சிந்திக்க சில நபிமொழிகள்



 
சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121). 

3ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481). 

4ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442). 

5உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444). 
6ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045). 

8மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம். 

9இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி. 

13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம். 

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
20செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான். 

22இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி. 

23இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ. 

24தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.




--
6/28/2011 02:41:00 PM அன்று சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இஸ்லாமிய குண நலன்கள்







இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத், 

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)


தீய குணங்கள்


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி – 

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)


10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)



நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)


11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி 

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்


Source : http://www.ottrumai.net/TArticles/44-BelovedChildren-GoodAttitudes.htm


----------------

  தொடர்புடைய பதிவுகள் :-


  இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்

  சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பொதுஅறிவு

  கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

 




--


ALAVUDEEN.
SECURITY FORCES HOSPITAL
RIYADH.K.S.A.

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம...



 இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம...



http://www.apnews.co/wp-content/uploads/2011/04/Jan-Lokpal-Bill2.jpeg 

இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.

இந்தியாவை ஊழல் அற்ற சொர்க்க பூமியாக மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. இந்தியாவில் இருந்து ஊழலை எதிர்க்க வேண்டிய மசோதாவான லோக்பால் மசோதாவுக்கு பல தடைகற்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.  இதற்காக நாம் நம் அலைபேசியில் இருந்து ஒரு மிஸ்ட்கால் கொடுப்பதன் மூலம் நம்முடைய ஆதரவை தெரிவிக்கலாம்.

மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழல்    அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க வரவிருக்கும் லோக்பால் மசோதாவுக்கு நம் ஆதரவை செலுத்த வேண்டிய நேரத்தில்       இப்போது உள்ளோம்,

தொழில்நுட்பம் மூலம் புதுமையான முறையில் இம்மசோதாவிற்கு நம் ஆதரவை அளிக்கலாம்.
 
மிஸ்ட்கால் செய்ய வேண்டிய அலைபேசி எண் :   0 22 6155 0789  (அ)  + 91 22 6155 0789
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்ட்கால் (Missed Call ) கொடுப்பதன் மூலம் நம் ஆதரவு லோக்பால் மசோதாவுக்கு சென்றுவிடும்.இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வாக்கு பதிவு செய்யப்பட்டதும் உடனடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். ஊழலை ஒழித்தால் போதும் வறுமை நீங்கி நம் நாடு  வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நம்மால் முடிந்தவரை அத்தனை பேருக்கும் இந்தச்செய்தியை கொண்டு  சேர்ப்போம். குறைந்த பட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு வேண்டும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அலைபேசிகள் மூலமும் உங்கள் உணர்வுகளை வாக்குகளாக பதிவு செய்யுங்கள்.

தன்னார்வத் தொண்டர்கள் (Volunteers) தங்கள் தகவல்களை கீழேயுள்ள இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

இணையதள முகவரி :  http://www.indiaagainstcorruption.org

--

இதயம் காக்கும் காளான்





 

இதயம் காக்கும் காளான்




        காளான்  மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர்.  ஆனால்,  இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால்  விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.  

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும்.   விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும். 

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது.  இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். 

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும்,  மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.  காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் வகைகள்


இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன.  இவற்றுள்  மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்

காளான் இரத்தத்தில்  கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.  இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.  இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.  இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும்.  வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.  இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. 

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை.  அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.  அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.  100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது.  சோடியம் 9 மி.கி உள்ளது.  எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  தாமிரச்சத்து இரத்த  நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.


காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்  குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 


100 கிராம் காளானில் 35 சதவீதம்  புரதச்சத்து உள்ளது.  மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான  அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.


மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.


கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.


காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
நன்றி:நக்கீரன்
Mohammad Sultan

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___

    கொகா கோலா ரகசியம் மக்களே உஷார்! உஷார் !!






    மக்களே உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.
     
    கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

    இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.
     
    video

    கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?

    கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.

    1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகாகோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.

    கொகா கோலா எதனால் உருவாகிறது.

    கொகா கோலா அடைக்கப்பட்டுவரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள் பற்றியஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.

    ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

    கசிந்தது பார்முலா ரகசியம்.

    இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

    அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.

    இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.

    ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

    கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?

    கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.

    இதுதான் அந்த ரகசிய பார்முலா.

    Fluid extract of Coca 3 drams USP.

    Citric acid 3 oz .

    Caffeine 1oz .

    Sugar 30 (it is unclear from the markings what quantity is required).

    Water 2.5 gal.

    Lime juice 2 pints 1 qrt.

    Vanilla 1oz .

    Caramel 1.5oz or more to colour.

    7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).

    Alcohol 8oz .

    Orange oil 20 drops.

    Lemon oil 30 drops.

    Nutmeg oil 10 drops.

    Coriander 5 drops.

    Neroli 10 drops.

    Cinnamon 10 drops.

    பார்முலா வெளிவந்த விதம்.

    கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.

    அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life's என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

    கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?

    கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.

    ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?

    ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.

    போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

    அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

    நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர்என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

    அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

    நூல்: புகாரி 6124

    அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

    நூல்: திர்மிதீ 1788> நஸயீ 5513> 3725

    و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி> நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால்> போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.

    இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    முஸ்லிம் (3995)

    3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم

    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

    முஸ்லிம் (4071)

    மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.

    எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
    அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
    by : TKS RASMIN M.I.Sc., source : jsnjet,


    --
    6/16/2011 12:38:00 PM அன்று சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

    --
    ~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
    வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
    ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
    தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
     
    இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Fwd: (TMP) உண்ணாவிரதப்பந்தலை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி



    ---------- Forwarded message ----------
    From: அம்ஜத் கான் <amzathkhan82@gmail.com>
    Date: 2011/6/7
    Subject: (TMP) உண்ணாவிரதப்பந்தலை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி
    To: tamilmuslimbrothers@googlegroups.com, tmpolitics@googlegroups.com, tmmkgulf@googlegroups.com, tmmk <tmmk_thonderanie-owner@yahoogroups.com>


    உண்ணாவிரதப்பந்தலை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி

    ராம்தேவ் தங்கியிருந்த உண்ணாவிரதப் பந்தலுக்குத் தீவைத்து எரித்து விட்டு கோத்ராவுக்கு பின்பு நடைபெற்ற கலவரத்தைப் போன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த R.S.S. சதித்திட்டம் தீட்டியிருந்ததாக ஷப்னம் ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளிக்கும்போது ஷப்னம் இவ்வாறு கூறியுள்ளார்.

    தனக்கு 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி காலை 3 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலை எரிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்ததாகவும் இந்தத் தகவல் அரசுக்கு தெரியவந்ததாலேயே உண்ணாவிரதத்துக்குத் தடை விதிக்கப்பட்டு ராம்தேவ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

    மேலும் ஷப்னம் தெரிவித்துள்ளதாவது - ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை இன்னொரு குஜராத்தாக மாற்றத் திட்டமிட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம். ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலை எரிப்பதன் மூலம் பெரியதொரு மதக்கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர்.அவர்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறியிருந்தால் வரலாறு ஒரு மிக மோசமான காலத்தைச் சந்தித்திருக்கும். அரசாங்கத்திற்கு இது அதிகாலை 1.30 மணிக்கு தெரிய வந்த பின்னரே ராம்தேவின் உண்ணாவிரதம் தடை செய்யப்பட்டது. எனவே, அரசு இது சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

    இதற்கான ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா என்றதற்கு, "எனக்கு கிடைத்த தகவல்கள் உறுதியானதும் நம்பகமானதும்தான்" என்று கூறிய ஷப்னம் அரசாங்கம்தான் இந்த விஷயத்தை விசாரணை செய்து மதச்சார்பின்மையை அழிக்க முயன்றவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.காவிப் பயங்கரவாதத்தைப் பற்றி நாங்கள் ஆரம்பத்தில் கூறியபோதும் இவ்வாறுதான் கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் அது அனைவருக்கும் தெரிந்தது எனக் குறிப்பிட்ட ஷப்னம் தனது 30 வருட சமூகப் பணியைப் பாதிக்கும் விதமாக எந்த ஒரு அடிப்படையற்ற செய்தியையும் தான் தெரிவிக்க மாட்டேன் எனக் கூறினார்.

    இந்தியாவை முல்லாக்களிடமும் , பாபாக்களிடமும், சாதுக்களிடமும் ஒப்படைத்து இந்தியாவை மற்றொரு பாகிஸ்தானாக்கப் போகிறோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊடகங்கள் இந்த விசயத்தை மறைக்க முயன்றால் அது இந்தியாவின் ஜனநாயகத்திற்குச் செய்யும் பெரும் தீங்கு என்றும் அவர் எச்சரித்தார். ஷப்னம் ஹாஷ்மி டில்லியிலிருந்து செயல்படும் Act Now For Harmony and Democracy ( ANHAD) என்ற மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கிறார்.

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    Fwd: (TMP) ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!



    ---------- Forwarded message ----------
    From: Shahul Askar <shaaskar@gmail.com>
    Date: 2011/6/4
    Subject: (TMP) ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!
    To: madhavalayam-brothers@googlegroups.com, thiruvai@mail.com, tamil-islam@yahoogroups.com, TAFAREG@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, tamilmuslimbrothers@gmail.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>



    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
     
    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
     

    ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!

    நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்.

    இது எப்படி இருக்கு?   இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

    ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

    இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!

    இந்த மகான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியுள்ளார்.

    இது சம்மந்தமான ஆவணங்களை உத்தரகாண்ட் மாநில சப் டிவிசியன் மஜிஸ்ட்ரேட் கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த சாமியாருடைய திருட்டுத்தனத்திற்கு எதிராக முன்னால் பஞ்சாயத் தலைவர் எஸ். ஷவ்ஹானும்,  இப்போதைய தலைவர் சரண் சிங்கும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

    இதனால் ரூர்கி மாவட்ட மஜிஸ்ட்ரேட் ஹர்பீர் சிங் அவர்கள் நேரில் சென்று பத்திரங்களில் உள்ள கைரேகை, மற்றும் பட்டா, போன்ற ரெவேன்யு ஆவணகளை சோதித்து பார்த்து இவர் செய்துள்ள கள்ளத்தனத்தை நிருபித்துள்ளார்.

    இந்த நிலத்தோடு அல்லாமல் மேலும் அதிகமான ஹேக்டர் அரசுக்கு சொந்தமான நிலங்களை இவர் களவாடி உள்ளார் என்று சப் டிவிசன் மஜிஸ்ட்ரேட் அவர்கள் கலக்டருக்கு புகார் செய்துள்ளார்.

    இந்த பிரச்னை பெரிய விவாதமாக ஆனவுடன் இப்போது ஊழலுக்கு எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொண்டு வந்து இருக்கும் இரண்டாவது இறக்குமதியான  இந்த பண்டார, பரதேசி ராம்தேவ்தான் கைவசப்படுத்திய நிலத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு வேறு நிலம் கொடுக்கிறேன் என்று கலக்டருக்கு பதில் அனுப்பி உள்ளார்.

    இவருடைய நிறுவனம் ஹரித்துவாரில் மொத்தமாக ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த சாமியார்களுக்கு  இவ்வளவு பணம் எப்படி வந்தது? ஏற்கனவே காந்தியவாதி கள்ள பணத்திற்கு எதிராக நடத்தின நாடகத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் செலவானது.

    இப்போது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் நடத்தும் நாடகத்திற்கு பதினெட்டு கோடி செலவு செய்வதாக வெளிபடையாக சொல்கிறார்கள் என்றால் உண்மை நிலை என்னவாக இருக்கும்.


    இவர் நடத்தும் இந்த நாடக மைதானத்தில் ஆயிரத்தி ஐநூறு ஏர் கூலர். முந்நூறு கழிப்பறைகள், நானூறு டிஜிட்டல் ஸ்க்ரீன், நானூறு படுக்கைகள், நூறு அம்புலன்சுகள் என்று பலகோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள்.

    மேலும், உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்க பலகோடிகள் கோடிகள் செலவில் தனியாக டவர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நாடக மைதானம் முழுவதும் ஹிந்து பாசிடுகளால் நிரம்பி வழிவதில் இருந்தே தெரிகிறது இவரை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ் தான் தெள்ளத் தெளிவாகிறது. நல்லவர்கள் ஒரு ஆள் கூட இந்த பாசிஸ்ட்களின் கூடாரத்தில் இல்லை.
     
     
     
     
    என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
     
    அஸ்கர்
    மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
    அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
    =================================================================================
    "எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
     
    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
     
    "இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    FW: [JAQH UK] ”நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று...

     

    Date: Wed, 1 Jun 2011 09:07:00 -0700
    To: haja8@hotmail.com
    From: notification+muhp_i5_@facebookmail.com
    Subject: [JAQH UK] "நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று...

    Fathimah Muslimah posted in JAQH UK.
    Fathimah Muslimah 8:06pm Jun 1
    "நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.

    புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

    View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.