கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூடி ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
சர்வதேச அளவிலே ஆயுதப் பேரங்களை கட்டுப்படுத்திட ''ஆயுத பேர உடன்படிக்கை'' - என்ற சர்வதேச கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றினை உருவாக்க முடிவெடுத்துள்ளது. 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இதற்கான ஆரம்ப நிலை கமிட்டிகளை அமைத்து மிக வலுவான ஒரு சர்வதேச உடன்படிக்கையினை உருவாக்கிடவும், சர்வதேச ஆயுத பேர உடன்படிக்கை மாநாட்டினை'' 2012-ல் கூட்டி அதிலே இந்த உடன்படிக்கை பற்றி விரிவாக விவாதிப்பது எனவும் முடிவெடுத் துள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் இந்த உடன்படிக்கைக்கு கட்டுப் பட்டே இனி ஆயுத பேரங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது. இந்த உடன்படிக்கை மிக நவீன ஆயுதங்களைப் பற்றியதல்ல. மிக வும் பாரம்பரியமான ஆயுதங்கள் (கன்வென்ஷனல் ஆர்ம்ஸ்) மட்டுமே. துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் போன்ற நடுத்தர, சிறு ஆயுதங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமை மீறல்கள், சர்வாதிகாரம், காட்டு மிராண்டித்தனமான கொலைகள் ஆகியவை கட்டுக் கடங்காமல் போய் விட்டதன் விளைவே இந்த உடன் படிக்கைக்கான அவசியமும், அவசரமும்.
உலகின் அனைத்து நாடுகளும் இன்று தன்னை ஆயுத பாணிகளாக்கி வருகின்றன. மைட் ஈஸ் ரைட்'' எனப்படும் பலவானே புத்திமான்'' என்ற தலைகீழ் பாடம் இன்று அனைத்து அரசுகளுக்கும் தாரக மந்திரமாகியுள்ளது.
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (ஸ்டாக்ஹோம் இன்டர் நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்) - என்ற அமைப்பு தொகுத்துள்ள புள்ளி விவரப்படி 2008-ம் ஆண்டில் இந்த உலகின் அனைத்து அரசுகளும் ராணுவத்துக்காக செய்த மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரத்து நானூறு கோடி டாலர்கள். (1,46, 400,00,00,000 டாலர்கள்) ஒரு டாலர் மதிப்பு ஏறக்குறைய 50 ரூபாய் என்றால் இந்திய பண மதிப்பில் கணக்கிட்டுப் பாருங்கள் இத்தனை ஆயுதங்களும் எதற்காக? மனிதர் உயிர்களை பலிவாங்க - மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்க.
உலகின் இந்த மொத்த ராணுவ செலவிலே அமெரிக்கா மட்டும் 41.5 சதவீதம் செலவுசெய்கிறது. இதற்கடுத்து சீனா 5.87 சதவீதமும் பிரான்ஸ் மற்றும் இங் கிலாந்து தலா 4.5 சதவீதமும் செலவழிக்கின்றன. அதிக ராணுவ செலவு செய்யும் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. அது 2.1 சதவீதம் உலக ராணுவ செலவிலே தன் பங்காக செலவு செய்கிறது. இவ்வளவு ஆயுதங்களும் எதற்காக பயன்படுகின்றன. ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச பொது மன்னிப்புக் கழகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை யில், சர்வதேச அளவிலே கட்டுப்பாடற்ற ஆயுத பேரங் களால் பல்வேறு அரசு, அரசு சாராத அமைப்புகள், புரட்சி கரக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இந்த ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகவும், இது படு கொலைகள், பாலியல் வன் முறைகள், படுகாயங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக வும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு இந்த ஆயுதங்கள் கைகொடுப்ப தாகவும் கூறுகிறது.
1989-முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வருடம் ஒன்றுக்கு சராசரியாக 2,50,000 மக்கள் ஆயுத மோதல்களில் கொல்லப்படுவதாகவும், இந்த ஆயுத மோதல்களில் ஈடுபடாத பொது மக்கள் ஆயுத மோதல் காரணமாக வருடம் ஒன்றிற்கு சுமார் மூன்று லட்சம் பேர் பலியாவதாகவும் ஆய்வு கூறுகிறது. உலக மனித உரிமை மீறல்களில் 60 சதவீதம் ஆயுதங்களின் துணை கொண்டே நடக்கின்றன.
ஆயுத மோதல்களின் விளைவாக மக்கள் தங்களின் உயிர் மற்றும் மானத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு, உயிரைக் கையில் பிடித்தபடி புலம் பெயர்கின்றனர். 2008-ம் ஆண்டு முடிவில் செய்த ஆய்வின்படி சுமார் இரண்டு கோடியே அறுபது லட்சம் மக்கள் இந்த ஆயுத மோதல் களால் புலம் பெயர்ந்துள்ளனர். இதை அகதி களுக்கான ஐக்கிய நாடுகள் கவுன்சில் (யூ.என்.எச்.சி. ஆர்) தெரிவிக் கிறது. ஆயுத மோதல்களால் புலம் பெயர்ந் தோரின் அடிப்படை வாழும் உரிமை, அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுகின் றன. உலகின் புலம் பெயர்ந்தோர் தொகையில் நான்கில் ஒரு பங்கு ஆப்கன் நாட்டவர் ஆவர். இத்துடன் ஈராக், சோமாலியா, சூடான், கொலம்பியா, காங்கோ ஆகியவை புலம் பெயரும் நாட்டவர் பட்டியலில் உலகின் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கின்றன.
புலம் பெயர்ந்த மக்களுக்கு அனைத்து அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதுடன் உண்ண உணவு, நீர், மருத்துவம் ஆகியவை கிடைப்பதில்லை. சுகாதார சீர்கேடு கொண்ட சூழலில், சத்தான உணவும், சுகா தாரமான குடிநீரும் இன்றி வாழும் இவர் களை கொள்ளை நோய்கள் தாக்கும் போது தகுந்த மருத்துவ உதவியுமின்றி சாகின்றனர்.
இந்த ஆயுத மோதல்கள் நடக்கும் நாடுகளில் அரசு தரப்பிலும், அரசுக்கு எதி ரான ஆயுத குழுக்களிலும் இளம் சிறார்களை போர் வீரர்களாக பயன்படுத்துகின்றனர். அவர்களை ஆயுதபாணிகளாக்கி முன் னிறுத்துகின்றனர். இதனால் அந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலமே இருண்டு போகிறது அல்லது இல்லாமல் போய் விடுகிறது.
இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்பதில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. ஹஹஸ்டாக் ஹோம் பன்னாட்டு சமாதான ஆராய்ச்சி நிறுவனம்' வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, 2009-ம் வருடம் மட்டும் அமெரிக்கா, சுமார் 680 கோடி டாலர் மதிப்பிலான சிறு, நடுத்தர ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ரஷ்யா சுமார் 450 கோடி டாலரும், ஜெர்மனி சுமார் 250 கோடி டாலரும், பிரான்ஸ் சுமார் 185 கோடி டாலரும், இங்கிலாந்து சுமார் 102 கோடி டாலரும் ஆயுத ஏற்றுமதி செய்துள்ளன. உலகின் முதல் பத்து ஆயுத ஏற்றுமதி நாடுகளில் எட்டாவது இடத்தை பிடித்துள்ள இஸ்ரேல் சுமார் 76 கோடி டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இன்று உலகின் இயற்கை வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்து தங்களை வளமாக்கிக் கொள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் போட்டியிடுகின் றன. மனித உயிரும், இயற்கையும் அழிவது பற்றி எவ்வித கவலையும் இந்த நிறுவனங்களிடம் இல்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிக்க இந் நிறுவனங்களுக்கு ஏகாதிபத்திய அரசுகள் எல்லா உதவியும் செய்கின்றன. அப்படி உதவி செய்யும் அரசியல் தலைமையை மட்டுமே இந்த வியாபார நிறுவனங்கள் தம் பொருளாதார பலத்தால் தம் நாட்டின் அரசு தலைமையாக கொண்டு வருகின்றன. வலிமை குறைந்த நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அந் நாடுகளின் அரசுகள் ஏதும் எதிர்ப்பு தெரிவித்தால் அந் நாடுகளுடன் ஏதேனும் ஒரு காரணம் காட்டி போர் நடவடிக்கை எடுக்கக் கோரி தம் நாட்டு அரசை இந்த நிறுவனங்கள் பணிக்கின்றன. போர் மூளும் போது இந்த நிறுவனங் களே பெருமளவில் ஆயுதங்களை தயாரித்து இரு தரப்பிலும் விற்கின்றன. ஆயுத பலத்தால் நாடுகளை அடிமைப்படுத்தி அதன் இயற்கை வளங்களை கொள்ளை யிட ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒரு பக்கம் இயற்கை செல்வங்களின் கொள்ளை - மறுபக்கம் போரை உருவாக்கி ஆயுத வியாபாரம் என செழிக்கும் இந்த நிறுவனங்கள்தான் ஒவ்வொரு நாட்டிலும் அரசு தலைமையில் அமர வேண்டியவர்களை முடிவு செய்கின் றன. இவ்வாறு தொழில் துறை - அரசுத்துறை - ராணுவத் துறை இணைந்தே உலகின் அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானம் செய்கின்றன.
பல்வேறு நாடுகளுக்கிடையில் பிணக்குகளை உரு வாக்கி, மோத விட்டு இருதரப்புக்கும் ஆயுதங்களை விற்பனை செய்து, பின்னர் ஆயுத உதவி'' தந்ததற்காக அந் நாட்டின் பெட்ரோல், தங்கம், வைரம், இரும்பு, செம்பு என அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி எடுத்துச் செல்லும் உரிமைகளை இந் நிறுவனங்கள் பெற்று விடுகின்றன. மத, மொழி, இன உணர்வுகளால் ஈர்க்கப்படும் மக்களின் கண்களுக்கு புலப்படாத சக்திகள் இவை. அனைத்து நாடுகளின் அரசுகளை தீர்மானிக்கும் சக்திகளும் இவையே. வல்லரசுகள் எனப்படும் நாடுகளின் மிகப் பெரும் நிறுவனங்கள் இவை. இவற்றின் வாழ்வுக் கும், வளத்துக்கும் வலு சேர்க்கும் நடவடிக்கைகள் தான் ஈரான் - ஈராக் யுத்தம் - இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் கள் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - ஈராக் ஆக்கிர மிப்பு - ஆப்கன் ஆக்கிரமிப்பு போன்ற அத்தனை ஆயுத மோதல்களும்.
இந் நிலையில் ஐ.நா.வின் ஆயுத பேர கட்டுப்பாட்டு உடன்படிக்கை'' என்பது நடவடிக்கை சாத்தியமா? கையெழுத்தாகும் உடன்படிக்கை 'காகிதத்தில் எழுதிய சர்க்கரை'யாகவே இனிக்கும்....
கருத்துரையிடுக