இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம...



 இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம...



http://www.apnews.co/wp-content/uploads/2011/04/Jan-Lokpal-Bill2.jpeg 

இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.

இந்தியாவை ஊழல் அற்ற சொர்க்க பூமியாக மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. இந்தியாவில் இருந்து ஊழலை எதிர்க்க வேண்டிய மசோதாவான லோக்பால் மசோதாவுக்கு பல தடைகற்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.  இதற்காக நாம் நம் அலைபேசியில் இருந்து ஒரு மிஸ்ட்கால் கொடுப்பதன் மூலம் நம்முடைய ஆதரவை தெரிவிக்கலாம்.

மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழல்    அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க வரவிருக்கும் லோக்பால் மசோதாவுக்கு நம் ஆதரவை செலுத்த வேண்டிய நேரத்தில்       இப்போது உள்ளோம்,

தொழில்நுட்பம் மூலம் புதுமையான முறையில் இம்மசோதாவிற்கு நம் ஆதரவை அளிக்கலாம்.
 
மிஸ்ட்கால் செய்ய வேண்டிய அலைபேசி எண் :   0 22 6155 0789  (அ)  + 91 22 6155 0789
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்ட்கால் (Missed Call ) கொடுப்பதன் மூலம் நம் ஆதரவு லோக்பால் மசோதாவுக்கு சென்றுவிடும்.இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வாக்கு பதிவு செய்யப்பட்டதும் உடனடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். ஊழலை ஒழித்தால் போதும் வறுமை நீங்கி நம் நாடு  வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நம்மால் முடிந்தவரை அத்தனை பேருக்கும் இந்தச்செய்தியை கொண்டு  சேர்ப்போம். குறைந்த பட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு வேண்டும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அலைபேசிகள் மூலமும் உங்கள் உணர்வுகளை வாக்குகளாக பதிவு செய்யுங்கள்.

தன்னார்வத் தொண்டர்கள் (Volunteers) தங்கள் தகவல்களை கீழேயுள்ள இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

இணையதள முகவரி :  http://www.indiaagainstcorruption.org

--
0 Responses

கருத்துரையிடுக