பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாhpன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு…சேசாசலம் (பெரியார் தாசன்) இஸ்லாத்தில் இணைந்தது எப்படி?
இஸ்லாத்தை தழுவிய உடன் ரியாதில் எமது செய்தியாளர்களுக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பேராசிரியர் பெரியார்தாசன்) மக்கள் உரிமைக்கு அளித்த பிரத்யோக பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே அளிக்கிறோம். முழு பேட்டியை வீடியோ வடிவத்தில் எமது இணையத்தளத்தில் www.tmmk.in பார்க்கலாம்
சந்திப்பு: எம். ஹூஸைன் கனி, மீமிசல் நூர் முஹம்மது, ஆசிக் இக்பால்
---------------------------------------------
மக்கள் உரிமை : ஆரம்ப காலத்தில் இந்துவாக, நாத்தீகராக, பௌத்தராக பல்வேறு கோணங்களில் முன்னிறுத்தப்பட்ட தாங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணம் என்ன?
டாக்டர் அப்துல்லாஹ் : நாத்தீகராவதற்கு முன்னர் (16 வயதுக்கு முன்பு) ஒரு சைவக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டேன். தினமும் 3 மணி நேரம் பிள்ளையார் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை பொருள் புரியாமலேயே சிறுவயதிலேயே மனனம் செய்து வைத்திருந்தேன். இவை எல்லாமே உடைந்தது எப்போது என்றால் நான் புது முக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த போது தந்தை பெரியார் நான் பயின்ற கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதி அதனை என் ஆசிரியர் குமரவேலன் அவர்களிடம் காட்டினேன். அவரும் அதனைப் படித்து விட்டு இந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சேசாஷலம் என்ற உனது பெயரை போட்டுள்ளாயே இது ஐயர் பெயர் போன்று அல்லவா உள்ளது. ஏதாவது புனைப் பெயர் வைக்கலாமே என்றார். நான் உடனே எதுவும் யோசிக்காமல் பெரியார் தாசன் என்று எழுதினேன். அன்று பெரியார் தாசன் என்று பெயரிட்ட போது என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப்போட்டு என்று பக்திப் பழம் போன்று காட்சி தந்தேன்.
பின்னர் பெரியாருடன் பழகி, நூற்களைப் படித்து, நாத்திகத்தில் படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டு பின்னர் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் விளங்குகின்ற கடவுள் மறுப்பாளனாக எல்லா மதங்களையும் விமர்சிப்பவனாக அறியப்பட்டது எல்லாம் தாங்கள் அறிந்ததே.
அதன் பிறகு அம்பேத்கரின் எழுத்துக்களை படித்தபின் புத்தரும் அவரது தர;மமும் என்ற பெயரில் அவர் கடைசியாக எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டேன். செட்யு+ல்ட் இன மக்களுடன் பழகினேன். பவுத்தம் தான் சரியான வழி என்றெண்ணி புத்த மதத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். சித்தார்த்தன் என்று பெயர் மாற்றத்தை கெஜட்டிலும் பதிவு செய்து கொண்டேன்.
2000 ஆவது ஆண்டில் எனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது இந்த நிலையில் நாம் எல்லாம் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு அந்த திருப்புமுனை பெரிதும் காரணமாக இருந்தது. நண்பர் ராஜகிரி தாவூத் பாட்சா அழைப்பின் பெயரில் அபுதாபி வந்தேன். அப்போது எனது வகுப்பு தோழர் என்னுடன் ஆரம்ப பள்ளி முதல் 11 வரை படித்த நண்பர் சிராஜ்தீனை சந்தித்தேன். எங்கள் பள்ளித்தோழர்களான தெய்வசீகாமணி (தமிழருவி மணியன்) கல்கி பகவன் மற்றும் எங்கள் இருவரைப் பற்றியும் எங்கள் ஆசிரியர் ஜனார்த்தனம் விசாரித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 2000ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நடந்த அந்த இரவுத் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த இரவு தொடங்கி விடியல் வரை நானும் சிராஜுத்தீனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இஸ்லாமியப் போதகராகவும் இருக்கும் சிராஜுத்தீன் நட்பு ரீதியாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை நினைத்துக் கொண்டே விடிந்த பிறகு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. வெறுமனே படுத்துக் கிடந்தனே தவிர சீராஜுதீன் எழுப்பிய கேள்விகள் என்னை யோசிக்க வைத்தன. இது வரை நாம் செய்து வருவது சரிதானா என்று எண்ணத் தொடங்கினேன். சிராஜுத்தீன் என்னிடம் அதிகமாக பேசவில்லை. சில கேள்விகளை மட்டுமே எழுப்பினார். மற்றபடி எங்கள் இளமை காலம் பற்றி தான் நாங்கள் அதிகம் பேசினோம்.
இறைவன் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்து வருபவன் நான். இறைவன் இல்லவே இல்லை என்றால் இதுவரை நான் செய்தது சரி. ஏனென்றால் ஒரு ஆயிரம் நபர்களையாவது நான் நாத்தீகராக மாற்றியிருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்றால் அப்போது என்னுள் பயம் ஏற்பட்டு விட்டது. இறைவன் இருக்கிறான் என்பது எவ்வாறு எனக்கு உறுதியாகவில்லையோ அது போலவே இறைவன் இல்லை என்பதும் எனக்கு உறுதியாக வில்லை. எனவே நான் எவ்வாறு ஒரு பக்கம் நிற்பது என்று பயம் வந்து விட்டது. உண்மையாகவே இதனை சொல்கிறேன். உலகம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. சிலர் பேர் பெரும் எதிர்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இறைவன் என் பக்கம் இருந்தால் எதிர்ப்பையெல்லாம் சமாளிக்கலாம் என்ற உறுதியுடன் தான் நான் இருக்கிறேன்.
இந்து மதத்தில் தேடினேன், இறைவன் அவ்விடத்தில் இல்லை. பைபிள் படித்திருக்கிறேன். கடவுளுக்கு குழந்தைகள் உண்டு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. பவுதத்தில் உங்களுக்கு தெரியும் இறைவனைப் பற்றி பேசாதீர்கள் என்று பவுத்தர் சொல்லி விட்டார். இப்படியே நகர்ந்து நகர்ந்து வந்தேன். இந்த நிலையில் தான் ஐ.எப்.டி. (இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்) பெரியவர் தன்னன் மூஸாவை சந்திக்க நேரிட்டது.
பெரியவர் தன்னன் மூஸா (தொண்டியைச் சேர்ந்த கவிஞர் மூஸா) தான் எழுதிய சௌந்தர்ய முத்திரை என்ற புத்தகத்தை என்னிடம் தந்து அதற்காக அணிந்துரை எழுதி தருமாறு என்னிடம் கேட்டார். இது என்னுள் திருப்பம் ஏற்பட்ட இடமாகும். நானும் அந்த நுhலுக்கு அணிந்துரை எழுதித் தந்தேன். பின்னர் அவர் ஏன் அணிந்துரையை எழுதுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலமுறை யோசித்தேன். பின்னர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் ஐ.எப்.டி.யை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரை அறிமுகப்படுத்தினார். அவருடன் சில சகோதரர்கள் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வாசித்தேன். தினமும் 5 மணி நேரம் திருக்குர்ஆனை படிப்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன். அப்போது இறைவன் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகி விட்டது. 2004 ஆம் ஆண்டில் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீத் நூற்களை ரஹ்மத் பதிப்பகம் முத்துப்பேட்டை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட போது ஏழு பாகங்களின் வெளியிட்டு விழாவிற்கும்; என்னை அழைத்தார்கள். என்னை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. நாத்தீகப் பிரச்சாரத்தை கைவிட்டது அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இந்த தேடலில் இருப்பது அவர்களுக்கு தெரியாது. ரோடு டூ மக்கா என்ற ஆங்கில நுhலையும் படித்து அதனை மக்காவை நோக்கி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டேன். இப்படியே எனது ஆய்வு தொடர்ந்தது. அப்துஸ் ஸமது, லத்தீப் (கவிக்கோ) அப்துல் ரஹ்மான், ஜவாஹிருல்லாஹ் முதலியவர்களெல்லாம் எனது நண்பர்கள் தான். அவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறேன். ஆனால் இனங்காட்டிக் கொள்ளாமல் எனது ஆய்வுகளை செய்து வந்தேன். சில பேருக்கு எனக்கு இந்த நாட்டம் உள்ளது என்பது தெரியும்.
நான் கடந்த முறை சவூதி வந்த போது முகம்மது நபி (ஸல்) வாழ்ந்த மக்கா மதீனா நகரங்களை காண ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது நினைத்தேன். இறைவன் இப்போது எனக்கு நாடவில்லை போலும், அடுத்த முறை எனது சொந்த செலவிலேயே காண வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
இப்போது நான் ரியாத் வந்துள்ள தருணத்தில் நண்பர்கள் சிக்கந்தர், சாதிக் ஆகியோருடன் கலிமா மொழிந்த பிறகு மக்கா செல்லவுள்ளேன். நான் இந்த முறை எனது சொந்த செலவில் வந்துள்ளேன். இந்த முறை நான் அவர்களிடம் மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று சொன்னேன். கலீமா சொன்னால் தான் போக முடியும் என்று சொன்னார்கள். சென்ற முறை நான் இதை சொன்ன போது அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் வழிகாட்டினார்கள். ரப்பாவிற்குச் சென்று நான் கலீமா சொல்லி முஸ்லிம் ஆனேன். நான் இஸ்லாத்தில் இணைந்துள்ளதை என் துணைவியாரிடம் தொலைப்பேசியில் கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் எனது விருப்பம் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னேன். நான் மேலும் அவர்களிடம் கியாமத் (இறுதி தீர்ப்பு) நாளில் நீயே என் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் யோசி என்று கூறினேன். பிறகு பத்து நிமிடம் கழித்து அவரே என்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் மகனிடம் பேசி விட்டு உங்களது மார்க்கத்திற்கு வர யோசிக்கிறேன் என்று கூறினார்.
மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று நான் விரும்பியது அங்கு சென்று பேரீச்சை பழம் வியாபாரம் செய்வதற்காக அல்ல. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டால் தான் அங்கே போக முடியும் என்பது எனக்கு தெரியும். அதை சென்ற முறை நான் கேட்ட போது நண்பர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள்.
மக்கள் உரிமை : தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள பத்து ஆண்டு காலங்கள் ஆனது ஏன்?
டாக்டர் அப்துல்லாஹ் : கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாத்தை அறிவதற்கும், ஆழமாக கற்பதற்கும், அரபி மொழியை கற்பதற்கும் எனது நேரத்தை செலவழித்தேன். இன்னும் மார்க்கத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். எதை செய்தாலும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்பது என் குணம். ஆகவே இதற்கு பத்து ஆண்டுகள் ஆகியது.
மக்கள் உரிமை : இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்தியாவில் அறிவிக்காமல் ஏன் சவூதியை தேர்ந்தெடுத்தீர்கள்?
டாக்டர் அப்துல்லாஹ் : புனித மண்ணில் இஸ்லாத்தில் ஏற்க வேண்டும் என்பதே காரணம். மாறாக சவூதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற காரணத்திற்காக அல்ல. இங்கே இருக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக அறியப்பட்டவர்களே தவிர இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை நான் அறிவேன். உம்ரா முடிந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு இதனை அறிவிக்க போகிறேன்.
மக்கள் உரிமை : வெகுஜன மக்களும், அறிவு ஜீவிகளும் இஸ்லாத்தை சரியான கொள்கை என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?
டாக்டர் அப்துல்லாஹ் : இஸ்லாமியர்கள் பெண்களை பூட்டி வைப்பார்கள். பர்தாவை போட்டு மூடி வைப்பார்கள். அடுத்தவர்களுடன் பழக விட மாட்டார்கள். தானும் பழக மாட்டார்கள். மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள். புகை போடுபவர்கள். இவர்களுடன் சேர்ந்தால் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பரப்பப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்தவன் நான். எனது 16வயது வரை நான் சென்ற ஒரே முஸ்லிம் வீடு சிராஜுத்தீன் வீடு மட்டும் தான். அந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.
இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களே அறியாமல் இருப்பதும், பிறர் தவறான கோட்பாட்டை சொல்லும் போது உடனே அதனை எதிர்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வராததும் வருத்தத்திற்குரியது. இஸ்லாம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த மார;க்கம் என்று நான் விளங்கவில்லை. உங்களுக்கே தெரியும் இஸ்லாம் அனைத்து மக்களுக்காவும் இறைவனால் தனது இறுதி நபி மூலம் இறுதி வேதத்துடன் அருளப்பட்டதாகும்.
இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது. அதில் மற்றவர்களை அழைக்காமல் இஸ்லாத்தை மூடி மறைத்த இஸ்லாமியர்களும் உண்டு. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்ப்பவர்களும் உண்டு. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள், கடத்தல்காரர்கள், மோடிமஸ்தான் வேலைப் பார்ப்பவர்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து (மன்னிக்க வேண்டும்) எச்சில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் உண்டு. இந்த தவறான சித்தரிப்புகளை நீக்க் எத்தனை இஸ்லாமியர்கள் தகுந்த பதில் தந்தார்கள். பதில் சொல்வது நமது கடமையில்லையா? எல்லோருக்குமான அழைப்பு திருக்குர்ஆனில் உள்ளது. அதனை சரியான முறையில் மக்களிடம் நம்மவர்கள் சொல்வதில்லை.
ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
முருகன் கொலை செய்தால் முருகன் கொலை செய்தான் என்றும் நெல்சன் கொள்ளை அடித்தால் நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும்
இதையே முகம்மது செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி செய்து விட்டான் என்று சித்தரிக்கிறார்கள். நான் இப்போது களத்தில் இறங்கியதற்கும் இதுவே காரணம். இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சாரம் இதற்கு பயன்பெறும்.
மக்கள் உரிமை : இஸ்லாத்தை தெரிந்து கொள்ள கூடியவர்கள், பிற மதத்தை சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆராய்பவர்களுக்கு தாங்கள் கூறும் சுருக்கமான செய்தி?
டாக்டர் அப்துல்லாஹ் : மிக சுருக்கமான சேதி இது தான். உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார;த்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.
1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்.
மக்கள் உரிமை : உங்கள் எதிர்கால செயல்திட்டம் எவ்வாறு இருக்கும்?
டாக்டர் அப்துல்லாஹ் : இறைவன் நாடுகின்ற வழியில் எல்லாம் இருக்கம்; என்பதே எனது சுருக்கமான பதில்.
எனக்காகவும், இறைவனுக்காகவும் இஸ்லாத்தில் விதித்துள்ள ஐந்து கடமைகளை செய்யப் போகிறேன்.
சமுதாயத்திற்காக என்றால் வழி தவறி சென்று கொண்டிருப்பவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்கு எனது வாக்கு வண்மையை பயன்படுத்துவேன்.
மக்கள் உரிமை : இஸ்லாத்திற்கு எதிராக பரப்பி வரும் வெகுஜன ஊடகங்கள் விஷயத்தில் முஸ்லிம்களின்; நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்----?
டாக்டர் அப்துல்லாஹ் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா-? என்று கேட்டதற்கு சண்டை இல்லாத போர் ஒன்று உள்ளது. அதனை நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். முதலில் சண்டை இல்லாத ஜிஹாத் செய்வோம். இறைவன் நாடினால் என்னை எதற்காகவும் தயார;படுத்திக் கொள்வேன்.

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனிகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டுபிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.3) வயிற்றுவலி போக்கும் நறுவலிநறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரைசர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.5) தலைபாரம் நீக்கும் கிராம்புகிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.6) காயத்துக்கு காட்டாமணக்குகாயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.7) உப்பலுக்கு உப்பிலாங்கொடிமாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.8) குழந்தையை காப்பான் கரிப்பான்கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.9) கடலையும் அடிதடியும்கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.10) மயக்கத்துக்கு ஏலம்ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.11) புளியிருக்க புண்ணேது?புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.12) பால்கட்டுக்கு பாசிப்பயிறுபாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.13) மயிர்கறுக்க மருதோன்றிமருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.14) வாந்தி நீக்கும் நெல்லிநெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.15) படர்தாமரைக்குஅறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.16) பல் ஈறு, வீக்கம், வலிக்குகிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.17) மலச்சிக்கலுக்குபிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.18) மூலம் அகலஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.19) முகப்பொலிவிற்குஉலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்குமிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.22) தாய்ப்பால் சுரக்க கீரைகோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.23) அரையாப்பு தீரஎலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகைபுளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.26) பசி உண்டாகபுதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.27) இருமலுக்கு தேனூறல்5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.28) வெள்ளை தீர்க்கும் புங்கன்புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.29) அரையாப்புக்கு அரிசிக் களிம்புமுருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.30) துத்தி டீதுத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணிமருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.32) நீர்த்துவார எரிவு தீரவால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.33) அஜீரண பேதிக்குமிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.34) உடல் இளைத்தவருக்குபூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.35) இரத்த கடுப்புக்குமாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.36) வெளுத்த மயிர் கறுக்ககரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.37) தொண்டை கம்மல் தீரகற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.38) வண்டுகடிக்குவெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.39) சூட்டுக்குத் தைலம்அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.40) கிருமிகள் விழவேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.41) மூலம் தீர்க்கும் ஆவாரைஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.42) மூலத்திற்கு வேதுஇளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.43) ஈளை தீர்க்கும் இம்பூரல்இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.44) கைநடுக்கம் தீரதூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.45) இருமல் தீரஇலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.46) காதில் சீழ் வருதல் தீரஇந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.47) தொண்டை புண்ணிற்குநவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.48) தலைவலிக்குஅதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.49) சீதபேதிக்குநாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.50) யானைக்கால் வீக்கம் வடியமுருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.51) விக்கல் தீர்க்கும் இந்துப்புஇந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.52) புண்கள் ஆறதாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.53) முடி உதிர்வதை தவிர்க்கநன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.54) கட்டிகள் உடையசிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.55) அண்ட வாத கட்டுபப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.56) கண் பூ குணமாகசிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.57) இரத்த மூத்திரத்திற்குமாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.58) இரத்த மூலம் குணமாகவாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.59) அசீரணம் குணமாககொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.60) வேர்க்குரு நீங்கசந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.61) தேக ஊறலுக்குகொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.62) சூட்டிருமலுக்குசிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.63) நெருப்பு சுட்ட புண்ணிற்குவெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.64) நீர்க்கடுப்பு எரிவு தீரஎலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்65) சகல விஷத்திற்கும் நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.67) பால் உண்டாகஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்குஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.69) உடல் வலுவுண்டாகசிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளிமணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.71) தேமல் மறையகருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.72) வாயு கலையவெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.73) பாலுண்ணி மறையசிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.74) தொண்டை நோய்க்குகடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.75) பெளத்திரம் நீங்ககுப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.76) தீச்சுட்ட புண்களுக்குவேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.77) தேக பலமுண்டாகநத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.78) படைகளுக்குபொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.79) கண்ணோய் தீரவெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.80) கற்றாழை நாற்றத்திற்குகோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.81) சேற்று புண்ணிற்குமருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.82) நகச்சுற்று குணமாகவெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.83) முகப்பரு குணமாகசங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.84) புழுவெட்டு குணமாகஅரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.85) பொடுகு குணமாகவெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.86) தழும்பு மறையவேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.87) முறித்த எலும்புகள் கூடவேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.88) பால் சுரக்கபால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.89) தண்ணீர் தெளியதேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.90) கண் நீர் கோர்த்தல் தணியமஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.91) புகையிலை நஞ்சுக்குவெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.92) குடிவெறியின் பற்று நீங்கமிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.93) நீரிழிவு நீங்கதொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.94) பெரும்பாடு தணியஅசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.95) நரம்பு தளர்ச்சி நீங்கஅமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.96) வீக்கத்திற்கு ஒற்றடம்நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.97) மூட்டுப் பூச்சிகள் அகலஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.