முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே!

 

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. 

 

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

 

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

 

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

 

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

 

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

 

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

 

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

 

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

 

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

 

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

 

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

 

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

 

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

 

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

 

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

 

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

 

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

 

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

 

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

 

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

 

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

 

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

 

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

 

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக  பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு  புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

 

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும்  காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

 

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

 

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

 

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

 

لا إله إلا انت سبحانك إني كنت من الظالمين

இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி


தகவல் பலகை



 
 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)                  
 
எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை
 
 
  இஸ்லாத்தில், மலைகளுக்கு புனிதமான சிறப்புக்கள் கிடைத்துள்ளன. உலகம் படைக்கப்பட்ட நேரத்தில், முதன் முதலாக மக்காவின் நிலமும், "அபு குபைஸ்" மலைக்குன்றும் தோன்றின. நூஹு நபி (அலை) அவர்கள், உலகப்பிரளயத்தின் போது பிரயாணித்த கப்பல், ஜுதி மலையில் தான் தரை தட்டி நின்றது.
 
ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை இறைவன் "சையதுல் ஜிபால்" என்ற "தூர்சீனா" மலைக்கு வரவழைத்து உரையாடினான். "பனீநயீம்" என்ற மலையின் உச்சியில் தான், ஹள்ரத் லூத் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. "ஸஃபா மர்வா" மலைகள் மார்க்க அடையாளங்களாக உள்ளன. என்று அல்குர்ஆன் (2:158) கூறுகிறது. நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் "ஜப்லே நூர்" என்ற மலையில் அமைந்துள்ள ஹீரா குகையில் தியானத்தில் இருக்கும் நேரத்தில் தான் வஹி அருளப்பட்டது.
 
அத்துடன் திருமறையின் வசனமும் முதன் முதலாக இறங்கியது. மதீனாவிலுள்ள "உஹது" மலையும் புனிதமான வரலாற்று சின்னமாகும். இமாம் தாவூத் (ரஹ்) அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் தான் பிறந்தார்கள். "காரசான்" மலையில் காஜாமுயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) அவர்கள் முராகபாவில் அமர்ந்திருந்தார்கள்.
 
தற்போது, இந்தியாவின் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கும் ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது! கடந்த 21- 5- 2008 ம் தேதி முப்பது வயது நிரம்பிய ஃபாரூக் ஸஅத் ஹம்மாதுல் ஸமன் (ZAMAN) என்ற இளம் மலை ஏறும் வீரர் 29035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார். இதனால், இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற தகுதி பெறுகிறார். 
 
நேபாள நாட்டின் நேரப்படி பகல் மூன்று மணிக்கு, நேபாள மக்களால் "சகர்மாதா" என்று அன்புடன் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்தார் வெற்றி வீரர் ஃபாரூக். முதல் காரியமாக அங்கு இஸ்லாத்தின் கடமையான தொழுகைக்கு வரும்படி அழைக்கப்படும், பாங்கினை உரக்கச் சொன்னார். அந்த ஓசை மலைகளில் எதிரொலித்து, ரீங்காரமிட்டது. அடுத்தபடியாக, "கலிமா" எழுதப்பட்ட சவூதி அரேபியாவின் தேசியக்கொடியை அங்கு பறக்க விட்டார். இறுதியாக எல்லாம் வல்ல நாயனுக்கு ஷுக்ரானா நஃபில் தொழுகையை தொழுது முடித்தார்.
 
உலகத்தின் மிகவும் உயரமான இடத்தில் நின்று உலக மக்களை தொழுகைக்கு வரும்படி கூவி அழைத்ததின் மூலம் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டார் அந்த அரேபியவீரர் !
  இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 20-5-2008 –ந் தேதியை நேபாள அரசு, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் நாள்" என்று அறிவித்திருந்தது ! காரணம், 29-5-1953 ம் தேதியன்று தான் ஸர் எட்மண்டுஹில்லாரி "நேபாளி" "ஷேர்பா" டென்சிங்குடன் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
 
சாதனையாளர் ஃபாரூக் காட்மாண்டுவிலிருந்து 31-5-2008 ம் தேதி சவூதி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. "நான் மலை ஏறும் பொழுது, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இருபதாவது கேம்ப் வரையில் எந்த வித சிரமமும் இருக்கவில்லை. அதற்கு மேல் அமைந்துள்ள இருபதாவது அட்வான்ஸ் கேம்பிலிருந்து உச்சி வரை ஏறுவதில் பல சிரமங்களும், இடையூறுகளும் குறுக்கிட்டன. நேபாளத்தின் "ஷெர்பா" மிகவும் உதவியாக இருந்தார். மலை ஏறும் நுணுக்கங்களை "ஷெர்பாக்கள்" நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
 
பனி மலையில் நிலவும் குளிரும், பிராணவாயு குறைவும், உச்சியை அடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனக்கும் இரண்டு மூன்று முறை உயிரை பயணமாக வைத்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாவது கேம்பிற்கும் மேலே நான் ஏறிச் செல்லும் போது, எனக்கு கடினமான பல தடங்கல்கள் குறுக்கிட்டன. அங்கு நிலவும் பிராணவாயுவின் குறைவினால் மூச்சு திணற வேண்டியதாகி விட்டது. வழி நெடுகிலும் பல முறை உயிருக்கு போராட வேண்டியதாகி விட்டது.
 
என்னுடைய லட்சிய இலக்கை நான் அடைந்த பொழுது நாலா புறமும் பனியால் அந்த இடம் சூழப்பட்டு இருந்தது. என் உடல் முழுவதும் மரத்து விட்டதைப் போல் ஆகி விட்டது. என் மூளை உறைந்து செயலிழந்து விட்டதைப் போல் உணர்ந்தேன். நான் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சிக்கு வந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! அங்கு நிலவும் அழகிய கண்கொள்ளாக் காட்சியை பார்த்ததும் நான் உணர்ச்சி வசப்பட்டு, மதி மயங்கி விட்டேன். அப்போது நேரம் பகல் மூன்று மணியாகி இருந்தது. வெயில் எங்கும் பரவிக் கிடந்தது. மலையின் மற்ற பகுதிகளில் மேகங்கள் சிகரங்களை மறைக்கும் விதத்தில் மிகுந்த வண்ணம் இருந்தன. என் கண் முன்னால் தெரிந்த உள்ளத்தை கவர்ந்து இழுக்கும் கண் கவர் காட்சி யினைக்கண்டு நான் பூரித்துப் போனேன்.
 
இந்த எவரெஸ்ட் சிகரத்தை உலகின் மிக உயர்ந்த இடம் என்று கூறுவதைப் போலவே புகழ் பெற்ற "கபரஸ்தான்" (இடுகாடு) என்று கூறினாலும் பொருத்தமானதாக இருக்கும் ! கி.பி. 2002 ம் ஆண்டு வரை, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் ஆவலில், 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் பிறகும், பலபேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். பெரும்பாலான உடல்கள், அங்கேயே கிடக்கின்றன. சிகரத்தின் வடபகுதியில் இப்போதும் 41 உயிரற்ற உடல் கள் கிடக்கின்றன. நானும் என் கண்ணால் ஏராளமான உடல்களை கண்டேன். இவ்வளவு உயரத்திலிருந்து பிணங்களை எடுத்து வருவது இயலாத காரியம்.
 
பெரும்பாலான மரணங்கள், எரிவாயு முடிந்து விடுவதாலும், பிராண வாயு குறைவினாலும், பனிப்புயல்களில் சிக்கிக் கொள்வதாலும் நிகழ்ந்து வருகின்றன. அங்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளதாலும், கடுமையான குளிர்ந்த காற்று வீசுவதாலும், பிணங்கள் கெடுவதில்லை. அங்கு கிடந்த ஒரு உடலை, முதன் முதலாக கண்டவுடன் அதை காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் நான் அவசரமாக தொட்டேன். என்னுடன் இருந்த "ஷெர்பா" அது இறந்து விட்டவரின் உடல், அந்த மனிதர் இறந்து பல மாதங்கள், அல்லது பல வருடங்கள் ஆகி இருக்கலாம்" என்றார்.
 
மலை ஏறும் ஆவல் கொண்டவர்களுக்கு வலுவான உடல் தகுதி மட்டும் இருந்தால் போதாது. பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். 55 வருடங்களுக்கு முன்பு ஹில்லாரியும் டென்சிங்கும், எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலாக ஏறிய பின்பு, 3800 பேர் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 1600 பேர் மட்டும் தான் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். மலை ஏறும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்த பட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்க நேரிடும். எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதை விட, இறங்குவது தான் மிகவும் சிரமமான காரியமாகும்" என்று விளக்கமாக கூறி தன் பேட்டியை முடித்தார் ஃபாரூக்.
 
உலகத்திலுள்ள நாடுகளில், ஒரே ஹிந்து நாடு முன்பு இருந்தது நேபாளம். அதன் மீது அமைந்துள்ள சிகரத்திற்கு "ஜார்ஜ் எவரெஸ்ட்" என்ற ஆங்கிலேயரின் (கிருஸ்துவர்) நினைவாக வைக்கப்பட்ட பெயர் தான் எவரெஸ்ட். வானத்தை தொடும் அந்த எவரெஸ்ட் சிகரத்தின் மீது நின்று, "தொழுகைக்கு வந்து வெற்றியடையுங்கள்" என்ற பாங்கின் அழைப்பை, உலகின் நாலாபக்கமும் இப்போது முழங்கச் செய்துள்ளான் வல்ல அல்லாஹ் ! இதன் விளைவாக, உலக மக்கள் அனைவரும் ஒரே இமாமின் பின்னால் நின்று தொழும் காலம் வெகு தூரத்தில் இல்லை !.  
 
 
( குர்ஆனின் குரல் நவம்பர் 2009 இதழிலிருந்து ) 
 
  

என்றும் சலாத்துடன்
எம்.கே. கவுஸ் முஹம்மது (அல் அய்னிலிருந்து) 
 
 'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது.
வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

PLEASE PRAY ON TIME, B4 SOME 1 PRAY FOR YOU……….




--
Best Regards
Nizar Ahmed

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்


திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.
1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.
(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)
2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது 'வலீ' எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.
பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் 'வலீ' எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.
3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?
உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.
சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு 'மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!' என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.
திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.
சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.
எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட 'நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!' என்று கூறி விடுகின்றனர்.
'பார்க்க வேண்டும்!' என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், 'நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!' என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.
5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!
6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.
ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை 'சீதனம் வேண்டாம்!' என்று கூறினாலும் 'மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!' என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட 'தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?' எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.
எனவே, மணப் பெண்களே!
உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!
7. அறிந்துகொள்ளுங்கள்!
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!
திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், 'ஃபேஸ்புக்' தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.
எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!

"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்" - அஹ்மதிநிஜாத்

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை.

அவருடைய சமீபத்திய நேர்க்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது.

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், "ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்க்காணல் நடைப்பெற்றது.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்" என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்

அப்போது கேட்க பட்ட கேள்விதான்,

ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே?

அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

"அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்க்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."

இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...



......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்?

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது.

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர்.

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள்.

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் --

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது.


செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.


அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று". முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை---

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது.

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்?

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்க்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

என்னால் உடன்பட முடியவில்லை.....


அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.


அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.


மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.


காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது.

...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா?

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது?


NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.


அதேபோல, உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம்.

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்?

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள---

அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.


கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.


விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன்.


உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா?

இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது---

என்னை பேச அனுமதியுங்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா?


இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.


சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.


வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.


ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை?


நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது?


நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன" என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது?


ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.


இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,


உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும்.

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை.

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.


நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா?

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன்.

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா?

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று?

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்...

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை.

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.


சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை.


நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது.

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?


நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து?


நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.


ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.


நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.


அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்?


தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,


நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா?

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.


உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.


சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான்.


இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம்.


பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,

  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,
இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.

புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


அல்லாஹ்விடம் கையேந்துங்கள்



 
அல்லாஹ்விடம் கையேந்துங்கள்
 
இறைவன் இறைக்கின்றான் என்று அல்லாஹ்வினை நம்புகிறவர்களும்-
இறைவன் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்களும் உலகில் உண்டு.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. அது என்னவெனில் இறைவனை நம்பி அவனிடம் கையேந்துவதால் உங்களுக்கு எந்த இழப்புமில்லை.
 இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்து இன்னல் வரும் நேரத்தில் கைகொடுப்பவன்  என்பது மட்டும் உறுதியானது. சமீபத்தில் இந்தியாவின் மங்க@ர் ஏர்போர்டில் துபாயிலிருந்து 158 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் ஓடுகிற தளத்தினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி பயணம் செய்த எட்டு பேர்களை தவிர்த்து அனைவரும் மரணம் அடைந்தது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அதில் அதிர்ஸ்டவசமாக தப்பித்த கிருஷ்ணன் என்ற பயணி சொல்லும் போது, 'விமானம் எரிந்து துண்டு, துண்டாக சிதறியபோது விமானப்பகுதியில் ஒரு ஓட்டை தெரிந்தது.
 
அதனைக் கடவுளின் கருணையாகக் கருதி அதன் வழியாக தப்பித்தேன்' என்று சொல்லியுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக இறவா அல்லாஹ்வினை நம்பாது இறந்த மனிதர்கள் அடக்கஸ்தலத்தலமான இராமநாதபுரம் ஏர்வாடி மட்டும் மதுரை கோரிப்பாளையம் தர்காக்களை நம்பி படையெடுத்து தன் ஒன்ரறை வயது ஒரே ஆண் மகனான காதர் யூசுப்பினை இழந்த சிரின் பாத்துமாவின் பரிதாபமும் அவனை மூட நம்பிக்கையினம் மொத்த உருவிற்கு நரபலி கொடுத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அப்துல் கப+ரின் கதையினையும் 27.7.2010 அனைத்துப் பத்திரிக்கைகளும் விலா வாரியாக எழுதியிருந்து மூட நம்பிக்கை இஸ்லாமியர்களிடையே எவ்வாறு வேரூன்றியிருக்கிறது என்று பறைசாற்றகின்றன.
 
தப்லீக் ஜமாத்தும், தவ்ஹீத் ஜமாத்துக்களும், சமுதாய தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ மக்களிடம் விழிப்புணர்ச்சிகள் மேற்கொண்டாலும் எங்கே அவைகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துவிட்டது இயற்கையே.. ஆனால் அவர்கள் தங்களின் முயற்சிகளில் இன்னும் தீவிரம் காட்டி எல.;லாம் வல்ல அல்லாஹ்வினைத் தவிர யாரிடமும் நீங்கள் உங்கள் தேவைக்கு கையேந்தாதீர்கள் என்று  பறை சாற்ற வேண்டும் என்பதிற்காக உருவானதே இந்த மடல்.
 
துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் நாம் இன்பத்தில் திளைக்கும்போது மட்டும்  இறைவனை மறந்து விடுகிறோம். சில சமயங்களில் இறைவன் இருப்பது சிலருக்கு சந்தேகம் எழுவதுண்டு.
 
இறை மறுப்பாளர்கள் வைக்கும் வாதமெல்லாம், 'இறைவன் இருக்கிறானென்றால் உலகில் ஏழை பணக்காரனென்ற ஏற்றத்தாழ்வு ஏனிருக்க வேண்டும், சிலருக்கு கிடைக்கும் நல்லருள் பலருக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தால் இறைவன் இருப்பதினையே சந்தேகப்படுகின்றனர். அது அவர்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும். இறைவனின் அருள் எல்லோருக்கும் சமமாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவனுடைய உள்ளம் அமைதியாகவும், சந்தோசமாகவும், கோபமடையாமலும், தீய எண்ணங்கள் அவன் உள்ளத்தில் இருள் கவ்வாமலும் இருந்து இறைவனிடம் தன் குறைகளைச் சொல்லிவிட்டு வாளாதிருக்காமல் தன் முயற்சியில் ஈடுபட்டால் இறைவன் தன் அடியாருக்கு பக்க துணையாக இருக்கிறான். இறைவனுக்கும் அடியாருக்கும் இடையில் மூன்றாமவருக்கு எந்த வேளையுமல்ல. ஆகவே சிலர் அந்த மூன்றாவரை தேடி தர்காக்களுக்கும், சாமியார்களிடமும், போலி மந்திரவாதிகளிடமும், குறி சொல்வர்களிடமும் சோரம் போகிற படியால் தான் மேலேக் குறிப்பிட்ட 27.7.2010 முஸ்லிம் சிறுவன் நரபலி போன்ற உலகில் விரும்பத்தகதாக அனாட்சரமான சம்பவங்கள் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்லாது அனைத்து மதத்தினரிடமும் ஏற்படுகிறது.

 நாம் கம்புயூட்டரின் செயல்பாட்டினை எடுத்துக் கொள்வோம். கனினியில் ஒரு செய்தியினை அனுப்புகிறோம். அதனை அனுப்புகிறவர் அடியான் என்று வைத்துக் கொள்வோம். அதனை ஏற்றுக் கொள்ளும் ரிஸீவரை இறைவன் என எடுத்துக் கொள்வோம். அனுப்பிய  மெசேஜ் குழப்பம் இல்லாததாகவும், அதனை அனுப்புகிறவர் நல்லொழுக்கம் கொண்டவராகவும், தீய எண்ணங்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போது தான் அவர் இறைவனிடம் விடுக்கும் வேண்டுகோள்(மெசேஜ்) இறைவனிடம் முறையாக சேர்ந்து அவனுடைய கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுகிறான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை பசியால் கதறுகிறது. அந்தக் குழந்தையின் கதறல் சப்தம் தாயினால் தான் உணர முடியும். அந்தக் குழந்தையின் குரலைக் கேட்டு தாய் தன் உதிரத்தில் உதிர்த்த அமுதத்தினை குழந்தைக்கு தாரைவார்க்கிறாள். அதுபோல் தான் அல்லாஹ்வும் தன் அடியார்கள் ஓர்மையுடன் விடும் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவான். அதனை விட்டு விட்டு தர்காக்களுக்கும், கபர்ஸ்தானுக்கும் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற கையேந்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல் மதுரை கோரிப்பாளைத்தில் ஒரு அப்பாவி தாயினுக்கு தன் பாலகனை பலிகொடுத்த கதையாகவும், தர்காக்களில் தங்கும் பெண்களின் கற்புக்கு பாதகம் வரும் நிலையும், மனநிலை பாதித்தவர் மேலும் நோய் அதிகமாகி பராரியாக அலையும் பரிதாபமும் ஏற்படும்.
 
 சில சமயங்களில் நாம் தொழும் போது நமது மனம் பல விசங்களில் அலைமோதி எத்தனை ரக்காத்துகள் தொழுதோம் என்றே நமக்கு மட்டுமல்ல ஏன் சில தொழுகை நடத்தும் இமாம்களுக்கே மறந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து விலகி மனதினை ஓர் முகப்படுத்தி இறையட்சத்தில் ஈடுபடும்போது நாம் விரும்பும் காரியம் நிச்கயம் நடக்கும். அதற்கு நாம் எண்ண செய்யவேண்டும்:
1) பள்ளிக்குச் செல்லும் போது சுத்தமான ஆடைகள் அணியப் பழகவேண்டும். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சுத்தமான ஆடையணிந்துவிட்டு பள்ளிக்கு வரும் போது வெறும் படம், எழுத்துகள் பொறித்த  சட்டை பணியன்களை அணிந்து வருகின்றனர். அதனால் தொழுபவர் அவர்கள் மேலங்கிகளை பார்வையிட்டு அதில் என்ன படம் போட்டிருக்கிறது அல்லது எழுதியிருக்கிறது என்ற கவனத்தினை செலுத்துகின்றனர். ஆகவே தொழச்செல்லும் போது இறை பயத்துடனும,; சுத்தமான ஆடையுடனும் செல்லவேண்டும்.

2) மனதில் மகிழ்ச்சியான விசயங்களை நிலை நிறுத்த வேண்டும். நமது வாழ்வில் தினந்தோறும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றோம், இன்ப துன்பங்களுக்கு ஆளாகின்றோம்.. அப்படிப்பட்ட சூழலில் வாழ்வின் தாழ்வுகளையும், துன்புங்களையும் பிரதானமாக எடுத்துக் கொள்ளலாமா? ஒரு சமயம் நண்பர் ஒருவருடன் விமானப்பயணத்தில் ஈடுபட்டேன். அந்த நண்பர் தன்னுடைய வாழ்வில் நடந்த சோக சம்பவங்களையே பிரதானமாக பேசிக் கொண்டு வந்தார். ஆனால் அந்த சோக சம்பவங்களிடையே அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதினை அவருக்கு ஞாபகமூட்டி உங்கள் வாழ்வில் நீங்கள் பலருக்குக் கிடைக்காத விமானப்பயணத்தினை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதினை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று தேற்றினேன. ஆகவே துன்பங்களை நினைத்துப்பார்த்து இறைவனை குறை கூறுவதினை விட கிடைத்த இன்பத்தினை நினைத்து மகிழ்ச்சியடைய பழக வேண்டும்.
3) நாம் நல்லவைகளையே பார்க்க வேண்டும்-பேச வேண்டும். நல்ல போதனைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். சிலர் சொல்வர் 'களவையும் கற்று மற'வென்று. ஆனால் விஷம் எப்படியிருக்கிறது என்று சுவைத்துப்பார்த்தால்தான் தெரிய முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இனிய சொற்களிருக்க கடும் சொற்களை பேசக்கூடாது. அதனால் பல குடும்ப வாழ்வில்-நட்புகளில் குழப்பங்கள் வரக் காரணமாக அமைந்து விடுகிறது.

 
4) அடுத்தவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களை வெளியேற்ற உதவ வேண்டும். மனிதன் ஆறறிவுள்ளவன் அவனுக்கு தீயது எது நல்லது எது என்று பகுத்துப் பார்க்கும் சக்தியிருக்கிறது. அனால் மது, மாது , சூது போன்ற தீய செயல்களில் மூழ்கி இறைவனிடமிருந்து விலகும் நிலையினைத் தவிர்க்க வேண்டும்.. சிலர் சுயநலவாதிகளாக இருப்பதினை காணலாம். அவர்கள் பணம் படைத்து நிம்மதியிழந்து வாழ்வதினையும் காணலாம். தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியினை, உடல் உழைப்பின் ஒரு பகுதியினை ஏழை, எளியவர்களுக்காக, மாற்றுத்திரனாளிகளுக்காக, விதவைப்பெண்கள், முதியோர் மறுவாழ்விற்காக செலவிடுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதினைக் காணலாம்.

• தினந்தோறும் சிலநேரம் தொழுகைக்காக ஒருக்குவதின் மூலம் நீங்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் மன வலிமையினைக் கொடுக்கும். சமீபகால பெரிய எழுத்தாளர், நார்மன் டீலே, 'நீங்கள் மனதினை ஓர்நிலைப்படுத்தி இறையச்சத்துடன் தொழுது வந்தால் உங்கள் அனேகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்' என்று சொல்லியுள்ளார். நான் எழுதுவதிற்கு மறந்த சில விசயங்கள், செய்வதிற்கு விடுபட்ட முக்கிய வேலைகள் கூட மனதினை ஓர்முகப்படுத்தி தொழும்போது நினைவிற்கு வந்ததுண்டு. மனிதர்களால் கைவிடப்பட்டு இறைவனிடம் வேண்டுகோள் வைத்து வெற்றிபெற்ற மனிதரின் கதையினை உங்களுக்கு உதாரணமாக சொல்ல ஆசைப்படுகிறேன்.
 
நான் சில சதித்திட்டங்களால் சென்னை மத்திய சிறையிலிருந்தபோது நண்பர் குணங்குடி ஹனிபா அவர்களும் இருந்தார்கள.  நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக 1991-1994 வரை இருந்த போது ஒருநாள் அலுவலகத்தில் அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தான் ஒரு ஆட்டோ டிரைவராக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்ததாகவும், சமுதாய சேவை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விட்டதாகச்சொன்னார்.
 
ஆனால் துரதிஸ்டவசமாக அவரை மத்திய ஜெயிலில் பார்வையாளர் நேரத்தில் சந்திக்கும் வாய்பு;பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவரை அவருடைய துணைவியார் சந்திக்க வந்திருந்தார். அவரிடம் ஹனிபா சொல்லும்போது, 'அல்லாஹ்விடம் துவா செய், ஏழு வருடமாக சிறையில் வாடுகிறேன், இறைவன் கண்திறக்கவில்லை' என்றார். இதனை 2007 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய, 'காக்கிச்சட்டை பேசுகிறது' என்ற புத்தகத்தில் எழுதியதினை ஆசிரியர் இன்குலாப் அவர்கள் வெளியிட்டார்.
 
இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் மைனாரிட்டி முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையினைத்தான் நாடவேண்டும். அப்படி நாடியதால் தான் நண்பர் குனங்குடி ஹனிபா இன்று சுததந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டுள்ளார் என்பதினை நாம் மறக்கக் கூடாது.
 
தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு பத்து வழிவகைளைக்
கூறலாம் என நினைக்கிறேன்.

 
1) கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுது கொள்ளுங்கள்.
2) தொழ முடியாத நேரத்தில் இறைவனை நினைத்து தஸ்பி எண்ணிக் கொள்ளுங்கள்.
3) அல்லாஹ்வினை நினைத்து உங்கள் மொழியில், தெளிவான வேண்டுகோளை வையுங்கள்.
4) உங்கள் தேவைகளை நிறைவேற்றவே தொழவேண்டும் என நினைத்துத் தொழவேண்டாம்.
உங்களைப்படைத்து தொழ வாய்ப்புக்கொடுத்து உயிரோடு இருக்கச்செய்ததிற்காகவாது தொழுங்கள். சிறு உதவிகளைச் செய்யும் மானிடருக்கு விழுந்து, விழுந்து நன்றி சொல்லும் போது அழகான மனித உயிரினை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.
5) உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்று நாற்காலியில் இருந்து தொழவேண்டாம். கூடுமானவரை குனிந்து, நிமிர்ந்து, இறைவனுக்கு ஸஜ்தா செய்து தொழுக முயற்சி செய்யுங்கள்.
6) நீங்கள் தொழும் போது இறைவனின் குறை தீர்க்கும் சக்தி மீது அவ நம்பிக்கை கொள்ளாது, அல்லாஹ்தான் எல்லாக் குறைகளையும் களையும் வல்லமை மிக்கவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.
7) சாதாரணமாக இறைவன் நாம் கேட்கும் பலனுக்கு மேலாக பன் மடங்கு பலன் கொடுப்பவன். அவன் கொடுக்கும் பலன் எதுவானாலும் அது அருட்கொடை என ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.
8) நமது குடும்ப தேவைகளை புறக்கணித்து இறைதளமே கதியென வாளாதிருக்கக்கூடாது. எந்த மதமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆகவே நீங்கள் தேவைகளைப் ப+ர்த்தி செய்யும் நல்ல கணவராக மனைவிக்கும், சிறந்த தந்தையாக பிள்ளைகளுக்கும், பேணிக்காக்கும் மகனாக உங்கள் வயதான பெற்றோர்களுக்கும் காட்சி தரவேண்டும்.
9) உடன் பிறந்தோர்-உற்றார் உறவினர் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்றும்., உங்களுக்குத் தீங்கிளைத்தவருக்கும் நன்மை செய்ததின் மூலம் நீங்கள் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பது நிச்சயமாகிறது.
10) தீர்வுகாண முடியாத செயல்களுக்கு அல்லாஹ்வினிடம் கையேந்தி நாடவேண்டும். அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நான் 18.6.2010 அன்று என் துணைவியார் என் மகன் சதக்கத்துல்லாஹ் ஆகியோருடன் அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு விட்டு போர் நினைவுச்சின்னம் அணிவகுப்பு(சேன்ச் ஆப் கார்டு) நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு ஜூம்மாத்தொழுவதிற்காக அங்குள்ள பெரிய இஸ்லாமிக் கம்யூனிட்டி பள்ளிவாசலுக்கு ஒரு டாக்ஸியில் ஏறினோம். அதனை ஒரு கறுப்பினத்தின எபி என்ற டிரைவர்; ஓட்டி வந்தார். நாங்கள் போகுமிடம் குறிப்பிட்டு சொன்னோம். அந்த டிரைவர் எங்களிடம் நீங்கள் டூரிஸ்டா எனக் கேட்டார். ஆம் என்றோம். அவர் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்தது அவர், 'நீங்கள் தொழும்போது உலக அமைதிக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்' என்று கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் வல்லரசு என்று தம்பட்டம் அடித்து அனைத்து இஸ்லாமிய நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற வளரும் நாடுகளையும் பயமுறுத்தும் அமெரிக்காவின் சாதாரண குடிமகன் அமைதியினை விரும்புகிறானே என்றுதான். 
 
அதுவும் உலக அமைதிக்காக யாரிடம் வேண்டச் சொல்கிறானென்றால் இறைவனிடம் தான். ஆகவேதான் மைனாரிட்டி இஸ்லாமிய சமுதாயம் நமது தனிப்பட்ட, இல்லத்துப் பிரச்னைகள், சமுதாயப் பிரச்னைகள்; ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துங்கள் என்று சொன்னது சரிதானே சொந்தங்களே!
 
 
இதழியல் புதிய தொழில் நுட்பங்கள் 
 



From: Mohamed Ali <mdaliips@yahoo. com>
Subject: Allah's bounties
To: "gazzalie rajagiri" <gazzalie@yahoo. com>
Date: Saturday, July 31, 2010, 5:57 AM

Assalamu allaikum Mr.Gazzalie,

I was away on tour to USA . I returned on 24th. Hence I could not contribute and converse with you through my writings.

I am sending an article insisting undisputed and unflinching faith on Allah for all our needs. I hope it will be useful to our community. You may circulate.

Good day
 

AP,Mohamed Ali   


__._,_.___

Attachment(s) from Rajaghiri Gazzali

1 of 1 File(s)

Recent Activity:
This group contain muslim community life style &amp; activity, problems &amp; solutions. Point-out muslims mistakes and get clarificaion from members. Non-muslims are welcome to point-out muslims mistake and get clarification from members. we are expecting brotherhood from non-muslims. members are invited to share each others thoughtful about our society and answer to each others. Please try to send message in tamil language.
1. Prove as a muslim by living (As per quran &amp; hadees) instead of name-wise only.
2. Trust always ALLAH watching our each activity and nothing hidden.
3. Don�t advertise any famous person as an example for muslim. We will feel shame if he changed his life style against islam or other religion advertise more famous person than him as an example for their religion.
4. Don�t advertise/take advantage political activity as an Islamic/muslims activity
5. Don't consider invidual activity as total community activity.

Recommended to talk about Islam at http://groups.yahoo.com/group/tamil-islam &amp; tamil-islam-subscribe@yahoogroups.com
Recommended islamic website in tamil : www.a1realism.com / www.tamilislam.com
.

__,_._,___