின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து பத்திரிக்கைகள் மேற்கண்ட தலைப்பிட்டு சித்தரித்தன. அதே ரீதியில் இன்று ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு பார்த்திபன் காயல்பட்டின மக்கள்மீது தனது பாசிச நடவடிக்கைகளாலும், துவேஷ போக்காலும் பத்திரிக்கைகளில் மேற்படி தலைப்பை மீண்டும் வரவழைக்கவே திட்டமிடுகிறார் போல தெரிகிறது.

police_brutality01

முஸ்லிம்கள் அமைதியாக வணங்கங்களில் மட்டும் ஈடுபட்டு வரும் இந்த ரமழான் காலங்களில் கூட, காயல்பட்டின நகரின் அமைதியையும், மக்களின் நிம்மதியையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டேயிருக்கிறார் இந்த பார்த்திபன். சட்ட ஒழுங்கை காப்பாற்ற சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு போலிஸ் வேலைக்கு வந்துள்ள இவர், மக்களிடையே மத துவேஷத்தை கிளப்பிவிடுவதோடு, நகரில் நடைபெரும் சிறு விஷயத்தைக் கூட பெரிதுபடுத்தி பதட்டமாக்குகிறார். இந்த காவல்துறை அதிகாரி பார்த்திபன் யார்? இவரை பின்னிருந்து இயக்குவது யார்? இவர் செய்யும் அட்டகாசங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியுமா? இவருக்கு என்னதான் வேண்டுமாம்? என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.

நடந்தது என்ன?

நமதூர் காயல்பட்டினத்தில் சமூக நல்லிணக்க மையம் என்ற நமது தஃவா சென்டர் கடந்த 15 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை கல்வி கற்க விருப்பமுடன் வருகை தருவோருக்கு அலியார்தெருவின் தென்கோடியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக இருப்பிடங்கள் அமைத்து சிறந்த முறையில் மார்க்கக்கல்வி போதித்து வருகின்றனர்.

Dawa

இந்நிலையில் சென்னை திருவள்ளுரைச் சார்ந்த ஆயிஷா சித்தீக்கா (22) என்ற சகோதரி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு கல்வி கற்பதற்காக நமது தஃவா சென்டரை அனுகினார். சகோதரி அவர்கள் சென்னை தமுமுக தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின் மூலம், பொருப்பாளர்கள் ஒப்புதலோடு தன்னுடைய முழுமையான விருப்பத்தின் அடிப்படையில் நமது சென்டரில் நல்ல முறையில் படித்து வருகிறார் - அல்ஹம்துலில்லாஹ்.

விடுவாரா இந்த பார்த்திபன்? புதிதாக ஒரு சகோதரி இஸ்லாத்திற்கு வந்துள்ளதை மோப்பம் பிடித்தாரோ என்னவோ, கடந்த 26-08-2011 அன்று வெள்ளிக் கிழமை நமது தஃவா சென்டர் மகளிர் பகுதிக்குள் ஒரு பெண் போலிஸ் துணையுடன் திடுதிப்பென அத்துமீறி புகுந்துள்ளார். என்ன ஸார் விஷயம்? என்ற விசாரித்த தஃவா சென்டர் நிர்வாகிகளை தனக்கே உரித்தான பாணியில் உங்கள் மீது FIR போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சகோதரி ஆயிஷா சித்தீக்காக்காவை கடத்தியா வைத்துள்ளீர்கள் என்று அதட்டியுள்ளார்.

இப்படி நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, அழைத்து வரப்பட்ட பெண்போலிஸ் கான்ஸ்டபில் ஃபர்தா அணிந்திருந்த பள்ளி மாணவிகளை தரைக்குறைவாக பேசியுள்ளார். நீங்கள் முஸ்லிமாவதற்கு முன்னர் ஃபர்தாவாடி போட்டிருந்தீங்க என்று ஆரம்பித்து பார்த்திபன் பாணியில் அனைத்தையும் பேசி முடித்துள்ளார்.

வேறு வழியில்லாமல் தஃவா சென்டர் நிர்வாகிகள் சகோதரி விருப்பப்பட்டால் நீங்கள் தாராளமாக அழைத்துச்சென்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் சகோதரி ஆயிஷா சித்தீக்கா இஸ்லாமிய அடிப்படை கல்வியை படித்து முடிக்காமல் எவருடனும் செல்வதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் வயதிற்கு வந்த மேஜர் என்றும் இஸ்லாத்தை தாம் சிந்தித்து முழுவிருப்பமுடனேயே ஏற்றுக்கொண்டதாகவும் காவல்துறை ஆய்வாளர் பார்த்திபனிடம் அனைவரின் முன்னலையில் தெரிவித்துள்ளார்.

இவைகளையெல்லாம் சற்றும் செவிமடுக்காத இந்த பார்த்திபன் பெண் காவல் துறையினர் மூலம் சகோதரியின் கையை பிடித்து தரதரவென இழுத்து போலிஸ் வண்டியில் ஏற்றிச்சென்று ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சகோதரியிடம் போலிஸ் ஸ்டேஷனில் வைத்து அவரது ஈமானை நிலைகுலையச் செய்யும் விதத்திலும் பேசி அவர் பெற்றோருடன் போவதற்கு நிர்பந்தித்திருக்கிறார்.

தொடர்ந்து இஸ்லாத்தில் தன் மன உறுதியை காட்டியிருக்கிறார் சகோதரி ஆயிஷா சித்திக்கா. கடுப்பாகிபோன பார்த்திபனோ சகோதரி அவர்களை அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைப்பதாகவும், தஃவா சென்டருக்கு அனுப்பமுடியாது என்றும் மிரட்டல் தொனியில் பேசி நிர்வாகிகளை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து (28-08-2011 இன்றோடு) சுமார் 2 நாட்கள் ஆகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சகோதரி அவர்கள் பார்த்திபன் எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதைக்கூட சொல்ல மறுக்கிறார். சகோதரி ஆயிஷா சித்தீக்காவிற்கு நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளையும், காவல்துறை அதிகாரி பார்த்திபன் அவர்களின் ஓரவஞ்சனை போக்கையும் கண்டு காயல்பட்டினம் பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

தஃவா சென்டர் நிர்வாகிகள் நோன்பு காலத்தையும் பெருட்படுத்தாது இதுவிஷயமாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

27082011005

சகோதரி ஆயிஷா சித்தீக்கா நலமுடன் பள்ளி திரும்பவும், பாசிச வெறிபிடித்த பார்த்திபனின் தொடர் டார்ச்சர்களைவிட்டு காயல்பட்டினம் தஃவா சென்டர் முழு அமைதி பெறவும் இந்த சங்கைமிகு ரமழானில் அதிகம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரு பார்த்திபன் நமது தஃவா சென்டரை குறிவைப்பது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் மின்னல் மீனா என்ற அரவாணி கொலையை காரணம் காட்டி தஃவா சென்டர் மாணவர் பகுதிக்குள் சென்ற இதே பார்த்திபன், அங்கு சமையலறையில் வைக்கப்பட்டிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை கையில் எடுத்துக் கொண்டு இதை வைத்துதானே அந்த 9தை கொலை செய்தீர்கள் என்று மாணவர்களை மிரட்டியுள்ளார். புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர்களின் வகுப்பறைக்குள் அத்துமீறி சென்று நீங்கள் அனைவரும் இங்கிருந்து ஓடிவிடுங்கள் இல்லையேல் அனைவரும் உள்ளே போக வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்த தகவலும் இன்றுதான் வெளியுலகிற்கு தெரியவந்தது.

எனவே ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு பார்த்திபன் அவர்களின் அதிகார பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வருமா?

தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்புக்கவனம் செலுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இவர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யுமா? சகோதரி ஆயிஷா சித்தீக்காவிற்கு நீதி கிடைக்குமா? – பொருத்திருந்து பார்ப்போம்.

மேற்படி காவல்துறையின் அத்தமீறல் சம்பந்தமாக உங்கள் உணர்வுகளை கீழ்கண்ட Email மற்றும் FAX முகவரிகளுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Cheicf Minister's Special Cell, Email : cmcell@tn.gov.in FAX : 044-25671441

IG Southern Zone : Email : igszone_2007@yahoo.com, Fax : 0452-2522596

Tuticorin SP Mr. Narendra Nayar IPS, Email : spthoothukudi@yahoo.co.in

To Make online complaint against Parthiban : click herehttp://www.tnpolice.gov.in/mailcomplaint.php





--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குற்றப்பத்திரிக்கை மறுமையில் வழங்கப்படும்

குற்றப்பத்திரிக்கை மறுமையில் வழங்கப்படும்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

பதிவேடுகள்

அந்நாளில் மனிதர்களின் நன்மை தீமைகள் எடைபோடப்படுவது மட்டுமின்றி அவர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான விபரங்கள் உள்ளடக்கிய பதிவேடுகளும் அவர்களின் கைகளில் வழங்கப்படும். இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் விரிவாகக் குறிப்பிடுகின்றது.

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயமும் முழந்தாளிட்டிருப்பதைக் காண்பீர். ஒவ்வொரு சமுதாயத்தவரும் தத்தமது பதிவேட்டின் பால் அழைக்கப்படுவர். 'நீங்கள் செய்ததற்குரிய கூலி இன்று வழங்கப்படும். இது உங்களைப் பற்றிய நன்மைகளைக் கூறும் பதிவேடாகும். நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்ததை நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்தோம்' (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 45:28,29)

பதிவேடுகள் வழங்கப்படாத எந்தச் சமுதாயமும் இராது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

குற்றப்பத்திரிக்கை வழங்காமல் கூட இறைவன் யாரையும் தண்டிக்கலாம். அவ்வாறு தண்டித்தால் அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் எவருக்குமே இருக்கப் போவதில்லை என்றாலும் எவரையும் குற்றப்பத்திரிக்கை வழங்காமல் இறைவன் விசாரணை செய்வதில்லை. நமக்கு எள்ளளவும் அநீதி இழைக்கப்பட வில்லை என்பதை மனிதன் சந்தேகமற புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பதிவேடுகள் வழங்கப்படுவதற்கான காரணம்.

'மேலும் உண்மையைப் பேசும் பதிவுப்புத்தகம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது' (அல்குர்ஆன் 23:62)

தனக்கு சிறிதும் அநீதி இழைக்கப்படவில்லை என்பதை மனிதன் சந்தேகமற அறிந்து கொள்வதற்காகவே குற்றப்பத்திரிக்கை அவனிடம் வழங்கப்படுகிறது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இந்தக் குற்றப்பத்திரிக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு வழங்கப்படாது. மாறாக விசாரணைக்கு முன்பே வழங்கப்படும். அதைப் படித்துப் பார்க்கும் அவகாசமும் வழங்கப்படும். அதன்பிறகே விசாரணை நடைபெறும்.

'ஆகவே எவருடைய பதிவேடு வலக்கையில் வழங்கப்படுகிறதோ அவர் இலேசான முறையில் கேள்வி கேட்கப்படுவார்' (அல்குர்ஆன் 84:07)

பதிவேடு வழங்கப்பட்ட பிறகு தான் விசாரிக்கப்படும் என்பதற்கு இது சான்று.

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம். திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். 'நீ உனது ஏட்டைப் படித்து பார்! உனது கணக்கைப் பார்க்க நீயே போதும்' (என்று அவனிடம் கூறப்படும்). (அல்குர்ஆன் 17:14)

பதிவேட்டைப் படிக்க அவகாசம் அளிக்கப்படும் என்பதற்கு இது சான்று.

இந்தப் பதிவேடு வழங்கப்பட்டு அதன் பின்னர் விசாரிக்கப்பட்டு அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றாலும் அந்தப் பதிவேடு வழங்கப்படும் முறையிலிருந்து ஒவ்வொருவனும் தனக்குரிய தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்வான்.

வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டால் விசாரணை எளிதாக இருக்கும். இடது கையிலோ, முதுகுக்குப் பின்புறமாகவோ பதிவேடு வழங்கப்பட்டால் அவரது நிலை மிக மோசமாக இருக்கும். வலது கையில் வழங்கப்பட்டவர்கள் தமது பதிவேடுகளைப் படிப்பார்கள். தமக்குத் தெரிந்தவர்களையெல்லாம் அழைத்துப் படித்துப் பார்க்கச் சொல்வார்கள். இடது கையிலோ முதுகுக்குப் பின்புறமாகவோ வழங்கப்பட்டவர்கள், தமது பதிவேட்டைப் படிக்கவும் தயங்குவார்கள். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

எவர்களின் பதிவேடு வலக்கரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் தமது ஏடுகளைப் படிப்பார்கள். அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

எவருடைய பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர் (மகிழ்வுடன்) 'வாருங்கள்! எனது பதிவேட்டைப் படியுங்கள், நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை திட்டமாகச் சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்' என்று கூறுவார். ஆகவே அவர் திருப்தியான வாழ்க்கையில் உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார். (அல்குர்ஆன் 69:19-22)

ஆனால் எவருடைய பதிவேடு இடக்கையில் கொடுக்கப்பட்டதோ அவன் 'எனது பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாமே! எனது கேள்விகணக்கு எதுவென்பதை நான் அறியவில்லையே! (நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே என்று கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

எவருடைய பதிவேடு முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ அவன் தனக்குக் கேடுதான் எனக்கூறியவனாக நரகத்தில் நுழைவான். நிச்சயமாக அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தாருடன் மகிழ்வுடன் இருந்தான். நிச்சயமாக தான் (இறைவன் பால்) மீளவே மாட்டான் என எண்ணியிருந்தான். (அல்குர்ஆன் 84:10-14)
அந்தப் பதிவேட்டில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என்ற பேதமில்லாமல் அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

பதிவேடு வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள் 'எங்கள் கேடே! இந்த ஏட்டுக்கு என்ன நேர்ந்தது? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காமல் இந்த ஏடு விட்டுவைக்க வில்லையே' என்று கூறுவார்கள். இன்னும் அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

இந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டவை திடீரெனத் தயாரிக்கப் பட்டவையன்று. மாறாக மனிதன் இவ்வுலகில் வாழும் போதே அவன் ஒவ்வொரு சொல்லும் செயலும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டன. அதுதான் மனிதனிடம் வழங்கப்படும்.

நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (அல்குர்ஆன் 82:10-12)

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இருவர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கண்காணித்து எழுதக் கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்தச் செயலையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் 50:17-18)

மனிதனின் சின்னஞ்சிறு செயல்களும் சொற்களும் பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஏடுகள் எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும். அது எப்படி வலது கையால் பார்க்குமளவுக்கு இருக்க முடியும் என்று விதண்டாவாதம் புரிவோர் கேட்கக் கூடும். சின்ன 'டிஸ்க்' கில் ஏராளமான விபரங்களைக் கம்ப்யூட்டரின் துணையுடன் மனிதன் பதிவு செய்ய முடியும் என்றால் படைத்த இறைவனால் இது இயலாதா? என்று சிந்தித்தால் இந்த ஐயம் விலகும்.

உறவு, நட்பு ஆகியவை மறந்து விடும்

உறவு, நட்பு ஆகியவை மறந்து விடும்

இவ்வுலகில் மனிதர்களிடையே நிலவி வந்த நட்பும், உறவும் முற்றாக விடைபெற்று விடும். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக் கூடிய நாள்!

அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் ஓடுவான். அன்றைய தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையைப் பற்றி எண்ணவே சரியாயிருக்கும். (அல்குர்ஆன் 80:34-37)

நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் பயன் தாரத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவிடுங்கள். (அல்குர்ஆன் 2:254)

ஆகவே எங்களுக்காக (இன்று) பரிந்து பேசுவோரும், உற்ற நண்பரும் இல்லை. (அல்குர்ஆன் 26:100,101)

இன்றைய தினம் அவனுக்கு எந்த நண்பரும் இல்லை. (அல்குர்ஆன் 69:35)

ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பார்ப்பான் (ஆனாலும்) ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள். குற்றம் புரிந்தவன் அந்த நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காக தன் மக்களையும், மனைவியையும், சகோதரனையும் அவனை அரவணைத்துக் கொண்டிருந்த சுற்றத்தாரையும், இன்னும் பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து (தான் மட்டும்) தப்பித்துக் கொள்ள விரும்புவான். (அல்குர்ஆன் 70:10-14)

யாரும் யாரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கொடூரமானதாக அந்த நாள் இருக்கும்.


மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)

'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)

'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:55)

எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62 வசனங்களும் கூறுகின்றன. கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான்.

இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். 30:55 வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56 வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.

'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் 'அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:56)

பூமியைப் பிளந்து வெளியேறுவர்

பூமியைப் பிளந்து வெளியேறுவர்

இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள்.
'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன் 50:44)

'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன் 70:43)

அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம்.

Fwd: [saharatamil] அனைவரும் பலஸ்தீனத்திற்கு ஓட்டுபோடுங்க



---------- Forwarded message ----------
From: mohamed haris <harisimam474@gmail.com>
Date: 2011/8/25
Subject: [saharatamil] அனைவரும் பலஸ்தீனத்திற்கு ஓட்டுபோடுங்க
To: saharatamil <saharatamil@yahoogroups.com>


 

Important

هذا الموقع للتصويت بتسمية موقع فلسطين أو أسرائيل
في الخرائط الخاصة بموقع قوقل 
النتيجة تميل إلى الآن لمصلحة العدو الصهيوني
شارك وأرسل 
 
 

Google is having a vote on whether to name Israel or Palestine on its map on Google Earth. Please vote for Palestine and share. Please DO IT because Israel is winning!!!

இங்கே சொடுக்கவும் - - -> http://www.israel-vs-palestine.com/PS/EN

PLEASE VOTE  Palestine


--

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___

    Dr. அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) புதிய வீடியோ



    ---------- Forwarded message ----------
    From: Esa Mohiadeen --- <esa786@hotmail.com>
    Date: 2011/8/20
    Subject: Dr. அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) புதிய வீடியோ - very good for non muslim
    To: Esa Mohiadeen --- <esa786@hotmail.com>


    நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
     
    கிழே  Dr  அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்)  புதிய வீடியோ ஸ்பீச் அனுப்பி உள்ளேன். 

    நீங்கள் அனைவரும் இந்த இரண்டு வீடியோ கேளுங்கள். நமக்கு ஈமானை புதுபிக்க பயன் உள்ளதாக உருக்கும்.  மற்றும் ஏன் Dr  அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க பட்டார் என பேசி உள்ளார்.

    இரண்டும் புதிய videos .  நீங்கள் உங்கள் முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இதை அனுப்பி  தவா செய்யலாம். இன்ஷா அல்லாஹ், அவர்கள் அல்லது அவர்கள் சந்ததி இஸ்லாத்திற்கு  வர வாய்ப்பு உள்ளது.
     
     
    நாம் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி சொன்னால் , அல்லாஹ் அவரையோ அல்லது வேறு யாரையோ இஸ்லாமிற்கு வர வைப்பான்.

    நாயகம் ஸல் , குறைஷிகளுக்கு இஸ்லாத்தை சொன்னார்கள், அவர்கள் மாறவில்லை , அனால் அல்லாஹ், மதீனா மக்களை ( அன்சாரிகளை ) இஸ்லாத்திற்கு மாற்றினான்.  அகவே  நமது முயற்சி வீண் போகாது. நாம் சொல்லுவபர் மாறவில்லை  என்றால் , உலகில் வேறு எங்காவது கட்டாயம் நமது முயற்சிக்கு பலன் கொடுப்பான்.
     
    இன்ஷா அல்லாஹ் , முயற்சி பண்ணவும். இல்லை என்றால் கட்டாயம், அல்லாஹ் நம்மிடம் மறுமையில் கேட்பான். நமது மற்ற சமய நண்பர்கள் நிச்சயம் நம்மை அல்லாவிடம் மறுமையில் மாட்டி விடுவார்கள். நாம் ஏன் இஸ்லாத்தை அவர்களுக்கு சொல்ல வில்லை என்று.  சொல்வது நமது கடமை. அவர்களை இஸ்லாத்திற்கு வர வைப்பது அல்லாஹ் பொறுப்பு.

    இன்ஷா அல்லாஹ் , இந்த வீடியோவை அனுப்பி வையுங்கள்.
     
     
    நீங்கள் கீழ் உள்ள செய்தியை உங்கள் நண்பர்க்கு ஏற்றவாறு மாற்றி எழதி அனுப்பி வையுங்கள் அல்லது அப்படி அனுப்பி வையுங்கள்.
     
     
     

     
    கிழே  Dr  அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்)  புதிய வீடியோ ஸ்பீச் அனுப்பி உள்ளேன். அது உனக்கு பல  சந்தேகத்தை தீர்க்க வழி வகுக்கும் and பல கேள்விகளுக்கு பதில் தரும்  
     
    இதில் part  1  and  part 2   உள்ளது. இரண்டையும் கேள்.
     
    http://www.youtube.com/watch?v=VxLk_9cEdOk&feature=player_embedded
     
     
    நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது , என் எனில், நான்  எனது முன்னோர் மதத்தை பின் பற்றுவதால்,  சில நேரம் கண் மூடி தனமாக கூட இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். .   அனால்  இவர் நல்ல படித்த அறிவாளி. அவர் அனுபவத்தை சொல்கிறார்.
     
    அவர் ஏன் இஸ்லாத்திற்கு வந்தார் என்றும்,  குரானை எவ்வளவு ஆழமாக ஆராய்ச்சி செய்து படித்து உண்மையை புரிந்தார் என பேசி உள்ளார்.

    மற்றும் அவரை ஈர்த்த ஒரு குரான்  சுறா (chapter ) called as Sura Lukman. This Lukman Quran chapter is One of the Quran chapter which made him to come closer to Islam. இதில் கிளே  கொடுத்து உள்ளேன்.  அதையும் படி.  Just spend some time to explore the truth.
     
     
    http://quran.com/31
     
    to read the meaning of this sura in tamil select TAMIL language in the same page left hand side, other language selection option
     
    அது சம்பந்தமா வீடியோ டாக் from  Dr .அப்துல்லாஹ் கிழே உள்ளது. அதில் 5 part  உள்ளது. Maxium it will an hour.  Very good video for people who wants know about Islam.
     

    http://www.youtube.com/watch?v=Svi9NbMRREM&feature=related
     
     
     
    Regards
    Esa

    --
    You received this message because you are subscribed to the Google
    Groups "imantimes" group.
    To post to this group, send email to imantimes@googlegroups.com
    To unsubscribe from this group, send email to
    imantimes+unsubscribe@googlegroups.com
    For more options, visit this group at
    http://groups.google.com/group/imantimes?hl=en?hl=en
     
    Pl. VISIT www.imandubai.org

    கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.



    ---------- Forwarded message ----------
    From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
    Date: 2011/8/20
    Subject: (TMP) கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.
    To: tmpolitics@googlegroups.com, unitedtamilmuslims@yahoogroups.com, tamilmuslimbrothers@googlegroups.com
    Cc: Keelakarai Anjal <keelaianjal@gmail.com>, sengiskhanonline@gmail.com, abu saajida <abusajidha@gmail.com>


    ந்தியாவில் இருக்கும் மக்களை விட கடவுள் எண்ணிக்கை அதிகம் என்று நாத்திகர்கள் நகைச்சுவையாக மேடைகளில் குறிப்பிடுவதுண்டு.  ஆத்தல்- காத்தல்- அழித்தல் இவ்வாறான மூன்று பிரதானக் கடவுள்கள், பின்னர் இலாகா வாரியாக கடவுள்கள், பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என கணக்கிலடங்கா ஒரு பட்டியல் உண்டு. இது போக ஊருக்கு ஒரு எல்லைச்சாமியாக  கடவுள்கள்; அதுவும் காணாது என குடும்பத்திற்கேற்ப விதவிதமான குலதெய்வ கடவுள்கள். இதையும் தாண்டி நடப்பன- பறப்பன- ஊர்வனவைகள் அனைத்தும் கடவுள்களாக ஆக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் கடவுள்கள் பெருகியதற்கு இதற்கு காரணம் கடவுளின் இலக்கணம் என்ன என்பதை விளங்காத மக்கள் பெரும்பானமையாக வாழ்வதுதான்.
     
    எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவரால்,  சென்னையில் அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.. அக்கோயிலுக்கு பெயர்  "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  தனது மனதில் ஒரு மனிதரை நல்லவர் என கருதினால் அந்த  மனிதரை மதிக்கலாம். ஆனால் அவரை கடவுளாக்கி, அவருக்கு  கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினால் கடவுள் எண்ணிக்கை  உயராமல் என்ன செய்யும்?
     
    எம்.ஜி.ஆர், நாம் வாழும் காலத்தில் ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்து, நாடகம் சினிமாவில் சம்பாதித்து, அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து மறைந்த ஒரு சாதாரண மனிதர். இவர் இன்று கடவுளாக்கப் பட்டு  'அருமிகு எம்.ஜி.ஆர்' ஆக காட்சி தருகிறார் என்றால், வருங்காலத்தில் இவருக்கு தினமும் ஆறுகால பூஜைகளும், ஆடம்பர திருவிழாக்களும் எடுக்கும் கோயிலாக இது மாறும் என்பதில் ஐயமில்லை. ஆக மனிதன் என்னதான்  கணினியுகத்தில் இருந்தாலும், கடவுளின் இலக்கணத்தை மட்டும் அறிவதில் தோல்வியில் தான் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு நிதர்சன  சான்றாகத் திகழ்கிறது. இறைவனின் இலக்கணத்தை பற்றி இஸ்லாம் ரத்தினச் சுருக்கமாக சொல்வதை பாரீர்;

    (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 

    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 

    அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 

    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:1 ,2 ,3 ,4)

     
    இறைவனுக்கு இலக்கணமாக இறைமறை கூறும் இந்த அளவுகோலை மனித சமூகம் கையிலெடுத்தால் ஒரு கடவுளைத் தாண்டி இன்னொன்று  உருவாக வாய்ப்புண்டோ..?


    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்


    தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 14-8-2011 அன்று நடைபெற்ற ரமளான் சொற்பொழிவில் கும்பகோணம் நாச்சியார் கோயிலை சேர்ந்த ஜெஸ்லின் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தனது பெயரை முஹம்மது இஸ்மாயில் என்று மாற்றிக்கொன்டர். அல்ஹம்துலில்லாஹ்! கிளைச் செயளாலர் சுலைமான் நிஜாம்தீன் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன்
    இஸ்லாமிய நூல்களை வழங்கினார்கள்.


    தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை



    ---------- Forwarded message ----------
    From: Aneez Munower <amunower@gmail.com>
    Date: 2011/8/13
    Subject: |TMB| தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை
    To:




    நண்பரிடமிருந்து கிடைக்கப்பெற்றது.

     

    FWD AS RECEIVED FROM A FRIEND...

     கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்


    இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

    பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
    ...
    இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

    உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

    தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

    இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

    திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

    1.
    இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

    2.
    ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

    3.
    கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

    4.
    நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

    5.
    இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

    இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

    இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.

    -- ------



    --
    நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
     
    இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

    Drink Warm Water After Meal


     
     
    A very good article which takes two minutes to read.!!!  



    Heart  Attacks And Drinking Warm Water
       

    Description: cid:image001.jpg@01CAAB46.23A6E100   


    This  is a very good article. Not only about the warm water after  your meal, but about    
    Heart  Attacks .  The Chinese and Japanese drink hot tea with their meals, not  cold water, maybe it is time we adopt  their  drinking  habit  while  eating.  
       
    Description: cid:image002.gif@01CAAB46.23A6E100                                                  Description: cid:image003.jpg@01CAAB46.23A6E100     
    For  those who like to drink cold water, this article is  applicable to you. It is  
     very Harmful to have Cold Drink/Water during a meal. because, the cold water will solidify the oily  stuff that you have just consumed. It will slow down the  digestion. Once this 'sludge' reacts with the acid, it will  break down and be absorbed by  the  intestine  faster  than the solid food. It will line the intestine. Very soon,  this will turn into fats and lead  to  cancer .  It is best to drink hot soup or warm water after a  meal.
     


    French fries and Burgers are the biggest enemy of heart health. A coke after that gives more power to this demon. Avoid them for your Heart's Health

    Common  Symptoms Of Heart Attack...
     
    A  serious note about heart attacks - You should know that not  every heart attack symptom is going to be the  
    left  arm hurting   .  Be aware of intense pain  in the  jaw line .  

    You  may never have the first  
    chest  pain  during  the course of a heart attack.  Nausea  and  intense  sweating  are  also common symptoms. 60% of people who have a heart attack  while they are asleep do not wake up.  Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware.  The more we know, the better chance we could survive.  

    A  
    cardiologist  says  if everyone who reads this message sends it to 10 people,  you can be sure that we'll save at least one life. Read this  & Send to a friend. It could save a life... So, please  be a true friend and send this article to all your friends  you care about.  


    I   JUST DID




    Description: cid:image002.gif@01CAAB46.23A6E100










    --

    குமரியில் ஏகத்துவ கேபிள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கிறுஸ்துவ சகோதரர்



    ---------- Forwarded message ----------
    From: Asraf noohu <asrafnoohu@gmail.com>
    Date: 2011/8/2
    Subject: |TMB| குமரியில் ஏகத்துவ கேபிள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கிறுஸ்துவ சகோதரர்
    To:



    --
    அஸ்ஸலாமு அலைக்கும்

    குமரியில் ஏகத்துவ கேபிள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கிறுஸ்துவ சகோதரர்

     

    குமரி மாவட்டத்தில் தீன் தொலைகாட்சி என்ற உள்ளுர் கேபில் டிவி சேனல் மூலம் ஏகத்துவ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

    தாய் மார்க்கத்தில் மீண்டு வரும் குமரி மக்கள் கடந்த சில வருடங்களா நம்முடைய ஜமாத்தின் பிரசாரம் மூலம் முஸ்லிம்கள் என்றாலே கொடூரமானவர்கள் இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்ற சிந்தனையை போக்கி மனிதனை நேசிகின்ற மார்க்கம் இஸ்லாம் மனித நேயத்தை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் உருவாக்கி இன்று இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகின்றனர். அல்ஹம்துல்லில்லாஹ்.

    அதே போன்று தான் குமரி மாவட்டத்திலும் நம் ஜாமத்தின் பிரசாரம் மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றதை உருவாகி இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நாள் தோறும் பெருகி வருகின்றது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இதன் தாக்கம் அதிகமாகியுள்ளது.
    குமரியின் தென் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய தொலைகாட்ச்சியான தீன் டிவி தான் இதற்கு காரணம்.

    இந்த தொலைகாட்சி கிறஸ்தவர்கள் கணக்கில் அடங்காத டிவி சானல்களை வைத்து மக்களுக்கு பிரசாரம் செய்தாலும் நம்முடைய தீன் டிவி இஸ்லாத்தை அதன் துயவடிவில் எடுத்துரைக்கும் சானல் என்ற வாசகத்தோடு மக்களை சென்று அடைந்து வருகிறது அல்ஹம்துல்லில்லாஹ்.

    இது பிறமசயத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மிகப்பெரிய பொக்கிசமாக அமைந்துள்ளது .

    இதில்  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும்  விவாதங்கள் நிகழ்ச்சிகளை  பார்த்து விட்டு உடனே அவர்கள் தீன் டிவி அலுவலகத்தை
    தொடர்பு கொண்டு இஸ்லாத்தை நாங்கள் தவறுதலாக நினைத்து வைத்திருந்தோம் உங்கள் டிவி எங்களுக்கு உண்மையை உரைத்தது மட்டும் இல்லாமல் மரணதிற்கு முன்பு நங்கள் இந்த சத்தியத்தை ஏற்று இறைவனிடம் நன்மைஅடைய வேண்டும் என்றும் ஆசைபடுகிறோம் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளை அல்லது ஆலோசனகளை அவர்கள் கேட்கின்றனர்.

    அதே போன்று வட்டி தொழில் செய்த துரை என்ற சகோதரர் இந்த தொலைகாட்சி வட்டியை மட்டும் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வில்லை இந்த இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஆக்கிகொள்வததோடு, தான் செய்த தொழிலைய மாற்றி விட்டு ஹலலானே தொழிலை செய்பவராக ஆக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

    ஆதே போன்று நம்முடைய கிறஸ்தவ விவாதங்களை ஒளிபரப்பியதால் மிரட்டலை சந்தித்தாலும் கொள்கை உறுதியில் தொடர்ந்து ஒளிபரப்பிய பிறகு கிறஸ்தவ மக்கள் நம்மை அணுகி இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் எங்களுக்கு அதுகுறித்த புத்தகம் வேண்டும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிகள் மூலம் மதுக்கடையில் வேலை பார்க்கும் செந்தில் என்பவர் இஸ்லாத்தை மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

    மேலும் இந்த நிகழ்ச்சிகள் இன்று மாணவர்களையும் வெகுவாக கவர்ந்திருகிறது கருங்கல் பகுதியை சார்ந்த திருவிதம்கோடு பகுதியில் படிக்கும் மாணவர்களும் நம் அலுவலகத்தை அணுகி மார்க்கம் சம்மந்தமாக புத்தகங்களை பெற்றுசென்றுள்ளர்கள்.

    இப்பொது முளகுமூடு பகுதியை சார்ந்த மாணவன் மெல்பின் என்பவர் இந்த தீன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு மாநில தலைமைக்கு கடிதம் எழுதி உடனே நான் இந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று தொடர்பு கொள்ள அந்த தகவலை தலைமை குமரி மாவாட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க உடனடியாக மாவாட்ட நிர்வாகம் அந்த சகோதரரை தொடர்பு கொண்டு பேசிய பொது அவரும் நம்மை சந்திக்க வர ஆவலாக இருந்து இறுதியில் கடந்த 10.7.2011 அன்று நம்முடைய தக்கலை கிளை அலுவலகத்திற்கு வந்து மாவாட்ட துணை செயலர் பஷீர் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள்.  பின்னர்  நான் இது தான் சத்திய மார்க்கம் என்பதை உணர்துள்ளேன் என்று கூறி சத்திய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துல்லில்லாஹ் .

    கிறிஸ்துவர்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாக வாழ்ந்தாலும் இன்று இஸ்லாத்தின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வம் இந்த இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்று கிறிஸ்துவர்களை நினைக்க வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    THANKS:www.tntj.net

    குமரி மாவட்ட வலைதளம் பார்வை இடவும்
    இஸ்லாமிய விழிப்புணர்வுபெற
    கீழ்கானும் வலைதளம் பார்வையிடவும்

    www.tntjkumari.blogspot.com
    www.tntj.net
    www.onlinepj.com

    --
    அன்புடன்...
    N.அஸ்ரப் அலி

     

    --
    நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
     
    இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.