பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்





பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்

Thanks : Ashraf, Nahil Computers, K.S.A

 

 

 

 

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!

வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

 

 

தாயத்தை கட்டாதீர்கள்

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

 

 

 






--


--
0 Responses

கருத்துரையிடுக