ஆர்எஸ்எஸ் இந்துக்களின் நலன் விரும்பிபோல் நடித்து இந்துக்களை ஏமாற்றுகின்றது! – இந்து மஹா சபை குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ் இந்துக்களின் நலன் விரும்பிபோல் நடித்து இந்துக்களை ஏமாற்றுகின்றது! – இந்து மஹா சபை குற்றச்சாட்டு

ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது. தனது சொத்தை பெருக்கிக் கொள்வதற்காக அயோத்தி நிலத்தை கைபற்ற ஆர் எஸ் எஸ் முயலுக்கின்றது. இந்து மஹா சபை மற்றும் நிர்மோகியை தவிர வேறு யாருக்கம் அதில் உரிமை கிடையாது. என்று அனைத்து இந்திய இந்து மஹா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது..

இந்து மஹா சபையின் செய்தி தொடர்பாளர் கஸத்ரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தியாவில் இந்து சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவல நிலையை உருவாக்கியதே இந்த ஆர் எஸ் எஸ் தான்.. ஆரம்பத்திலிருந்தே இந்துக்களின் நலன் விரும்பி போல் தன்னை காட்டிக் கொண்டு இந்துக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.. பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இந்த சண்டையில் ஆர் எஸ் எஸ் யின் உண்மை முகம் அவர்களாளேயே வெளிப்பட்டதோடு இவர்கள் ராமர் மீது கொண்டுள்ள பக்கதியினால் ராமருக்கு கோவில் கட்ட பாபர் மஸ்ஜித் இடத்தை கேட்கவில்லை தங்களது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காகவே இது போன்று மக்களை ஏமாற்றுகி்ன்றனர் என்பதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 Responses

கருத்துரையிடுக