பெண் பாதுகாகப்பட வேண்டியவள்” இஸ்லாம் காட்டும் நெறிமுறை


பெண் பாதுகாகப்பட வேண்டியவள்" இஸ்லாம் காட்டும் நெறிமுறை
From: riyasudeen.as@gmail.com
To: nasarknr@gmail.com; haja.ahamed@gmail.com; nazar7582207@gmail.com; siddiqym@gmail.com; haja8@hotmail.com; habeeb_sha@hotmail.com; javith1988@yahoo.com; kiliyanurismath@gmail.com; mpnajeem@hotmail.com; musthafaha@gmail.com; msarif2006@gmail.com; Noor.AndiveeduAbdulHacq@me.weatherford.com; najeem1970@hotmail.com; riyazbinabdul@gmail.com; riyazudeen.s@gmail.com; sathik_bdm@yahoo.co.in; yuzuff@hotmail.com; zahirjb@yahoo.com







 

Assalamu Alaikkum,

Dear Brothers Need Dawaa in Our community.

Please do the Dawaa. This is Very Important.

Tomorrow Allaah will ask to us.

மார்க்கம் முஸ்லிமான பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் சரியாக சென்று சேரவில்லை!

 

அல்லாஹ் நம்  குழந்தைகளுக்கு நேர்வழிகாட்டுவானாக!

 

ஷைத்தானின் ஊசலாட்டதிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும்

நம் சந்ததியினரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

 

கேவலமான இந்த காதல் என்ற (காம) விபச்சார பாவத்திலிருந்து நம் சந்ததியினரை அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

 இதைத் தவிர இப்போதைக்கு எதையும் சொல்ல முடியவில்லை!

 

காதலும் (காம) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது"

(நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

  

மோகம் 30 நாட்கள் ஆசை 60 நாட்கள்........  அதற்கு பிறகு ??

 

கொடுமை! கொடுமை!!  கொடுமை!!!

  

வேதனைக்கு அளவே இல்லை! வேதனையின் உச்ச கட்டம்!

  

துணிச்சலான இந்த முஸ்லிமான பெண்களுக்கு அல்லாஹ்வின் மீது பயம் கிடையாதோ?

 

கேவலமான இந்த காதல் என்ற (காம) விபச்சார பாவத்திலிருந்து நம் சந்ததியினரை அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

மார்க்கம் முஸ்லிமான பிள்ளைகளிடத்தில் சரியாக சென்று சேரவில்லை!















 

*************************************************************************************************************************





















































           "பெண் பாதுகாகப்பட வேண்டியவள்" இஸ்லாம் காட்டும் நெறிமுறை

(Forward By >> S.N. mg;Jy; myPk; (rT+jp X[u; - uppahj;) Author - Ahmad Baqavi

பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன
'அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது.
அவற்றுள்
முதன்மையாக:-
'அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்'

என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.
ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
'நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்'
(அல்குர்ஆன் 33:33)
இந்த உத்திரவின் மூலம், 'அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்' என்று கூறியது.
                                                                                                                                                                                                 
இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம். எனவே தான்.     'ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்' எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களை எச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
இரண்டாவதாக:-
பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்
ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
'அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.' (அல்குர்ஆன் 24:31) என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது.
பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே 'பார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்' என அருள்மறை சுறுகிறது.  கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே,      'கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வை' என்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள்.  ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது,      'உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்' என சட்டெனப் பதில் சொன்னார்கள்  திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.                                                                                
மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். 'நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36)  என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும்.                                                                                                                    பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.    அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!' எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும்.  'சரிதான், நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவாநீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)              
இந்த உத்தரவின் மூலம் 'பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது.    இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும்.
மூன்றாவதாக:-
'அலங்காரங்களை வெளியே காட்டாதீர்!'
என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
ﭧ ﭨوَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
'அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.'(அல்குர் ஆன் 24:33)                                                                                                                                                    
இந்த தொடரில் வரும் 'அழகைக் காட்ட வேண்டாம்' என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்:
1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது,
2. ஆபரணங்களின் அழகைக் காட்டுவது,
3. நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது.
இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை) ஆகும்.                                            '
ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும்.'
மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் 'ஸீனத்' என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும்.                       
இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள்.
அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும்.
வேறு சில விரிவுரையாளர்கள்:
'ஸீனத்' என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர்.
உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள், கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
வெளி அலங்காரம் என்பது, மோதிரம், கண்ணிலே போடு;ம் சுர்மா போன்ற மைகள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும்,
'முகம் இரு முன் கைகள்' என ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்களும் பொருள் தருகின்றார்கள்.
இவற்றை ஆதாரமாகக் கொண்டு 'வெளியே தெரியும் பகுதியைத் தவிர' என்ற குர்ஆன் வசனத்திற்கு மேற் கூறப்பட்ட வெளி அலங்காரங்களைத்தவிர உள்ளவைகளை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் தருகிறார்கள்.
நான்கவதாக:-
'தலையையும் உடலையும் மறைத்துக் கொள்ளுங்கள்'
 'அவர்கள் தங்களின் தலைத்துணிகளால் மார்புகளையும் மறைத்துக் கொள்ளவும்.' (குர்ஆன் 24:31) என்பது திருமறை மூலம் இஸ்லாம் கூறும் நான்காவது கட்டளையாகும்.                                                                   
'இந்த மறை வசனம் அருளப்பட்டதும், முஹாஜிர்களான பெண்கள் தங்களின் ஆடைகளை கிழித்து அவற்றை தலையிலே கட்டிக் கொண்டார்கள்' என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                  உம்மு ஸல்மா(ரலி) அவர்கள், பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்:                   
'இந்த வசனம் இறங்கியதும், அன்சாரிப் பெண்கள் தங்களின் தலைகளில் காகங்கள் குடியிருப்பது போன்று கறுப்புத் துணிகளை கட்டியிருந்தார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெண்களை பெருநாள் தொழுகையில் பங்கேற்பதற்காக வெளியே செல்லலாம் என அனுமதித்த போது சில பெண்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, 'எங்களில் ஒருத்திக்கு தலைத்துணி இல்லையே! என்ன செய்வது எனக் கேட்டார்கள், அதற்கு நபிகளார்,                                           
 'அவளுடைய சகோதரியின் தலைத் துணியால் மறைத்துக் கொள்ளட்டும்' என கட்டளையிட்டார்கள்.                                                                     இந்த ஹதீஸ் மூலம்,
'ஸஹாபாப் பெண்களிடம் தலைத் துணியில்லாமல் செல்வது வழக்கமில்லையென்றும், அவ்வாறு செல்வதை நபிகள் நாயகம் அனுமதிக்கவே இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
'பெருமானார்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் (அதிகாலைத்) தொழுகையை நடத்தும்போது முஃமினான பெண்களில் சிலர் தங்களை போர்வையால் மூடிக்கொண்டு தொழுகையில் வந்து கலந்து கொண்டு யாருடைய கண்களிலும் படாமல் அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.'
நாங்கள் (தற்செயலாக சில பகுதிகள் திறந்திருந்ததை) பார்த்;;;;;;;ததை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால், பனீஇஸ்ராயீல்கள் தங்களின் பெண்களைத் தடுத்ததைப் போல பள்ளி வாசலுக்கு வரும் பெண்களை நிச்சயம் தடுத்திருப்பார்கள்.(புகாரி, முஸ்லிம்)
                                                                             
குர்ஆனையும் ஹதீஸையும் பக்தியோடு நெறி வழுவாமல் பின்பற்றிய அந்தக் காலத்திலேயே அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அப்படிக் கூறியிருந்ததால், இன்றயை காலத்தில் வெட்கமும் நாணமுமின்றித் தலையை திறந்து கொண்டு அரைகுறை ஆடைகளில் நடமாடும் இஸ்லாமிய நாகரீக நங்கைகளைப் பற்றி எப்படிக் கூறியிருப்பார்கள்?
தலை முடி திறந்திருப்பது ஹராம்                                                                     
                                                                                                                                                                                                                  
 (புனித மதீனா முனவ்வரா மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழச் சென்ற இந்தியப் பெண்மணி ஒருவரின் தலை இலேசாக திறந்திருந்ததைக் கண்ட துருக்கி நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி, 'நீங்கள் முஸ்லிம் பெண்ணாயிற்றே! தலைமுடியை வெளியே காட்டலாமா? எனக் கடிந்ததோடு தலைமுடியை வெளியே காட்டுவது ஹராமாகும்' எனக் கூறியதை நமது பெண்கள் சிந்தனையிற் கொள்ள வேண்டும்.                                                      அரபு நாடுகளில் எந்த நாகரீகப் பெண்ணாக இருந்தாலும் முடி வெளியே தெரியாதவாறு தலையில் துணி போட்டுக் கட்டிக் கொண்டு மூடி மறைத்துக் கொண்டிருப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.
ஷரீஅத் விழையும் பர்தா உடை எப்படி அமைய வேண்டும்.
1. பர்தா (ஹிஜாப்) உடை பெண்களின் முகம், முன் கைகள் தவிர உடலின் ஏனைய பகுதி முழுவதையும் மறைத்திருக்க வேண்டும்.                                  
2. அணியும் ஆடை அடர்த்தியானதாக அமைய வேண்டும், உடலின் வனப்பை வெளிக்காட்டும் மெல்லிய ஆடையாக அமைதல் கூடாது.                                  
3. ஆடை உடலின் வடிவையும் அங்கங்களையும் அளந்து காட்டும்படி இறுக்கமான ஆடையாக இல்லாமல் தொள தொளப்பாக இருக்க வேண்டும்.   
4. பிறரை ஈர்த்து நிற்கும் வசீகரமான ஆடையாக அமைதல் கூடாது.                          
5. பெண் அணியும் ஆடை ஆண்கள் அணியும் ஆடையைப் போல் இருத்தல் கூடாது.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்                                          
'ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.'                          
இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும்போது ஷரீஅத் கூறும் இந்த விதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
                                                                         
ஐந்தாவதாக

"கிழவிகளுக்கும் அனுமதியில்லை"                                       
குர்ஆன் கூறுகிறது
 'விவாக விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள் அழகை காட்டும் நோக்கமின்றி தங்களின் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. அதனையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மேலானதாகும்                 .(அல்குர்ஆன் 24:60)
இந்த வசனத்தில் ஆடைகளை களைந்திருப்பபது எனக் கூறப்படுவது நிர்வாணமாகவோ, உடலைத் திறந்திருப்பதோ என்பது பொருளல்ல. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் போது வெளியே தெரியும் பகுதிகளான கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளை திறந்து இருப்பது குற்றமில்லை. சில போது முதுமையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ, மருத்துவத்தின் காரணமாகவோ அவர்களின் வசதிக்காக உடலின் சில பகுதிகளை திறந்து வைத்திருக்கக்கூடும்.
அழகைக் காட்டும் நோக்கமில்லையென்றால்தான் இவ்வாறு திறந்திருப்பதை அனுமதிக்கப்படுகிறது. பிறர் தனது அழகைக் கண்டால் ரசிக்கக்கூடும் எனத் தெரிந்தால் கிழவிகளுக்கும் இந்த அனுமதியில்லை. அவர்கள் இதையும் தவிர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்.
ஆசையற்ற வயது முதிர்ந்த கிழவிகளுக்கே உடலை மூடி மறைப்பது நன்று எனக் கூறும் போது இன்று, உடல் வனப்பை காட்டித் திரியும் இள மங்கைகளுக்கும், குடும்பப் பெண்களுக்கும் எவ்வாறு தங்களின் அழகைக் காட்டிச் செல்ல அனுமதியிருக்கமுடியும்?
ஆறாவதாக:-
'பெண்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டவர்கள்'
இஸ்லாம் ஒரு பெண்ணைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு என்பதையும் குர்ஆன் மூலம் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறது.
''பெண்கள் தங்களின் கணவன்மார்கள், தங்களின் தந்தையர்கள், தங்களுடைய கணவனுடைய தந்தைகள், தங்களின் குமாரர்கள், தங்களின் கணவன்மார்களின் குமாரர்கள், தங்களின் சகோதரர்கள், தங்களின் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களு(டன் தொடர்பு)டைய பெண்கள், தங்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்) அல்லது பெண்களின் மீது ஆசையற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் அவயவங்களை அறிந்து கொள்ள முடியாத சிறு வயதுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர (மற்றெவருக்கும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரங்களைப் போன்ற) தங்களின் அலங்காரத்தைக் காட்ட வேண்டாம்.'     (அல்குர் ஆன் 24:32)
இதிலிருந்து அவர்கள் யார் யார் முன்னிலையில் தோன்றலாம், அவர்களின் அழகைப் பார்க்க யாருக்கு அனுமதி உண்டு என்பது மிகவும் தெளிவாகிறது.
இவர்களைத் தவிர பெண்களின் அலங்காரங்களை பார்க்க எவருக்கும் அனுமதி கிடையாது.
இவ்வாறு வரைதயறுத்து மிகத் தெளிவாக இறை மறை கூறிய பிறகு ஒரு பெண் பர்தா இன்றி எவ்வாறு அந்நிய ஆடவர் முன் தோன்ற முடியும்.?
ஏழாவதாக:-
ஓசையுடன் நடக்காதீர்!
'அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்' எனக் கூறுகிறது. அல்குர்ஆன்.
அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷீக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.
தனது காலணிகளால் ஓசையுடன் நடக்கும் போது அவள் யார்? எப்படிப்பட்டவள் அவள் இளமங்கையா? கவர்ச்சிக்கன்னியா? நடுத்தர வயதினரா என அந்நிய ஆடவர்கள் தம்மை ஏறிட்டுப் பார்க்குமுhறு தூண்டிவிடுவது மட்டுமல்லாமல் தம்நடை அழகையும், இடை அழகையும் உடை அழகையும் ரசிக்குமாறு கிளறிவிடுகிறாள்.
சிலர் அந்நிய ஆடவர்களின் மூக்கை துளைப்பதற்காகவே நவீன ரக நறுமணங்களையும் பூசித் திரிகின்றார்கள். பிறர் தம்மை ரசிக்க வேண்டு மென்பதற்காகவே டம்ப்பபைகளையும், வித விதமான மூக்குக் கண்ணாடிகளையும், உடலின் வனப்பையும் அமைப்பையும் துல்லியமாக காட்டும் இறுக்கமான மினிஸ்கட் பாவாடைகளையும் எடைகளையும் பேண்டுகளையும் அணிந்து உலா வருகிறார்கள். இதனுள் எவ்வளவு பெரிய ஆபத்துக்;;;;;கள் விளைந்து சமுதாயத்தையே சீரழித்துவிடுகிறது என்பதை உத்தேசித்தே.
'நீங்கள் யார் என்று காட்டிக் கொள்ளாமல் உங்களை ஆடையால் போர்த்திக் கொண்டு ஓசைபடாமல் நடந்து செல்லுங்கள்' என்று பெண்கள் சமுதாயத்தை இறைமறை உபதேசிக்கிறது.
அன்னை பாத்திமா(ரலி) அவர்கள் தங்கள் கணவர் கூட கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கிழவியைப் போல் போர்த்திக் கொண்டு வெளியே செல்வார்கள் என்பது இங்கு சிந்திக்கத்தக்கதாகும்.
எட்டாவதாக,
'அந்நிய ஆடவருடன் நளினமாகப் பேசாதீர்!'
إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْن َقَوْلًا مَّعْرُوفًا
 الأحزاب: ٣٢
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவராக இருப்பின் அந்நிய ஆடவர்களுடன் பேசநேர்ந்தால் நளினமாகப் பேசாதீர்கள். எவருடைய உள்ளத்தில் (தீய) நோய் இருக்கிறதோ, அவாக்ள தவறான விருப்பங்களை கொள்ளக்;கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதினும்) நேர்மையாக (உடனே) பேசி (முடித்து அனுப்பி) விடுங்கள்.
(அல்குர் ஆன் 33:34)
என எச்சரிக்கிறது இஸ்லாம்.
இன்று எங்கே சென்றாலும், பெண்களின் கூட்டத்தையே காணமுடிகிறது. வீதிகளிலும், ஊர்திகளிலும், கடைகளிலும், பொது இடங்களிலும் பெண்களின் குரலோசைகளையும் சிரிப்பொலிகளையும் ஆர்பாட்டங்களையுமே பார்க்க முடிகிறது. பக்;தியோடும், நாணத்தோடும், மரியாதையோடும் அமைதியாக செல்ல வேண்டிய மாதர்கள், ஆர்ப்பாட்டங்களோடு பவனிவருவதைக் காண வேதனையாக உள்ளது.
பார்க்கும் இடங்களிலெல்லாம் சிரித்துப் பேசும் சிங்காரிகளை கண்டித்து 'நீங்கள் சிரித்துப் பேசாதீர்கள், ஆடவர்களை ஈர்க்கும் வகையில் நளிமாகப் பேசி அவர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளாதீர்கள். அது உங்கள் பெண்மைக்கு அழகல்ல' என்று கூறுகிறது குர்ஆன்.
ஒன்பதாவதாக:-
'தனியாக வெளியே செல்லாதீர்!'
பெண்களின் கற்பை பாதுகாப்பதற்காக 'நீங்கள் தனியாக வெளியே செல்லவோ, பயணம் செய்யவோ செய்யாதீர்கள்' எனக் கூறுகிறது இஸ்லாம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,
'ஒரு பெண் தன்னுடன் அனுமதிக்கப்;பட்ட (மஹ்ரமான) ஆண்துணையின்றி (தனித்து) பயணம் செய்ய வேண்டாம்' எனக் கூறினார்கள்.
எந்தப் பெண்ணும் வெளியே செல்ல நேர்ந்தால் தன் கணவனையோ, தந்தையரையோ, சகோதரர்களையோ, அனுமதிக்கப்பட்ட (மஹரமான) ஆடவர்களையோ தவிர்த்து தனியாகவோ, மற்றவர்களுடனோ பயணம் செய்வதையும் வெளியே செல்வதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அவ்விதம் செல்வதால் ஒரு பெண்ணுக்கு அவப் பெயரும் வீண்புரளிகளும் ஏற்பட்டுவிடும் என்பதைக் கருதியே இந்த உத்தரவாகும்.
இன்று தனியாக வெளியூர்களுக்கும் வேலைக்கும் பயணம் செய்வதால் ஒரு பெண் எந்த எந்த நிலைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தொடரும்
பத்தாவதாக:-
 
 'அந்நிய ஆடவருடன் கலந்துறவாடாதீர்! தனித்திருக்காதீர்!!'
 
 பெண்களும் ஆண்களும் சகஜமாகப் பழகுவதையும் தனித்திருப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 
 அவ்வாறு பழகும் போதும் தனித்திருக்கும் போதும் சைத்தான் அவர்களை தன் மாய வலையில் வீழ்த்தி விடுகிறான். எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,
 
 'எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்ததான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்' என்றார்கள். (திர்மிதீ)
 இதனால் தான் ஒரு பொருளைக் கேட்க நேர்ந்தால் கூட திரைக்குப் பின்னிருந்தே கேளுங்கள் எனக் கட்டளையிடுகிறது அல்குர்ஆன்.
 
 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆண்களை இவ்வாறு எச்சரிக்கிறார்கள்.
 
 பெண்களிருக்கும் அவையில் செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்.
 
 
 பதினொன்றாவதாக:-
 

 நறுமணம் பூசித்திரியாதீர்!
 

 பெண்கள் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.
 
 ஒரு பெண் நறுமணம் பூசி வெளியே வரும் போது, அந்த நறுமணத்தின் மூலம் ஆடவர்களை காந்தம் போல் இழுக்கிறாள்.
 
 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,
 'ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு ஆண்களிருக்கும் அவையருகே சென்றால் அவள் ஒரு மாதிரியானவள்! ஒரு மாதிரியானவள்!! என்றார்கள்.
 
 இந்த ஹதீஸை அறிவிக்கும், திர்மிதீ அவர்கள், அதற்கு 'விபச்சாரி' என்பது பொருளாகும் என தெரிவிக்கிறார்கள்.
 
 மற்றொரு ஹதீஸ்
 'ஒரு பெண் நறுமணம் பூசி ஆண்களருகே சென்று அவர்கள் அதனை நுகர்ந்தால் அவள் விபச்சாரியாவாள்' எனக் கூறுகிறது.
 
 எனவே பெண்கள் நறுமணம் பூசி வெளியில் நடமாடுவதை இஸ்லாம் அனமதிக்கவேயில்லை.
 
 
 பன்னிரண்டாவதாக:-
 
 'அந்நிய ஆடவர்களுடன் கை குலுக்காதீர்!'
 
 இன்றைய நாகரீக உலகில் பெண்கள் ஆண்களுடனும், ஆண்கள் பெண்களுடனும் மேலை நாட்டுப் பாணியில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்வதைக் காணுகிறோம்.
 
 இதையும் இஸ்லாம் வன்மையாக கண்;டிக்கிறது.
 
 புகாரி ஷரீபில் வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
 'பெருமானாரின் கை, தனக்குச் சொந்தமான மனைவியரின் கையைத்தவிர்த்து எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை'
 
 எனவே இஸ்லாம் பெண்கள் தங்களின் செயல்களாலும், அசைவுகளாலும், ஆண்களை எந்த வகையிலும் ஈர்த்து நிற்கக் கூடாது என்;பதை கவனித்திற் கொண்டே படிப்படியாக பக்குவமாக உபதேசித்து 'பர்தா' என்னும் திரையின் மூலம் வரம்பை காத்துக் கொள்ள வேண்டும் என கண்டிப்பாக கட்டளையிடுகிறது.
 
 'பர்தா முறையிலிருக்கும் பெண்கள் நோயினால் பீடிக்கப்படுகின்றனர்' என்ற புதுப் புரளியை சிலர் கிளப்புகின்றனர். பர்தா முறையில் இருக்கும் பெண்களுக்கென்று தனிப்பட்ட நோய் இருப்பதாகவும், அந்த நோய மற்ற பெண்களுக்கு உண்டாவதில்லை என்றும் இதுகாறும் மருத்துவ உலகம் நிருபித்ததில்லை.
 
 இறுதியாக பர்தா என்பது கற்பைக் காக்கும் நெறியாகும். 'கற்பெனப்படுவது பிறர் மனம் புகாமை' ஆகும்.
 
 தான் குடியிருக்கும் பகுதியில் ஆடவர் நடமாடும் அரவம் கேட்பினும் அந்த ஆடவர் அவளின் பெயரைக் கேட்பினும் உயிரை விடக்கூடிய கற்புணர்ச்சியால் சினமுறுபவள் என்று ஒரு பெண்ணைப் பாராட்டி
 
 ஆடவர் தனதிடத்து அருகி போதினும்
 நாடி மற்றவர் பெயர் நயந்து கேட்பினும்
 வீட






0 Responses

கருத்துரையிடுக