பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!
JUNE 22, இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.
இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
* காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.
புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது.
அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.
* பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.
புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது. இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
* நித்யானந்தா: 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர்,பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு,
புகழ்: நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.
சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.
வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும்.
என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது, இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது.அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது.
சிவ் முரத்திவேதி: இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.
புகழ்: கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தியது.
டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.
* கல்கி பகவான்: விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.
புகழ்: அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.
* பாபா ராம்தேவ்: வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு நாட்டில் சொந்தமாக தீவு. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில் பவனி. ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.
ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.
* ஸ்ரீ ஸ்வாமிஜி: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டு.
புகழ்: இவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சத்திய சாய்பாபா: ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள்சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.
புகழ்: ஆசிரமத்தில் நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் இப்படி புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.
* ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்: பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து "வாழும் கலை'யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.
* ஆஸ்ரம் பாபு: டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு வரவு செலவு வர்த்தகம் 350 கோடி.
* சுதன்ஷன் மகராஜூ: நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.
* அமிர்தானந்த மாயி: பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி.அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.
* முராரி பாபு: பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.
இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம்.
* பங்காரு சாமியார்: கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.
* தீபக் தாக்கூர்: அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.
தீவிரவாத சாமியார்கள்:
* சுவாமி ஆசிமானந்தா: குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.
புகழ்: மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி. இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
* பெண் சாமியார் சாத்வி பிரக்யா: இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும் வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.
புகழ்: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.
இதுவல்லாமல் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே "குணமாக்கி' நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
Source: http://www.sinthikkavum.net/2011/06/blog-post_22.html