இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!





இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும்,  தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,

 இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத் திருநாளில்  உலகமெங்கும் வாழும் எங்களின்  இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு,

எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுத்திட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.


 

hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

0 Responses

கருத்துரையிடுக