நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/1/29
Subject: (TMP) நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tamil-islam@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, contact@koothanallurmuslims.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, ervadidargah@gmail.com, EASTADIRAI8@gmail.com, alamanmail@gmail.com, alhira.rafi@gmail.com, kabeerahamed14@yahoo.com, rkmmrahman@yahoo.com, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, sdpidt@gmail.com, mailtopetti@gmail.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, shafiq.aym@gmail.com



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!

முன்னாள் பாதிரியார்-இத்ரீஸ் தௌபீக்

இது இங்கிலாந்தின் கிறிஸ்தவப் பாதிரியார் இத்ரீஸ் தௌபீக்கிற்கு நிகழ்ந்தது.

அவர், இங்கிலாந்திலுள்ள ஒரு பாடசாலையில் தனது மாணவர்களுக்கு அல்குர்ஆனை ஓதிக்காட்டினார். அதுதான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான ஆரம்ப எட்டாக அமைந்தது. அவர் கெய்ரோவிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒரு விரிவுரையை நிகழ்த்தியபோது கூறிய கருத்துக்கள்தான் இவை.

நான் ஒரு பாதிரியாராக இருந்து சில வருடங்களாக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியடைந்தேன். என்றாலும் என் ஆழ்மனதில் சந்தோஷம் இருக்கவில்லை. சில விஷயங்கள் பிழை என்பதை நான் உணர்ந்தேன். உண்மையில் அது இறைவனின் அருள்தான். சில சம்பவங்களும் தற்செயல் நிகழ்வுகளும் எனது வாழ்வை இஸ்லாத்தை நோக்கி வழிநடத்திவிட்டன.

தௌபீக்கின் வாழ்வில் நடந்த மற்றுமொரு முக்கியமான நிகழ்வு எகிப்தை நோக்கிய அவரது பயணமாகும். அவர் அதனைப் பற்றிக் கூறும்போது, நான் எகிப்தை பிரமிட்டுகள், ஒட்டகங்கள், மணல், பாம் மரங்கள் உள்ள ஒரு நாடாகத்தான் நினைத்திருந்தேன். நான் அங்கு சென்றடைந்தபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஐரோப்பாவைப் போன்றே அங்கும் அழகான கடற்கரைகள் இருந்தன. கெய்ரோ நோக்கிய எனது பயணம் எனது வாழ்வில் நான் கழித்த மிகச் சிறந்த காலமாகும். இந்தப் பயணம்தான் எனது வாழ்க்கையில் முஸ்லிம்களை, இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும். எகிப்தியர்கள் சிறந்த, இனிமையான ஆனால், உறுதியான மக்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

எல்லா இங்கிலாந்து மக்களையும் போலவே இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்களைப் பற்றிய எனது எண்ணமும் சிறந்ததாக இருக்கவில்லை. நான் அவர்களை தற்கொலையாளிகளாகவும் போராடுபவர்களாகவுமே தொலைக்காட்சிகள் மூலம் அறிந்திருந்தேன். அதனால், இஸ்லாம் குழப்பங்கள் நிறைந்த மார்க்கம் என நான் விளங்கியிருந்தேன். என்றாலும், நான் கெய்ரோவில் இருந்தபோது இந்த மார்க்கம் மிக அழகானது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

சாதாரண மக்கள் தெருவில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். அல்லாஹ்வை வணங்க வருமாறு பள்ளிவாசலிலிருந்து அழைப்பொலி கேட்டது. அவர்கள் உடனடியாக மிகுந்த நம்பிக்கையுடன் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அவர்கள் தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கின்றார்கள்; தர்மம் செய்கின்றார்கள்; மக்காவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக்கின்றது. இந்த உலக வாழ்வின் பின்னர் நிலையான சுவன வாழ்க்கை இருக்கின்றது என அவர்கள் நம்புகின்றார்கள்.

நான் இங்கிலாந்திற்குத் திரும்பியவுடன் எனது மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பதவியை ராஜினாமாச் செய்தேன். இங்கிலாந்தின் கல்வித் திட்டத்திலுள்ள ஒரே ஒரு கட்டாயப் பாடம் சமயமாகும். நான் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம், பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களைப் பற்றி கற்பிப்பவனாக இருந்தேன். எனவே, நான் ஒவ்வொரு நாளும் இந்த மதங்களைப் பற்றிக் கற்பிப்பதற்காக தயாராக வேண்டி யிருந்தது. எனது மாணவர்களில் அதிகமானவர்கள் அகதிகளான அரபு முஸ்லிம்களாவர். இன்னொரு வகையில் சொல்வதானால் இஸ்லாம் பற்றிக் கற்பிப்பது எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்தது.

குறிப்பாக, டீனேஜ் பருவத்தினர் மிகுந்த பிரச்சினைகளைக் கொண்டவர். ஆனால், எனது மாணவர்கள் ஒரு முஸ்லிம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தார்கள். அவர்கள் தூய்மையானவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு நட்புணர்வு வளர்ந்திருந்தது. அவர்கள் ரமழான் காலத்தில் தொழுவதற்காக எனது வகுப்பறையைக் கேட்டார்கள். அதிrஷ்டவசமாக எனது வகுப்பறை மட்டுமே 'காrpeட்' விரிப்பிடப் பட்டதாக இருந்தது. எனவே, அவர்கள் ஒரு மாதகாலமாக தொழும்போது நான் வழக்கமாக அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை அவதானித்து வந்தேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும் அவர்களோடு சேர்ந்து நோன்பு நோற்றேன்.

ஒரு தடவை வகுப்பில் நான் அல்குர்ஆனைப் பற்றிக் கற்பிக்கும்போது இந்த வசனத்தை ஓதினேன்.

"அவர்கள் தூதருக்கு இறக்கப் பட்டவற்றைச் செவிமடுக்கும் போது அவர்களது கண்களி லிருந்து கண்ணீர் வழிந்தோடும். அவர்கள் சத்தியத்தை அறிந்து கொண்டார்கள்." (மாஇதா: 83)

எனது கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. நான் அதனை மாணவர்களுக்குத் தெரியாமல் அதனை மறைத்துக் கொள்வதற்கு முயற்சித்தேன். எனது வாழ்க்கையின் இன்னுமொரு முக்கியமான நிகழ்வுதான் 2001 செப்டம்பர் 11 தாக்குதலாகும். அதற்கு அடுத்த தினம் நிலத்தின் கீழுள்ள ஓர் அறையில் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அமெரிக்காவில் போன்று இங்கிலாந்திலும் தாக்குதல் நடக்குமோ என்ற பயம் எனக்கிருந்தது. அதேநேரம் மேற்கத்தியர்கள் இந்த மார்க்கத்தினால் மிகவும் பயந்திருந்தனர். முஸ்லிம்கள் பயங்கர வாதத்தைத் தோற்றுவிப்பதற்காக உருவாகியுள்ளனர் என்று அவர்கள் நினைத்தனர்.

எவ்வாறிருந்தபோதிலும் முஸ்லிம்களுடனான எனது முன்னைய அனுபவங்கள் என்னை வேறொரு வித்தியாசமானக் கோணத்தில் சிந்திப்பதற்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் ஏன்? நாம் ஏன் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகக் காண்கின்றோம். அவர்களுக்கு நடப்பதைப் போன்று கிறிஸ்தவர்களுக்கும் நடந்தால் கிறிஸ்தவர்களும் அதே வழியில் செல்வார்களா?

ஒரு நாள், நான் லண்டனிலுள்ள மிகப் பெரிய பள்ளிவாசலுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்றேன். நான் லண்டன் மத்திய பள்ளிவாசலுக்குச் சென்றபோது அங்கு யூசுப் இஸ்லாம் இருந்தார் (இஸ்லாத்தைத் தழுவிய முன்னாள் பாப்பிசைப் பாடகர்). அவரைச் சுற்றி வட்டமாக சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், நீங்கள் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்ன செய்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கவர் இவ்வாறு கூறினார். ஒரு முஸ்லிம் இறைவன் ஒருவன் என்பதை நம்ப வேண்டும். ஒரு நாளில் ஐந்து வேளைகள் தொழ வேண்டும். ரமழானில் நோன்பு பிடிக்க வேண்டும். நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு, இவை அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ரமழானில் நோன்பும் பிடித்தேன் என்று கூறினேன்.

அவர் என்னிடம் அப்படியானால் எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? ஏன் பின்வாங்குகின்றீர்கள்? என்றார்.

நான், இல்லை. எனக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் உத்தேசமில்லை என்று கூறினேன். அப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் எழுந்து சென்று தொழுவதற்காக வரிசையில் நின்றார்கள். நான் பின்னால் அமர்ந்திருந்தேன். நான் அழுதேன். தொடர்ந்தும் அழுதுகொண்டிருந்தேன். நான் ஏன் முட்டாளாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என என்னிடமே நான் கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பின்னர் நான் யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

அவரிடம் நான் இஸ்லாத்தை ஏற்பதற்காக சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கற்றுத் தருமாறு கேட்டேன். அவர் எனக்கு அதன் கருத்தை ஆங்கிலத்தில் தெளிவு படுத்தினார். பின்னர் அவர் அரபு மொழியில் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று கூறினார். நானும் அதனையே கூறினேன். இதனை கூறியபோது தௌபீக்கின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

பின்னர், தௌபீக் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பான ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் இஸ்லாத்தை பலரும் சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம்; அது தீவிரவாதத்தின் மார்க்கமல்ல என்று கூறுகின்றனர். ஆனால், அதனைத் தெளிவுபடுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை. எனவே, நான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஒரு புத்தகத்தை எழுதத்தீர்மானித்தேன். நான் அதில் இஸ்லாம் ஓர் அழகான மார்க்கம் என்பதையும் அது நிறைய வரப்பிரசாதங்களைக் கொண்டிருக்கின்றது என்பதையும் மக்களுக்குச் சொல்ல முயற்சித்தேன்.

தௌபீக், நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றார். அந்தப் புத்தகம் அவர் பற்றி எழுதப்பட்டுள்ள ஏனைய அனைத்துப் புத்தகங்களை விடவும் வித்தியாசமானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவி க்கின்றார். அவர், இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகச் சிறந்ததும் மிக விரைவானதுமான வழிமுறை, யதார்த்த வாழ்வில் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை தனது வாழ்க்கையில் சிறந்த முறையில் எடுத்து நடப்பதாகும் என்று கூறுகின்றார்.

 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

0 Responses

கருத்துரையிடுக