குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்
 
 

அஹ்மதாபாத்:2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கொடூரமான முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குண்டு என உயர் போலீஸ் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இனப் படுகொலையின் மூலமாக ஹிந்துக்களின் கோபத்தை தணிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் மோடி மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தினார் என சுட்டிக்காட்டி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் சமர்ப்பித்துள்ளார்.

இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஜாப்ரியின் வழக்கில்தான் பட் கடந்த 14-ஆம் தேதி வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது நம்பிக்கையில்லாததால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி பிரமாணப்பத்திரம் அளிப்பதாக சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

குஜராத் அரசை வழக்கிலிருந்து தப்பிக்க உதவ எஸ்.ஐ.டி முயலுவதாக சஞ்சீவ் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் இனப் படுகொலையின் போது குஜராத் மாநில ரகசிய புலனாய்வு பிரிவில்(எஸ்.ஐ.பி) டி.சி.பியாக பதவி வகித்தவர் சஞ்சீவ் பட். 1998-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பாட்சை சார்ந்தவர். டி.ஐ.ஜி ராங்கிலுள்ள அவர் தற்போது மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் தலைவராக இருக்கிறார். சத்திய வாக்குமூலம் வெளியான சூழலில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென அவர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கூடிய போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் முஸ்லிம் இனப் படுகொலையை தீவிரமாக்குவதற்கான உத்தரவுகளை மோடி பிறப்பித்துள்ளார். அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிடுவோர் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தாக்குதலுக்கு ஆளானவர்கள் உதவி கேட்டு அழைக்கும் பொழுது அதனை அலட்சியம் செய்யுமாறும் மோடி உத்தரவிட்டார் என சஞ்சீவ் பட் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடுநிலையாக நடந்துவருகிறது போலீஸ். ஆனால், இம்முறை முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், ஒருபோதும் இதுமாதிரியான (கோத்ரா ரெயில் எரிப்பு) சம்பவங்கள் நிகழக்கூடாது. ஹிந்துக்களிடையே கோபம் பற்றி எரிகிறது என போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் மோடி கூறியுள்ளார் என தெரிவிக்கிறார் சஞ்சீவ் பட்.

மோடியின் வீட்டில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்பட எட்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சத்திய வாக்குமூலத்தை எஸ்.ஐ.டியிடம் வழங்காமல், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்க என்ன காரணம்? என சஞ்சீவ் பட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அதற்கான பதில் பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளதாக சஞ்சீவ் பட் பதிலளித்துள்ளார்.

'ரகசிய புலனாய்வு அதிகாரியான எனக்கு மோடியின் உத்தரவுகளை குறித்து தெளிவாக தெரியும். சட்டரீதியான கடமை இருப்பதால் பணியின் காரணமாக இத்தகைய சம்பவங்களை வெளிப்படுத்தாமலிருப்பது சரியல்ல' என அவர் தெரிவித்தார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அளித்த பிரமாண பத்திரம் கசிந்ததில் சஞ்சீவ் பட் அதிர்ச்சியை வெளியிட்டார். 'கூட்டத்தில் பங்கேற்க யார் கட்டளையிட்டார்கள்? யாருடன் கூட்டத்திற்கு சென்றீர்கள்? ஆகியவற்றை பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளேன். எஸ்.ஐ.டிக்கும், நீதிமன்றத்திற்கும் தேவையான உண்மை அதில் உள்ளது' என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.

வருகிற 27-ஆம் தேதி இதர ஆவணங்களுடன், சஞ்சீவ் பட் அளித்துள்ள சத்திய வாக்குமூலமும் பரிசீலிக்கப்படும். 'இத்தகைய விபரங்களை எஸ்.ஐ.டியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், கிடைத்த விபரங்களின் அடிப்படையில் செயல்படாமல், குஜராத் அரசை பாதுகாப்பதற்கு எஸ்.ஐ.டி முயன்றதாக பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளேன்.'

மூத்த போலீஸ் அதிகாரி மோடியின் உத்தரவுகளை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தினார் என சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஜூனியர் அதிகாரியாக இருந்ததால் சஞ்சீவ் பட் பங்கேற்கவில்லை என எஸ்.ஐ.டி விசாரணை செய்யும் வேளையில் மோடி வாக்குமூலம் அளித்திருந்தார். முன்னாள் சி.பி.ஐ தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமையில் எஸ்.ஐ.டி மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில் சஞ்சீவ் பட்டிடம் விரிவாக விசாரணை நடத்தியிருந்தது.

புதிய தகவல்கள் வெளியான சூழலில் மோடியும், பா.ஜ.கவும் நாட்டிற்கு பதில் அளிக்கவேண்டுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மோடிக்கு புகழாரம் சூட்டுபவர்கள் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தை வாசிக்கட்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார்.



---------- Forwarded message ----------
From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
Date: 2011/4/22
Subject: (TMP) மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார்.
To: tamilmuslimbrothers@googlegroups.com, unitedtamilmuslims@yahoogroups.com, tmpolitics@googlegroups.com
Cc: Keelakarai Anjal <keelaianjal@gmail.com>, sengiskhanonline@gmail.com, reporterfaisal@gmail.com


ஸ்லாத்தை பிற மக்களிடத்தில் சேர்ப்பதை உன்னத பணியாக கொண்டுள்ள நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சமுதாய மக்கள் ரிப்போர்ட்டின் வடிவமைப்பாளர் R.மன்மதன் இன்று (22.04.2011) தன் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவர் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் நீண்டகாலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வு பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி, சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தில் இணைந்தது பற்றி மூஸா [மதன்] அவர்கள் கூறும்போது,

''ஐந்தாண்டுகளாகவே இஸ்லாத்தில் இணையும் எண்ணம் எனக்குள் இருந்தாலும், மனைவி-மக்கள் சகிதமாக இஸ்லாத்தில் இணையவேண்டும் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டு வந்தேன். இன்றைக்கு நான் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டான். இருந்தாலும் என் மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியுடன் நான் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவி விட்டேன்  அல்ஹம்துலில்லாஹ்.  எனது இந்த இஸ்லாமிய தழுவல் எனது மனைவிக்கு இன்னும் தெரியாது. எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இஸ்லாத்தை தழுவிட பிரார்த்தியுங்கள் என்றார்.

மூஸாவின் செயல்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திடவும், அவரது ஆசைப்படி அவரது குடும்பத்தாரும் இஸ்லாத்தில் சங்கமித்திடவும் நாமும் பிரார்த்திப்போமே!

அன்புடன்-முகவைஅப்பாஸ்.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி - ஓர் ஆய்வு தொகுப்பு



---------- Forwarded message ----------
From: Islamic Service <service.islam@gmail.com>
Date: 2011/4/6
Subject: (TMP) தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி - ஓர் ஆய்வு தொகுப்பு
To:


தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி
ஓர் ஆய்வு தொகுப்பு

   தமிழகத்தில் இந்துத்துவா எதிர்ப்பு பிரசாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்க தலைவர்களால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பீஜேபி செல்லாகாசாகவே உள்ளது. மத்தியில் பீஜேபி ஆட்சி ஏற்பட்டு, மத்திய அமைச்சர் பதவியை வைத்து திராவிட கட்சிகளுக்கு ஆசை காட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எல்.ஏ க்களாகவும், எம்.பி களாகவும் இருந்தனர் தமிழக பீஜேபியினர். மத்தியில் ஆட்சியியை இழந்ததில் இருந்து தமிழகத்தில் பீஜேபி எம்.எல்.ஏ களோ, எம்.பி களோ இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சிலவற்றில் பீஜேபி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்திய இந்த சங்பரிவார கும்பலின் அரசியல் பிரிவான பீஜேபி தமிழகத்தில் தீண்டதகாத கட்சியாகவே தற்போது உள்ளது. எந்த பெரிய கட்சியும் கூட்டணிவைக்காத நிலையின் சில்லரை கட்சிகளின் துணையோடு தனியாக தேர்தலை சந்திக்கவிருகின்றது. தமிழகத்தில் பாஜக மட்டும்  223 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, 233 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி, குறைந்த பட்டச  பிரசாரம் செய்ய குறைந்தது ரூ. 50 கோடியாவது தேவைபடும். இத்தனை கோடி செலவு செய்து எவ்வளவு வாக்கு பெற்றும் என்பது கேள்வி குறிதான். தேர்தலில் "தனியாக நிற்பது தற்கொலைக்கு சமம்" என்ற பழமொழி தற்போது பீஜேபிக்கு ரொம்ப பொருத்தமாக உள்ளது

தமிழக பீஜேபியின் தற்போதைய நிலை

பாராளுமன்ற உறுப்பினர்கள் :  ஒருவர்கூட இல்லை
சட்ட மன்ற உறுப்பினர்கள் :  ஒருவர் கூட இல்லை
மாநகராட்சி கவுன்சிலர்  : 2
நகராட்சி வார்டு உறுப்பினர் :  44
பேரூராட்சி வார்டு உறுப்பினர்  148
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்  3
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 31

தமிழகத்தில் பீஜேபியின் அரசியல் செல்வாக்கை (?) பார்க்கும் முன் அதனுடைய வரலாற்றை பார்க்கலாம்

தமிழகத்தில் கடந்த கால பீஜேபியின் அரசியல்  நிலவரம்

1980 - ல் 7 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1986 - ல் 14 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1991 -ல் 113  தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1996 -ல் நடந்த சட்ட சபை தேர்தலில் 142 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி குமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதில் சி.வேலாயுதன் மட்டும் வென்று முதன் முதலில் தமிழக சட்ட சபையில் நுழைந்தது பீஜேபி.

1998 -ல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி  வைத்து 5 தொகுதியில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி வென்றது.

1999 -ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிடது. 4 தொகுதியில் (கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி)வென்றது .

2001  சட்ட சபை தேர்தலில்  திமுகவுடன் கூட்டணி வைத்து 21 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் (காரைகுடி, மைலாபூர், மயிலாடுதுறை, தளி) வென்றது.

2004  பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. . இந்த தேர்தலில் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 14,55,899.

2006   சட்ட சபை தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதியில் (குளச்சல், கிள்ளியூர், திருவத்தூர்) 2 ஆம் இடம் பிடித்தது.

2009  பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 2 - ஆம் இடம் பெற்றது.
இந்த தேர்தலில்  பிஜேபி செல்வாக்கு உள்ள தொகுதிகள் என சொல்லப்பட்ட தொகுதிகளில் பீஜேபி பெற்ற வாக்குகளின் விபரம்.


கன்னியாகுமரி - 2,54,474 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
ராமநாதபுரம் - 1,28,322
கோவை - 37,909 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
திருச்சி - 30,329 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
தூத்துகுடி - 39,997
தென் சென்னை - 42,925
நெல்லை - 39,997
வட சென்னை - 23,350
நீலகிரி  - 18,690 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
கிரிஷ்னகிரி - 20,486

பீஜேபி பெற்ற மொத்த  வாக்குகள் 7,11,790.  இதில் ராமநாதபுரத்தில் பீஜேபி சார்பாக  போட்டியிட்ட திருநாவுகரசர்  1,28,322 வாக்குகளை பெற்றுள்ளார், திருநாவுகரசர் இப்போது காங்கிரஸில் சேர்ந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டிஇடுகின்றார். இதனால் திருநாவுகரசர் பெற்ற வாக்குகளை பீஜேபி இழக்க நேரிடும்.  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்னன் மட்டும் 2,54,474 பெற்றார்.  எனவே குமரி மாவட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 3,28,994. இவை பாரளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள். சட்ட மன்ற தேர்தல் என்னும் போது மொத்த வாக்குகளை 6 - ஆல் வகுத்து கொள்ள வேண்டும் இதிலும் மேலே  குறிபிட்ட 7 தொகுதிகளை கழித்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள்  1,37,837.

பீஜேபியின் செல்வாக்கை பற்றி 6-4-11 - ல் தினமலரில் வெளிவந்த செய்தியில் தமிழகத்தில் பீஜேபி 10 தொகுதிகளில் பலமாக இருப்பதாகவும் 4 தொகுதிகளில் ( குமரி மாவட்டத்தில் 3, மைலாப்பூர் 1) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. மொத்தமாக தமிழகத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகள் போக மித முள்ள 224 தொகுதிகளில் பீஜேபியின் ஓட்டு வங்கி வெறும் 1,37,837. எனவே (குமரி மாவட்டத்தை தவிர) மற்ற தொகுதிகளில் 300 முதல் 600 வாக்குகள் பீஜேபிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது (இன்ஷா அல்லாஹ்). மேலும் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் பிராமண வகுப்பை சேர்ந்த ராஜ லட்சுமி போட்டியிடுவதால் பிராமணர்களின் ஓட்டும் பீஜேபிக்கு கிடைக்காது. 

பொதுவாக பீஜேபி தனியாக நிற்க்கும் போது திமுக, திமுக விற்கு எதிரான வாகுகள் மூன்றாவதாக நிற்க்கும் பீஜேபிக்கு கிடைக்கும், ஆனால் இந்த முறை, அதிக பண பலம் படைத்த SRM பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, மூன்றாவது கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும்  உத்திர பிரதேச முதல் அமைச்சர்  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் அனைத்து தொகுதியில் போட்டியிடுவதால், நடு நிலையாளர்களின் வாக்குகள் அங்கு செல்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளன.  மேலும் சீட் கிடைக்காத சில உதிரி கட்சிகளும் பல தொகுதிகளின் தனித்து போட்டியிட உள்ளன.  இதனால் பீஜேபியின் வாக்குகளில் பெருமளவு சரிவு ஏற்படும்.  எனவே தற்போதுதுள்ள அரசியல் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பீஜேபி இரண்டாம் இடம் கூட வரமுடியாது.  மேலும் பீஜேபியை சேர்ந்த பலர் பீஜேபியை விட்டு விலகி உள்ளனர். இப்படிபட்ட சூழ் நிலையில் வரும் தேர்தல், பீஜேபியின் அரசியல் தற்கொலைக்கு அடித்தளமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

- S.சித்தீக்.M.Tech




--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!


சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!


சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.

இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர் தன் மனைவி வள்ளி என்பவரின் பெயரில் ஒரு நிதிக் கம்பெனியை முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் துவக்க திட்டமிட்டார்.அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காகத் தருவதாகச் சொன்னார்.

முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் போர்வையில் வந்த சில குண்டர்கள் நேற்று மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.

செய்தியைக் கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்த சகோதரர்கள் உடனே சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். ஆனால் நிறைய முஸ்லிம்கள் அங்கே கூடி நின்று குண்டர்கள் பட்டப் பகலில் மஸ்ஜிதின் அடையாளங்களைத் தகர்த்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சுற்றி காவல்துறையினரும் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.

பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி,காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக சாலை மறியலில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். அதன்பின் ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர்.பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டச் செயலாளர் ஷாஹித் என்பவரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆலம் என்பவரும் இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த அக்கிரமத்திற்குப் பொறுப்புடைய அத்தனை பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.