Fwd: (TMP) உணரப் படாத தீமை சினிமா



---------- Forwarded message ----------
From: A.M.Haris . <harisimam@hotmail.com>
Date: 2010/10/28
Subject: (TMP) உணரப் படாத தீமை சினிமா
To: sahara tamil groups <saharatamil@yahoogroups.com>


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உணரப் படாத தீமை சினிமா

சகோதரர் M. அன்வர்தீன்


'நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்…

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.

முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.

அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் 'சினிமா' என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.
 
நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 
ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.

'விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை' எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. "விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?" என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.

'கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்' – ஹதீஸின் சுருக்கம். 

சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக!  

'நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்' 17:36.

சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!
 
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!

கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.
 
கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். "கருத்தம்மா' என்று படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும்.  அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். 

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.


நன்றி- சுவனத்தென்றல்.காம்.

அன்புடன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.

       

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnl9tuaSx8P1dkTLZaCNULoQ4kSGdLa7LVdQyfddG0XQMqqdv083ulMqZI1KyOx6y5mrW4C0SPGMKM7J7oLQlmVCOnuy57T3eZNlFsaWrsajnAByb28FRzyc-Dx2tpZA20zQBQHuggrX6j/s1600-r/title.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

0 Responses

கருத்துரையிடுக