லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டார்.

லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம்
மதத்திற்கு மாறிவிட்டார். "இஸ்லாமிய சமூகத்தில் உறுப்பினராக இருப்பதற்கு
பெருமைப்படுகிறேன்' என கூறியுள்ளார்.பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி
பிளேரின் மைத்துனி லாரன் பூத்(43). இவர், ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான,
"பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். டோனி பிளேர், மத்திய கிழக்கு
நாடுகளுக்கான அமைதித் தூதராக இருந்த போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க
நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று அடிக்கடி அவரை விமர்சித்து
வந்தார்.கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக்
கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென்றிருந்தார். லண்டன் திரும்பிய
லாரன் பூத், முஸ்லிம் மதத்திற்கு மாறினார். மது அருந்துவது, பன்றி
இறைச்சி உண்பது போன்றவற்றை கைவிட்டு ஐந்து வேளையும் தொழுகிறார்.
எதிர்காலத்தில் பர்தா அணியவும் திட்டமிட்டுள்ளார்.
0 Responses

கருத்துரையிடுக