Fwd: |TMB| இஸ்லாம் அல்லாதவர்களின் பார்வையில் இஸ்லாம் <இஸ்லாம் அல்லாதவர்களின் பார்வையில் இஸ்லாம்>;



---------- Forwarded message ----------
From: mohammad mohaideen <mhmddeen77@gmail.com>
Date: 2011/12/29
Subject: |TMB| இஸ்லாம் அல்லாதவர்களின் பார்வையில் இஸ்லாம் <இஸ்லாம் அல்லாதவர்களின் பார்வையில் இஸ்லாம்>;



இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த " அறிவியல் " உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் " உண்மைகளை " வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.
=====================================================================================
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?
-- கவியரசி சரோஜினி நாயுடு

குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.
-- கவியரசி சரோஜினி நாயுடு -Sarojini Naidu, Lectures on"The Ideals Of Islam" see sand writings of Sarojini Naidu, Madras, page 167
**********

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது. - -டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
**********

அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, "த ஜெனியுன் இஸ்லாம்." The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னைகுர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்." - சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)
*****************
குரான் படிக்கிறார் டோனி பிளேர்
லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன்.

சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம்.

இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.


I read the Holy Quran everyday: Tony Blair
Reading Islam's holy book ensured he remained 'faith-literate' said Blair, adding that he believes being faith-literate is crucial in today's globalised world.
Blair believes that knowledge of Islam informs his current role as Middle East envoy for the Quartet of the United Nations, United States, European Union and Russia.
This isn't the first time that the former British Premier had spoken so highly of the religion. In 2006 he said the Quran was a 'reforming book, it is inclusive. It extols science and knowledge and abhors superstition. It is practical and way ahead of its time in attitudes to marriage, women and governance'.
He praised the Muslim faith as being 'beautiful' and that the Prophet Mohammed (PBUH) as being 'an enormously civilizing force'.
Last October, Blair's sister-in-law Lauren Booth raised eyebrows after announcing that she had converted to Islam after what she described as a 'holy experience' during a visit to a shrine in Iran.
SOURCE: http://tribune.com.pk/story/188297/i-read-the-holy-quran-everyday-former-british-pm-tony-blair/
Tony Blair's sister-in-law converts to Islam

Source: http://tribune.com.pk/story/67439/tony-blairs-sister-in-law-converts-to-islam/

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: |TMB| உணவை வீணாக்காதீர் ..!



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2011/12/28
Subject: |TMB| உணவை வீணாக்காதீர் ..!
To:






முழு அளவு படத்தைப்  பார்
சவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறேன். இனி தொடர்ந்துப் படியுங்கள்.
ஒரு கொசுறு செய்தி: சவுதியில், பெண் பிச்சைக் காரர்கள் கூட கை முழுக்க தங்க? வளையல்கள் அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஹூம்..இப்படியும் செல்வம் பொங்கி வழியும் ஒரு உலகம்.....இதற்கு அண்டை நாடான ஆப்ரிக்காவும் வேறொரு உலகம்(வறுமை வாட்டியெடுக்கிறது அங்கு)

உணவை வீணாக்காதீர் ..!


பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது. :-( மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..!  :-(  இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன். :-(

ரமலானில் வளைகுடா நாடுகளில் உள்ள உணவு வீணாக்கல் பற்றி சில நாட்களுக்கு முன்னர் வந்த அரப் நியுஸும் அதற்கு முன்தினம் வந்த யாஹூ நியுஸும் இதையேதான்  உறுதிப்படுத்தியது. துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..!இதுவே அபுதாபியில் 500டன் என்றஅளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறது அந்த செய்தி.
.

UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார்.
.


The General Authority of Islamic Affairs and Endowment (Awqaf) என்ற அமைப்பு தங்கள் "Think before you waste"என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டுள்ளனாராம். 
.

உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இவர்கள் உணரவேண்டும்..!

வீம்புக்காக விண்ணை முட்டும் அதிஉயர ஆடம்பர சொகுசு மாளிகைகளை கட்டிக்கொண்டு  வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம். 

இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...  

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)

மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...

''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

இப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த  அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர் எனில் அதற்கு காரணம் இவர்களிடம் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் செல்வச்செருக்கு அன்றி வேறென்ன..? இதைக்கூட நபி(ஸல்...) அப்போதே சொல்லிக்காட்டியும் விட்டார்கள்.

வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)

'அவர்கள் வாங்குகிறார்கள்... அவர்கள் வீணடிக்கிறார்கள்... நமக்கென்ன' என்று நாம் சும்மா இருக்க முடியாது சகோ..!
.

இப்பதிவின் மூலம்  சொல்ல வருவது யாதெனில்... 
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.


பெரும்பணக்கார நாடு ஒன்று பேரல்பேரலாக இவர்களிடம் கச்சா எண்ணை வாங்கி தினமும் தந்நாட்டு மணல் பள்ளத்தாக்கில் கொட்டி வீணாக்கிக்கொண்டு இருந்தால் பெட்ரோல் உலகம் முழுதும் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி பணக்கார நாடு மட்டுமே வாங்க முடிந்து, ஏழை நாடுகளில் கார் இருந்தாலும் பெட்ரோல் கிடைக்காது அல்லவா..?
.

உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும் சகோ..! 

உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும் அல்லவா சகோ..!


யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. ஆனால்... சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (எம்மதமாக இருப்பினும்) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இஸ்லாம்.
.

''அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!" என்று கருணை நபி (ஸல்...)அவர்கள் தான் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)  

தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது, "இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா..?" என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார் என்று நபி (ஸல்...) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ)
.

ஆக... இந்த வளைகுடா பணக்கார நாட்டு அண்டைவீட்டாரும் செல்வம் படைத்தோராகவே இருந்தால் என்ன செய்வது..? 

இந்த பணக்கார வளைகுடா நாடுகளின் அண்டை நாடுகள் ஏழை ஆப்ரிக்க ஆசியநாடுகள் அல்லவா..? அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா..?
.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

"தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.''
(நூல்-முஸ்னத் அபூ யஃலா)

--

Fwd: |TMB| ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்



---------- Forwarded message ----------
From: I.G. Abdul Rahman <abdul.ig@gmail.com>
Date: 2011/12/25
Subject: |TMB| ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
To: TAFAREG@yahoogroups.com, tamilmuslimbrothers@googlegroups.com, Imantimes <imantimes@googlegroups.com>, jamathulmuslimeen-googlegroups <jamathulmuslimeen@googlegroups.com>, jamathulmuslimeen-yahoogroups <jamathulmuslimeen@yahoogroups.com>, unitedtamilmuslims <unitedtamilmuslims@yahoogroups.com>


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஓர் நற்செய்தி!!
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
 
இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்

Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?

 
 
இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
 
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அடிப்படை தகுதிகள்

  • ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
  • 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
 
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: |TMB| பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!



---------- Forwarded message ----------
From: Umar Farook <humarfarook@gmail.com>
Date: 2011/12/24
Subject: |TMB| பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!
To: kuwaittamilmuslims <kuwaittamilmuslims@yahoogroups.com>, tamilmuslimbrothers@googlegroups.com


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!


இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு  தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.



புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)


இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில்கேரளாவிலும் "ஆத்தா சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.


அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:







"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்! 

இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,

* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.

* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:


* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.


* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" 
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" 
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"

இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.



நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:






இலைகளின் பலன்கள்:

ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.

தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.

* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.



இறுதியாக,

எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இல்லாமல் இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது. ஆனாலும் மனிதன் எல்லா நோய்களுக்கும் நிவாரணியை முழுமையாக உடனுக்குடன் கண்டுபிடித்துவிட முடிய‌வில்லை. நோய் அறிமுகமான‌ பிறகே பலவித‌ ஆராய்ச்சிகளில் இறங்கி, கிடைக்கும் முடிவுகளை வைத்து மருந்துகளை சோதனை ஓட்டமாக முதலில் அறிமுகம் செய்து, அதிலும் வெற்றி கிடைத்த பிறகே மருந்துகள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்கு வருகின்றன. அதற்குள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள்கூட ஏற்பட்டுவிடுகின்றன. இவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நோயைக் குறிப்பிட்டு 'இதற்கு மருந்தே கிடையாது' என்று சொல்வது தற்காலிகமானதே என்று சொல்லலாம். 

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூற்கள்:முஸ்லிம், பைஹகீ


"ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம் (4432)


அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா, பைஹகீ

இந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:




அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்



நன்றி : பயணிக்கும் பதை  
--
With Best Regards,

Umar Farook

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். நூல்: முஸ்லிம், திர்மிதி.

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: |TMB| 100 கோடி வேணுமாம்.. மலையாள வெறி தெரிகிறது



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2011/12/24
Subject: |TMB| 100 கோடி வேணுமாம்.. மலையாள வெறி தெரிகிறது
To:


100 கோடி வேணுமாம்…. !!!!

கேட்பது மலையாளிகளின் ஆதிக்கத்திலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா முழுதும் படியுங்கள் உண்மைத் தமிழனின் இரத்தம் சூடேறும்....


யாருக்கு 100 கோடி என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம்.  தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

 

அந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவமும், தமிழ் மொழிபெயர்ப்பும் சவுக்கில் சிறப்புச் செய்திகள் என்ற தலைப்பில் கீழே தரப்பட்டுள்ளது.

எழும்பும் உணர்வுகள், வீழும் நடுநிலைமை, சென்னை செய்தியறைகளில் முல்லைப் பெரியாறு குறித்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மை

ஆங்கிலத்தில் - ராதிகா கிரி
தமிழில் - பூங்குழலி

முல்லைப் பெரியாறு அணை விசயம் குறித்து ப‌ல்வேறு ஆங்கில செய்தி ஏடுகளில் அண்மையில் கிளம்பியுள்ள செய்திகளைத் தொடர்ந்து நெருக்கமாக கவனித்ததில், கேரளத்திலிருந்து வரும் செய்தியாளர்களின் தொழில் நேர்மை குறித்து எனக்கு முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

mullai_periyar_370மலையாள செய்தி ஏடுகளில் எழுதும் செய்தியாளர்கள், உண்மையைப் பற்றிய அக்கறையின்றி மாநில அரசின் பார்வையையும் உள்ளுர் மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர் என்பது வேறு செய்தி. ஆனால் ஆங்கில ஊடகங்களுக்காக அதுவும் தமிழ்நாட்டில் பணியாற்றும் மலையாள செய்தியாளர்கள் அதையே செய்யும்போது நிச்சயம் அது கவனிக்கத்தக்க விசயமாகும்.

செய்தியாளர்களின் தொழில் நேர்மையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது, கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட, அதற்கு கீழ்ப் பகுதியில் உள்ள இடுக்கி மற்றும் பிற அணைகளில் நீர் தேங்கும் என சொல்லியிருப்பதை செய்தியாக்கியிருக்கும் விதத்தில் தெரிகிறது.

அவ்வறிக்கை அளித்த மறுநாள், சென்னையைச் சேர்ந்த எந்த ஆங்கில நாளிதழும் அச்செய்தியை வெளியிடவில்லை. மலையாளிகள் தாங்கள் அபத்தம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாததும் என்று கருதிய அவ்வறிக்கையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலுக்கு எதிராக கை உயர்த்தி கிளம்பிய பிறகே அச்செய்தி வெளிவந்தது. அதுவும் அவ்வறிக்கை எழுப்பிய சர்ச்சையின் அடிப்படையில் மட்டுமே.

நான் குறிப்பிட விரும்பும் செய்தி என்னவெனில், கேரளத்தைச் சேர்ந்த எந்த ஒரு செய்தியாளருக்கும் அட்வகேட் ஜெனரலின் அறிக்கை செய்தியளிக்கத் தகுந்ததாக படவில்லை - அதை ஒப்புக்கொள்ள விரும்புவார்களா அல்லது பொய்யென ஒதுக்குவார்களா என்பது வேறு விசயம்.

வேறு விதத்தில் குறிப்பிட வேண்டுமெனில், மலையாள செய்தியாளர்கள், தங்களின் பணி சார்ந்தும் கூட, தங்களை முதலில் மலையாளிகளாகவும் பின்பே செய்தியாளர்களாகவும் கருதுகிறார்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக நடந்தவற்றை நுணுக்கமாக ஆராய என்னைத் தூண்டியது, டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு, நவம்பர் 24 அன்று வெளியிட்ட டைம்ஸ் வியூ (Times View) எனும் செய்திதான்.

அச்செய்தியின் கீழிருந்த கருத்துப் பகுதியில், 'தமிழ்நாட்டு திரையரங்குகள் எதிர்ப்புக்குத் தலைவணங்கி டாம்999 படத்தை திரும்பப் பெற்றன' என்று மிகவும் நல்லவிதமாக கருத்துரிமைக்கு மதிப்பளித்து தொடங்கியுள்ளது. ஆனால் வெடிகுண்டு மூன்றாவது வரியில் இருந்தது. 'ஒப்புக்கொள்ளவேண்டியது என்னவெனில், முல்லாப் பெரியாறு அணை ஓர் உணர்ச்சிகரமான சிக்கல். தென் மாவட்டங்களில் வாழும் மக்களிடையே ஆதரவினைப் பெற அரசியல் கட்சிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன." என்று கூறியது.

முல்லைப் பெரியாறு ('அய்' விகுதி இல்லாமல் 'முல்லாப் பெரியாறு' என்பது அப்பட்டமான மலையாள உச்சரிப்பு. இதையே டைம்ஸ் ஆப் இந்தியா பயன்படுத்த விழைகிறது) கேரளத்தில்தான் உணர்ச்சிகரமான விசயம்; தமிழ்நாட்டில் அல்ல. ஆனால், திட்டமிட்ட முறையில் தாங்கள் பரப்பும் பொய்யான செய்திகள் மூலம் கேரள அரசு, செய்தியாளர்கள் மற்றும் மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அதனை இங்கும் உணர்ச்சிகரமான சிக்கலாக்கி விடலாம்.

எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி, அச்செய்தியாளர் சென்னையில் வசித்தாலும் கூட டைம்ஸ் வியூ வெளியிட்ட செய்தி மலையாள பார்வையிலானதே ஆகும்.

சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி அறையின் கட்டமைப்புப் பற்றி ஊடகத் துறை குறித்த உள்ளீடுப் பார்வை கொண்ட எவருக்கும் தெரியும். அந்நாளிதழின் அனைத்து முக்கிய பதவிகளிலும் மலையாளிகளே உள்ளனர் - ஒரு நாயரோ ஒரு மேனனோ அது போன்றவர்களோ. இருப்பு ஆசிரியர், அரசியல் ஆசிரியர், பெருநகர ஆசிரியர் அனைவருமே மலையாளிகள்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் முன்பு பணியாற்றிய ஒரு செய்தியாளர் இவ்வாறு கூறினார் : "செய்தி அறை மலையாளிகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எப்பொழுதும் தங்களிடையே மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள். மலையாள பண்பாட்டின் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு சென்னை அலுவலகத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்"

டைம்ஸ் ஆப் இந்தியாவின் மற்றொரு முன்னாள் ஊழியர் இவ்வாறு கூறுகிறார்: "டைம்ஸ் ஆப் இந்தியாவின் தற்போதைய சூழல் என்னவெனில், தமிழர்கள் அங்கு நுண்ணிய சிறுபான்மையினராக உள்ளனர். நான் அங்கு இருந்தபோது, நானும் எனது சக பணியாளர் ஒருவரும், தமிழ்நாட்டின் நலன்கள் அலட்சியப்படுத்தப்பட்டாலோ ஒதுக்கப்பட்டாலோ அதை எதிர்த்து பல முறை வாதிட்டிருக்கிறோம்"

"தமிழர்களை பெரிதும் எரிச்சல்படுத்திய மற்றொரு நிகழ்வு என்னவெனில், டைம்ஸ் ஆப் இந்தியா தனது சென்னை அலுவலகத்தை ஓணத்திற்காக அலங்கரிக்க அனுமதித்த அதே வேளையில், தமிழ்ப் புத்தாண்டுக்காக அலங்கரிக்க அனுமதிக்க மறுத்தது. எங்களில் சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை"

மற்றொரு மூத்த செய்தியாளர், டைம்ஸ் ஆப் இந்தியாவின் வாசகர் என்ற அளவில் மட்டுமே அதோடு தொடர்புடையவர், சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்களின் நிலையை இவ்வாறு ஆய்வு செய்கிறார் : "தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் கீழான பண்பாடு எப்பவுமே ஆங்கில ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்பட்டே வந்துள்ளன. காரணம் அவற்றில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் செழுமை வகுப்புகளிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். இது தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வழங்கப்படும் முறை குறித்த ஒரு விதமான பெரும் பிரிவையே ஏற்படுத்திவிட்டது.

எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள் கூட ஆங்கில நாளிதழ்களின் செய்தி அறைகளுக்குள் தங்களுக்கான வழியைக் கண்டறிந்து நுழைய முற்பட்டிருந்த போதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஒடுக்கப்பட்டே வந்திருக்கிறது. 'தமிழர் பார்வை' என்பது தற்போதும் செழுமையான வகுப்பினரின் பார்வையாகவே உள்ளது. இது மாநிலம் குறித்த பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒரு சான்று என்னவெனில், தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள மக்கள், தமிழ் உணவு முறையோடு 'இட்லி, தோசை மற்றும் சாம்பாரை' தொடர்புபடுத்தி, தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையினர் சைவ உணவு வழக்கம் கொண்டவர்கள் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில், தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர், மரபாகவே மாமிசம் உண்ணும் வழக்கும் உடையவர்கள்.

தமிழ்நாட்டோடு தொடர்புப்படுத்தப்படும் மற்றொரு பண்பாட்டுக் கூறு கர்நாடக இசையும் பரதநாட்டியமும். உண்மையில் இசையில் செவ்வியல் வடிவங்கள் மக்கள் தொகையில் அதிகபட்சம் 10 விழுக்காட்டினரால் மட்டுமே புரிந்து கொள்ளவும் பாராட்டவும் படுகிறது. அப்படியெனில் எஞ்சியுள்ள 90 விழுக்காட்டு மக்களின் இசை மற்றும் கலை மரபு என்ன?

அத்தகைய கலை வடிவங்கள் போதுமான அங்கீகாரம் பெறுவதில்லை. ஆங்கில ஊடகங்கள் அதை அங்கீகரிப்பதைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை. ஏனெனில், பிற மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், குறிப்பாக உயர் நிலை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர்கள், ஆதிக்கம் மிகுந்த செழுமையான வகுப்பினருடன் தொடர்பு கொள்வதை மட்டுமே விரும்புகின்றனர்.

முல்லைப் பெரியாறு விசயத்தைப் பொருத்தவரையில், மலையாள நாளிதழ்களின் துணையுடன் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியது கேரள அரசே ஆகும். கேரள அரசின் முக்கிய நோக்கம் இடுக்கி அணையிலிருந்து நீர் பெறுவதே. அதனை அடைய வேண்டுமெனில் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும்.

காலப் போக்கில், மாநில அரசின் 'நோக்கத்தை' உயர்த்திப் பிடிப்பதில் மலையாள நாளிதழ்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டதில், அது ஒரு உணர்ச்சிகரமான விசயமாகி போனது. எனவே, முல்லைப் பெரியாறு ஒரு நீர் வெடிகுண்டு என்றே கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாதபோதும், அணை எந்நேரமும் உடைந்து விடலாம் என்று மக்கள் இன்று நம்புகிறார்கள். இதையே கடந்த பல பத்தாண்டுகளாக சொல்லிக் கொண்டும் உள்ளனர்."

இந்த உணர்வுகளோடு பொருந்தி, மலையாள செய்தியாளர்களும் இதே பார்வையை கொண்டுள்ளனர். இதில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மலையாள செய்தியாளர்களின் வலிமையான கட்டுப்பாட்டில் இருப்பதால், எல்லா நாளிதழ்களும் கேரள தரப்பினையே கூறுகின்றன.

அணையின் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக மாற்றியது பிறப்பால் மலையாளியான எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது. அன்று தலைமைச் செயலாளராக இருந்தவரும் ஒரு மலையாளியே.

மலையாளிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப, அணையின் பெயரை தவறாக 'முல்லாப் பெரியாறு' என்று தொடர்ந்து கூறும் டைம்ஸ் ஆப் இந்தியா தவிர, சென்னையின் நாளிதழான இந்துவும் அவ்வாறே உச்சரிக்கிறது.

மக்களின் அச்ச உணர்வை அதிகமாக்கி, முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதையே தனது ஒரே நோக்கமாகக் கொண்ட கேரள அரசின் கருத்தையே மலையாள செய்தியாளர்கள் எதிரொலிக்க முயலும்போது, ஊடகவியல் பாதிக்கப்படுகிறது. செய்தியின் நடுநிலைமை அடிவாங்குகிறது.

முல்லைப் பெரியாறு வலுவிழந்து உள்ளது என்றும் உடைந்து விடும் என்று உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்திற்கு நீண்ட பின்னணி உள்ளது.

1978-இல் நடந்த நிகழ்வுகளை நேரில் அறிந்தவரான சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார்: "மலையாள செய்திஏடுகளில் இருந்த செய்தியாளர்களில் மிக முக்கியமான இடத்தை உடையவரும், அக்காலத்திய அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவரும், அவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவரும், திருவனந்தபுரத்திலிருந்து வரும் மலையாள மனோரமாவின் தலைமை பொறுப்பிலிருந்தவருமான திரு.பட்ரோஸ் சும்மாரால்தான் கேரளாவில் அனைத்தும் தொடங்கியது.

1976-இல் இடுக்கி அணை அமைக்கப்பட்ட நாளிலிருந்து தேவையான அளவு நீரை நான்கு பருவ காலங்களிலும் வழங்கவில்லை என்பது குறித்து ஏமாற்றமுற்று இருந்த அன்றைய கேரள மாநில மின்சாரத் துறை தலைமைப் பொறியாளரும் தற்போது கேரள அரசு ஆலோசகருமான எம்.பி.பரமேசுவரன் நாயருடன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர் கே.கருணாகரன் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து, கேரளாவில் அப்போது இருப்பதிலேயே அதிக அளவில் விற்பனையான நாளிதழான மனோரமா நாளிதழ் 1978இல் முதன் முதலாக 'முல்லைப் பெரியாறு போட்டான் போருன்னு' (முல்லைப் பெரியாறு வெடிக்கப் போகிறது) என்று தலைப்புச் செய்தி தாங்கி வந்தது.

முல்லைப் பெரியாறு இடுக்கிக்கு மேலணையாகும். கேரள எல்லைக்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மீது சட்டப்பூர்வ அதிகாரத்தை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு பெற்றிருந்தது.

பரமேசுவரன் நாயர் வேடிக்கையாக 'நம்முடைய சேட்டனிடத்து பரஞ்சு ஸ்டோரேஸ் கொறைக்க பரையானுல்லே' (நம்முடைய அண்ணன் - அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி்.ராமச்சந்திரன் - அவர்களிடம் சொல்லி அணையின் நீர் தேக்க அளவை குறைக்கச் சொல்வோம்) என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஒரு வெற்று வேடிக்கைப் பேச்சாகத் தொடங்கிய அந்த உரையாடலின் இறுதியில் நாயர் காங்கிரசு தலைவரிடம் இவ்வாறு கூறுகிறார்: 'பேடி கிரியேட் செஞ்சிட்டு சேட்டனிடத்து போயல்லா' (முதலில் அச்சத்தை உருவாக்கிவிட்டு பின்னர் நம் அண்ணனிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும்)

மலையாள மனோரமாவால் முதலில் உருவாக்கப்பட்ட 'அச்சம்' பின்னர் பிற மலையாள செய்திஏடுகளால் கையிலெடுக்கப்பட்டன. அந்த நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், பிப்ரவரி 2006-இல் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் அணை வலுவிழந்து இல்லை என்றும் தமிழ்நாடு அரசு நீரின் தேக்க அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறியது.

இன்று ஒவ்வொரு மலையாளி செய்தியாளரும் பட்ரோஸ் சும்மாராக செயல்படுகிறார் என்பதுதான் வேதனையானது. இந்த வேதனை ஊடகவியலுக்கு மட்டுமல்ல உண்மைக்குமே. ஆனால் இந்த செய்தியாளர்கள் புரிந்து கொள்ளத் தவறியது என்னவெனில், அவர்களின் ஆதிக்க வெறி, இந்தியாவின் பன்முகத் தன்மையை கிழித்து எறிந்துவிடும் என்பதைதான்.

கொஞ்சம் நீருக்காகவும், பிரிட்டிஷ் இந்திய அரசு திருவனந்தபுரம் அரசரிடமிருந்து சட்டப்படி வாங்கிய நிலத்தை மீட்டெடுப்பதற்காகவும், கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்களின் தொழில் நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

***

ராதிகா கிரி  - தி ஸ்டேட்ஸ்மேன் இதழில் சிறப்பு செய்தியாளராக உள்ளார்.

நன்றி: வீக் எண்ட் லீடர் (http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html#disqus_thread)

மொழிபெயர்ப்பு க்கு நன்றி கீற்று இணையதளம்.


இந்த செய்தியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு, முதலில் வீக் என்ட் லீடர் இணைய தளத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ் பின்வருமாறு.

Sir/Madam


Sub: Legal Notice against article titled "Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms" written/ authored by Radhika Giri, correspondent on your website "theweekendleader.com" and selecting /approving by the Editor/ Owner.

Under instructions of my client Bennett, Coleman & Co. Ltd, owner of the newspaper The Times of India published in Chennai having its office at Times House, 126/127 Chamiers Road, Nandanam, Chennai-600 035 and registered office at The Times of India Building Dr. D.N. Road, Mumbai 400 001 and its corporate office at Times House, 7, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002; Mr Sunil Nair, Resident Editor, The Times of India Chennai; this legal notice is issued to you as under:-


 1. At the outset we state that we have been shocked and surprised to come across this totally false and malicious article posted on your website on 05-Dec-2011 in Vol 2 Issue 48 at the website address:

http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html


4. The said article is totally false, baseless and has been written and published as a part of greater conspiracy against my client and its newspaper, more specifically to hurt its image and business interests in the State of Tamil Nadu. It appears that my client's business rivals conspiring with the author Radhika Giri, P.C Vinoj Kumar, editor of your website, senior officials/directors/owners/partners of website company with common intention have dragged my client into the controversy around the Mullaiperiyar dam in Kerala to defame it, incite mischief against it and hurt its business interests in Tamil Nadu.


5. By your said article you have provoked the general public to commit breach of peace, you have also promoted enmity and hatred between persons belonging to the State of Tamil Nadu and Kerala to the extent of inciting them to commit breach of peace and harmony in these and other places . In fact, serious imputations and assertions have been made in the said article specifically against my clients and generally which are grossly prejudicial to national integration. You have by the said article pitted the elite belonging to the forward castes against backward castes in Tamil Nadu, which is again done to further your nefarious designs.

6. My clients state that each and every sentence of the said article is false, baseless and defamatory and imputations made therein have been made maliciously with intent to tarnish the image of my client and its business interests, goodwill in the State of Tamil Nadu. Your allegations as to "Times View" published on 24/11/2011 in The Times of India edition wherein Mullaperiyar is not spelled as Mullaipervar, as persons in the state of Tamil Nadu would refer to it, and inferences drawn from it, that The Times of India, Chennai favors Kerala on the dam issue is totally exaggerated, baseless and nothing but malicious falsehood. The author of the article Radhika Giri or its Editor and Owner P.C Vinoj Kumar have not tried to cross-check as to what is the view of my client's newspaper on the issue but unilaterally published this wholly false and baseless article, in a reckless manner, without any regard for truth or responsibility towards the State/(s)/Nation. The whole article is nothing but piece of malicious and malafide design made/written with an intent to cause mischief.

7. My clients state that the said article, imputations and false statements therein amount to defamation and have been made with an intent to harm/ tarnish the reputation of my clients. My clients state that the first among the above named is the Author of the news article and the second among the above is the Editor of news Website and last is the Owner of the legal entity owning the website and are all jointly and severally liable for the publication of impugned article and consequences thereof.


8. My clients state that the content of the said article have been widely read by the public in Tamil Nadu and rest of India wherever the said website is available through internet thereby causing a lot of disrepute, harm, loss of reputation in the eyes of general public/ persons. The management, staff and employees of my clients have also suffered a lot of mental agony and have been exposed to harm by mischievous persons who have been/ are being incited by publication of the said article and its presence/being hosted on your website.

9. My clients state that by publishing the said article on your website you have committed offences under the Indian Penal Code and have also rendered yourself liable for payment of compensation/damages/loss for the tortious acts committed by you in making, publishing, hosting and circulating the defamatory/mischievous article against my clients.


My clients hereby call upon you (1) to immediately/ within 12 hours remove the said article from your website (2) to cease and desist from publishing defamatory/mischievous materials against my clients in any manner whatsoever in your website or otherwise (3) to immediately/within 12 hours tender an unconditional apology prominently on your website (4) pay to my client a sum of Rs. One Crore as compensation / damages within 7 days from the receipt of this notice. Failing as above my clients shall be constrained to initiate legal action against you all for the recovery of compensation/ damages jointly and severally and also prosecute you for offences committed by you under the Indian Penal Code.

Anshul Saharan


Manager Legal

 

தற்போது, டைம்ஸ் ஆப் இந்தியா 100 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு, மற்றொரு நோட்டீஸை தி வீக்என்ட் லீடர் இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ் பின்வருமாறு

Sir/Madam

Sub: Legal Notice against article titled "Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms" written/ authored by Radhika Giri, correspondent on your website"theweekendleader.com" and selecting /approving by the Editor/ Owner.

Under instructions of my client Bennett, Coleman & Co. Ltd, owner of the newspaper The Times of India published in Chennai having its office at Times House, 126/127 Chamiers Road, Nandanam, Chennai-600 035 and registered office at The Times of India Building Dr. D.N. Road, Mumbai 400 001 and its corporate office at Times House, 7, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002; Mr Sunil Nair, Resident Editor, The Times of India Chennai; this legal notice is issued to you as under:-

1. At the outset we state that we have been shocked and surprised to come across this totally false and malicious article written with ulterior motive and malicious intent posted on your website on 05-Dec-2011 in Vol 2 Issue 48 at the website address:

http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html

3. My clients are receiving messages from their readers spread all over India/ Abroad and particularly in Delhi saying that they hold the newspaper its editor, correspondents in high esteem and after reading this article on net their reputation has fallen in their eyes and now they look at every news published in newspaper with suspicion. After reading the said defamatory and mischievous article on your said website my clients reputation has been lowered in the eyes not only of the readers but also in media circles both in India and Abroad.

4. You are aware that my client's newspaper The Times of India is known for its journalistic ethics and fair reporting. The said newspaper is being published and circulated throughout India and is known for its patriotism and nationalistic outlook. My client's newspaper/ publications has/have never indulged in any manner in regionalism or casteism but has/have always reported fairly on issues of great public interest or concern.

5. My client has always followed the policy of promoting merit amongst its employees and it is for this reason that persons from one state head departments and positions in other states. My clients were pained and shocked to come across the said article on your website wherein a certain section of my client's employees are painted/alleged to be favoring a certain party/ state on a regional issue which is far away from truth and smacks of ulterior motive and malafide intent .

6. The said article is totally false, baseless and has been written and published as a part of greater conspiracy against my client and its newspaper, more specifically to hurt its image and business interests in the State of Tamil Nadu. It appears that my client's business rivals conspiring with the author Radhika Giri, P.C Vinoj Kumar, editor of your website, senior officials/directors/owners/partners of website company Tristar Enterprises with common intention and ulterior motives have dragged my client into the controversy around the Mullaiperiyar dam in Kerala to defame it, incite mischief against it and hurt its business interests in Tamil Nadu.

7. By your said article you have provoked the general public to commit breach of peace, you have also promoted enmity and hatred between persons belonging to the State of Tamil Nadu and Kerala to the extent of inciting them to commit breach of peace and harmony in these and other places. In fact, serious imputations and assertions have been made in the said article specifically against my clients and generally which are grossly prejudicial to national integration and peace in these two states. You have by the said article pitted the elite belonging to the forward castes against backward castes in Tamil Nadu, which is again done to further your nefarious designs.

8. My clients state that each and every sentence of the said article is false, baseless and defamatory and imputations made therein have been made maliciously with intent to tarnish the image of my client and its business interests, goodwill in the State of Tamil Nadu. Your allegations as to "Times View" published on 24/11/2011 in The Times of India edition wherein Mullaperiyar is not spelled as Mullaiperyar, as persons in the state of Tamil Nadu would refer to it, and inferences drawn from it, that The Times of India, Chennai favors Kerala on the dam issue is totally exaggerated, baseless and nothing but malicious falsehood. The author of the article Radhika Giri or its Editor P.C Vinoj Kumar have not tried to cross-check as to what is the view of my client's newspaper on the issue but unilaterally published this wholly false and baseless article, in a reckless manner, without any regard for truth or responsibility towards the State/(s)/Nation. The whole article is nothing but piece of malicious and malafide design made/written with an intent to cause mischief and harm to my clients.

9. My clients state that the said article, imputations and false statements therein amount to defamation and are written with an intent to harm/ tarnish the reputation of my clients and have grossly defamed my clients. My clients state that the first among the above named is the Author of the news article and the second among the above is the Editor of news Website and last is the Owner of the legal entity owning the website and are all jointly and severally liable for the publication of impugned article and consequences thereof.

10. My clients state that the content of the said article have been widely read by the public in Tamil Nadu, Maharashtra, Delhi and rest of India wherever the said website is available through internet thereby causing a lot of disrepute, harm, loss of reputation in the eyes of general public/ persons. The management, staff and employees of my clients have also suffered a lot of mental agony and have been exposed to harm by mischievous persons who have been/ are being incited by publication of the said article and its presence/being hosted on your website.

11. My clients state that by publishing the said article and in a most brazen manner continuing with such action even after having been put to notice by my clients you have continued and are still continuing with your action whereby you have committed offences under the Indian Penal Code and have also rendered yourself liable for payment of compensation/damages/loss for the tortious acts committed by you in making, publishing, hosting and circulating the defamatory/mischievous article against my clients.


 My clients hereby call upon you (1) to immediately/ within 12 hours remove the said article from your website (2) to cease and desist from publishing defamatory/mischievous materials against my clients in any manner whatsoever in your website or otherwise (3) to immediately/within 12 hours tender an unconditional apology prominently on your website (4) pay to my client a sum of Rs. One Hundred Crore as compensation / damages within 7 days from the receipt of this notice. Failing as above my clients shall be constrained to initiate legal action against you all for the recovery of compensation/ damages jointly and severally and also prosecute you for offences committed by you under the Indian Penal Code.


Copy of this notice is been kept in my office for future action if any.

Yours truly,

Shailendra Singh

Advocate

 

ஒரு இணையதளத்தில் தவறான செய்திகள் வந்திருந்தால், அந்தச் செய்திகளுக்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிப்பது ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனங்களில் உரிமை.  அந்தச் செய்தியில் உள்ளவை பொய், அதற்கு மறுப்பு போடுங்கள் என்று கேட்டு அதற்கு செய்தி வெளியிட்ட நிறுவனம் மறுப்பு வெளியிட மறுத்தால் பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம்.  எடுத்த எடுப்பில் ஒரு கோடி ரூபாய் கொடு என்று மிரட்டி விட்டு, மிரட்டலுக்கு பணியவில்லை என்றதும் 100 கோடி ரூபாய் கொடு என்று கேட்டு மிரட்டுவது, இணையதளத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவே சவுக்கு பார்க்கிறது.

 

தி வீக் என்ட் லீடர் வெளியிட்டுள்ள கட்டுரையையும் நேற்று இது குறித்து சவுக்கு வெளியிட்ட கட்டுரையையும் படித்துப் பார்த்தீர்களென்றால், டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு எப்படி மலையாளிகள் ஆதிக்கத்தில் திளைத்து, இதனால் நடுநிலை தவறியதோடு அல்லாமல், உண்மையை திரித்து, மலையாளிகளின் நலனை முன்நிறுத்துகிறது என்பது தெளிவாக விளங்கும்.

 

டைம்ஸ் ஆப் இந்தியாவை நடத்தும் அதே பென்னட் அன்ட் காலமென் நிறுவனம்தான் டைம்ஸ் நவ் சேனலையும் நடத்துகிறது.  இந்த பென்னட் அன்ட் காலமன் நிறுவனத்துக்கு சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் ஒரு நீதிபதியின் புகைப்படத்தை தவறாக காண்பித்ததற்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது பென்னட் அன்ட் காலமன் நிறுவனம்.  ஆனால் உச்ச நீதிமன்றம் 100 கோடியை கட்டுங்கள் பிறகு மேல் முறையீடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டது.

 

உடனே டைம்ஸ் ஆப் இந்தியா, பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டது. உடனடியாக எடிட்டர்ஸ் கில்ட் என்ற பத்திரிக்கையாளர் அமைப்பையும், பவுன்டேஷன் ஆப் மீடியா ப்ரொபெஷனல்ஸ் என்ற அமைப்பையும் வைத்து இந்தத் தீர்ப்பை கண்டித்து அறிக்கை வெளியிட வைத்து, இதை டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெரிய செய்தியாக வெளியிட்டது.  இந்தத் தீர்ப்பை கண்டித்த மற்றொரு பத்திரிக்கையாளர் அமைப்பு BEA என்று அழைக்கப் படும் ப்ராட்காஸ்ட் எடிட்டர்ஸ் அசோசியேஷன். இந்த அமைப்பின் துணைத் தலைவராக இருப்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் எடிட்டர் அர்நாப் கோஸ்வாமி என்பது குறிப்பிடத் தக்கது.

 

பத்திரிக்கையாளர் சங்கங்கள், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பத்திரிக்கைச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் தடுக்கும் செயல்.  இது ஜனநாயகத்தையே கடும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று பெரிய செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது.   உச்ச நீதிமன்றம் டைம்ஸ் நவ் சேனலை 20 கோடி கட்ட வேண்டும், 80 கோடிக்கு வங்கி உத்தரவதம் வழங்க வேண்டும் என்று அளித்த உத்தரவு வெளிப்பார்வைக்கு அநியாயமாகத் தோன்றும்.  ஆனால் இந்த விஷயத்தில் நடந்தது என்னவென்று தெரிந்து கொண்டால், 100 கோடி குறைவு என்பது தெரியும்.

 

10 செப்டம்பர் 2008 அன்று டைம்ஸ் நவ் சேனல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பி.கே.சமந்தா என்ற நீதிபதி, ப்ராவிடன்ட் பண்ட் ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி ஒளிபரப்பியது.  அந்த ஒளிபரப்பின் போது, நீதிபதி சமந்தாவின் புகைப்படத்திற்கு பதிலாக, உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த்தின் புகைப்படத்தை ஒளிபரப்பியது. இது ஒளிபரப்பான உடனேயே நீதிபதி சாவந்த், தனது உதவியாளர் மூலமாக டைம்ஸ் நவ் சேனலுக்கு இந்தத் தவறை சுட்டிக் காட்டுகிறார்.  ஆனால் எவ்விதமான மறுப்பும் ஒளிபரப்பவில்லை.

 

15 செப்டம்பர் 2008 அன்று நீதிபதி சாவந்த், டைம்ஸ் நவ் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.   இந்தக் நோட்டீஸ் டைம்ஸ் நவ் சேனலுக்கு 18 செப்டம்பர் அன்று கிடைக்கிறது. இறுதியாக 23 செப்டம்பர் 2008 அன்று, 13 நாட்கள் கழித்து,  டைம்ஸ் நவ் சேனல் நீதிபதி சாவந்தின் புகைப்படம் தவறுதலாக ஒளிபரப்பப் பட்டது என்று அறிவித்தது.

 

செப்டம்பர் 25 அன்று டைம்ஸ் நவ் சேனல் நீதிபதி சாவந்துக்கு பதில் அனுப்புகிறது. அந்த பதிலில் செப்டம்பர் 23 முதல், ஸ்க்ரோலரில், மன்னிப்பு கோரியுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றனர்.  டைம்ஸ் நவ் சேனல் எடிட்டர் அர்நப் கோஸ்வாமி அக்டோபர் 1 அன்று நீதிபதி சாவந்துக்கு கடிதம் எழுதி அவரைச் சந்திக்க அனுமதி கோருகிறார். நீதிபதி சாவந்த் அக்டோபர் 10 அன்று மாலை 4 மணிக்கு பூனேவில் உள்ள அவரது இல்லத்துக்கு வரச் சொல்லுகிறார். அக்டோபர் 8 அன்று நீதிபதி சாவந்துக்கு கடிதம் எழுதிய அர்நாப் கோஸ்வாமி, தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், தன்னால் அவரை அக்டோபர் 10 அன்று சந்திக்க இயலாது என்று தெரிவிக்கிறார்.

 

ஆனால் அக்டோபர் 10 அன்று வழக்கம் போல, அர்நாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் சேனலில் நியூஸ் அவர் நிகழ்ச்சியை நேரடியாக நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.  இதற்குப் பிறகே அவர் டைம்ஸ் நவ் சேனலின் மீது 100 கோடி கேட்டு வழக்கு தொடர்கிறார்.

 

இந்த வழக்கைத் தான், டைம்ஸ் நவ் சேனல், மற்றும் பென்னட் அன்ட் காலமென் நிர்வாகம் பத்திரிக்கைச் சுதந்திரம் பறித்து விட்டதாக கூறுகிறது.  ஊழலில் சிக்கிய ஒரு நீதிபதியின் புகைப்படத்திற்கு பதிலாக, மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை தவறாக வெளியிட்டதற்கு 13 நாட்களாக மன்னிப்புக் கோராமல் அழிச்சாட்டியம் செய்ததற்கு 100 கோடி ரூபாய் வழக்கு போட்டால் பத்திரிக்கை சுதந்திரம் பறி போய் விட்டதாம்.

 

ஒரு பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பை மலையாளிகளால் நிரப்பி, செய்திகளை திரித்து, அந்தப் பதிப்பின் அலுவலகத்தில் தமிழர்களை ஓரங்கட்டியதாக செய்தி வெளியிட்டால் அவதூறாம்.  100 கோடி ரூபாய் கேட்பார்களாம்.  கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் முயற்சிகளை முறியடிப்பதில், சவுக்கு தி வீக் என்ட் லீடர் இணைய தளத்தோடு துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது.   

 

அன்பான  வாசகர்களே…  தி வீக் என்ட் லீடரில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பும், ஆங்கில வடிவமும், சவுக்கில் வெளியிடப் பட்டுள்ளது.  இதை ப்ளாக் எழுதும்  வாசகர்கள் அத்தனை பேரும், தங்கள் ப்ளாகில் வெளியிட வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.    தங்கள் நண்பர்களிடமும் சொல்லி இதை வெளியிட வையுங்கள்.     எத்தனை பேரிடம் 100 கோடி கேட்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம்.

  தகவல்:சவுக்கு இணைய தளம்

Engr.Sulthan

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.