Fwd: [K-Tic] பெண்களே ! ஆடம்பர அலங்காரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏழைப் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள் – தென்றல் கமால்
From: Thendral Kamal thendralkamal@gmail.com [K-Tic-group] <K-Tic-group-noreply@yahoogroups.com>
Date: 2015-06-18 12:12 GMT+04:00
Subject: [K-Tic] பெண்களே ! ஆடம்பர அலங்காரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏழைப் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள் – தென்றல் கமால்
To: K-Tic-group@yahoogroups.com
பெண்களே ! ஆடம்பர அலங்காரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏழைப் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள் – தென்றல் கமால்
குடும்ப நிகழ்ச்சி
பணக்கார உறவினர்களும் வந்திருந்தனர்
ஏழை உறவினர்களும் வந்திருந்தனர்
என்னுடைய ஒர் உறவுக்காரப் பெண் வசதி படைத்தவள் என்பதால் தன்னை தங்கத்தால் தலை முதல் கால் வரை அலங்கரித்திருந்தாள்
மற்றொர் உறவுக்காரப் பெண் (விவாகரத்தானவளும் கூட) ஏழ்மை காரணமாக கழுத்தும் காதும் மொட்டையாக இருக்க கூடாதே என தங்கம் போல் காட்சியளிக்கும் செயற்கை நகையை அணிந்திருந்தாள்
இருவரும் உறவினர்களே… அவளைப் பார்த்து இவள் என்னவெல்லாம் சிந்தித்திருப்பாள் …….. எனக்கேன் இந்த நிலையை இறைவன் தந்தான் நான் என்ன பாவம் செய்தேன் என இறைவனின் மீது சடைவு கூட ஏற்படலாம்
திருமணங்களில் உறவினர்கள் வருவர் அங்கே ஏழைகளும் பணக்காரர்களும் இருப்பர்
இப்படி எல்லா விசேடங்களிலும் நம்முடைய ஏழை மற்றும் பணக்கார உறவினர்கள் இணைந்தே இருப்பார்கள்
பொதுவாக ஆணுடைய அலங்காரம் ஆடை வரை தான் அது அதிகம் பகட்டாகத் தெரியாது
ஆனால் பெண்ணுடைய அலங்காரம் ஆடை மட்டுமல்லாது அணிகலன்கள் வரை போகும் ( பட்டுப் புடவை தங்க வைர நகைகள் உயர்ந்த செருப்பு ஹாண்ட் பேக் எனும் டம்பப் பை உட்பட)
பசித்தவன் முன்னால் பிரியாணி சாப்பிடுவது எப்படி மனிதநேயம் அற்ற செயலோ
அதைப் போல் ஏழைகளும் கூடி வரும் இடத்தில் அதிக பகட்டாக காட்சி தருவதும்
எந்தப் பெண்ணையும் கேட்டுப் பாருங்கள்…… நீங்கள் இப்படி பட்டும் பல வகை நகைகளையும் அணிந்து செல்கிறீர்களே திருமணம் போன்ற நிகழ்விற்கு …….. உங்கள் நகை அலங்காரங்களை எந்தப் பெண்ணாவது பாராட்டுகிறாளா என்றால் இல்லை என்பார்கள்
நீங்கள் மற்றவர்களின் ஆடை நகை அலங்காரங்களைப் பாராட்டுகிறீர்களா என்றால் இல்லை என்பார்கள்
பாராட்டே இல்லாத இடத்திற்கு இத்தனைப் பகட்டு எதற்கு
பாராட்டு தான் கிடைக்கவில்லை
நீங்களும் மற்றவர்களுக்கு கொடுக்கவில்லை
………….பகட்டான ஆடை அலங்காரங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் பட்டு கண் விழுந்து அதனால் தீமை நேரலாமே !
பகட்டாக ஆடை அலங்காரம செய்ய இயலாதவளுக்கு தன் கணவன் கையாலாகாதவன் என்ற எண்ணம் ஏற்பட்டு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விரிசல் நேரலாமே !
பெண்ணே உன்னுடைய அலங்காரம் உன் கணவனுக்குத் தானே உன் குடும்பத்திற்குத் தானே
ஊராருக்கல்லவே
இறைவன் படைத்த படைப்பில் எல்லா ஆண் இனங்களும் அழகும் கம்பீரமும் ( ஆண் சிங்கம் ஆண் யானை சேவல் மயில் என அடுக்கலாம்)
ஆனால் மனித இனத்தில் பெண்ணை அழகாக ஆக்கியிருக்கிறான் ஆனால் அந்தப் பெண்ணின் அழகிலும் குறை உள்ளது அதை தங்கத்தால் ஈடு செய்ய வேண்டியிருக்கிறது
இறைவன் தந்த நிஃமத்தை வெளிப்படுத்துங்கள் ஆனால் அது அளவாக சிம்பிளாக இருக்கட்டும்
ஏழைப் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்
நிச்சயமாக மனிதநேயத்தை விட மற்றவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு நம்மை நாமே மாற்றிக் கொள்வதைப் போன்ற உயர்ந்த அலங்காரம் ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது
தென்றல் கமால்
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
--