மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்


உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் – கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.

பழமையானது – உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.

இளமையானது – முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.


பல்கேரியாவில் தொழுகை

இத்தாலியில் தொழுகை
இத்தாலியில் தொழுகை

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.

குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.

இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.


ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)
இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.

“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.


(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)
முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ரியாதிலிருந்து பைசல்

மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!



---------- Forwarded message ----------
From: Siraj Abdullah <siraj.salaam@gmail.com>
Date: 2010/9/22
Subject: (TMP) மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!
To: anaithuthowheethsagotharargal@googlegroups.com, tmpolitics@googlegroups.com



மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாபர் மசூதி வழக்கில் 24ம் தேதி தீர்ப்பு

மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!

200 ஆண்டுகாலமாக அடிமைபட்டு கிடந்த நம் தாய்நாடான இந்தியாவில் ஆங்கிலேய அராஜக அரசாங்கம் கொடுத்த பல பெரிய அரசாங்க பதவிகளைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்திய நாட்டு விடுதலைக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து பின்னிப்பினைந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் தேடிக்கொடுத்த நல்ல சமுதாயம் நம் முஸ்லிம் சமுதாயம் அன்றைய சூழ்நிலையில் நம் சமுதாயத்தை எவரும் தீவிரவாதி என்று பச்சை குத்தவில்லை!

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டு, தரம்தாழத்தப்பட்டு ஒரு சில இடங்களில் இறைவனைக்கூட தொழ இயலாத வண்ணம் தடுக்கப்பட்டோம் இறுதியாக இந்துக்கள் அல்ல மாறாக இந்துசகோதரர்களில் ஒழிந்துக் கொண்டுள்ள சில கருப்பு ஆடுகளான காவி கயவர்களால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய பாபர் மசூதியை இழந்துவிட்டோம் இன்று இவர்களின் சூழ்ச்சியால் மசூதி இருந்த இடத்தில் தொழுவதா? கல்லை கும்பிடுவதா என்று தீர்மானிக்க உள்ளார்கள் இதன் தீர்ப்பு வரப்போகிறதாம்!

இந்திய நாட்டு சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயமாகிய நமக்கு இன்றைய தினம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது மஹ்ஷர்வரை பொறுத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுமா? பொறுத்திருப்போம்!


பாபர் மசூதி தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது

பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கு மன வேதனையும் இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கு மன வேதனையும் ஏற்படும் இது இனப் பிரிவினைக்காக வகுக்கப்பட்ட 50 ஆண்டுகால பொன்விழா சூழ்ச்சி மட்டுமல்லாது வரலாற்று சதியுமாகும். இந்த தீர்ப்பு 2010ல் மட்டுமல்ல 2050ல் வெளியானாலும் இந்திய பாரம்பரியமிக்க இந்துக்கள் இஸ்லாமியர்கள் இனப் பிரிவினைக்கு பாதகமான சூழலே நிழவும். (அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!)


1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால் நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும் ஆரவாரப்படக்கூடாது இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிராக உள்ளவர்களுக்கு மனவேதனை ஏற்படும் மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்! எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறலாம்!


2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது ஏனெனில் நாம் இஸ்லாமியர்கள் அதாவது அமைதியை விரும்புபவர்கள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும்பட்சத்தில் நாம் கீழ்கண்டவாறு நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்! மேலும் கீழ்கண்டவாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

  1. பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்குபவன் மனிதன் இறைவனல்ல!

  1. அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோரில் உயர்ந்தவன்! அவன் மஹ்ஷர் எனும் மறுமைநாளில் நமக்கு இழைக்கப்படட அநீதிக்கு பகரமாக நன்மையை கொடுப்பான்!


மேற்கண்ட இந்த இரண்டு நம்பிக்கைகளையும் கீழ்க்கண்ட ஒரு நபிமொழியின் மூலம் உணர இயலும்

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200


மேற்கண்ட நபிமொழியை உணர்ந்த நாம் இனி கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் சுவையையும் உணர வேண்டும்

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)


இங்கு பாபர் மசூதிக்கு தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம் சமுதாயத்திற்கு நன்மையை தேடிக்கொள்ளும் விதமாக அமைதிகாக்க வேண்டும் அவ்வாறு அமைதி காப்பதால் மறுமையில் இவர்களுக்கு (காவி கயவர்களுக்கு) எதிராக அல்லாஹ்வுக்கு சாட்சி கூறுபவர்களாக நாம் மாறலாம்!

இன்று இவர்கள் நம்மை வென்றுவிடலாம் ஆனால் மறுமையில் நாம் நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்விடம் எடுத்துக்கூறி அல்லாஹ்வுக்காகவே நாம் சாட்சிகளாக மாறிவிடலாம்!


நபிகளார் (ஸல்) காட்டிய மாபெரும் பொறுமை

தாயிப் நகரத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்ட்டார்கள் உச்சகட்ட வேதனைக்கு என்று கூறும் அளவுக்கு சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் கூட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அவரின் முன் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கிவிடவா என்று கேட்க நபிகள் பெருமனாரோ தாயிப் நகர மக்கள் என்றைக்காவது ஒருநாள் மனம் திருந்தலாம் என்று எண்ணி அந்நரக மக்களின் மீது கருணை காட்டினார்கள் மன்னித்து விட்டார்கள் பின்னர் மக்கா மாநகரை அடைந்தார்கள்.

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே அன்று நம்முடைய அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு எதிராக கொடுமை இழைத்த சமுதாயத்தின் மீது காட்டியை பொறுமையை இன்று முஸ்லிம்களாகிய நாம் இந்துக்கள் மீது காட்டி பாபர் மசூதியின் தீர்ப்பின் போது அமைதிகாக்கலாமே! என்றைக்காவது ஒருநாள் தாங்கள் பாபர் மசூதியை இடித்தது தவறுதான் என்று உணர்ந்து இவர்கள் இஸ்லாத்தை தழுவலாமே இதனால் அல்லாஹ் நமக்கு ஒரு நன்மையை முற்படுத்தி வைக்கலாமே!


அல்லாஹ்வின் மீது ஈமான் வைத்தவன் என்றுமே துன்பப்பட மாட்டான் அதுபோலத்தான் இந்த தீர்ப்பும்!

1)      தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் நமக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சி கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்

2)      தீர்ப்பு இந்துக்களுக்க சாதகமாக இருக்கம் பட்சத்தில் தீர்ப்பளிப்பவன் சாதாரண மனிதன்தான் அல்லாஹ் கிடையாது என்ற பெறுமிதம் கிடைக்கும்! இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதானே! இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்


எனவே முஸ்லிம்களாகிய நாம் அமைதி விரும்பிகள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இது ஓர் உண்ணதமான வாய்ப்பு இதை நலுவவிடாதீர்கள். பாபர் மசூதி தீர்ப்பு நமக்கு பாதகமாக அமைந்துவிட்டதே என்ற எண்ணி பொங்கி எழுந்து உங்கள் குடும்பத்தை நாசப்படுத்திக்கொள்ளாதீர்கள் நாம் பொங்கி எழ வேண்டும் அதனால் சிறை சென்று குடும்பத்தாரை நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டும் என்று கருப்பு ஆடுகள் சூழ்ச்சிகள் செய்யலாம் எனவே நாம் உயிர் உள்ள வரை பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம் உயிருடன் இருக்கும் போது நீதி கிடைக்கவில்லை எனில் மரணித்தபிறகாவது மஹ்ஷரில் (மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில்) அல்லாஹ்விடம் நீதியை பெறலாம்!

அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!

என் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே இந்த இக்கட்டான பாபர் மசூதி தீர்ப்புநாளில் இனக்கலவரத்தை தூண்டும் சக்திகளின் மாய வலையில் சிக்கி நம் சகோதரத்துவத்தை சீர்கெடுத்து நம்மிடையே பகைமையை வளர்த்துக் கொள்வதைவிட தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக!


சிந்திக்க படைக்கப்பட்ட சமுதாயமே இதோ சிந்திக்க சில வசனங்கள்

அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்" (அருள்மறை குர்ஆன் 3:200)

வேறோர் இடத்தில், 'யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்' (அருள்மறை குர்ஆன் 42:43)

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

'பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்' (அருள்மறை குர்ஆன் 2:153)

பொறுமைக்கு இலக்கணம் இஸ்லாமியர்களே என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இதுவே சிறந்த தருணம்! தவறவிடாதீர்கள்! இஸ்லாத்தின் கோட்பாடுகளை தவறிவிட்டு விடாதீர்கள்

சிந்திப்பீர்! செயல்படுவீர்!




--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

காவி பயங்கரவாதத்தின் உண்மை முகம்



---------- Forwarded message ----------
From: ?????? ??????? <harisimam474@gmail.com>
Date: 2010/9/19
Subject: [saharatamil] [சஹாரா தமிழ்] காவி பயங்கரவாதத்தின் உண்மை முகம்
To: saharatamil@yahoogroups.com


 

http://brahmanicalterrorism.files.wordpress.com/2008/12/7.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtNaROrcQI54sdOCEX1hP8wqymXxqj-0XBg2e9QdV6YTn-xp5QPZMkROTCNO0BwAMj2SdGm13UDiVQsgiUi1jlYAImVtG98RBcHdFonowl45hmxGvKuMotmPXEbXSymgx96mslsgeWsSkS/s400/hindutvva.jpg
http://t2.gstatic.com/images?q=tbn:JA-yEwKb_hRrkM:http://photos.sunyaprajna.com/DurgaVahini3.jpg&t=1
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKBI_8pMeb6St47O5tHQ14KMCDCR6us4Htg_vKy0sz2XE7BraGgTKVIg9aJD14lX-W41I8CCL9WLHmE_8Afq5byrsUlPOUcbX_J67sqEfJ2-lsrIkDBKJXs-6z1-KT1qmt0y1WV-oUGFqX/s320/12.jpg
பசி...நாட்டு மக்கள் பசியில் வாடிக்கிடப்பதில் உலகச்சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும்….பசி அதாங்க ப.சிதம்பரம்,,,,,
பழங்குடியின மக்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்றார்...ஆம் என்றனர் இந்து மத அடிப்படைவாதிகள் ஈழ போராளிகளை தீவிரவாதிகள் என்றார்….ஆம் என்றனர் இந்து மத அடிப்படைவாதிகள்..

இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணமென்று ஊடகங்கள் பரப்பின…..அப்பொழுதும் ஆமாமென்று அவசர அவசரமாய் தலையாட்டின இந்த அடிப்படைவாத அமைப்புகள்…(இவர்கள்தான் பரப்பினார்கள் என்பது வேறு செய்தி)
காசுமீரில் நடக்கும் நியாயமான போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியது பசியை உள்ளடிக்கிய காங்கிரசு அரசு ஆமோதித்தனர் இந்த இந்து அடிப்படைவாத அமைப்புகள்.

ஆனால், ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தியவுடன் கொதித்தெழுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுவதை ஆதரிக்க முடியாது என்று மக்களைவிலேயே தெரிவிக்கின்றனர். தீவிரவாதம் மதம் கடந்தது, தீவிரவாதத்திற்கு நிறம் கிடையாது என்று வேறு விளக்கம் கொடுக்கின்றனர்(இணைப்பு).
இந்த அடிப்படை வாதிகளின் தேச பக்தியின் லட்சணத்தை உலகுக்கு அறிவிக்க……

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சல் குருவை சிறிதும் தாமதமில்லாமல் தூக்கிலிட சொல்லி கூக்குரலிடுகின்றனர்…அவருடைய மேல் முறையீடு….நாடாளுமன்ற வளாகம் குறித்து நியாயமாக ஐயங்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தங்களை தேசபக்தர்களாக புனைய முனைகின்றனர்
இதே தேசபக்தர்கள்தான் ,
பிரக்யா சிங், புரோகித் போன்ற மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டவர்களாக கைது செய்யப்பட்ட பொழுது அது போலியான நடவடிக்கை என்று குரலெழுப்பினர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
குஜராத் ஹிட்லர் மோடிக்கு ஆதரவாக குரலெழுப்புகின்றனர்….

இந்து மத அடிப்படைவாதத்தின் கோர முகம் மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள், சிறுபான்மை இயக்கத்தினர் மூலமும் கர்கரே, முஷ்ரீப் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மூலமும் வெளிப்பட்டு வரும் சூழலில்….

ஈழத்திற்கு செய்யப்பட்ட துரோகத்தால் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிமிகு பிரச்சாரத்தால் தோற்றார்….தமிழக மக்களின் உணர்ச்சியிடம் தோற்றார்….ஆனால், மாண்புமிகு (மான்ஙகெட்ட)இந்திய மக்களாட்சியின் துணை கொண்டு வென்றார்…

காங்கிரசை கட்சியின் சார்பாக தோற்றும் வென்று இன்று உள்துறை அமைச்சராயிருக்கும் ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற சொல்லாடலை பயன்படுத்திய தருணத்தை கணக்கில் கொள்ளாமல் அவருடைய அந்த சொல்லாடல்களால் உச்சி குளிர்ந்து போய்விட முடியாது.

காங்கிரசு என்னும் பேராயக்கட்சி அணுசக்தி ஒப்பந்தத்தை பாரதீய ஜனதா போன்ற எதிர்கட்சிகளோடு இந்தியா என்னும் கூட்டமைப்பின் சார்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள தருணம் இது. மத உணர்வுகளை உரமாய் வைத்து அரசியல் நடத்துவதை தெரிந்து கொண்ட இவர்களால்…அணுசக்தி ஒப்பந்தத்தின் மக்கள் விரோத கூறுகளை அம்பலப்படுத்தவதிலிருந்து சமூக நலன் கருதிகளையும், பொது மக்களையும் திசை திருப்புவதற்கான...நோக்கமாக இருக்குமென ஆழமாக நம்பலாம்…

ஏனென்றால், மும்பையில் நடந்த தாக்குதலுக்கு முன்பாக சிவராஜ் பாட்டில் உள்துறை அமைச்சராக இருக்க, இந்து தீவிரவாத்திற்கு பின்புலமாக இயங்கும் சக்திகளின் சதிதிட்டத்தை விளக்கி, அந்த சதி திட்டத்தை முறியடிக்க, முளையிலேயே கிள்ளி எறிய முக்கிய அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட சதிகார அயோக்கியர்களை(காங்கிரசு காரர்களும் உண்டு)கைது செய்வதற்கும், கர்கரேஆதரவு கோரியதாக முஷ்ரீஃப்(கர்கரேயின் காவல் துறையின் நண்பர்) தனது "கர்கரேயை கொன்றது யார்" என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்…

அதன் பிறகுதான் மும்பை தாக்குதல் நடந்தது அல்லது வலிந்து இங்குள்ள அடிப்படைவாத அமைப்புகளின் உதவியோடு நிகழ்த்தப்பட்டது...அதில் இஸ்லாமியர் அமைப்பு மட்டுமென்று குற்றம் சுமத்துவோர்...தங்களுக்கு இருக்கும் சார்புணர்ச்சியையும், கருத்தியல் வறுமையை சரி பார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…

தாக்குதல் நடந்த நாள் நவம்பர் 26,2008 இல்...கர்கரேயும் கொல்லப்படுகிறார்…
தாக்குதல் முடிவடைந்த பின்னர்…. கர்கரேயின் மனைவிக்கு குஜராத் கண்ட மாமனிதன், இந்திய ராஜபக்சே மேன்மைமிகு.மோடி 1 கோடி ரூபாய் வழங்க முன்வந்தார்…செருப்பாலடித்தது போல்...மோடிக்கு உண்மையை தான் உணர்ந்திருப்பதை உணர்த்தினார்...கர்கரேயின் மனைவி தனக்கு வழங்கப்பட்ட தொகையை, ரத்தக்கரை படிந்த மோடியிடமிருந்து பெற மறுத்தார்...

மும்பை தாக்குதலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கர்கரே உள்ளிட்ட காவல்துறையின் படுகொலை நடந்தது....( மும்பை தாக்குதலிலும் இந்து பயங்கரவாதிகளின் பங்கென்ன? என்பதும் ஆழமான தேடலுக்குரியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம்)...தாக்குதல் நடந்து வருகிற நவம்பர் 26 ஆம் நாளோடு 2 ஆண்டுகள் முடிவடையப்போகிறது. இத்தனை காலம் மௌனம் காத்ததின் பிண்ணனி என்ன?
இந்த இரண்டு ஆண்டுகாலமும் சிதம்பரம் என்ன செய்து கொண்டிருந்தார். ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்..மீண்டும் பதவியேற்றவுடன் என்ன செய்தார்...? (முன்னர் மட்டும் என்ன செய்தார்?) இந்துத்வ பயங்கரவாதத்தை வேரறுக்கவா கிளம்பினார்…. இல்லையே….ஈழத்தின் கருவறுக்கத்தானே கிளம்பினார்.. சிங்கள இனவெறி கூட்டத்தின் பாதுகாவலனாய் திகழ்ந்தார்..

அப்பொழுது, ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தது.....ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து படுகொலைகளை நடத்தி வந்த நேரமது...வல்லரசு கனவுகளோடு மக்களை ஏய்த்து கொண்டிருக்கும் அரச பிரதிநிதி, ஆசிய பிராந்தியத்தின் தனது ஆதிக்க நலனை நிறுவுவதில் மட்டும் கவனமாக இருந்த அதிகார வர்க்க பிரதிநிதி தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தை ஒரு சுண்டக்காய் நாடான இலங்கையிடம் வலியிறுத்த முடியவில்லை....நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தமிழகத்தில் எழுந்த எழுச்சியை அடக்க மட்டும் திரைமறைவு வேலைகள அப்பட்டமாக தெரியும் வண்ணம் நடந்தன....

போரை நடத்த இலங்கையை வலியிறுத்தச்சொன்னால்..........புலிகளை நோக்கிய இவர் உட்பட்ட இந்திய அதிகார வர்க்கத்தின் விரல்கள் நீண்டது, மீண்டும் ராஜீவ் காந்தி என்னும் மகாமனிதரின் தியாக மரணத்தை வைத்து பிரச்சாரம் நடந்தது. ஆனால், கடைசிவரை அவர் அப்படி என்ன தியாகம் இந்நாட்டின் மக்களுக்காக செய்தார் என்று மட்டும் சொல்லப்படவேயில்லை…

ராஜீவ் கொலையை மறக்க மாட்டோம் ஆனால், நீங்கள் ஈழத்தில் இந்திய இராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்களை மறந்து இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டும், ஏனென்றால், இந்தியாவின் இறையாண்மை காங்கிரசின் வீட்டு வாசலில் நிற்கிறது….என்று கூக்குரலிட்டனர், இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றனர்
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிதம்பரம் மும்பை தாக்குதலின் பொழுது தீவிரவாதத்திற்கு எதிராக சூழுரைத்தார், ஆனால், கர்கரேயின் கொலையின் பின்னிருந்த இந்துத்வ சக்திகள் குறித்து கண்டுகொள்ளவேயில்லை…மும்பை தாக்குதல் விசாரணை அவசர, அவசரமாக முடிவடைந்து கொலையின் பின்னிருந்த மர்மங்களை குறித்து நீதிமன்றமும் கேள்வியெழுப்பியது…..

ஊடகங்கள் லாவகமாக மறந்தன...ஊடகங்கள் மறைத்ததால் (இணைப்பு) உள்துறை அமைச்சருக்கும் தெரியாமலிருக்குமென்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும்...அந்த லட்சணத்தில்தான் இந்திய அமைப்பு இருக்கிறது வாசிக்கும் அன்பர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை…

சரி விடுங்கங்க, இப்பொழுதாவது அவருக்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டாரே, என்று யாராவது தமக்குத்தாமே ஆதரவு சொல்லிக் கொள்வார்களானால்…..

இந்தியர்கள் என்று கூறப்படும்..(அழுத்தம் எமது)..அல்லது பிரச்சாரம் செய்யப்படும் அல்லது நம்பப்படும் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க சென்று….அழுத்தமான சுண்ணாம்பு கோட்டால் கடலில் போடப்பட்ட கோட்டை வேண்டுமென்றே பேராசையோடு லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்களை பிடிக்கும் ஆவலில்...இரு நாட்டின் உறவுக்கு குந்தகம் விளைவிக்க வந்த படுபாவிகள் என்ற ரீதியில் சிதம்பரம் பேட்டியளிக்கிறார்......அவர் கண்டுபிடித்துச்சொன்ன மாபெரும் கண்டுபிடிப்பை பாருங்கள்
"எனக்குத் தெரிந்த வரையில் இந்த ஆண்டு ஒரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது. அதுவும் வருந்தத்தக்கது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சுடக்கூடாது. இந்த உடன்பாட்டிற்கு பின் ஒரேயொரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்லி, அது உடன்பாட்டை மீறிய செயல் என்றும், இந்திய மீனவர்களை சுடக்கூடாது, கைது செய்து பேச்சுவார்த்தைகள் நடத்தி விடுவிக்கலாம். என்று உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். அதை மீறி இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. இனி நடக்காது என்று சொல்லியிருக்கிறார்கள்.
 
என்ன திமிர் இருந்திருந்தால் என் நாட்டின் மீனவனை சுட்டிருப்பான் என்று இந்தியனாகவோ அல்லது என்ன துணிவிருந்தால் என் இனத்தானை சுட்டிருப்பானென்று தமிழனாகவோ கேள்விக்கணை பறந்திருந்தால், இலங்கை அரசுக்கு எச்சரிகை கணை பறந்திருந்தால்....ஆனால், என்ன செய்வது? அந்த மீனவனின் பெயர் கார்த்தி அல்லவே....

ஆக சிதம்பரத்திற்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது, இதில் சிதம்பரம் என்று குறிப்பிடுவது, சிதம்பரம் என்ற ஒற்றை மனிதரை மட்டுமல்ல….நாம் தலைவர்களாக பெற்றிருக்கும் அனைத்து தருதலை தலைவர்களையும்தான்...சிறுபான்மையினர்கள், காங்கிரசு, பாஜக என மாறி, மாறி ஏமாந்து திரிவதற்கு பதிலாக, இவர்களை நம்பி, நம்பி விரக்தியடைவதற்கு பதிலாக..இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களோடு அணிசேர்ந்து, இந்த ஏமாற்றுக்காரர்களில் போலி மக்கள் பற்றை செருப்பால் அடித்தால்தான்….வேண்டாம் வேண்டாம் செருப்பால் அடித்தும் நம் தலைவர்களுக்கு சுரணை வரவில்லை….துடைப்பம் பயன்படுத்திப்பாருங்கள்…

பசிச்ச வயித்துக்கு சோறில்லாமல் திரியும் நம் நாட்டிற்கு பசி போன்ற பசியறியாத தலைவர்கள் இனியும் தேவையா என்று சிந்தியுங்கள்….

================================================

ஆனால், தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொல்லப்பட்டபொழுதெல்லாம் இந்த அடிப்படைவாதிகளின் விழிகள் எல்லாம் பாகிஸ்தானை நோக்கியே இருந்தது. அவர்கள்தான் இவர்களை பொருத்தவரை தீவிரவாதிகள். அகண்ட பாரதம் என்ற கேனத்தனமான அடிப்படைவாத கனவு தமிழகம் வரை தொடவில்லை..நீளவில்லை...நம்மை அவர்கள் அகண்ட பாரதம் என்ற கனவில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதில் மகிழ்ச்சிதான் அதே வேளையில், இன்றும் தமிழக பகுதியை இந்தியாவில் வைத்துக் கொண்டேதானே, இந்தியர்கள் என்று கூக்குரலிடுகின்றனர், ஆர்.எஸ்.எஸ் அமைதிபுருசர்கள் தமிழகத்தில் வந்து கூச்சலிடுகின்றனர்..இலங்கை ஒரு தீவிரவாத நாடு என்று இலங்கையை பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றட்டுமே…எதற்கெடுத்தாலும், பாகிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நம்மை பூச்சாண்டி காட்டியே...நமது பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பி விடுகின்றனர்…
காவிரி நதி நீர் பிரச்சினையில், முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் என தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது இந்த இந்துத்வ அமைப்புகளுக்கு சினம் வருகிறதா? வராது? ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள், இந்துக்கள்………நாம் தமிழர்கள்.
நம் உணர்வுகளை வடநாட்டு அடிப்படைவாத கும்பல் என்னதான் செருப்பாலடித்தாலும்... தமிழர்கள் அசர மாட்டார்கள் இந்து முன்னணி, சந்து முன்னணி என்று பல பெயர்களில் ராமகோபாலன் போன்ற பார்ப்பன பண்டாரர்கள் (கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாமேன்னுதான்) கூட்டத்திற்கு நாகர்கோவில் போன்ற இடத்தில் கூட்டம் கூடுகிறது தமிழர்கள் அத்தனை தெளிவுள்ளவர்கள்….(இணைப்பு)
எந்த பார்ப்பனீயம் தோள் சீலை போராட்டத்திற்கு அழைத்து சென்றதோ, எந்த பார்ப்பனீயம் இவர்களை தெருவில் நடக்க அனுமதிக்க மறுத்ததோ, காணாமை, தீண்டாமை என்று கொடும் வடிவங்களில் எந்த பரதேசி பார்ப்பனீயம் நம்மை நாம் அதனிடமே சரணடைந்து கிடக்கிறோம்..

இதை நாம கேட்க போனா...இன்னா செய்தாரை ஒறுத்தல் வறுத்தல்னு விளக்கம் சொல்வாய்ங்க…

நமக்கேன் வம்பு…ன்னு போக முடியுமா,….முடியாது...மாற்றம் வரவேண்டும்...வரவழைப்போம்

இந்துத்துவ தீவிரவாதத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது ஏன்!

ஹிந்துத்துவாவிற்கும் புலனாய்வு துறைக்கும் ரகசிய கூட்டணி உண்டா..?

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!
தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"
"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான்
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!


                                                                                                                 

 மகிழ்நன் -தமிழ் சாரல்.காம்

http://tamilsaral.com/news%3Fid%3D5069.do



--
9/19/2010 10:15:00 PM அன்று சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___



    --
    hajas
     
    http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
     
     

    காவி பயங்கரவாதமும், பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ஆர்.எஸ்.எஸ்!

    காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ்


    'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.


    2008 ஜனவரி 25-ம் தேதி, அன்று காலை வழக்கம்போல நாளிதழ்களை விரித்தபோது, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் இரவு 9 மணி அளவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திதான் அது! புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவிலும் வெடிகுண்டு வெடித்திருந்தது. உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் வகுப்பு முரண் உள்ள ஓர் ஊரில் இப்படியான ஒரு சம்பவம் கவலையை அளித்தது. முந்தைய ஆண்டில் அங்கே இப்படியான மோதலில் ஆறு கொலைகள் நடந்திருந்தன. வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தென்காசி சென்றிருந்த உண்மை அறியும் குழு ஒன்றில் பங்குபெற்றிருந்ததால், அங்கு உள்ள சூழலை நான் அறிவேன்.

    எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்... ஆனால், 'அதற்காக இப்படிச் செய்யலாமா?' என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?

    அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.

    காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் 'அபினவ பாரதம்' என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் 'காவி பயங்கரவாதம்' என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி. இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003), ஜல்னா (2004), புர்னா (2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.

    ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் 'சிமி' என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.

    கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள 'பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்' பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று - ஆர்.எஸ்.எஸ்!

    ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மையிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!

    'மென்மை இந்துத்துவா' என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!



    - அ.மார்க்ஸ்

    நன்றி: ஜூனியர் விகடன்

    திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? - ஆளூர் ஷாநவாஸ்

    ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, "டை" கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.

    சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.

    இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.

    அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

    சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுத்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.

    சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், குண்டர் சட்டங்கள் மூலம் சேரி மக்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து எழுந்தவர் திருமாவளவன்.

    தனித்தொகுதியும், அரசியல் உரிமையும் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.

    இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்துப் போராடி வருகின்றார்.

    இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை "தொப்புள்கொடி உறவு" என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.

    இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

    அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப்பெற்றுத் தொடர்கிறது.

    தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.

    தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.

    இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் பார்ப்பனீயம் மென்று விழுங்கிவிட்டது.

    தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்தது விட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.

    2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.

    பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.

    மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.

    அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.

    1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.

    1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

    “எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

    தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

    இப்படியாக… தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.

    “மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

    முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.

    முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.

    தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.

    அரசுக்கு உறைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.

    தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.

    நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.

    பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன். இவ்வாறு, தொடர்ச்சியாக… அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.

    முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

    முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்…

    நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்…

    முஸ்லிம்களுக்காகப் பொதுத் தளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்…

    "தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை" என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.

    இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    "பொதுத்தளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே" என்ற நன்றி உணர்வும், "இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே" என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

    “என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.

    முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.

    அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.

    தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் இன்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.

    ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.

    ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காகக் கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.

    காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

    காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிர மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.

    1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கும் வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.

    தென்னகத்தில் வணிகப்பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.

    காங்கிரசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கில் இணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.

    ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

    காங்கிரசை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.

    முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதில் தான் இருக்கிறது.

    காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

    காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்

    தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.

    500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்.

    முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.

    எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.

    இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.

    தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். "நபிகள் நாயகம் பிறந்த தின விழா" என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட "மீலாது விழா"க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.

    முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னோடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.

    அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?

    வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?

    காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?

    திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?

    எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

    தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.

    தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா.

    “டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்” என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர். இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.

    தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். ஆனால் தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் போது மட்டும் சமூக நீதிக் கொள்கையை மறந்து விடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.

    இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.

    கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.

    கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.

    பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.

    தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.

    காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.

    நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?

    இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.

    திருமாவிடம் விடை இருக்கிறதா?




    [சமநிலைச் சமுதாயம், ஜூலை-2010 இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]


    ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு திருமாவளவன் பதில்!

    திருமாவளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா ஏமாற்றமா என்றத் தலைப்பில், சமநிலைச் சமுதாயம் ஜூலை இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருந்த கட்டுரை அரசியல் சமூக அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிய அந்தக் கட்டுரை வெளியான நாள் முதல் இன்று வரை அது குறித்த உரையாடல் கூர்மையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் சமநிலைச் சமுதாயத்தையும், கட்டுரையாளரையும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர்.

    திருமாவின் முஸ்லிம் அரசியல் குறித்த அந்தக் கட்டுரையை திருமாவளவன் படித்தாரா? அதற்கு அவர் பதில் சொல்வாரா? அல்லது மற்ற அரசியல் வாதிகளைப் போல சிக்கலான விசயங்களுக்கு பதிலளிக்காமல் மெளனம் காப்பாரா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும் சமுதாய மக்களிடம் எழுந்தது.

    இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 05 -09 -2010 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய தோழர் திருமாவளவன், தமது முஸ்லிம் அரசியல் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் வரவேற்பதாகவும், அதற்கு செயல்பூர்வமாக விடை அளிக்க இருப்பதாகவும் கூறினார். முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்து அரசியல் எழுச்சி அடைவதற்கான தொலை நோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

    திருமாவின் இப்தார் உரை முழுவதும்,சமநிலைச் சமுதாயத்தில் வெளியான கட்டுரைக்கான பதிலுரையாக இருந்தது. ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு தமது பதில் இந்த உரைதான் என்று திருமாவும் அறிவித்துள்ளார்.

    2016 ஆம் ஆண்டு, தலித் - இஸ்லாமியர் அரசியல் கூட்டணி.. திருமா அறிவிப்பு !

    இந்த இனிய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிற இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த இப்தார் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு உன்னதமான சமூக உறவு வலுப்பெறவும், அதன் மூலம் அரசியல் அரங்கில் ஒரு நிரந்தரக் கூட்டணியை இரண்டு சமூகங்களும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

    திருமாவளவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? வழக்கமாக நடைபெறும் இப்தார் நாடகங்களைப் போல இதுவும் ஒரு நாடகமா? என்கிற ஐயம் இஸ்லாமிய சமூக மக்களிடம் உருவாகி இருக்கலாம். அல்லது இனி உருவாகலாம். இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

    'திராவிடக் கட்சிகளிடம் முஸ்லிம்கள் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை; இந்த நிலையில் திருமா வளவனும் இங்கே தொப்பி போட்டுக் கொண்டு வருகின்றாரே என்ற ஐயம் பலருக்கும் இங்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திருமாவளவன் பதில் சொல்வாரா' என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட, நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே..

    நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

    திருமாவளவன் இப்படி எல்லாம் தொப்பி போட்டுக் கொண்டு வந்து, விருந்து உண்ணுவது ஏன் என்பது ஒரு இயல்பானக் கேள்வி தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

    நான் எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நீங்கள் முப்பது நாட்கள் நோன்பிருக்கின்றீர்கள், முப்பது நாட்களும் இல்லாவிட்டாலும், ஒரு மூன்று நாளாவது நோன்பிருக்க வேண்டுமே என்ற உள்ளுணர்வின் அடிப்படையில், நானே விரும்பி அறிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதை கடைபிடித்தும் வருகிறேன் தோழர்களே.

    வாழ்விலும் இருக்க வேண்டும், தாழ்விலும் இருக்க வேண்டும் என்பதை.. வார்த்தையில் மட்டும் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவன் நான். இப்தாரிலே மட்டும் இருக்க வேண்டும் சகரிலே இருக்கக் கூடாது என்றில்லாமல், இப்தாரிலும் இருப்பான் திருமாவளவன் சகரிலும் இருப்பான் திருமாவளவன், சகரிலும் இருந்து விட்டு இப்தாரிலும் இருந்து விட்டு இடையில் நோன்பில் மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. நோன்பிலும் இருப்பான் திருமாவளவன் என்பதை உறுதிப் படுத்தக் கூடிய வகையில் தான் நான் செயல் பட்டு வருகிறேன்.

    இப்படி நான் செயல் படுவதும்,முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து நான் போராடுவதும், அரசியல் ஆதாயத்துக்காக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.அதற்கு விடை சொல்ல விரும்புகிறேன்.. ஆம், அரசியல் ஆதாயத்திற்காகத்தான். எனக்கு மட்டுமல்ல நமக்கு, அந்த அரசியல் ஆதாயம் நமக்கு..

    நமக்கு அரசியல் ஆதாயம் வேண்டும். நாம் எந்த ஆதாயமும் கருதாமல் எல்லோரையும் தோளில் தூக்கிச் சுமக்கிறோம். தலித்துகளும் அப்படித்தான் முஸ்லிம்களும் அப்படித்தான். பிற சிறுபான்மை மக்களும் அப்படித்தான். ஆக அரசியல் ஆதாயம் கருதாமல் இவ்வளவு காலம் உழைத்தது போதும். இனி நாம் அரசியல் ஆதாயம் கருத வேண்டும். நமக்கு அதிகாரம் வேண்டும்.

    ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற இரண்டு வர்க்கம். ஆளப்படுவோர் எப்போதும் அடக்கப்படுவார்கள். ஆளப்படுவோர் எப்போதும் சுரண்டப்படுவார்கள், ஆளப்படுவோர் எப்போதும் பழிசுமத்தப்படுவார்கள்; இழிவுபடுத்தப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள். ஆள்வோர் எப்போதும் தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிக் கொண்டே இருப்பார்கள்.

    சர்வதேச அரங்கில் தான் மட்டுமே 'தாதா' வாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அமெரிக்கா, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு யார் பிரதமர் என்று நீயும் நானும் கவலைப்படவில்லை, அமெரிக்காகாரன் கவலைப்படுகிறான். இலங்கையிலும் பாகிஸ்தானிலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் அந்தந்த நாட்டு மக்களை விட அமெரிக்கா காரனுக்குத்தான் அதிக கவலை..ஏன் அவனுக்கு அந்தக் கவலை? அவனது ஆளுமையையும், சர்வதேச 'தாதா' தனத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள அவனுடைய ஆதரவாளர்கள் உலக நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்புகிறான்.உலகம் முழுவதும் தனக்கு வேண்டியவர்களின் ஆட்சி நடைபெறும் போதுதான் தனது ஆதிக்கம் நிலைபெறும் என்று அவன் சிந்திக்கிறான்.

    எதற்கு இதை நான் சொல்கிறேன் என்று சொன்னால்.., யார் ஒருவர் அல்லது எந்த ஒரு சமூகம் தான் ஆளப்படுவதில் இருந்து மீளப்படுவதை விரும்புகிறார்களோ, ஒடுக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, சுரண்டலில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் துடிக்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேடல் வேண்டும்.

    இறைவனிடத்திலே நாம் அமைதியைத் தேடுகின்றோம். ஆனால் 'இறை' என்கிற அரசிடம் நமக்கான அதிகாரத்தை இன்னும் நாம் தேடவில்லை. ஆக, அதிகாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய தேடல் இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய வேட்கை இல்லாமல், நம்மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மால் மீளவே முடியாது.

    அந்த அடிப்படையில் தான் தலித் மக்களிடத்திலே, புரட்சியாளர் அம்பேத்கர், ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.அந்த விழிப்புணர்வு இன்றைக்கு தலித் மக்களிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் இங்கே எழுந்து வந்திருக்கிறது. இதை நான் நெஞ்சுயர்த்திச் சொல்கிறேன். அம்பேத்கரின் அந்தக் கொள்கை வழியில் தான் தலித் மக்களை நாங்கள் அமைப்பாக்கி வருகிறோம்..

    இன்றைக்கு திருமாவளவன் மீது முஸ்லிம் சமூகத்தினர் சந்தேகப்படுகிறார்கள் என்று சொன்னால், அதை எண்ணி நான் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் சந்தேகப்படுவது என்றைக்குத் தொடங்கி விட்டதோ அப்போதே விழிப்புணர்ச்சியும் தொடங்கி விட்டது என்று பொருள். நம்மைப் பிறர் ஏய்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி விழிப்புணர்வே இல்லை என்றால் நமக்கு சந்தேகமே வராது. எங்கே சந்தேகம் வருகிறதோ அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது என்று பொருள். ஆக இஸ்லாமியர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தமிழ்நாட்டு இஸ்லாமியச் சமூகம் விழிப்படைந்து விட்டது. கடந்த கால வடுக்களைத் தடவிப் பார்த்து, தம்முடைய இயலாமையையும் தமது தோல்விகளையும் தமது ஏமாற்றங்களையும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

    ஆக இந்தச் சூழ்நிலையில் இப்போது நான் சொல்கிறேன்...

    2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இப்போதே நான் அறைகூவல் விடுக்கிறேன். அரசியல் கூட்டணிக்கு அழைக்கிறேன்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே, தவ்ஹீத் ஜமாஅத் இயக்கமே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமே, தேசிய லீக் இயக்கமே, பாப்புலர் பிரன்ட் எனப்படும் மக்கள் முன்னணியே, இன்னும் என்னென்ன இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றனவோ அத்தனை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

    2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

    இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை முறை.ஆனால் அது மதம் என்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க அமைப்பாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக நம்முடைய நபிகளார் விளங்குகின்றார். தமது நாற்பது வயதுக்குப் பின்னர் தான் நபிகளார் பொதுப் போதனைகளைத் தொடங்கி இருக்கிறார். மிகக் குறுகிய வட்டத்தில் தமது நண்பர்களோடு முதலில் கருத்துக்களைப் பரிமாறி இருக்கிறார்.

    பொதுப் போதனைகளில் அவர் இறங்கிய உடனேயே அன்றைய ஆட்சியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நபிகளாரின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கத் தொடங்கினர். அப்போது அவர் தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவை நோக்கிப் போனார். மக்காவிலிருந்து நபிகளார் மதீனாவை நோக்கிப் போனது 'ஹிஜ்ரா' என்றழைக்கப் படுகிறது. அது ஒரு புனிதப் பயணம் என்றழைக்கப்படுகிறது.

    ஆனால் அவர் எதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டார்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் உயிர் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார். அதுவரையில் மதீனாவுக்கு யாத்ரிப் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நபிகளார் அங்கு சென்றபிறகு, இவர் மதீனத்து நபி, ஆகவே நபிகளின் பட்டணம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

    அங்கு தான் நபிகளாருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கைப் பெருகியது. அவரது போதனைகளைக் கேட்கும் கூட்டம் அதிகரித்தது. அங்கு தான் நபிகளார் ஒரு அமைப்பாக திரட்சியுற்றார். தனி நபராக இருந்தவர் மக்காவிலே ஒரு சிறு குழுவாக மாறினார். பின்பு மதீனாவிலே ஒரு அமைப்பாக வளர்ந்தார். அந்த அமைப்பு ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போரிடும் படை வலிமை உள்ளதாக மாறியது.அந்தப் படை வலிமையோடு மக்காவிற்குத் திரும்புகிறார். மக்காவில் ஆளும் வர்க்கத்தோடு மிகப்பெரும் யுத்தத்தை நடத்துகிறார்..அதன் பிறகு தான் அது ஒரு இயக்கமாக மாறியது.

    ஆக, நபிகளாரிடம் இருந்த அந்த ஆளுமைப் பண்பு, அந்தத் தலைமைப் பண்பு, அந்தப் போர்க்குணம் தான் ஒரு அமைப்பாக மாறி ஒரு இயக்கமாக மாறி இன்று மிகப்பெரிய நிறுவனமாக உலகையே வியாபித்து நிற்கிறது. இன்றைக்கு உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இஸ்லாத்தைப் போல, கட்டுப்பாடும் ஒழுங்கும் உள்ள ஒரு மதத்தை எங்கும் அடையாளம் காட்ட முடியாது. நான் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு இதை சொல்லவில்லை.

    மக்காவிலே கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்திலே, எத்தனைக் கோடிப் பேர் திரண்டாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல், முட்டிக் கொள்ளாமல், அவர்கள் இறைவனை வழிபடுவதில் சரிசமமாக இருந்து மண்டியிட்டுத் தொழுகை நடத்துவதை ஒரு மிகப் பெரிய ஓவியமாக நம்மால் பார்க்க முடிகிறது. வேறு எந்த மார்க்கத்திலும், மதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டை பார்க்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்தையும், நல்ல தலைமைப் பண்பையும் கற்றுத் தருகின்ற ஒரு மிகப்பெரிய மத நிறுவனத்தை ஒரு தலைவரால் கட்டியமைக்க முடிந்தது என்று சொன்னால்., அதற்கு எவ்வளவு பெரிய அர்பணிப்பும் போர்க்குணமும் தியாக உள்ளமும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    அப்படிப்பட்ட நபிகளாரைப் போல வியூகமும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள் நமக்குத் தேவை. அவரை நான் இறைவனின் தூதர் என்று பார்ப்பதை விட, அரசியல் தளத்தில் நின்று கொண்டு, ஒரு மகத்தான அரசியல் தலைவராகப் பார்க்கிறேன்.அதைப் போல தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திற்குத் தேவை.

    தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் வருகின்ற போது, எத்தனைக் குழுக்கள் இருந்தாலும் அவை ஒற்றை வடிவமாய், ஒற்றை முகமாய் இருக்கும். தலைமைப் பண்புள்ள தலைவர்கள் உருவாகாத வரையில் குழுக்கள் மேலும் மேலும் பல குழுக்களாகச் சிதறும். ஒற்றுமை பாழ்பட்டு விடும்.

    ஆக, இதையெல்லாம் மனதில் கொண்டு நாம் நமது பயணத்தை திட்டமிட வேண்டும். இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்கிற அவசரம் நமக்கு வேண்டாம். 2016 வரை நாம் உழைப்போம், நமக்காகத் திட்டமிட்டு உழைப்போம், அரசியல் சக்தியாய் எழுச்சி பெறுவோம். அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம்.

    இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கத்த்தோடும் திருமாவளவன் உங்களோடு அமரவில்லை; எந்த எதிர்பார்ப்போடும் திருமாவளவன் உங்களோடு உரையாடவில்லை. 2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு என்கிற முடிவை நான் எடுக்கிற போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடும் சேர்ந்து எடுக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக் கூடிய இஸ்லாமியத் தோழர்களோடு சேர்ந்துதான் இந்த முடிவை நான் எடுத்தேன்.

    முஸ்லிம்களை நோக்கிய எனது பயணத்திற்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு சமூகத்தின் விடுதலை அரசியல் களத்தோடு தொடர்புடையது. அதை நாம் மறந்து விடக் கூடாது. மதமும் அரசும் இரட்டை விழிகள் மாதிரி.இரண்டு விழிகளால் ஒற்றை உருவத்தைப் பார்ப்பது போல மதமும், அரசும் சேர்ந்து தான் மக்களை வழிநடத்துகிறது. அரசு என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது. அதிகாரம் என்பது யாருக்கோ சில நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. குறிப்பிட்ட சில இனத்துக்குச் சொந்தமானதும் அல்ல. உன்னாலும் என்னாலும் உருவானது தான் அதிகாரம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

    ஆகவே, மண் ஒரு சொத்து என்பதைப் போல,கட்டிடம் ஒரு சொத்து என்பதைப் போல, வண்டி வாகனம் ஒரு சொத்து என்பதைப் போல, செல்வம் ஒரு சொத்து என்பதைப் போல, பிள்ளைகள் ஒரு சொத்து என்பதைப் போல அதிகாரம் ஒரு சொத்து. இந்த மண்ணில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல, இந்த நீரில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல அதிகாரத்திலும் எனக்குப் பங்கு உண்டு.

    ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே இந்திய அதிகாரம் சொந்தமானதில்லை. இதில் திருமாவளவனுக்கும் பங்குண்டு, இந்த அதிகாரத்தில் யூசுபுக்கும் பங்கு உண்டு.

    நான் இந்த மண்ணில் குடிமகனாக இருக்கிற காரணத்தினால், நான் ஓட்டுப் போடுகிற உரிமை பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் சேர்ந்து இந்த நாட்டையும், அதன் சட்ட திட்டங்களையும் உருவாக்கி இருக்கிற காரணத்தினால், நாம் இந்தச் சட்டங்களை மதிக்கிற காரணத்தினால் உருவானது தான் அரசு, உருவானது தான் அதிகாரம். ஆகவே அந்த அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு, உனக்கும் பங்குண்டு.

    இந்த எனக்கும் உனக்கும் என்கிற சொல்லுக்கு இடையில் உள்ள சுவரை உடைத்து விட்டு, நமக்கு என்ற ஒற்றை சொல்லால் அழைப்போம். நன்றி!

    பாபரியே பள்ளிவாசல் - பாபரி மஸ்ஜித் பற்றிய சில‌ உண்மைகள்



    ---------- Forwarded message ----------
    From: ?????? ??????? <harisimam474@gmail.com>
    Date: 2010/9/18
    Subject: [saharatamil] [சஹாரா தமிழ்] பாபரியே பள்ளிவாசல் - பாபரி மஸ்ஜித் பற்றிய சில‌ உண்மைகள்
    To: saharatamil@yahoogroups.com


     

    அல்லாஹ்வின் திருப்பெயரால்..  


    ஜமாஅத்தார்களே! சகோதரர்களே!! எச்சரிக்கை!!!



    கோவை: நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளான்.

    நிருபர்களிடம் பேசிய அவன் ,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை [^] எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.


    தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.

    சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.

    அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன.
    அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் [^] தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.

    விஸ்வ இந்து பரிஷத் தலைவர் [^] அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.


    கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.


    முதல்வர் கருணாநிதி [^] திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.

    கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றான்  ராம கோபாலன்.
                                                                ===================
    பாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு 

    1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது. 
    இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

    வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

    நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.

    அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.

    மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

    நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.

    வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

    நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.

    1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.

    பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.

    தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.

    விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.

    உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.

    பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

    இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.

    ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.

    இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

    நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

    ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

    தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.

    தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.
    விமர்சகன்

                                                          ===============================

    பாப்ரி மஸ்ஜித் வழக்கு:அமைதிகாக்க மத்திய அரசு வேண்டுகோள் 

     புது டெல்லி :அயோத்தி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அமைதி காக்கவேண்டும் என மத்திய அரசு நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இதுத்தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்துள்ளார்.

    நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். அதேவேளையில், இந்த தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு சுவடு மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் ஏதேனும் நீதிமன்ற தீர்ப்பு தேவையென்றால் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

    செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

    =====================================
     பாப்ரி மஸ்ஜித்:இணக்கமான தீர்விற்கு வழி இல்லை என கல்யாண்சிங்


    லக்னோ :அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இணக்கமான தீர்விற்கு வழி இல்லை எனவும், ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ அதனை அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் உ.பி.மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

    அயோத்திக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் அவர். மேலும் அவர் கூறியதாவது:"அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஹிந்துக்கள் உறுதிப்பூண்டுள்ளனர். இதற்கிடையே எதனைச் செய்தாலும், அது காலத்தை வீணடிப்பதாகும். அயோத்தியில் நான் சன்னியாசிகளை சந்திப்பேன்." என கல்யாண்சிங் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு எதிராக வழக்கின் கட்சிதாரரான ஹிந்துமாகாசபை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை காலதாமதமாக்க வேண்டும் எனக்கோரும் இரண்டு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.

    செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
    http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_784.html 
    ===========================================================
     பாப்ரி:தீர்ப்பு 24-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழங்கப்படும்

    லக்னோ :  வருடக்கால பழமையான பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

    ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான தீர்விற்கு வழிகாண தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவின் மீதான விசாரணையில்தான் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நேற்றுக் கூறியது. பாப்ரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான தீர்ப்பு திட்டமிட்டபடி வருகிற 24-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை சமர்ப்பித்தவருக்கு பெருந்தொகையை அபாரதமாக விதிக்க தீர்மானித்தது. அபராதத்தொகை எவ்வளவு என்று முடிவாகவில்லை.

    நீதிபதி சுதீர் அகர்வால் ஐந்துலட்சம் ரூபாய் அபராதமாக நிர்ணயித்தார். எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் சிறப்பு பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். 'இணக்கமான தீர்விற்கு தயாரா?' என நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் ஆராய்ந்தது. ஆனால், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா, சமரச தீர்விற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரும் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

    இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுக தனது கட்சிதாரரை உபதேசிப்பேன் என திரிபாதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் கடமையென்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

    வழக்கை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடிச் செய்தது மூலம் உயர்நீதிமன்றம் சரியான காரியத்தை செய்துள்ளது என முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.

    செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
    http://paalaivanathoothu.blogspot.com/2010/09/24_18.html 




    ====================================================

     பாபரியே பள்ளிவாசல்

        பாபரி பள்ளிவாசல் இடிப்பதற்கு முன்பும், இடிப்பிற்குப் பின்பும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில், நீதிமன்றங்களையே நம்பியிருந்த முஸ்லிம்களை காவிப் படையினரும், அவர்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களும் தங்களது மனசாட்சியைப் புதைத்து விட்ட காரணத்தினாலும், தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும் நாம் அந்தப் பள்ளியை இழந்தோம்.

    இப்பொழுது ஓரிறைவனைத் துதிக்கக் கூடிய இடமாக விளங்கிய அந்தப் பள்ளியை, பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கு இட்டுக் கொண்டு செல்லும் பாஸிஸ இந்துத்துவாக்கள், இன்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மதிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்கே சாதகமாகத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன.

    மேலும், மார்ச் 12 லும் அதற்கு இடைப்பட்ட இந்த காலத்தில், வெறுமனே கோயில் கட்டுவதோடு மட்டும் அவர்கள் நின்று விட மாட்டார்கள். அதற்கு முன்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தக் கூடிய செயல்களிலும் அவர்கள் இறங்கக் கூடும்.

    இந்த நிலையில் முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும், அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசுகள் தங்களது ஓட்டு வங்கிகளை அடிப்படையாக வைத்துத் தான், தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த வல்ல இறைவனிடமே எங்களது பாதுகாப்பிற்கு கையேந்தி நிற்கின்றோம்.

    மேலும், ஏற்கனவே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வரக் கூடிய இந்திய முஸ்லிம்கள் மேலும் அந்நியப்பட்டுப் போகக் கூடிய நிலையை, வலிய அவர்களின் மீது திணிக்கக் கூடிய சம்பவமாகத் தான் இது அமையும்.

    முஸ்லிம்களும் இந்த இந்திய நாட்டுக் குடிமக்கள் தான் என்பதிலும், இந்திய தேச விடுதலைக்கு தன்னுடைய சதவீதத்திற்கும் அதிகமாகவே தியாகங்களை இந்தச் சமூகம் செய்திருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்ளும் அனைவரும், இந்தப் பாஸிஸப் போக்கை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். இந்த அராஜகத்திற்குத் துணை போகக் கூடிய அனைவரையும் நீதிமன்றத்தில் - குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

    இந்திய எல்லையில் இந்திய ராணுவம் சந்திப்பவர்கள் மட்டும் இந்திய எதிரிகள் அல்ல! இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் இந்தியாவின் எதிரிகளே!!! இந்த எதிரிகளை இந்திய தேச மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியதும், அவர்களது தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதும் நடுநிலையாளர்கள் மற்றும் இதயமுள்ளவர்களின் கடமையும் கூட!!



    பாபரி மஸ்ஜித் : அடிப்படைத் தகவல்கள்

    டிசம்பர் 06, 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்ட நாள்.

    இந்தியா உலக அரங்கில் தலைகுனிந்து நின்ற நாள். அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை இன்றளவும் துடைக்க முடியவில்லை. இந்த அவமானம் முற்றாக துடைக்கப்படும் அளவுக்கு, இன்று இந்தியா தேச விரோத ஃபாசிஸ சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்டது.

    இந்தியாவின் கண்ணியம் இன்னும் அதள பாதாளத்தில் வீழ்ந்து விடலாம் இந்தப் பாஸிஸச் சக்திகளால். பாபரி பள்ளிவாசல் ஷஹீதாக்கப்பட்ட அந்த நாள் முதல் இன்று வரை நாட்டில் நடக்கும் அத்தனை விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் அதுவே காரணம்.

    பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

    தடா சட்டம் காலாவதியான பின்னரும் அதன் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்படவில்லை.

    பாபரி பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள்களைத் தொடர்ந்து பம்பாயில் கலவரங்கள் மூண்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காவல் துறையினராலும் ஃபாசிஸ்டுகளாலும் கொலை செய்யப்பட்டார்கள்.

    பம்பாய் நிகழ்வுகளை விசாரிப்பாதற்காக அமர்த்தப்பட்ட கிருஷ்ணா கமிஷன் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கின்றது. அதில், அத்வானியின் ரத யாத்திரையும், பள்ளிவாசல் இடிப்பும் தான் பம்பாய் நிகழ்வுகளுக்குக் காரணம் என ஆணித்தரமான ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையும், பள்ளிவாசல் இடிப்பில் பெருமை கண்ட ஃபாசிஸ்டுகளின் கைகளிலேயே சிக்கிக் கொண்டது. இப்படி இந்த நாட்டையே நட்டாற்றில் தள்ளி விட்ட இந்தப் பிரச்னையில் மிகவும் வேதனையான பகுதிய என்னவெனில், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களே இன்று குற்றவாளியாக்கப்பட்டு வருகின்றார்கள் அனைத்து விவகாரங்களிலும்..

    பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் நிச்சயமாகத் திரிக்கப்படும் இன்று இந்தியாவை ஆளும் இந்தப் ஃபாசிஸ்டுகளால்..

    ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. ஏனென்றால், வரும் மார்ச் 2002, 2 ஆம் தேதியன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டப் போவதாக விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்திருக்கின்ற நிலையில், அதற்குத் தடையை ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் அடைப்பதற்குண்டான வழிமுறைகளில் ஆளும் பாஜக முயன்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், பாபரி பள்ளிவாசல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவது மிகவும் பொருத்தமெனக் கருதுகின்றோம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கும், உண்மையை அறிய விளையும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

    அடிப்படைத் தகவல்கள் :

    கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு

    இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட்.

    இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் (ஷியா-சுன்னி) கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

    ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் பள்ளிவாசல் பாபரி பள்ளிவாசல் என்றழைக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல், முஸ்லிம்கள் இரு தரப்பாரும் தங்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றி வந்தார்கள்.

    1950 ம் ஆண்டு, பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதைத் தடுத்தது.

    அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றியே வந்தார்கள்.

    1855 ஹனுமன் கார்ஹி வழக்கு

    19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு சுன்னி முஸ்லிம்களுக்கும், நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது, அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.

    இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் பள்ளிவாசல் ஒன்று இருந்தது எனவும், அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.

    இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் பள்ளிவாசல் இடத்தை மீட்க இயலவில்லை.

    முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த பள்ளிவாசலை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக, இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி பள்ளிவாசல் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.

    முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.

    அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் பள்ளிவாசல் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி பள்ளிவாசல், இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)

    1857 நாம் சாபுத்ரா

    பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும், அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

    1857 ல் பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.

    இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.

    1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.

    இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.

    1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு

    ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ், பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில்  கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

    பள்ளிவாசலுக்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் எதிலும் பாபரி பள்ளிவாயில், சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.

    1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் (தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும்) தாக்கி, பள்ளிவாசலையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.

    1940 ல் .. ..

    1940 ; இந்தப் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்குச் சொந்தமா? ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமா? என்றொரு சர்ச்சை எழுந்தது. இது நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்கே சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கிற்று.

    இது தான் பாபரி பள்ளிவாசலில் யாருக்குச் சொந்தம் என்பது சம்பந்தமாக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு.

    இராமர் சிலைகள்

    1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு பள்ளிவாசல் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.

    கே.கே.நய்யார்

    பாபரி பள்ளிவாசலினுள் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆக, முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.

    இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும், உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் - இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.

    பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டவுடன், அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

    சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி

    சிலைகள் வைக்கப்பட்டவுடன், மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் பள்ளிவாசலைக் கைப்பற்றினார். பள்ளிவாசலை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் பள்ளிவாசலுக்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.

    நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்

    பாபரி பள்ளிவாசலுக்குள் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது, அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில், அவர் செய்ததெல்லாம், பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.

    ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :
    (மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).

    பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும், அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில், ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

    பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும், உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

    அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:

    அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?

    இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27, 1949 அன்று அனுப்பப்பட்டது.

    இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார், முஸ்லிம்களிடம் பேசி, அப்பள்ளிவாசலை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.

    அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவே;றத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில், பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால், பள்ளிவாசல் பள்ளிவாசலாகச் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    (ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : ருnவைநன யுஉயனநஅiஉள ஐவெநசயெவழையெடஇ ஏனைலயயெபயசஇ ர்லனநசயடியன – 500 044).

    பள்ளிவாசலை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள், கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.

    இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பள்ளிவாசலைச் சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.

    அந்தப் பதில் இது தான் : ஊஆ ழக ரு.P. iவெநனெநன வயமiபெ யஉவழைn. (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.

    5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.

    முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில், 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.

    உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.

    1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு, பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ஃப் போர்டு, பள்ளிவாசலையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வே;டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.

    இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசலைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் த்கள் நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில், இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.

    இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் பள்ளிவாசலில் கதவுகளைத் திறந்து, பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!

    பள்ளிவாசலைத் திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.

    இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் பள்ளிவாசலைப் பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!

    அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு, பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.

    அதாவது, பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!

    இதன் பொருள், பள்ளிவாசலில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.

    1985 முதல் அயோத்தியாவை, யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம், கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.

    நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு, நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்;த்தால், மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.

    நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம், சர்ச்சைக்குரிய இடம் என்றும், அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது , அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும், அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.

    இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.

    1989 ஆண்டுத் தேர்தல்கள்.

    1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!

    அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும், சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.

    தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த  ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

    பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி பள்ளிவாசல் பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே, வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.

    1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி பள்ளிவாசல் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும், இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.

    ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால், ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து, ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும், ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பள்ளிவாசல் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும், பள்ளிவாசலின் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் பள்ளிவாசலின் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் பள்ளிவாசலைத் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது - இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.

    வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி பள்ளிவாசல் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால், இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.

    பாபரி பள்ளிவாசல் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ, இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா, வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிவாசல்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள்  ஏதும் இல்லை என்றும், ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது

    1991 தேர்தல்களும் பள்ளிவாசல் இடிப்புகளும்

    வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன், சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.

    அத்தோடு பாரதீய ஜனதா கட்சி உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஆட்சிக்கு வந்தது. பி.வி. நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார்.

    உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதம் 32 சதவீதம் மட்டுமே. எனினும் கல்யாண் சிங் என்பவரை முதல்வராககக் கொண்டு அங்கே பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவையை 24 ஜுன் 1991 ல் அமைத்தது.

    பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில, இதில் (பள்ளிவாசலில்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.

    வழிபாட்டுத் தலங்களின் சட்டம்

    1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் பெயர் Pடயஉநள ழக றுழசளாip  (ளுpநஉயைட Pசழஎளைழைளெ யுஉவ) 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ, கோயிலாகவோ, மாற்றப்படலாகாது என்றும், எந்தக் கோயிலும் ஆலயமாகவோ, பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது

    இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி பள்ளிவாசலை, இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது, பாபரி பள்ளிவாசலை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.

    இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும், முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் பள்ளிவாசல்கள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். பள்ளிவாசலலைச் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

    இதற்கு அது கூறிய காரணம், சுற்றுலாவை வளர்ப்பதும், அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.

    இதன் உள்நோக்கம் என்னவெனில், பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17, 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு, உத்திரப் பிரதேச அரசின் ஆணை, அதாவது பாபரி பள்ளிவாசல் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.

    இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று  சொல்லாமல், கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும், அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.

    ஆனால், கல்யாண் சிங் அரசு பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும், பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம், பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.

    இதே வேகத்திலும், வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்பு




    --
    hajas
     
    http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page