சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்

சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்.மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க.சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்'மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...' கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனயில் தனது சமயல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.''நான் சதாம் மாளிகையில் சமயல்காரராகச் சேர்ந்த முதல் நாள் சமயலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை மதியம் இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு 'தினமும் எனக்கு சமயல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா? என்றேன்.'இல்லை அவர்தான் சதாம்' என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் வைத்துவிட்டார். பிறகு இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு பத்து நாட்கள் கழித்து அனைவரயும் விடுவித்தார்.அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.டீயில் சர்க்கரை போட்டுக்கொள்ளமாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம் சிக்கன் ஃப்ரை காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட் ரொட்டி சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.ஒரு நாள் சதாம் என்னிடம் 'நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?' என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்ல. நம்ம சமோசாதான்!ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள்.சதாம் உசேன் அரண்மனயில் எந்தச் சமையல்காரரயும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள். காரணம் சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரயின்வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோபாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.ஒரு நாள் அரண்மனயிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து 'எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்' என்றார்கள். நான் அதை முழுமயாக மறுத்து அவர்களக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட 'என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.கொஞ்ச நேரத்தில் சதாம் என்ன அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.'ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்ல. பிறகுதான் தெரிந்தது என சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!வளைகுடா போரின்போது சதாம் என்னிடம் 'மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்' என்றார். நான் மறுத்தேன். ஆனால் அவர்விடவில்லை. 'நான் எனது நாட்டிற்கும் மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!' என்று வற்புறுத்தினார்.'அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுதது;ச் செல்லுங்கள் தூக்கிச்செல்ல முடியாவிட்டால் ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்' என்று கூறி அப்படியே செய்தார்.நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து 'எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்' என்றார்.எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பண்டலை பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...'' கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.

மஞ்சள் (மூலிகை)

Wiki: மஞ்சள் (மூலிகை)


மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.


மஞ்சள் செடியின் வரைபடம்


மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

பொருளடக்கம்:

1. மஞ்சளின் வகைகள்

2. மஞ்சளின் இயல்புகள்

3. மஞ்சளின் பயன்பாடுகள்

4. மருத்துவ குணங்கள் [மேற்கோள் தேவை]

5. மேலதிக தகவல்கள்

6. வெளி இணைப்புகள்


1. மஞ்சளின் வகைகள்


முட்டா மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

விரலி மஞ்சள்

கரிமஞ்சள்

நாக மஞ்சள்

காஞ்சிரத்தின மஞ்சள்

குரங்கு மஞ்சள்

குடமஞ்சள்

காட்டு மஞ்சள்

பலா மஞ்சள்

மர மஞ்சள்

ஆலப்புழை மஞ்சள்



மஞ்சள் தூள்


2. மஞ்சளின் இயல்புகள்


முட்டா மஞ்சள் இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.


மஞ்சள் கிழங்குகள்


கஸ்தூரி மஞ்சள் இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள் இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.


3. மஞ்சளின் பயன்பாடுகள்


சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

4. மருத்துவ குணங்கள் [மேற்கோள் தேவை]


மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்[மேற்கோள் தேவை].
மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்[மேற்கோள் தேவை].
மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும்.
மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்[மேற்கோள் தேவை].
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்[மேற்கோள் தேவை].
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்[மேற்கோள் தேவை].
மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்[மேற்கோள் தேவை].
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்[மேற்கோள் தேவை].
மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.
அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.
அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.

5. மேலதிக தகவல்கள்


மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.

6. வெளி இணைப்புகள்


மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை(தமிழில்)

மஞ்சள் பற்றிய வலைப்பதிவு(தமிழில்)