We Ate Poison / நாம் விஷத்தை உண்கிறோம்..



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2010/12/17
Subject: (TMP) We Ate Poison / நாம் விஷத்தை உண்கிறோம்..
To: madhavalayam-brothers@googlegroups.com, vidialvelli@gmail.com, paalaivanathoothu@gmail.com, tamil-islam@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, thiruvai@mail.com, fromgn@googlegroups.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, TAFAREG@yahoogroups.com



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 

We Ate Poison / நாம் விஷத்தை உண்கிறோம்..

          15 வருடங்களுக்கு முன்னால் Outlook பத்திரிக்கையில் ஒரு அட்டை பட கட்டுரை.    தலைப்பு இதுதான் " நாம் விஷத்தை உண்கிறோம்" என்று.    அப்பொழுது அதிக ஆங்கில அறிவு இல்லாததனால் அக்கட்டுரையின் முழுக் கருத்தை அறிய முடியவில்லை.

           ஆனால் கருத்து இதுதான் நாம் சாப்பிடும் உணவு அனைத்திலும் நச்சுப்பொருட்கள் உள்ளன என்று.     அப்பத்திரிக்கையின் அட்டைபடத்தையே அழகாக சித்தரித்திருப்பர். காய்கறிகள்,மீன் மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் மண்டை ஓட்டு வடிவில் அமைத்திருப்பர்.  பார்க்கவே பயமாக இருக்கும்.

இப்பொழுதும் பயம்தான் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையில்.

ஆனால் இப்பொழுது விவாதிக்க வேண்டியதே வேறு விடயம்.  ஆம்.    எப்படி நாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளது என்று.    

 நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.

         ஏதேச்சையாக நான் சேர்ந்ததோ இளங்கலை சுற்றுப்புற அறிவியல் பாடத்தில்  போதாதா பின்னே இவ்வுலகில் நிகழும், நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புற மாசுபடுதல் என்ன என்ன, எப்படி, எங்கே, யாரால் போன்ற பாடங்கள் பல..

அதில் ஒன்றுதான் Outlook பத்திரிக்கை சுட்டிக்காட்டிய உண்ணும் உணவில் விஷம்.       

நாம் வயல்களில் தெளிக்கும் பூச்சி மருந்துகளில் ஆரம்பிக்கின்றது விஷமம்.
ஆம்.  அப்பூச்சி மருந்துகள் இல்லாமல் நாம் நல்ல அருவடையை பார்க்க முடியாது, விளைச்சல் இருக்காது... அவ்வளவு ஏன் பொதிகை தொலைக்காட்சியிலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது இன்ன மருந்துகளை இன்ன காலங்களில் தெளிக்க வேண்டும் என்று.

சரி, அப்பூச்சு மருந்துகளை அத்தாவரமும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது, அவற்றை உண்ணும் கால்நடைகளின் கொழுப்பு 20% அந்த விஷத்தை சேமித்துக்கொள்கிறது, மீதியை அவ்விலங்கின் சிறு நீரகங்கள் வெளியேற்றி விடுகிறது. கால்நடைகள் தரும் பாலிலும் உள்ளது  அந்த பூச்சுக்கொல்லிகள்.

விளைய வைத்த அந்த தானியத்தையோ அல்லது அந்த கால்நடையையோ அல்லது பாலையோ அம்மனிதன் உண்ணும் போது அவ்வளவும் அம்மனிதனுள் இறங்குகிறது   ஆனால் கடவுளின் அற்புதங்களில் ஒன்றான நமது சுத்திகரிப்பு இயந்திரங்களான   சிறுநீரகங்கள் வெளியேற்றி விடுகின்றன,

இப்படி ஏதாவது ஒரு நாள் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இது இருந்ததென்றால்,   ஆம்.. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ளது இந்த Pesticides என்ற இந்த பூச்சிக்கொல்லிகள். அதனால் நமது சிறு நீரகங்களும் தொடர்ந்து பாடுபட்டு இதனை வெளியேற்றுகிறது.......ஆனால் ஒருநாள்.............அந்த சிறுநீரகங்களும் நின்று விடும். அவ்வளவுதான்....

மேலே உள்ளது எனக்கு தெரிந்த வகையில் நான் சுட்டிக்காண்பித்துள்ளேன். இதற்கு மேலும் இந்த சங்கிலித்தொடர் மிகப்பெரிதாகவும், பாதிப்புகள் பெரிதாகவும் இருக்கலாம்.


பூச்சிக்கொல்லிகளின் முழு விவரங்களும் அது மனிதன் உடம்பில் ஏற்படுத்தும் முழு பாதிப்புகளும் எனக்கு தெரியவரவில்லை. இதல்லாமல் இன்னும் என்னென வியாதிகளை மனிதனுக்கு ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. குழந்தைகளின் மூளைவளர்ச்சி, நம் உடலின் பாதிப்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தலாம்.

அதன் பாதிப்பினால்தான் புதுப்புது  நோய்கள், குறை பிரசவங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்னால் விமரிசையாக விற்கப்படும் குளிர் பானமொன்றில் இந்த பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக(!)(இந்தியாவில்) உள்ளன என்ற சர்ச்சைக் குள்ளானதை நாம் அறியலாம். 

சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேனிலும் இக்கலப்பு உள்ளன என்பதை சமீபத்திய ஆய்வுகள் சொல்லியதை நாம் அறியலாம்.

ஆக இதுதான் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இதன் பாதிப்புகள் உள்ளன. என்ன செய்வது. தீர்வு ஒன்றுதான் அதாவது இயற்கை உரங்களை இடவேண்டியதுதான். ஆனால் விளைச்சல்... தெரியாது....ஏற்கனவே விவசாய நிலங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தினால் விளைநிலங்கள் PLOT போட்டு விற்க்கப்பட்டு வருகின்றன, இதில் நாம் இதை சொன்னால்..யார் கேட்பார்கள்.

எனக்கு தெரிந்து 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு கடை எங்கள் நகரத்தில் இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட அரிசி மற்றும் சில தானியங்களை விற்று வந்தார். எனக்கு மகிழ்ச்சி அளித்தது அதை நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்தேன். வெளிநாடு போய்விட்டு தற்போது வந்து பார்த்தால் கடையை காணோம், ஆமாம் யார் வாங்குவார்கள் 5 ரூபாய் விலை கூட சாதாரண அரிசியை விட ..

நாம் இயற்க்கை உரங்கள் இட்டு உண்ணலாம் என்றால் ஆறுகள், குளங்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவப்பட்ட தொழிற்சாலைகளால் அல்லவா மாசடைகிறது அது கடலில் போய் முடிகிறது, அங்குள்ளதும் பாழாகிவிட்டது.. 

ஆக மனிதன் நிலம், நீர், கடல், காற்று என்று வரிசையாக வீணடித்துவிட்டான். வரும் சந்ததிகளை நினைத்தால் கவலைதான் தோன்றுகிறது. 

என்ன செய்ய என்னாலும் முழு சமுதாயத்தை மாற்றமுடியாதே, சமுதாய ஆர்வலர்கள், சுற்றுபுற ஆர்வலர்கள் கத்தினாலும் மற்ற மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை எங்கள் குரல்கள்., அல்லது நசுக்கப்படுகிறது.

ஏன் தான் சுற்றுப்புறத்தை பற்றி படித்தோம் என்றாகிவிட்டது, சுற்றுப்புறத்தையும் அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சொல்ல ஆரம்பித்தால் எதைச் சொல்ல, எதை விட...அவ்வளவு .

  உலகில் ஏற்படும் அதிக இறப்புகளுக்கு காரணம் அருந்தும் தண்ணீர் சுத்தமில்லாததே என்கிறது ஒரு ஆய்வு.

    எனக்கும் உணவு உண்ணும் முன் நினைவு வரும் என்ன செய்ய நானும் சாப்பிடத்தான் செய்கிறேன்.. ஏனெனில் எனக்கும் தகிக்கிறதே.......பசிக்கிறதே...................
 
நன்றி : Outlook
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

லஷ்கரைவிட இந்து தீவிரவாதகுழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி...



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2010/12/17
Subject: (TMP) லஷ்கரைவிட இந்து தீவிரவாதகுழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி...
To: madhavalayam-brothers@googlegroups.com, tamil-islam@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, fromgn@googlegroups.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, TAFAREG@yahoogroups.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, admin@satyamargam.com


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
லஷ்கரைவிட இந்து தீவிரவாதகுழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி...

 
புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.
 
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest News&artid=347826&SectionID=164&MainSectionID=164&SEO=&Title= 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"





அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"

 

                                                                                                                                     5ROKXCADM2VH1CAHP2KGNCAASHN14CACOJ87ACACHGQFTCA9YMWU8CAUSL5BFCA6QUJK0CA03GE0SCAS59FRUCARD03CNCAISHHF6CAXH3JVWCAZP9HR9CAAZMA30CA5HE3E9CAP3TMPOCAIMRTQOCAMXQG9O.jpg
 
பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

'அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள்
முதன்மையாக:- 'அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்':-

என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.
ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
'நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்'
(
அல்குர்ஆன் 33:33) இந்த உத்திரவின் மூலம், 'அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்' என்று கூறியது. இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம். எனவே தான். 'ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்' எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களை எச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
 
இரண்டாவதாக:- பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்:-
ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
'அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.' (அல்குர்ஆன் 24:31)என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது. பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே'பார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்' என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, 'கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வை' என்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, 'உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்' என சட்டெனப் பதில் சொன்னார்கள் திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.
மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். 'நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!' எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். 'சரிதான்,நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)
இந்த உத்தரவின் மூலம் 'பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும்.
 
மூன்றாவதாக:- 'அலங்காரங்களை வெளியே காட்டாதீர்!' என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
ﭧ ﭨﮞ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
'அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.'(அல்குர் ஆன் 24:33)
இந்த தொடரில் வரும் 'அழகைக் காட்ட வேண்டாம்' என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்: 1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது,
2.
ஆபரணங்களின் அழகைக் காட்டுவது,
3.
நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது. இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை) ஆகும். ' ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும்.' மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் 'ஸீனத்' என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும்.
இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள். அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும். வேறு சில விரிவுரையாளர்கள்: 'ஸீனத்' என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர். உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள், கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். வெளி அலங்காரம் என்பது, <span style="FONT-FAMILY: Latha; COLOR: #333333; FONT-SIZE: 8pt; mso-fareast-font-family: &#39



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Fwd: (TMP) ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2010/12/11
Subject: (TMP) ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!!!
To: madhavalayam-brothers@googlegroups.com, fromgn@googlegroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, admin@satyamargam.com, vidialvelli@gmail.com, paalaivanathoothu@gmail.com, babarmasjid@gmail.com, contact@koothanallurmuslims.com




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!!!

பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது.  தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி  மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. "மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி" என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், "இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்" இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு,  தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல்  கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து   18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

"சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன்  தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் "இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது" என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, "இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது" என்று பேசியிருக்கிறார்.

நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.  ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

Source:- வினவு
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

"குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" EX-DGP, Gujarat



---------- Forwarded message ----------
From: ?????? ??????? <harisimam474@gmail.com>
Date: 2010/12/11
Subject: [saharatamil] [சஹாரா தமிழ்] "குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" EX-DGP, Gujarat
To: saharatamil@yahoogroups.com


 

"கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார். 

குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?
சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.
கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார்.

"முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.
அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட  மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.
கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.
அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.
ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.
குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார்.
தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு  தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.
"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.
மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.

மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு  மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது.
குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.

ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை.
மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார்.

"திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார்.
தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.
சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.

உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில்,  இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்.
நன்றி : அஷ்ரஃப் பதன்னா
மூலம் : கல்ஃப் டுடே
தமிழில் : இபுனு ஹனீஃப்
satyamargam.com

--
12/11/2010 02:21:00 PM அன்று சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___



    --
    hajas
     
    http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page